Saturday, September 27, 2008

வானதியின் கதை

இந்த கதையை படித்து விட்டு என்னை அடிக்க வராதீர்கள். மூலக்கதை திவ்யா. இது உண்மை என்று சொல்கிறார். இல்லாவிட்டால் கதை என்று எடுத்துக்கொள்ளுங்கள், நான் யாரையும் மனம் புண் படுத்தவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

*****

கோவையின் பிரபல கல்லூரி. ஒரு பரபரப்பான சம்பவம். வானதியின் காதல் கதை.

திவ்யாவின் தோழி வானதி, சிறு வயது முதல் பழக்கம். அவளுடைய தங்கை கௌரி. ரேஸ் கோர்ஸ் பகுதியில் வீடு.

நன்றாக படிப்பவள். ஆனால் விளையாட்டுக்கு வரமாட்டாள். பெண்கள் ஆடும் விளையாடடு எல்லாம் ஆடமாட்டள். பயன்கள் ஆடும் ஆட்டம் தான் ஆடுவாள். அவர்கள் வீடல் ஆம்பிள்ளை பயன் இல்லாத வீடு அப்படி வளர்த்துவிட்டோம் என்று சொல்வார்கள்.

திவ்யாவும் இவளும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரே வகுப்பில் படித்து காலேஜுக்கு மட்டும் இடம் மாறினர். மத போதகர் காலேஜில் எஞ்சினீரிங் - திவ்யா. பிஎச்ஜியில் பயோ செமிச்ட்ரி - வானதி.

பதினெட்டு வயதில் வானதி படு அழகு. வாரம் ஒரு முறை மூஞ்சி வாக்சிங் மட்டும் தவறாமல் செய்து கொள்வாள். அவள் பட்ட பெயரே சவரம் செய்த பிகர். சிலருக்கு அப்படித்தான். அவளுக்கு குரல் கொஞ்சம் கணீர் என்று இருக்கும். கௌரி அவளுக்கு நேர் எதிர். பெண்மை என்றாள் ஒரு நடிகையின் அழகு.

எல்லோரோடும் அன்பாக தான் பழகுவாள் வானதி. வானதி பாத்ரூம் போவதற்கு மட்டும் தயங்குவாள். ஓபன் சீட் (டோர் இல்லாத) பெண்கள் ஓய்வறையில் உட்கார மாட்டாள். கதவு வைத்த இடத்தில் தான் செல்வாள். ஒரு முறை டூர் சென்ற போது கூட கஷ்டப்பட்டு மரத்தின் மறைவில் சென்றாள். திவ்யாவிற்கு ஆச்சிரியம். ரொம்ப தான் தயங்குகிறாள் என்று. பெண்கள் முன்னிலையில் பெண்கள் ஒருவரும் சங்கோஜப்பட மாட்டார்களே?

ஒரு முறை புல் தரையில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்த போது, வானதி உட்கார்ந்து எழும் போது திவ்யாவின் கை பட்டு விட்டது,
'அந்த' இடத்தில். என்னடி கட்டி வந்திருக்கா அங்கே? ஆமாம் என்று சொல்லிவிட்டாள். டாக்டர் கிட்டே காட்டனும். பெரிய விஷயம் எதுவும் பண்ணிடாதே இதைன்னு சொல்லிட்டாள். அன்றிலிருந்து திவ்யாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு.

எல்லோரை போல அவள் வயசுக்கு வரவில்லை காலேஜ் செல்லும் வரையில். அதன் பிறகு மஞ்சள் நீராட்டு நடந்தத என்று கூட தெரியாது. எங்கள் ஜாதியில் வெளியே சொல்ல மாடோம் என்று சொல்லிவிட்டாள். சானிடரி பேட் கூட ஷேர் செய்ததில்லை, திவ்யாவிடம். எமெர்ஜென்சி? ஊஉம்ம்ம்.

வானதிக்கும் இளமை ஊஞ்சல் ஆடியது. செந்திலோடு காதல் அரும்பியது. சைவக் காதல். தினமும் பேசாமல் இருக்க மாட்டார்கள். மூன்று ஆண்டுகள் இது தொடர்ந்தது. டிபன் கூட சாப்பிடவில்லை. அவனுடைய இரட்டை சகோதரன் கூட கூசாமல் கேட்டு விட்டான். எதாவது செஞ்சியாடா? நோ. இவனது காதல் தெய்வீகமானது. சிலர் அப்படித்தான்.

*****

வானதியின் அப்பா ஒரு ஜாதி வெறியன். சங்கம் அது இது என்று போராட்டம் நடத்துபவன்.

செந்தில் ஒரு நாள் நேரடியாக வானதி வீடு சென்று பெண் கேட்டு விட்டான். நான் நல்லா வெச்சு காப்பத்துவேனுங்க.

அவர் துப்பாக்கி எடுத்து சுட வந்து விட்டார். செந்தில் செய்வது அறியாது ஓடி வந்துவிட்டான்.

வானதி வீட்டில் பூட்டி வைத்து விட்டார்களாம். பணக்காரர் ஆனதால் விஷயம் வெளியில் கசிந்தது. ஒரு பிரபல வார இதழ் ஒரு ஆய்வு நடத்தி அதை பற்றி எழுதியது. "ஜாதி வெறியன் வீட்டில் பூட்டி வைத்த பைங்கிளி". அமைச்சர் பலம் இருந்த காரணத்தால் விஷயம் அமுங்கியது. ஆள் துணையுடன் வந்து பரீட்சை எழுதி பாஸ் செய்தாள் வானதி. செந்திலை ஒரு தடவை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. யாரோடும் பேசவில்லை. ஒரே சோகம் தான்.

விஷயம் பெரிதாகியது. செந்தில் விடுவதாயில்லை.

பேரூர் கோவிலில் வானதியின் அம்மாவை ஒரு நாள் பார்த்தான்.

"செந்தில் நீ வேற பொண்ணு ஒருத்தியே கட்டிக்கோ" அவர் அழுதுகொண்டு சொன்னார் - "அவ முழு பொண்ணு இல்லேடா! கல்யாணம் பண்ணறது வேண்டாம்னு கட்டி காப்பத்துனோம். இப்படி ஆகியிருச்சு.". இவனுக்கு புரியவில்லை. புரிய நேரம் ஆயிற்று.

******

வானதி ஒரு திருநங்கை. (இதே மாதிரி சாந்தி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஓட்டபந்தய வீராங்கனை. கலைஞர் உதவி செய்தார். இப்போது அவர் ஒரு கோச்.). திவ்யாவோடு பிறந்ததும் ஒரு பெண் என்பதால், அவளுக்கு ஆண்கள் பற்றி சரியாக விவரம் இல்லை. மேலும் பாதி பெண்களுக்கு கல்யாணம் ஆகும் வரை நெஞ்சு கொஞ்சம் தட்டை தான் என்று விட்டு விட்டாள்.

*****

செந்தில் திவ்யாவிடம் சொன்னான். திவ்யாவிற்கு தெரியவில்லை ஆண்கள் காதல் பற்றி. என்ன இருந்தாலும் பரவாயில்லை. செந்தில் சொன்னான் அவள் தான் எனக்கு எல்லாம், இல்லையென்றால் செத்து விடுவேன் என்று. செந்திலின் பெற்றோருக்கு இது வேண்டாதே வேலை என்றே தோன்றியது.

பிற்பாடு திவ்யா கோபம் வந்த நண்பர்களுடன், அவருடைய அப்பா மற்றும் சிலரோடு அவர்கள் வீட்டில் சென்று பார்த்தார்கள், ஒரு முடிவு கட்டும் நோக்கோடு.

எதற்கு அவ்வளவு முட்டாள்தனமாக செய்தீர்கள் என்று அவளுடைய அப்பாவிடம் கேட்டேன். "புறககும் போதே, இரண்டும் இருந்தது. பெண் தான், ஆனா ஆண் உறுப்பும் இருந்தது. டாக்டர் கிட்டே காட்டினோம். பொண்ணா வளர்த்திடுங்கன்னு சொன்னார். பத்து வயசுக்கு மேல ஒரு ஆபரேசன் பண்ணி
முழு பொம்பளயான்னு செஞ்சிடடலம் சொன்னார்! குழந்தை தான் பெத்துக்க முடியாது. கருப்பை வளர்ச்சி இருக்காது. தத்து எடுத்துக்கலாம். ஆனா விதி பாருங்க, அவளுக்கு பெல்விக் போனே சரியாக வளர வில்லை அதனாலே டிலே ஆகிருச்சு. இந்த காதல் பிரச்னை வந்திருச்சு."

*****

செந்தில் ஒற்றை காலில் நின்றான். காதல் வாழ்ந்தது. வெற்றி பெற்றது.

வானதி அரசாங்க ரெகார்ட் படி பெண். அதனால் கல்யாணம் சிம்பிளாக மருதமலையில். யாரையும் அழைக்கவில்லை, திவ்யா உட்பட. திவ்யாவிற்கு ரொம்ப கோபம்.

*****

ஒரு வருடம் ஆனது. செந்தில் அமெரிக்கா படிக்க சென்றான். வானதி அப்பா வீட்டில்.

கோவையில் அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை.

வானதிக்கு ஆபரேசன் தாய்லாந்தில் செய்தார்கள். இரண்டு வருடம் ஹார்மோன் சிகிச்சை செய்து, இப்போது பெண்மை மிளிரிதாம்.

*****

வானதி இப்போது பிலேதேல்பியாவில் வாழ்ந்து வருகிறாள்.
அழகாக வாழ்கிறார்கள். தம்பி குழந்தை ஒன்றை தத்து எடுத்தார்களாம். அவள் துணைவன் இப்போது ஒரு பல்கலைகழகத்தில் ஆசிரியர். பி.எச்.டி. படித்தவன்.

திவ்யா இது வரையில் வானதியோடு பேசவில்லை.

நான் அவர்களை இது வரையில் பார்த்ததில்லை!

தொடர்கதை

பின்னூடங்கள் பற்றி எதற்கு கவலை...

தொடர்கதை முயற்சி ப்லோகர்ஸ் செய்யலாமே? தினம் ஒரு அத்தியாயம். ஒருவர் முடிப்பதை, மற்றொருவர் தொடங்க வேண்டும். அதை முதலில்எழுதியவர் சொல்ல வேண்டும்... இருபத்தி நான்கு மணி நேரம் கேடு. இதுஆட்டம். நிபந்தனை, நோர்மல் பாண்டில் இருபது வரிகள்...

லக்கிலுக் யு ஸ்டார்ட் ப்ளீஸ். தலைப்பு 'இதயம்'...

புன்முறுவல்

உன் புன்முறுவல் ஒன்று போதுமே
என் மனதினை குளிரச் செய்ய
அரசாங்க உத்தியோகம் செய்பவன் நான்
அணுஅணுவாய் கொல்கிறார்கள் அனுதினமும்

திட்டுகிறார்கள் கண்மூடித்தனமாய்
நான் அரசாங்க ஊழியராம் கண்மணி
இவர்கள் ஆடம் ஐந்து வருடம் தான்
மகிழ்ச்சியை இருந்துவிட்டு போகட்டும்

முட்டாள் ஜனங்களின் வோட்டுக்கள்
அவர்கள் காசு குடுத்து வாங்கினார்கள்
திருப்பி கொடுத்ததெல்லாம் நாமங்கள்
கண்ணுக்கு தெரியாத பாலங்கள்

விளக்கு பிடிக்க வேண்டுமாம்
இவர்கள் வீட்டில் 'அதை' செய்ய
நல்ல லாந்தர் வைக்க கூட
வசதியில்லாத அற்றினை கபோதிகள்!

வந்து விட்டார்கள் வாக்கு கொடுத்து
பிடித்து விட்டார்கள் ஆட்சியை
குறைவதில்லை திமிர்த்தனங்கள்
ஆண்டவன் அடக்குவான் இந்த தலைமுறையில்!

உன் மனதை பிடி

காட்ச் யூர் மைன்ட் அதாவது உன் மனதை பிடி என்ற படம் சுவாமி கந்தன் என்பவரால் அளிக்கப்படுகிறது. தலைப்பு அருமை!

என்னை போலவே அவரும் நியூயார்க்கில் திரைப்படக் கல்வி பயின்றவர். வாழ்த்துக்கள்.

அமேரிக்கா வாழ் மக்கள் பற்றி, குறிப்பாக, இப்போது புலம் பெயர்ந்தவர்கள் பற்றி ஒரு சாட்டையடி எனலாம்... தொண்ணூறு நிமிடங்களில் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

அக்டோபர் மூன்றாம் தேதி, வரும் வெள்ளியன்று நீங்கள் பார்க்கலாம்.

அந்த படத்தின் வலைத்தளம்

கைகளில் பறவை ஓவியங்கள்



நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கும் படங்கள் இவை, விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போட்டோக்கள் அப்புறம் அதிகம் சுற்றுவது இது தான்!

Friday, September 26, 2008

சிலைகளும் அரசியலும்

மேற்கு வங்காளத்தில் (வெஸ்ட் பெங்கால்) சிலைகள் வைப்பதில் தமிழ்நாட்டிற்கு சளைத்தவர்கள் அல்ல, நான் பார்த்த வரையில்.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பது அங்கு கம்மி. மமதா பானர்ஜி தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்! (உத்தர் பிரதேஷ் நினைவில் கொள்க)

காந்தி சிலை, தாகூர் சிலை இருக்கும்.

எழைகள் இருப்பிடங்களில் படங்கள் இருக்கும்.

சரி இந்த சிலை, படங்கள் வைத்தால் அரசியல் மூலம் எல்லோருக்கும் சோறுகிடைக்குமா?

பக்தி மார்க்கம் தியானம்

பக்தி மார்க்கம் எல்லாம் இறைவனை அடைய ஒரு பாதை தான்.

எல்லோரும் ஒரு வகையில் ஒரு குரு தேடுகிறார்கள்.

அமெரிக்காவில் மற்றும் பல வெளி நாடுகளில் ஒரு துணை தேடுவதை போல. டேட்டிங் கல்சர். மனம் சற்றும் அமைதி கொள்ளாது. தேடுதல் என்பது தினம் ஒரு சுமை ஆகும்.

உங்கள் கவலை மறக்க இறைவனை நோக்கி மனதை ஒரு நிலை படுத்துவது, தியானம்.

கடவுளை நம்பாவிட்டாலும், அது பற்றி கட்டாயமாக நினைப்பது என்பது ஒருவகையில் தியானம் தான். எல்லாம் நேரம் என்று சொல்லும் பல கருப்பு சட்டை ஆசாமிகள் நான் பார்த்திருக்கிறேன்.

வாழ்கையில் எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்டப்பட்டால், சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நன்றாக முன்னேறலாம். அப்பொழுதும் தியானத்தை விட்டு விடாதீர்கள். அது உங்களை ஒரு நிலை படுத்தும்.

கடவுள் மீது பாரம் போடுபவர்கள் முட்டாள்கள். விதி என்று சொல்லி வீட்டில் உட்கார்பவர்கள் சோம்பேறிகள்.

கஷ்டப்படு. உழைக்க முயற்சி செய். வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.

காதல் தியானம்

பூவாய் நீ வந்தாய்
பூஜைகளை செய்தாய்

வேண்டினாய் மனமுருகி
வேண்டியதை எனக்கு தருவாய்

ஆகாயத்தின் வண்ண பறவைகளை
ஆசையாய் பார்த்தாய்

அழகானை சுனரியில்
அற்புதமாய் கோலங்களிட்டாய்

அழகு கைகளால்
அபிநயங்கள் பல பிடித்தாய்

பதினாறு வயதில் ஆடிய ஆட்டங்களா
பதில் சொல்ல முடியாது அதை பற்றி

சொல்லிய வார்த்தைகள்
சோகமென முடிந்தாலும்

கட்டியவளை மனமுருகி
காப்பாற்றுகிறேன் கலங்காமல்

இன்று இதயங்கள் மாற்றுகிறார்கள்
இதயத்தில் நீ மட்டும் மாறவில்லை!

(நிச்சயம், இப்போ தாங்க தேநீர் குடிச்சுட்டு எழுதறேன், உண்மை சம்பவம் இல்லீங்க)

பொலிடிகல்லி கரக்ட்

தமிழன் இல்லை என்றால் பிடிக்குது
தமிழ்நாட்டு பண்பு என்றால்
கசக்குது
மூச்சு முட்ட ஓசியில் குடி
ஒரு கூட்டம் வைத்துக்கொண்டு பொய்க்கதை
டப்பா படத்திற்கு ஜால்ரா
உலக எழுத்தாளன் என்கிற எண்ணம்
ப்லாகர் என்றால் கசக்குது
சொல்கிறாய் விமர்சனம்
செய்கிறாய் பிச்சைகாரத்தனம்
இது பொலிடிகல்லி கரக்ட்?

நீ அன்று எழுதியது கிசுகிசு
இபோழுது ஆகிவிட்டது பிசிபிசு
பிள்ளைகளுக்கு பிடிக்காத எழுத்து
எழுதுகிறாய் விரக தாபங்களை
வாங்கிக்கொல்கிறாய் கோபங்களை
நீ எழுவது போர்னா இல்லை பல்ப்பா?
நண்பர் சொல்கிறார் குப்பை என்று!
நீ சொல்கிறாய் நோபிலச்ட் என்று
அப்புறம் உன் எழுத்துக்கு பேர் என்ன?
எது பொலிடிகல்லி கரக்ட்?


(எழுதுனது நேற்று.
.. உலகுக்கு அமர்த்தியது இன்று... பொலிடிகல்லி கரக்ட்? )

தேவதை

என் உள்ளதை கொள்ளை கொண்டாய்
கவர்ச்சிக்கு விடை கொடுத்தாய்
கன்னி நீ என்னவள் ஆனாய்

வாழ்க்கைக்கு சிறகுகள் கொடுத்தாய்
தேவதையாய் எதிரில் நின்றாய்
என் மனதில் நிறைந்தாய்

வருமானத்திற்கு ஈடு கொடுத்தாய்
வேலைக்கு சென்றாய் திருமதி
நீ எனக்கு ஒரு வெகுமதி ஆனாய்

வேலை கஷ்டங்கள் இருந்தாலும்
குழந்தைகள் இம்சையானலும்
உறவுக்கு தோள்கொடுத்தாய்

அந்த ஓரகண் பார்வை
ஒன்று போதுமே
இந்த பூமியில் வாழ!


(பழையது, டயரியில் தோன்றியது இப்போது....)

காதல் அழகானது

காதல் அழகானது தான்
நிச்சயம் சுகமானது
உயிர் உள்ளவரை
உன்னோடு வாழும் வரை

இரவுக்கு நிலா அழகு
எனக்கு நீ அழகு
செடிக்கு பூ அழகு
பெண்மைக்கே நீ அழகு

காத்திருத்தல் மாயம் என்றாய்
காதலே மாயம் என்றேன்
பள்ளியில் கண்டேன் உன்னை
பள்ளியறை சேர்த்தேன்

வானத்தில் விடிவெள்ளி
வழித்துணைக்கு உதவுகின்றது
என் வாழ்க்கைக்கு உரமானாய்
ஈரமான நினைவுகள் ஆனாய்

முகம் நோக்கி பார்க்க
வெக்கமதை விட்டுவிடு
முடிவில்லா இன்பத்திலே
என் உடலில் சங்கமித்துவிடு

( இதை ஹிந்தியில் எழுதி பத்து வருடம் ஆச்சு)

வாரென் பபே: பெர்க்சயர் ஹாத்வே

வாரென் பபே மிக சிறந்த தொழில் அதிபர். அவர் நடத்தும் பெர்க்சயர் ஹாத்வே ஒரு மிக பெரிய நிறுவனம். இன்று அவர் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார். அமெரிக்கா எட்டு பில்லியன் டாலர்கள் இப்போது கோல்ட்மன் சச் இன்வேச்ட்மன்ட் பாங்கிற்கு முதலீடு செய்தார்.

இன்றைய ஸ்டாக் மதிப்பு அமேரிக்கா டாலர் 133,100 மட்டுமே. அதாவது சுமார் ருபாய் 61,22,600 (அறுபத்தி ஒரு லட்சத்து இருபத்தி இரண்டயிரத்த்து அறுநூறு). என் குழந்தைகள் இருவரை வாரிசாக போட்டு விட்டேன், சரி பங்காக.

மார்ச் 1992 சமயத்தில் நான் ஒரு ஸ்டாக் 8,700 டாலருக்கு வாங்கினேன் (ருபாய் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம், அது வரை அங்கு மிச்சம் செய்தது), எனது புது டாக்டர் மச்சான் அறிவுரை படி. இன்று அது பதினைந்து முறை வளர்ந்துள்ளது பதினாறு வருடத்தில். நாற்பது முறை ஆகி உள்ளது. வருடத்திற்கு ஐம்பத்து சதவிகித வளர்ச்சி. ஸ்டாக் பிரிக்க மாட்டார்கள். போனஸ் கொடுக்க மாட்டார்கள். அதே பணத்தை இன்போசிஸ் ஸ்டாக் வாங்கி போட்டிருந்தால் இப்போது அது ருபாய் இரண்டாயிரம் கோடி ஆகியிருக்கும். சொந்த் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு ப்லோக் செய்திருப்பேன். அரசியல்வாதி ஆகியிருக்கலாம். எல்லாம் அதிர்ஷ்டம் என்றும் சொல்லெலாம்.

இடையில் பத்தாயிரம் டாலர்கள் டிவிடென்ட் ஆக கொடுத்து விட்டனர். ஆனால் வருட வருடம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்குஅமெரிக்காவில் டாக்ஸ் கட வேண்டும். இந்தியாவிலும் கணக்கு காட்டவேண்டும்.

பெர்க்சயர் ஹாத்வே ஒரு சிறிய நூற்பாலை. ஆனால் முக்கிய வேலை கம்பெனிகளில் முதலீடு செய்வது. மூசுவல் பண்டு ஆக எடுக்க வேண்டாம். வரை முறைகள் ஜாஸ்தி. ஒரு அளவுக்கு மேல் பண்டு நடத்த விழா எடுக்ககூடாது. இந்த வருடம் மட்டும் நாற்பது பில்லியன் டாலர்கள் காசாக வைத்திருந்தார்.

வாரென் பபே ஒரு மகா கஞ்சர். வருடத்திற்கு நான்கு முறை தான் துணி எடுப்பாராம். ஆனால் நல்ல மனது. உலகத்திற்கு பணம் சொத்தில் முக்காவாசி எழுதி வைத்து விட்டார் ( ஏழைகளுக்கு செலவு செய்ய, நோய், நிவாரணம்). பில் கேட்ஸ் அடுத்த படி இவள் தான் உலகில் பெரியபணக்காரர்.

நியூ யார்க் செவெந்த் அவனூவில் (மண்ஹட்டன்) ஒரு முறை திஜிஐஎப் ஹோடேலில் பார்த்து, அட்டோக்ராப் வாங்கியுள்ளேன். அதுவே இப்போது ஒரிஜினல் என்றால் பத்தாயிரம் டாலர் கிடைக்குமாம்.

எனதருமை வாசகிகளே!

எனதருமை வாசகிகளே! நான் இப்போ எழுதப்போறதை பார்த்தால் என் பொண்டாட்டி என்னை திட்டி தீர்து விடுவாள்.

திவ்யாவை பற்றி எழுதினாலும் எழுதினேன் வாசகர்களோடு ஒரு தொடர்பு கிடைச்சுருச்சு...

நிறைய வாசகர்கள்... அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம். என்னவெல்லாம் சொல்கிறார்கள். தெரியாத்தனமாக ஒரு வாசகி கெஞ்சி கேட்டாள் என்பதற்காக என்னோட அலைபேசி எண் கொடுத்துவிட்டேன். கொல்கிறாள் அவள் ஒருத்தி. இன்னும் புதுசு போடலையா... போடலயானு....

அப்புறம் இன்னொருத்தி.
இப்போது அவள் இருப்பது அமெரிக்காவிலே. எனக்கு இந்த ஜோசியம் கொஞ்சம் தெரியுமா, கல்யாணம் எப்போன்னு பார்த்து சொல் சொல்கிறாள். போட்டோ வேறே அனுப்பினா..... பொண்டாட்டி கொல்ல போரா...

(தயவு செஞ்சு வயசு, பேர் மட்டும் கேட்கவேண்டாம்...)

பல பேர் என் குடும்ப அங்கமாகி விட்டார்களாம். ஒருத்தி என் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்ததை அவளுக்கு வாங்கி கொடுக்கணுமாம். லாலிபாப் வேற ஒருத்திக்கு வேணுமாம்!

நிலகிரிஸ் பன் வேண்டுமாம் அவளுக்கும்.. எங்கே பொய் முட்டிகொள்வதோ?

சின்ன வயுசல பண்றதே எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ திருமபவும் ரிப்பிட்டு பண்ண முடியாது!

கவிதைகள் பல எழுத சொல்றாங்க. வயசாயிடுசுங்க... அவ்வளவு சீக்கிரம் எழுத வராது.

சரி அதை பற்றி ஒரு ப்லோக் போஸ்ட் போடலாம்னு தான் தோனுது.

இளமையில் கல் என்பது கள் ஆகிவிட்டது. இப்படி பதிவுகளின் மேல போதையா?

தொழில் விட்டு விட்டு, என்ன பண்றாங்க? ப்லோக் படிக்கிறாங்க. ஐடி வேலை எல்லாம் கொல்லுதுங்க இப்போ. வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருகிறார்கள். புதுச்புதுசா படியுங்க. எக்ஸ்ட்ராவா வேலை செய்யுங்க! போதனை தான் குடுக்கவேணும்.
அது வேணா எழுதறேன்.

அட படிச்சா முட்டாளுங்களா... என் பழைய போஸ்ட்ஸ் எல்லாம் படியுங்க, என் தொழிலே வேற. தினம் ஒன்னு ரெண்டு போடறேன். மெயிலுக்கு பதில் போடறேன். கமண்டுகள் கேனத்தனமாக போட வேண்டாம்... ப்ளீஸ்.

கருமம் கருமம் அறிவாளிகளின் முட்டாள்தனமான ஆசை என்பது இது தான். இன்டலெக்சுவல் இன்பாச்சுவேசன்.

நான்
பெரிய எழுத்தாளர் இல்லேங்க. எதோ என்னால முடிஞ்ச வரை தமிழ் கற்றுக் கொள்கிறேன்.

தொழிலா எழுதுறவங்க புக்கை காசு கொடுத்து வாங்கி படியுங்க. இண்டேர்நெட்டுல படிக்க வேண்டாம். உங்களுக்கும் டைம் வேஸ்டு. மெயில் வேற பண்ணி தொலைப்பீங்க. போன் கால் வேற செய்வீங்க. அவங்களுக்கும் பாவம் தேவையில்லா ரத்தக்கொதிப்பு. ஆஸ்பத்திரினு அலைய வேண்டியது தான். மிருக சுழற்சி!

நான் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.
இதை தான் அளவுக்கதிகமான படைப்பு ஆவல் என்று இலக்கிய வல்லுனர்கள் சொல்வார்கள். எக்சச்சிவ் க்ரெயெடிவிட்டி!

புகைப்படம் படித்ததில் பிடித்தது












Yuen Woo Ping

கீற்று

சுஜாதா, வா மணிகண்டன் மற்றும் சுகுணா திவாகர்

சுகுணா திவாகர் ~ மிதக்கும் வெளி

Maximum India

ஷாஜியின் வலைப்பூ

(மேலே உள்ள அனைத்தும், சத்தியமாய் லிங்க் மட்டும் கொடுக்கபடுகிறது)

Thursday, September 25, 2008

ப்லோகர்கள் பற்றி யாரோ எழுதியது

ப்லோக் எழுதுகிறவர்கள் என்ன மடையர்களா? ஒட்டு மொத்தமாக திட்டுவது அநாகரீகம்.

//பகடி செய்வதில் மனிதர் பின்னி எடுக்கிறார். பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”

சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன. //

மேலே உள்ள வாசகங்கள், குடும்பத்தில் உள்ள அனைவரும் படிக்க முடியாத படி எழுதும் ஒரு பகட்டு பிரியர் எழுதுனது. எப்பவும் கப்சா. அவருக்கு சில உண்மைகள். இது ஒரு உயிரோசையின் உயிர்மை.

ப்லோக் என்றால் என்ன?

உடல் உபாதைகளை தணிப்பது அல்ல. இது ஒரு டிஜிட்டல் டயரி.

பொறுப்ப உணர்வா. எப்படியோ சங்கடமாய் பேசி, காசு அள்ள பார்க்குறாங்க. விளம்பரம் தான் குறிக்கோள். என்ன மாதிரி ஆளுங்க காசு குடுத்து படிக்கிறது நாளே தானே இந்த திமிர்? காசு இல்லேனா?

இதை தெரியாத கான்...கள் வந்துட்டான்கள் விவரம் பேச.

நீங்கள் கக்கூஸ் பத்தி எழுதினீங்க, எனக்கு அதுக்கு மேல தெரியும்.

ரோட்டிலே பீ இருந்த மிதிக்காம தாண்டி தானே போவீங்க?

உங்களை மாதிரி ஆட்கள் (ப்லோக் எழுதுறவங்களை திட்டுறவங்கள்) அதை எடுத்து வாயிலே போட்டுட்டு போனாலும் போவீர்கள்! மூடிட்டு போங்கையா. எங்களுக்கு ஓசியிலே அதுவும் தெரியும், இதுவும் தெரியும் ஆங்...

மற்ற ரசிகர்கள் தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டும்! நான் ஒன்னும் கேனையன் இல்லே பல கோடி ருபாய் வியாபாரம் பார்த்துட்டு பீல்டு வொர்க் ஆக ப்லோக் பண்ணறேன்.

(அரசியல் கட்சியில் இருக்கும் ப்லோகர்கள் தயவு கூர்ந்து அங்கே ஆட்டோ அனுப்ப வேண்டாம் ;-))

கவலை

என்னங்க சாந்தி ஜெயக்குமார் கதையின் தலைப்பும், பிலாக் பேரும் ஒன்னாகுங்களா? திவ்யானு உங்க நண்பி மட்டும் தான பேர் வைப்பாங்களா?

இன்னும் ஒரு கோவை அம்மணி, கேட்டாருங்க "இது என்னோட கதையா?"னு .

ஏனுங்க அம்மணி, எனக்கு ஊரில் இருக்கிற எல்லோர் கதையும் போட முடியாதுங்கோ. என்னாலே முடிஞ்ச அளவு போடறேன். ரொம்ப டயர்ட் ஆகுதுங்கோ!

அடிச்சு சொல்றாங்க, இது ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர் தோழி திவ்யா தான்!

அதுவும் இந்த பலான காதல் விஷயம் எழுதும் போது... ரொம்ப அடக்கி வாசிக்கிறேன். திவ்யா புருசனுக்கு தமிழ் தெரியாது!

என் புது தமிழ் வாத்தியார், ஸ்பெல்லிங் மிச்டேக் கரெக்ட் பண்ண சொன்னார். நன்றிகள் ஐயா.

ஆமாங்க வந்த மெயில் எல்லாம் (புது ப்லோக் நண்பர்கள்?) பொண்ணுங்ககிட்டே இருந்து. என்னங்க ஆகுது இங்கே? அப்புறம் பழைய ப்லோக் எல்லாம் படிச்சுட்டு ஒரு கடுதாசி போடுங்க.

எப்பவும் போல பிலாக் படிக்கும் பிரபல எழுத்தாளர்கள், உடனே மெயில் போட்டாங்க, யாருங்க இந்த திவ்யானு. அவங்க போட்டோ போடலை? வேண்டாங்க விபரிதம். என்னோட ப்ரோபைல் போட்டோவே, வைன்ல சொதப்பிட்டாங்க. எடுத்திட்டேன்.

*****

கீரையும், ரசமும். சாப்பாடு வைத்து சாப்ட்டோம், நானும் திவ்யாவும் (மீல்ஸ்னு சொல்லவே பயமா இருக்குது). கையிலே சாப்பிடறதே சுகம். அமெரிக்காவிலே இங்கிலீஷ் பட்லர். மண்ஹட்டன்ல ட்ரும்ப் கோல்ட் டவேர்ல வீடு. சென்ட்ரல் பார்க் பார்த்த மாதிரி இருக்கும். இன்று இரவு நாடு நிசியில் தான் விமானம். நிறைய நேரம் இருக்குது பேச. ஒரு அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கிபோட சொலலனும். மனைவி ஆபிஸ் போயிருக்கிறார், அர்ஜன்ட் வேலை. தலைமை மனித வள பொறுப்பு. குழந்தைகளும் நாலு மணிக்கு வந்து விடுவார்கள். நிலகிரிஸ் கிரீம் பன் வாங்கி வைக்கணும். எனக்கு வேலை இன்னைக்கு இல்லை. ரியல் எஸ்டேட் ரொம்ப டல்லுங்க. என்ன பண்றது? எப்படியோ வயத்தை கழுவிட்டு இருகோம்.

அவளுக்கு (திவ்யா) அங்கே அமெரிக்காவில் வேலை இருக்குமா என்பது தான் கவலை. லேஹ்மான் பிரதர்ஸ் தான் திவால் ஆயிற்றே (பத்து நாள் அக்கபோர் என்கிறாள்). கோல்ட்மன் சச் கூப்பிடார்களாம். எல்லாம் நல்லதாக நடக்க வாழ்த்துக்கள்! மைன்ட் ட்ரீ சாப்ட்வேர் கம்பெனிலே மூணு பர்சன்ட் வச்சிருக்காங்க, ஒன்பது வருசமா.
அவுங்க போட்டது நாலு. இன்னைக்கு அதன் மதிப்பு முப்பத்தி ஆறு கோடி. என்னை அதுல எப்படியாவது சேத்து விட சொல்லணும்! (நான் நல்லா டயிப் அடிப்பேன்).

அடுத்த முறை அவுங்க குடும்பத்தோட (ஜோ) வர போறாங்க. அவங்க லியர் ஜெட் வச்சிருக்காங்க. ஓசிலே ஒரு சின்ன ரவுண்ட் போகலாம். அடுத்த சம்மர்லே, ஐரோபா போகும் போது, அவங்களும் பாரிஸ் வரலாம்.

இப்போ ஒரு எம்.எப்.ஹுசைன் பிரிண்ட் சின்னது கொடுத்தா. (லேப்டுல பாருங்க) பிரமே போட்டு வச்சுட்டாங்க. இதுவே பல லட்சம் இருக்கும். பத்திரமா பாத்துக்கணும்.
இன்சூரன்ஸ் இருக்கா தெரியல.

அதனோடஒரிஜினல் பல கோடிகளுக்கு விக்கிறதா நியூஸ்.



*****

திவ்யாவும் கதையை படித்தாள். மணிஸ் ஸ்கூல் உடல் பயிற்சி வகுப்பு கசமுசா பற்றி சொல்லவில்லை என்றாள். "யாருன்னு சொல்லமாட்டேன். ஆனா அவரு பயன் இப்போ அமேரிக்காவிலே ஒரு டாக்டர்." அடப்பாவி!

அப்புறம் கோவை டைம்ல அவ கூட படிச்ச பிஎஸ்ஜி ஆர்ட்ஸ் வானதி பற்றி சொன்னாள். அவ வெங்கின்கிற பையனோட போட்ட லூட்டி பத்தி எழுதனும். நாளைக்கு கதை போடுகிறேன். உடான்சா உண்மையா தெரியாது! ஆனா ப்லாகர் சமுதாயத்திற்கு கண்டிப்பா எழுதனும். என் பயன் ப்லோக் செய்து கிடப்பதே.

*****

இந்த கோவை கொங்க தமிழ் திவ்யாகிட்டே இருந்து பலமா தொத்திகிச்சு. எதற்கெடுத்தாலும் இங்கோ போடறது. என்னங்க பண்றது.

எனக்கும் இப்போ இந்த பீல்டு வொர்க் ஜாஸ்தி ஆகிடுச்சு. ஷாபிங் போகணும் கொஞ்ச நேரத்திலே...


திவ்யாவின் காதலர்கள்

திவ்யா ஒரு கனவுப்பென், தேவதை. இப்போதும். எப்போதும்.

இப்போது நாற்பது வயது ஆகி, ஒரு ஆண்டியாக வலம் வந்தாலும்... பெருத்த உடலோடு அழகாக தான் இருக்கிறார். ஜோ என்று ஒரு அமெரிக்கனை (வெள்ளைக்காரர்) காதல் மனம் புரிந்து இருக்கிறார். காதல் வேறு. உடல் சம்ப்ந்தம்ப்பட்ட விஷயம் வேறு, என்ற சமுதாயத்தை விரும்புபவள். இனனும் குழந்தை இலலை. தத்து எடுத்துகொள்வார்கள் என நினைக்கிறேன். (வயசு இன்னும் இருக்கப்பா!). தி ஜாய் ஒப் செக்ஸ் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவள்!

திவ்யாவின் முதல் காதல் கோவையில் ஸ்டேன்ஸ் ஸ்கூலில் படித்த ஒருவன். இவள் மணிசில் படித்தாள். சினிமா நடிகை லதா மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் அப்பா ஒரு சீட்டு கம்பனி நடத்தியவர். திவால். விட்டுவிட்டாள். சுருட்டிய சொத்துக்களில் பசங்கள் இப்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் விற்பதாக கேள்வி. (டிபன் மட்டும் சாப்பிட்டு இருக்கேன்!)

அப்புறம் கஷ்டப்பட்டு படித்து, கோவையில் ஒரு மதம் ஸ்தாபனம் நடத்தும் ஒரு காலேஜில் எஞ்சினீரிங். அங்கே ஒருவன். வேறு ஒரு தேபர்த்மன்ட். இருந்தாலும் காலேஜ் போட்டிகளில் பழக்கம். அவன் ட்வின்சில் ஒருவன். அண்ணன் ஒருவளை பிடித்து ஓடினான் (ஜாதி வெறியனின் மகள்). ஒரு காமடி நடிகருக்கு சொந்தம். ஜூனியர் விகடனில் எல்லாம் கதை வந்தது. இவளுக்கு அதெல்லாம் பிடிக்கவில்லை. (ஒண்ணுமே ட்ரை பண்ணலே. கேஜிலே வேஸ்ட் பண்ணிட்டான்.)

அப்புறம் அந்த மத போதகர் மகன் மீது (அம்சமான ஆள் ... இப்போதும். ஈமைலில் பேசிக்கிறோம் ) மூன்று குழந்தைகளின் அப்பா, இவளுக்கு ஒரு இது இருந்திருக்கிறது. ஒரு விளக்கவுரைக்காக அமேரிக்கா சென்றாள், கட்டுரை சமர்ப்பணம் செய்தாள். பரிசு கிடைத்தது. இந்தியா வந்த பிறகு, கூப்பிட்டு அனுப்பினான். அப்போது அவனை சந்தித்தாள். (சாப்பிட்டிருப்பான், தப்பிச்சுட்டேன்!)

இடையிலே டைம்னு ஒரு கோச்சிங் இன்ஸ்டிடுட். காட் எழுத பயிற்சி. பயிற்சியாளர் கோவை சேர்ந்த கேரளா நாட்டவர். தினமும் காலை ஆறு முதல் எட்டு மணி வரை, ஒரு வருடம் பழக்கம். வீகெண்டில் காப்பி சாப்பிட்டு இருக்கிறோம் என்றாள். (காப்பி மட்டும் தான். டிபன் கூட ?)

திவ்யாவின் காதல் எல்லாம் இந்த சினிமா காதல் மாதிரி இருக்காது!

அஹமதாபாத்தில் சீட் கிடைச்சாச்சு. இடையிலே பாரீன் காலேஜ் ஒன்றிர்க்கும் அட்மிசன் கிடைத்தது. இரண்டு வயது குறைவான தங்கச்சி மீது பாசம். விட்டு போக மனசில்லே. அவளும் கூட வரட்டும் என்று இருந்துவிட்டாள். ட்ரைனில் தான் போய் வருவாள். முப்பது மணி நேரம். இதுக்கு அமெரிக்காவே பெட்டர்னு சலிச்சுக்குவாள். என்னோட முதல் வாரத்தில் இருந்து நல்ல பழக்கம். நான் ஒரு முடிவு பண்றதுக்குள்ள நீயாக (என் மனைவி பற்றி) பிடிசுட்டே என்றாள். என் மனைவியை வைத்துக்கொண்டே "... இன்னும் எனக்கு உன் மேல ஒரு இன்பாஸுயெசன் இருக்கு" என்றாள். அப்போது அவள் ஒரு பையனை வெகுவாக காதலித்தாள். பாம்பே எல்லாம் போய் வந்தாள் அவனோடு. (யூஸ் பண்ணிட்டாண்ட அவன். கல்யாணம்னு பேச்சை எடுதவுடேன் ஆளு எஸ்கேப்.) எங்கள் பாட்ச்சில் ஒரு நாற்பது ஜோடி. இருபது தான் கல்யாணத்தில் முடிந்தது. ரெகார்ட் பிரேக். மொத்தமே அறுபது பெண்கள் தான் அப்போது. நூற்றி என்பது ஆண்கள். சரி அவனோடு இனனும் நட்பு? இப்போ எனக்கு கிழே தான் வேல பாக்குறான்! (விதியின் கொடுமை. டிஸ்க்லொஸர் படம் மாதிரி பண்ணிடாதேடி!)

எல்லோரும் வேலைக்கு போனார்கள். திவ்யாவும் என் மனைவியோடு லேமனில். பம்பைவாசி. ஒரு வருடத்தில் அமேரிக்கா போய்விட்டாள். "ஒரு தடவை கஸ்டமர் கூட டிபன் சாப்பிட்டேன். அவ்வளவு தான். வெள்ளைக்காரன் ரோமன்ஸ் பண்ற ஸ்டைல் தனி. இருந்தாலும் அம்மா சொன்னதாலே, இந்தியாவிலே ஒரு பயனை பிடிக்கலாம்னு திட்டத்திலே இருந்தேன்" என்றாள். "மாச்சோ சடிஸ்டிக் வெறியன்கள். எல்லாம் வசதி வேலை காசு பணம்'னு அலையுற ஜென்மங்கள். ஒருத்தனையும் பிடிக்கலே. தங்கச்சி ஆஸ்திரேலியா போய்ட்டாள். சொந்தத்தில் ஒருவனோடு செட்டில் ஆயிட்டாள். அவள் கொஞ்சம் கருப்பு. அக்செப்டிங் எக்ஸ்ட்டேன்சியலிசம்." என்றாள். நல்ல வருத்தம் போல!

அதன் பிறகு கிரீன் கார்டு வந்து செட்டில் ஆனாள். தனி மரம். அமேரிக்கா பாஸ்போர்ட்டும் வந்தது. பல வித ப்ரோமொச்ன்கள். நான் ஒவ்வொரு தடவை அமெரிக்காவில் பார்க்கும் போதும் வேறு வேறு ஆட்கள். டேடிங் கல்சர். பத்தாவது ஆள் தான் இந்த ஜோசப் என்கிற ஜோ.
பணக்காரன். இந்திய கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். ஐந்து வருடம் பழக்கம். லிவிங் டுகேதர். இந்தியாவிலே யாருக்கும் தெரியாது. "ஒரு தடவை வலேண்டைன்ஸ் டே அன்னிக்கு கல்யாணம் பற்றி கேட்டான். ஒகேய்னு சொல்லிட்டேன்". குதுகலமாக சொன்னாள். நானும் அப்போஅங்கே போயிருந்தேன். அவளோட அப்பா அம்மா தங்கச்சி புருஷன் குழந்தைகள் எல்லாம் வந்தார்கள். தினமும் பகவத் கீதை படிக்கிறான் ஜோ. ஆனா குழந்தைகள் மேல மட்டும் ஆசை வர மாட்டேன் என்கிறது, என்றாள். இன்றும் அதே கல்யாண கலை. "ரொம்பத்தான் கடமையை செய்றான் போல" என்று மனதிற்குள் நினைத்தேன் "பலனே எதிர் பார்க்காமல்".

குழந்தைக்காகவாவது இன்னொருத்தன் கூட புல் மீல்ஸ் சாப்பிடனும் என்றாள்.

ததாஸ்து. (எல்லாம் நன்மைக்கே!)

*******

அவள் அகராதியில், டிபன், லிமிடெட், புல் மீல்ஸ் பற்றி நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை!

மேற்கூறிய விஷயங்கள் ஒரு கற்பனையே.

பேசாமல் இருந்து விடு

பேசாமல் இருந்து விடு என்பது என் நண்பர் ஒருவருக்கு தாரக மந்திரம்.

எப்போது....

கோபம் தலைக்கு மேல் செல்லும் போது. சிறு வயது முதல் அப்படி தானாம். சில வேலைகளை தூக்கியடித்து விட்டு வந்துள்ளார்.

மவுனம் ஒரு வகையில் பெரிய ஆயுதம் தான்.

எதாவது ஒரு நண்பர் தேவை இல்லாமல் வெட்டி பேசினால், மவுனம் தான்அந்த பேச்சை குறைக்கும்.

என் கவிதை ஒன்று கிழே...

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

திருக்குறளும் இப்படி சொல்கிறது...

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு


நல்லவை என்று தோன்றுபவை அப்படி ஒருகால் இருக்காது, அதே மாதிரிதீயவை என்று தோன்றுவதும், தீயவை ஆக இருக்காது. அமைதியாகஆராய்ந்து உன் மனதிற்கு பட்டதை, முடிவை எடுத்துகொள்.

பேச்சு மொழியும் வழக்கமும்

பேச்சு மொழியும் வழக்கமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

ஆனால் ஒரு துறை சார்ந்த பேச்சு, அதை சுற்றியே இருக்கும்.

இலக்கியத்தில், இந்த விளையாடடு எல்லாம் இருக்காது. நேரடி தாக்குதல் சிலசமயம், உவமை ஆட்டம் தான் எப்போதும். எனக்கு பிடித்த ஷேக்ஸ்பியர் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் பற்றி ஹம்லேடில் (உயர்வாக சொல்லவில்லை, அம்மா மீது அளவற்ற காதல் கொள்வது)... இலை மறைவு காயாக சொல்லியுள்ளார். அதாவது அன்பு கிடைக்காது என்று ஏங்குபவர்கள் இந்த நிலைமைக்கு (அம்மா மீது அளவற்ற பாசம் ) - அரிச்டோடிலும் இதை தான் துயரத்தின் காதல் என்று சொல்கிறார்.

தமிழ் சினிமாவில் இதை ஆனந்தத்தில் காட்டுகிறார்கள், மரத்தை சுற்றி ஆடும் கதைநாயகி. பெங்காலி படத்தை பாருங்கள்... சோகம் என்றால் காதலனும் காதலியும் கட்டி பிடிப்பார்கள்... பார்பவர்கள் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். பாடல்கள் குறைவு. பங்கிம் சந்திரர் (சாடேர்ஜி) எழுதுகிறார், தேவதாஸில்... சிறு வயதில் பாருவிற்கும் தேவதாஸிர்கும் நடக்கும் களியாட்டம், வயதான பின் அந்த மாதிரி இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத வண்ணம். பாரு மாற்றானை கட்டிய பிறகு, உடல் காதல் இல்லாமல் தான் இருந்திருக்கும் என்று சொல்வது போல இருந்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக, அளவற்ற காதல் அங்கே வேறு விதமாக காட்டப்படுகிறது. இந்த விசயத்தில் பரிணீதா என்ற ஹிந்தி படம் கை ஆள்கிறது, வித்யா பாலன் முதலில் நடித்த படம், பெங்காலியிலும் வந்தது. காதலித்தவனையே கல்யாணம் செய்து கொள்வது, நண்பனை நண்பனாக பார்ப்பது. தத்துவம்...வன்மம்.

ஒன்று இல்லாது இருந்தாலும் இருப்பதாய் அங்கிகரிக்கும் வழக்கம், இல்லை இங்கே என்று சொல்வதும், வித விதமாக இலக்கியத்தில் தான் ஒரு வரலாற்று சாதனை ஆக புரிந்து எடுக்கலாம்.

"எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லே", என்று அடிக்கடி என் டவாலி சொல்லுவார். அதாவது அவருக்கு தெரியுமாம், ஆனால் தெரியாதாம். சொல்ல விருப்பம் இல்லாமல் இருக்கும்...வடிவேலு சினிமா டயலாக் "இருக்குது ... ஆனா இப்போ இல்லே".

சில சமயம் தோன்றும், இலக்கியம் பேசுபவர்கள், மூடிக்கொண்டு தங்கள் செய்யும் தொழிலை கவனிப்பது நன்று என்று. அவர்களுக்கும் குஸ்ஸ (எரிச்சல்) மற்றவர்களுக்கும் குஸ்ஸ (எரிச்சல்). புரிகிற விதத்தில் எழுதி தொலைங்கய்யா என்று சொல்ல தோன்றும். அப்புறம் எப்படி கிடைக்கும் வார்த்தை வர்ணனை? "யு நீட டு டிகான்ச்டிரக்ட் யூர் மெண்டல் எமொசன்ஸ்!"

இருந்தும் இல்லாமல் இருந்திருக்கலாம், வாழ்க்கை நடைமுறையிலும் பார்க்கலாம். கமல்ஹாசன் ஒரு உதாரணம் டெரிடாவின் டிகான்சிடிரக்சன் பேச்சு மொழிக்கு. தனது துணைவி கௌதமி பற்றி தேவையில்லாமல் பதில் சொல்ல மாட்டார்.

"இன்னாமே, வேணும்னா வாங்கிக்கோ, துட்டு இல்லேனா, வூட்டாண்ட கிளம்பு"

Wednesday, September 24, 2008

வாடிகன்

வாடிகன் இடலியிலே இருக்குது... ரோம் (ரோமானு சொல்வாங்க) நகரத்திலே ஒரு குட்டியுண்டு இடம் (இடாலினு ... கொழுப்பு ரொம்ப சாப்பிடுவாங்க. பிலேயிங் பார் பிட்சா அப்படி என்று ஒரு நாவல் ஜான்ஆபிரகாம் சீ.. க்ரிஷம் எழுதுனதிலே, விவரிச்சு இருக்கார் ... சோனியா காந்தி மேடம் அவங்க ஊரு...)

ஒரு குட்டி கிறிஸ்துவ நாடு வாடிகன் (போலிசு மட்டும் தான், பணமெல்லாம் யுரோ தான்.. பழைய லிரா தான் அழகு)... சாமியார்கள், மத போதகர்கள், பல வித சைசுலே இருப்பாங்க.
எல்லா மதம் ஜாதிகளும் அங்கே போகலாம்.

கட்டிட கலை, ரொம்ப நல்ல இருக்கும் கிரேக்கோ ஆர்கிடெக்க்ஷுர்.

கைடு மட்டும் எடுக்க கூடாது. லோன்லி பிளானெட்
கைடு புக் போதுமாம். இங்கே படியுங்க ரோமா பற்றி.

பல ஆங்கில நாவல்கள் ரோம் நகரத்தை படம் பிடித்து காட்டுகின்றன.

அப்புறம் டூசான்'னு ஒரு இடம், ஒரு சாப்பாடு ஹோட்டல். மூனி மணி நேரம் சாப்பாடு. நன்றாக சாபிட்டா பிறகு ஹோட்டலை உடைத்து விடுவார்களாம். ஆளுக்கு 2500 யுரோ. தாங்காது சாமி!




( திவ்யா வந்தாச்சு. பார்த்து பல காலம் ஆச்சு. அப்படியே பெருசா இருக்காங்க. ஒரு மணி நேரம் மூணு பேரும், குழந்தைகள் தொந்தரவு இடையே பேசினோம். என்னோட குடிகாரப்பாவிகள் கவிதை ரொம்ப நல்ல இருக்குன்னு சொன்னாங்க! :-) இப்போ தான் சுட சுட போட்டேன். இப்போ சமையல் பண்றாங்க.... ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறது கொஞ்சம் நிறைய சந்தோசம்... நாளைக்கு இரவே கிளம்பறாங்க அமெரிக்காவிற்கு. வாடிகன் பற்றி அவங்க சொன்னது தான் மேலே.)

அடுத்த வருடம், ஒரு ஐரோப்பா டூர் பிளான். ஒரு மாதத்திற்கு கட்டாயம் பிளான், குறைந்த பட்சம் மூன்று வாரம். பார்க்கலாம்... (யாரவது ஸ்பொன்சர் பண்ணினால், வசதியாக இருக்கும், தினம் ஒரு பயணம் பற்றி பிலாக் போடுறேன். இருந்தா கண்டிப்பா சொல்லுங்க!).

குழந்தைகளா, சில்லரைகளை பிக்கி பாங்கிலே போடுங்க, சாக்லேட்டு வேண்டாம்டா கண்ணா... (டூர் எதுக்காவது உதவும்...)


குடிகாரப்பாவிகள்

குடிகாரப்பாவிகள்
திருந்தமாட்டர்களா?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
குடியால் நாடு முழுகிப்போச்சு!

அப்படி என்ன இருக்கின்றது அதில்?
போதைக்கு தான் இருகிறதே போகம்?
உணவு கொடுப்பது ஒரு நல்ல சுகம்.
அது எதில் தான் வரும்?
நளபாகம் ராஜயோகம்
இப்போ சிலபேருக்கு சரபோஜி யாகம்!

சாத்தான்கள் ஓதும் வேதம்
தாஸ்மாக்கிலெ டீக்கடையிலே
பப்பிலே, அங்காடி தெருவிலே
கோவையிலே ஒப்பணக்கார சந்திலே
தேனியிலே மல்லிகை தெருவிலே
மதுரையிலே மாட்டுதாவனியிலே
பொள்ளாச்சியிலே சந்தையிலே
நெல்லையிலே வாத்தியார் விட்டுலே
திருச்சியிலே மலர்வனத்திலே
ஈரோட்டிலே கருங்கல்பாளயத்திலே
சென்னையிலே பெருங்குடியிலே

எல்லா இடத்திலேயும்
குடிக்கிரான்கள்
குடிகாரப்பாவிகள்
நிருத்தமாட்டாங்களா?

திருந்தாத ஜென்மங்கள்..
குடும்பம் நடுத்தெருவிலே
குழந்தைக்கு பாலில்லே
மனசு தான் செத்து போச்சு!


ஐடி கார்டு

ஐடி கார்டுலே பிளட் குரூப் மற்றும் அவசர உதவி விவரம் இருக்கும். ஹெல்மெட் போடாம டூ வீலர் காரங்க விழும் அடிபடும் போது உதவும்.

எனக்கு அமெரிக்காவிலே வேலை பாத்த போது பெல்டுலே மாட்டர மாதிரி ஒரு கார்டு. ரப்பர் மாதிரி நீளமா வரும் கயிறு. உள்ளே பொய் வெளியே வர சைசை'னு வரும். அப்பப்போ முதுகு சொரிஞ்சுக்க உதவும். மக்னெடிக் கார்டு ஒன்னும், போடோ கார்டு ஒன்னும் இருக்கும். நடுவிலே ஒரு இருபது டாலர் நோட்டு ஒன்னு எப்பவும் வைத்திருப்பேன், அவசர உதவிக்காம். அடிபட்டு விழுந்து கிடந்தா, காசு பார்த்தாவது, இன்பார்மேசன் சொல்வாங்கன்னு தான். அப்புறம், நியூ யார்கிலே மக்கிங்க்னு (ரோட்டிலே வழிபறி நடக்கும் - பர்சை பறிச்சிட்டு போவான்கள், துப்பாக்கியை காட்டி) பயம், பணம் ஒளிச்சு வச்சுக்க தான்.

அப்புறம் இந்தியாவிலே வெட்டி பந்தா தான், நான் பார்த்த வரைக்கும். செயின் மாதிரி ஆடிட்டு போட்டு இருப்பாங்க. அதுவும் இந்த சென்னை ட்ய்டல் பார்கிலே, பல்லிலே கடிச்சிட்டு பெண்கள் நடக்கிறது.... (அது பத்தி ஒரு பெரிய பதிவு ஒன்னு... காத்திருங்க...)

அரசாங்க வேலைலே, எனக்கு டப்பா கார்டு இருந்துச்சு. குறுக்காலே பச்ச இங்க கையெழுத்து போட்டு. பதிமூணு வருஷம் வச்சிருந்து, வேலையை விடும் போடு திருப்பி கொடுத்தேன். என்ன மூஞ்சி தான் ஊதி இருந்திச்சு, போட்டோ கூட மாத்தலே. பெட்ரோல் டீசல் போடும் போது, காட்டினா, தேபர்த்மேன்ட்டுக்கு பில் அனுப்புவாங்க, என் கையெழுத்து இருக்கனும். அமெரிக்காவிலே என்ன மாதிரி அரசாங்கத்திலே ஒரு கவுரமான ஆபிசர்கள் ஸ்டார் பேட்ஜு வச்சிருப்பாங்க!

ஒரு தடவை சென்னை அண்ணா சாலையிலே சிடிபான்க் போனேன். மத்தியானம் மூணு மணி. என்னோட யேடியம் கார்டு தொலஞ்சிருச்சு. நேருலே போய் தான் பணம் எடுக்கணும். அவசரம். யாருமே இல்லே. சாப்பிட போயிட்டாங்க போல. இருந்த் ஒன்னு ரெண்டு பேர் யேடியம் பக்கம். பணம் கொடுக்கிறே மிசின். பார்க்க எரிச்சல வந்துச்சு. இந்த நேரம் போய்...

அப்போ ஒரு அம்மா வந்தார். ஐடி கார்டு கழுத்திலே பெருசா போட்டிருந்தார். சிடிபான்க்'னு இருந்துச்சு.

கேட்டிறலாம்னு கேட்டேன் "அவசரமா கொஞ்சம் பெரிய தொகை எடுக்க வேணும்".

"சாரி சார் நான் மார்க்கெட்டிங் தேபர்த்மேன்ட்" சொல்லிட்டு போய்ட்டார்.

முகத்திலே ஆடவில்லை. கல்லாவிலே ஆள் வந்தப்புறம் வேலை முடிச்சுட்டு கிளம்பினேன்.

அந்தே அம்மா அவர் நண்பர் கிட்டே சொன்னது கேட்டது. "ஐடி கார்டு பாக்குற சாக்கிலே சைஸ் பார்க்கிறான் படிச்ச மாதிரி இருக்கிறே பன்னாடே" என்று. ஆங்... அந்த பொண்ணு பேரு ஞாபகம இருக்கு - ஜெயலஷ்மி. எக்ஸ்டெர்னல் அபைர்ஸ் தேபர்மேண்டுக்கு ஒரு தடவை வந்திருந்தாங்க. வெளி நாடிலே செட்டில் ஆகிறதுக்கு, பிறப்பு சான்றிதழுக்கு எமொயீ கையெழுத்து வாங்கினார். அப்பாவும் அந்த ஐடி கார்டு கழுத்திலே போட்டு.... ஆடிட்டு இருந்திச்சு.

எங்கேயும் எப்பவும் அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சி.

பின் நவீனத்துவமும் ஜீன்ஸ் பேன்ட்டும்

பின் நவினத்துவம் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ஜெயமோகன் தான். எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் கொஞ்சம் பரவாயில்லை ஆகா என்றுஇருக்கும். ஜெயகாந்தன் தான் தமிழில் இதற்கு தந்தை. ஒரு மெஸ்ஸையா. வழி நடத்தியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மூலம் அருமையாக முயற்சி செய்து, அறிமுகம் செய்தார். கமலஹாசன் ஒரு பின் நவினத்துவம் எழுத்தாளர் தான். அவருடைய தாயம் ஒரு உதாரணம். (இருவர் பார்வையில்)

பின் நவினத்துவம் என்றால் எழுத்துக்கள் புரிந்த மாதிரி இருக்க வேண்டும். ஒரு உள் அர்த்தம், பல வகையில் ( காகத்தை வைத்து விசுவரூபம்....) சில சமயம் புரியாமல் இருக்க வேண்டும். மண்டையை உடைத்து கொள்ள வைக்க வேண்டும்.

பின் நவினாதுவம் என்றால் நேர் வழியில் சொல்லாமல், ஒரு விசயத்தை மற்றோண்டோடு தொடர்பு படுத்தி எழுத வேண்டும்.

பின் நவினத்துவம் என்றால் பதிவுபோதை போல, ஒரு தலைப்பில் எழுதும் போது, அதற்கு சம்மந்தம் பட்ட எழுத்துக்கள், நினைவுகள் தொடர்பு படுத்தி எழுத் வேண்டும்.

பின் நவினத்துவம் என்றால் தொடர்கதை அல்ல.

பின் நவினத்துவம் என்றால் சிறுகதைகளின் தொகுப்பும் அல்ல.

பின் நவினத்துவம் ஒரு நெடுங்கதையை எப்படி வேண்டுமானாலும்படிக்கலாம்.

பின் நவினத்துவம் என்பது ஒரு வியாபார நோக்கோடு எழுதுவது அல்ல.

பின் நவினத்துவம் என்பது ஓஷோவின் வார்த்தைகள் மாதிரி இருக்கவேண்டும்.

பின் நவினத்துவம் என்றால் போஸ்ட் மாடர்னிசம் .

ஆமாங்க அது எதுக்குங்க ஜீன்ஸ் பேண்ட்டு? அது தாங்க ஒரு தலைப்பு கவர்ச்சி! இல்லேனா யார் படிப்பா? ஆனா அதுக்குள்ளே ஒரு தத்துவம் இருக்கு... டெண்டுக்கு தைத்த ஜீன்ஸ் துணை கால் சரி சென்சார்கள் லெவிஸ் கம்பெனி... தங்கம் தேடினார்கள் கலிபோர்னியாவில் 1800 களில் .. தி கிரேட் வெஸ்டர்ன் ஹுன்ட் என்றும் சொல்வார்கள். ஐமாக்சிலே ஒரு படம் சிகாகோவுக்கு போன போது பார்த்தேன். மீண்டும் ஜெர்சி சிட்டியில். தி வெஸ்டர்ன் மைக்ரேசன் என்று பெயர். கண் முன் நிறுத்தினார்கள். வில்பர் ஸ்மித்தும் எழுதியிருக்கிறார். மிசோரி நதியை தாண்டுவது, கிராண்ட் கான்யன் தாண்டுவது ... அப்பப்பா அருமை.

தூங்காதே தம்பி தூங்காதே

தூக்கம் ஓட்ட வேண்டும். வேலை இருக்குது. டைம் பாஸ் என்ன செய்ய.

பிசுனஸ் எல்லாம் இப்போ கம்மி. எதோ ஓடிக்கொண்டு இருக்கு.

அதுக்காக சும்மா தூங்க முடியுமா?

இதோ அதுக்காக ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு... (பாடி பாருங்க)

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு
அதிஸ்டமில்லையென்று அலட்டிக்கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்
இங்கு குரட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

ஒரு படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
ஒரு கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் கொள்கையிழந்தான்
சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சந் தர மறுத்திடுமா
எனக்காக ஒன்று உனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவரும் இல்லையென்பார்
மடிநிறையப் பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எனக்காக ஒன்று உனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும்

இன்று எதோ ஒரு மூடில், என் வகுப்பு தோழி திவ்யா அமெரிக்காவில் இருந்து வருகிறாள் என்பதால், கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமா? காலை ஒன்பது மணிக்கு முடி வெட்ட சென்றேன். அஹாமதாபாத்தில் பல்லி மாதிரி இருந்தாள்... இப்போ டினோசராகிவிட்டாள்.. (நாகூர் ரூமி சொல்லியதை போல).. என் மனைவியும் வகுப்பு தோழி தான்...கோவைக்காரி. நடிகர் சத்யராஜுக்கு சொந்தம். அவர் மகன் சிபிராஜ் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். திவ்யா வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். இப்போது ஒரு வெள்ளைக்காரனை கட்டி இருக்கிறாள். மாப்பிள்ளை வரவில்லை.

அப்பவே எனக்கு தெரியும் அவள் அமெரிக்காவில் தான் கட்டுவாள் என்று.
தி ஜாய் ஒப் செக்ஸ் என்ற புஸ்தகம் பற்றி வெகுவாக சிலாகித்து பேசுவாள். இது தாங்க ஒரு செக்ஸ்பாடம்.... காம ஸுத்ரா எல்லாம் கப்சா என்பாள். அவள் பற்றி ஒரு தனி கதை எழுதுகிறேன். (முழு பெயர் எழுதமாட்டேன், கவலை படாதே கண்ணா!).

மாசோஸ் ஒரு உனிசெக்ஸ் அழகு நிலையம். வேலை செய்பவர்கள் சப்பை மூஞ்சி அழகிகள் (அது தாங்க நம் நாட்டு சைனீஸ் முகங்கள்.... நோர்த் ஈஸ்ட் ஸ்டேட்... மரியாதைகளுடன்... பெங்களூரில் அவர்கள் ரொம்ப ஜாஸ்தி). குஜராத்திலும் இதே கதை தான். பி.ஜே.பி. ஆட்சி.

முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும் சேர்ந்தே போவது போல... இன்று ஒருஆஃப்ராம். எல்லோருக்கும் கிடையாது. ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும். ஐந்நூறு ரூபாய்க்கு, முடி வெட்டி, நகம் வெட்டி, சுளுக்கு எடுத்து, அக்குள் முடி சுத்தம் செய்து (பன்னமாட்டார்கள் என்று இருந்தேன்) தலைக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்தனர்... (ரிம் பிரஸ்) அது மட்டுமா பவுடர் மசாஜ் என்று ஜட்டியோடு படுக்க வைத்து உடம்பெல்லாம் பவுடர் கொட்டி அழுத்தி அழுத்தி பிரிச்சு மேய்ந்துவிட்டனர் இரண்டு பேர். (மர்ம ஸ்தானத்து பக்கம் வராமல் செய்கிறார்கள்...)

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
எனக்கு பெண்களை கண்டால் கொஞ்சம் கூச்சம் ஜாஸ்தி!

அங்கேயே லைட்டாக ஒரு ஸவர் பாத் செய்து கொண்டு டோவெல் சுற்றி உடை மாற்றும் ரூமுக்கு வந்தால், உடை மாற்றி கொண்டு இருந்தாள் ஒரு இளம்பெண். நான் வந்ததை கவனித்தவுடன், "சாரி, பக்கத்து ரூம் எங்ககேஜ்டு.இந்த ரூம் தான் கதவு ஓபன் ஆகியிருந்தது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்! உனிசெக்ஸ் இடங்கள் என்றாலே பேஜார் தான். கதவுகளை மறக்காமல் சாத்த வேண்டும், தாழ் போட்டு!

இப்போது... ட்ய்ணிங் டேபிள் மேலே புளியோதரையும், வெங்காய பச்சிடியும்... ஒரு பிடிபிடித்து விட்டு, உட்கார்ந்துள்ளேன்.. தூக்கம் கண்ணை சுழற்றுகிறது.

எனக்கு இன்னைக்கு நிச்சயம் டோஸ் உண்டு. (மனைவியும் இதை படிப்பார்கள்... அவரும் அந்த கடைக்கு தான் செல்கிறார்)

அல்லக்கை

அல்லக்கை = பல்லக்கை அல்லையில் வைத்து தூக்குபவர்கள். ஒரு பல்லக்கு கவுட்டி என்றும் எழுதியுள்ளார். பல்லக்கு டிரைவர்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் படித்து பக்கம் என் சொல்லுங்கள். அல்லது கருப்பு வெளுப்பு சிவப்பு ஸ்கேன் காபிகள் இருந்தால் அதில் வரும்.

ஜால்ரா என்று காரணப்பெயர்.

கோவையில் நான் கேட்டது, குழந்தையை அல்லக்கையில் வச்சு ரொம்ப தூரம் நடக்கணும் சாமி. ரோடு நல்லா போட சொல்லுங்க அய்யா.

இதை படியுங்க...

நான் யாருக்கு அல்லக்கை?

பரபரப்பு பத்து நிமிடம் இதயம்

பரபரப்பு பத்து நிமிடம் இதயம் நிச்சயம் படிக்கும் எனக்கும் இதயம் ஒரு நிமிடம் நின்று ஓடியது.


Heart, front view

தமிழ்நாடு போலிசுக்கு ஒரு சல்யுட். அந்த .சிக்கு நிச்சயம் நான் ஒரு பரிசு கொடுப்பேன். விவரம் தெரிந்தவர்கள், அவர் நம்பரையோ அல்லது அட்ரேசை கொடுக்கவும்.

இருபது நிமிடத்தில் ஒரு இதயம் மாற்று அறுவை சிகிச்சை என்பது உண்மையல்ல. என் மச்சான் அமெரிக்காவில் ஒரு பெரிய இதய நோய் நிபுணர். இரண்டு மணி நேரம் கட்டாயம் இதயம் வைக்கலாம் என்றார். த்ரொபிகல் நாடுகளில் இன்னும் சிறிது நேரமும், கடலோரத்தில் காற்றில் நீர் இருப்பதால் இன்னும் சிறிது அதிகம் நேரம் எடுத்து கொல்லேலாம் என்றார். அதாவது ப்ளச்மா அர்ரேச்ட் ஆக வாய்ப்பு இல்லாமல் இருக்க, ப்ளூட் குரூப் தெரிந்தால், அன்டிபிஒடிக் இதயம் வாங்கும் உடலுக்கு கொடுக்கலாம் என்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் செய்த அறுவை - இதயம் மாற்று சிகிச்சை - மெயின் ஸ்டேடில் ஒரு விபத்து, அந்த உடலின் இதயம் எடுத்து, விமானம் மூலம் இரண்டுமணி தேரில் வாஷிங்டன் சென்றடைந்து - ஒரு அறுபது வயது மெக்க்ஷிகனுக்கு வைத்தார்களாம். வைடிங் லிஸ்ட் கட்டாயம். இதெல்லாம் இப்போ அங்கே சாதாரணம். அரசியல்வாதிகளுக்கு, முன்னுரிமை கிடையாது.

இங்கே ஒரு அறுவை சிகிச்சை பாருங்கள். (தைரியம் உள்ளவர்கள்)




இந்தியாவில் கேரளாவில் தான் முதல் இதய அறுவை சிகிச்சை நடந்தது.

இன்று
அமெரிக்காவில் இதயம் தேவை என்று, மிஷன் வைத்து வாழும் இரண்டாயிரம் பேர் உள்ளனர். இதயம் மட்டும் மோசம் நிலைமையிலும் மற்ற உறுப்புக்கள் நன்றாகவும் இருக்க வேண்டும்.

என் குருவும் இதயத்தில் தான் உயிர் ஆத்மா இருக்குது என்கிறார். (பேஸ் மேக்கர்) மூளையின் அடியில் ஹைபோதலாமஸ் மற்றும் பிடுயடரி கிலாந்து என்பது உயிர் ஓட்டும் கருவிகள்.

அமெரிக்க அதிபர்
அனுமதியோடு, தூக்கிலிடும் (கொல்லும்) கைதிகள் இதயம் எடுத்து வைக்கலாம் என்கிர்றார்கள் - பல குடும்பங்கள் ஒத்துகொண்டுள்ளன. சீனாவில் இது நடைமுறை. இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதும் செயல்படுத்தலாம்!

இது ஒரு பரபரப்புக்கு வேண்டிய நியூஸ், சென்னை நகரமும் நெரிச்சல் இல்லாமல் இருக்குது என்பதை காட்ட பரப்ப பட்டது எனலாம். நான் குறைகூறவில்லை. நிறைகளை எடுத்து சொல்கிறேன்.

ஹிந்து நியூஸ்பேப்பர் நியூஸ்!

நானும் நியூஸ் பேப்பர் படிக்கிரேனுங்க!

Tuesday, September 23, 2008

மேரிலாந்து கதை

மேரிலாந்து (மேரிலன்ட்) அமெரிகாவில் ஒரு ஊர். என் அக்கா அங்கு இருந்தார்கள். இப்போது வாஷிங்டன் அருகே சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ்...

நான் முதன் முறை ஒரு தெலுங்கு நண்பரை அப்போது சந்தித்தேன்.

மேரிலன்ட் என்பதை பலமுறை மேரிலண்டு
என்றே சொல்லிகொண்டிருந்தார்.

என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை.

மேரிலண்டு என்றால் என் பிருஷ்டம் (மராட்டி, ஹிந்தி, பெங்காலி). காண்டு என்றும் சொல்லெலாம். சென்னை தமிழில் ரொம்ப அழகாக சொல்கிறார்கள்.

அவர் ஸ்விட்ச் என்பதை சுச்சி என்று தான் சொல்வார்... (உ.ம. லைட் சுச்சி பெட்டு ....) சுச்சி (மராட்டி, ஹிந்தி, பெங்காலி) என்றால் மார்பு (முலை, கொங்கு)

எல்லா தெலுங்கரும் இப்படி இல்லை. ... சிலர் இப்படி...

என்னுடைய கதை மனிதனில் காதல் தீ பற்றி

மனிதனில் காதல் தீ அங்கே போய் படியுங்க.

எண்பத்தி எட்டாம் வருடம் ஹிந்தியில் எழுதியது.
காஸ்மீர் ப்ரிச்சனை ஆரம்பம் ஆன சமயம், ராஜிவ் காந்தி ப்ரிதமர் ஆன பிறகு நல்ல அடக்குமுறை ஜாஸ்தி ஆனது அங்கே.கொஞ்சம் தமிழ் சுவை கூறியிருக்கிறேன். எங்கள் காலேஜில் ஒரு போட்டி. விமல் வர்மா எழுதிய ஒரு புஸ்தகம் பரிசு - அட்டோக்ராபுடன். நிச்சயம் ஒரு நல்ல சினிமா எடுக்கலாம்.

எல்லோரும் முஸ்லீம் பார்வையில் காஸ்மீர் கதை எழுதும் போது, எனக்கு ஹிந்து பண்டிட்டுகள் பார்வையில் எழுத தோன்றியது. அதற்காகேவே பரிசு கொடுத்திருக்கலாம்! :-)

என் அப்பா அமரர்
ஆர்யா ரத்தன் டெண்டுல்கர், சான் பிரன்சிச்கோவில் பெங்காலி டிராமா ஒன்று இந்த கதையை கருவாக வைத்து நண்பர்களோடு சேர்ந்து இரண்டு முறை மேடை ஏற்றினார், சில வருடங்கள் முன், மாற்றம் - இராக்கில் நடப்பதாகவும் ஜோர்டனியன் ஒருவன் பிழைப்புக்காக இராக்கில் வாழ வருவதாகவும், அமெரிக்க தாக்குதல் சமயத்தில் அவரால் படையை எதிர்த்து இருவரும் உயிர் விடுவதாகவும் ... (ரொம்ப தில்லுங்க, அவருக்கு... இந்தியாவிலே விட்ருவாங்களா? கிரீன் கார்டு வைத்திருந்தார்!).

இன்னொரு யுத்தி நான் கை ஆண்டது, ஹீரோ பெயர் சொல்லாமல், படிப்பவர்க்கு ஒரு கற்பனை ஷக்தி கொடுத்தேன்.

கடவுளை கொன்றவர்கள்

என்ன எழுதலாம் என்று பார்த்தேன்
கமலஹாசன் நினைவினிலே
நேரம் என்று வந்தால் நம்பிக்கையும் வரும்
கடவுள் இருந்திந்தால் நன்றாயிருக்கும்

முகம் நிறைய தாடி வைத்து தோன்றினால்
அவர் எசுநாதராம்
அதனால் தான் இப்போது எல்லா மகான்களும்
சடை முடியோடு இருக்கின்றனரோ?

நீள அங்கி அணிந்து சாம்பல் பூசி
மத சின்னம் அணிந்து
உலக நன்மை அமைதி என்று பேசி வாழ்ந்தால்
அவரை போலே தான் இருக்கின்றனரோ?

புத்தர் எதுவும் வேண்டாம் என்று
மழித்துவீட்டார்
அதுவும் ஒரு அணிகலன் ஆயிற்று
அதையும் செய்கிறார்கள் சிலர்

உணவில்லா மனிதர்கள்
உபவாசம் என்றால்
கடவுள் எற்றுகொள்வாரா?
இல்லை கடவுளை தான் ஏற்றுகொள்வார்களா?

மத துரோகிகள் தான்
துவேசத்தோடு
உலகிலே இப்போது
கடவுளை கொன்றவர்கள்!

Monday, September 22, 2008

இது எனது நூறாவது பதிவுபோதை!

இது எனது நூறாவது பதிவுபோதை!

போதை நல்லா தான் ஏறி உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் பார்த்தீர்கள்!

தமிழ் போதை குடித்தீர்கள்!

வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்றி!

கவிதை

நான் ரசித்த கவிதை இங்கே... நரசிம் என்பவர் எழுதியது... (கேரளா பாதிரி பெண் கேஸ் நினைவுண்டா?)

விந்து சிந்தும் பேருந்து..

சுஜாதா சொன்னது புது கவிதை பற்றி "வார்த்தை அலங்காரங்கள் இல்லை கவிதை, பட் நினைவு அல்லது துடிப்பின் கோர்வை. பாடலாக இருக்க வேண்டாம். உரை நடை போதும்." (அச்சு அசலாக நான் சொல்லவில்லை இங்கே). நா.காமராசன் மற்றும் ஷாஹுல் ஹமீது போன்றவர்கள்ஒத்துகொண்டது இது. நிர்மல் வர்மாவும், பச்சனும் (அப்பா) புகுந்து விளையாடி உள்ளனர்.

எனக்கு நிஜமாக நா.முத்துக்குமார் பிடிப்பதில்லை. இன்னும் நிறைய சினிமா பார்த்துவிட்டு சொல்கிறேன். மு.மேத்தா புரிந்தும் புரியாமல் படித்தேன். அவர் பழைய காலத்திற்கு தகுந்த மாதிரி எழுதினார். (என் மனைவி கவிதைகளில் பல பரிசுகள் வென்றவர்!)

என்னிடம் இரண்டு வாலும்கள் கற்றதும் பெற்றதும், அதில் நேர் அசை, வெண்பா, தளை - பற்றி மட்டுமே எழுதியுள்ளார் சுஜாதா. மற்றது அவருடைய பெருமையான ஹைக்கூ. (எப்பொழுதும்)

நான் அவரிடம் சொன்னதில், அவர் ஹைக்கூ என்று ஒத்துகொண்டது..

போதையில் படுத்தேன் கவிதைகள் சொன்னேன்
கனவு


(இப்போ பதிவு ஆகி போச்சு )

ஜ்யோவ்ராம் சுந்தர் சொல்கிறார், இபோதெல்லாம் ஹைக்கூ வருவதில்லை, நிறைய பொய்கூ தான் (நன்றி: சுஜாதா) :-( என்று.

இந்தியா அரசியல்

அரசியல், வாரிசு, கமிசன் போன்றவைகள் இல்லாமல் இருந்தால், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் நாற்காலி பிடித்து கொள்ளும் பயம் இல்லாமல் இருந்தால் நாடு சுபிசமடையும்.

அமெரிக்காவில் கோல்டன் கேட் பிரிஜில் ஒரு நாள் ஒரு குழந்தை விழுந்து விட்டாள் சிறு ஓட்டையில். உடனடியாக, மாநகராட்சி மன்னிப்பு கேட்டது. ஓரிரு நாட்களில் தவறு எல்லாம் சரி செய்யப்பட்டது.

ஹீரோ வொர்ஷிப் என்பது இந்தியாவில் ஒழிக்க வேண்டும்.

அப்போது தான், இப்போது நடக்கும் கூத்துகள் (காமடி நடிகர் ஹீரோ நடிகரை எதிர்த்து பேசுவது) இருக்காது.

சிறு துளி பெரு வெள்ளம். அதனால் தான் இந்த ப்லோக் இடுகை.

*****

என் ப்லோக் நண்பர்களே, திட்டி எழுதினால் ஆட்டோ அனுப்பும் காலம் இது.

நல்ல வேளை, நான் நடு நிலைமையோடு இருக்கிறேன்.

சந்தேகம் கொள்ளாதே

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்!

ஒருவரை தேவையில்லாமல் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நம்பிக்கை வைத்தால், அதை சோதித்து பார்க்க கூடாது.

நண்பர்களிடம் காசு பணம் விசயத்தில்... சரியாக இருக்க வேண்டும். ஒரு நண்பன் நாற்பது லட்சம் ருபாய், ஒரு பெரிய பண்டல் டாலர் நோட்டு காட்டி, இதைமாற்றியவுடன் (ப்ரோப்லேம் டா பாங்கிலே, கொஞ்சம் கொஞ்சம் தான் மாற்றனும்) கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவர்... வருடம் ஆகியுள்ளது. கேட்காத வட்டி இல்லாவிட்டால் பரவாயில்லை, அசல் வந்தால் போதும். இடம் வாங்க வைத்திருந்த பணம் அது! நட்பு கெட்டுவிட்டது, என் போலிசு கோண்டக்டஸ் தெரியும். ஓடி விட முடியாது.

நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். அனுபவம். தேவையான இடத்தில் சந்தேக கொள்ள வேண்டும், குருட்டு நம்பிக்கை கூடாது.

இந்த கதை எழுதிய வடகரைவேலன், அனுபவமாய் சொல்கிறார்?
நல்ல கதை.
சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்

Sunday, September 21, 2008

நேர்த்தி கடன் : என்ன கொடுமை சார் இது?

கல்கத்தாவில் காளி கோவிலில் முடி கொடுப்போர் குறைவு என்றாலும், சிலர் கூர்மை மூங்கில் குட்சி வைத்து மழிப்பார்கள். ரத்தம் ஒழுகும் நேர்த்தி கடன். டைப் செய்யவே எனக்கு நடுங்கியது.

இங்கேயும் நண்பர் பரிசல்காரன் எழுதியுள்ளார்....என்ன கொடுமை சார் இது?

அப்புறம் கல்கத்தாவில் சென்ற அனுபவம் பற்றி படங்களாக எழுதுகிறார் Claude Renault . நான் வளர்ந்த பூமி அது. பொண்ணுங்க அது. மமதா போன்றவர்கள் கெடுத்துக்கொண்டு இருகிறார்கள். எங்கள் குடும்ப நண்பர் முன்னால் அமைச்சர் அஜீத் பாஞ்சாவும் அவரிடம் சில காலம் அரசியல் நடத்தினார், கட்சியின் நிறுவன தலைவராக. வாஜ்பாய் அரசில் மினிச்டெர் ஒப் ஸ்டேட் - எக்ஸ்டெர்னல் அபைர்ஸ் ஆக இருந்தார். இப்போ. ஜஸ்ட் ரிலாக்ஸ்ங் . என்ன கொடுமை சார் இது?

வேசி ஒரு கதை

வேசி ஒரு கதை எனது தமிழ் கதைகள் பிரிவில் பார்க்கலாம். (சினிமாவிற்காக மட்டும்)

மூலகதை : நன்றி அஸ்லம்.

சினிமா கதாசிரியர்கள், சுட்டால் இரண்டு செக் அனுப்ப வேண்டி வரும்!

தாரே ஜமின் பர் - ஆஸ்கர் அவார்டு

தாரே ஜமின் பர் - ஆஸ்கர் அவார்டு போட்டிக்கு இந்தியாவில் இருந்து செல்கிறது. இரண்டாயிரத்து எழு பட வரிசை.

அமீர் கானுக்கு வாழ்த்துக்கள். சாதித்து விட்டார் இரண்டாம் முறையாக. முதலில் லகான். மகா டப்பா. அமிதாப் இன்னும் முழுதும் பார்கவில்லையம். அழுதுவிட்டராம்.

தாரே ஜமின் பர் - நட்சத்திரங்களின் நிலத்தில். அதாவுது குழந்தைகளின் கனவுகள். அந்த படம் (எனக்கு அது
டப்பா - அப்போதே சொன்னேன் இது அவார்ட் ஐட்டம் என்று ) . ஒரு டிஸ்லேக்சிய பையன் என்ன செய்கிறான் என்பது கதை. நல்ல மார்க்கெட்டிங். என் குழந்தைகள் சொன்னதிற்காக தியர் சென்று பார்த்தோம். அவார்டை மனம் வைத்து எடுக்கப்பட்ட படம். மை லவிங் சன் என்ற ஸ்பானிஷ் படம் பாதிப்பு. அதில் ஒருவன் (வேசி தொழில் மாமா) மகன் நோயால் செத்து போகிறான், அதற்குள் ஆசைப்பட்ட படி படங்கள் வரைகிறான். கிராண்ட் கான்யான் சென்று கடைசி படம் வரைகிறான்...

சாதித்து விட்டார்! கிடைக்கலாம்.

ஞாயிற்றுகிழமை - சண்டே

ஞாயிற்றுகிழமை - சண்டே எப்பவுமே குஜால் தான். எந்த ஊரிலும்.

என் நண்பர் அஸ்லம் வந்துள்ளார் குடும்பத்தோடு , துபாயிலிருந்து. இடம் வாங்கினார் வெள்ளி அன்று.
அஸ்லம் நாற்பது லட்சம் ருபாய் ஒரு இடத்தில் முதலீடு செய்தார். வாழ்த்துக்கள்.

அவர் பதினைந்து வருடங்கள் கழித்து எமிரட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டு விட்டு வேறு ஓர் கம்பெனிக்கு செல்கிறார். நல்ல நேரம் ஜோசியம் படி என்ன ஆகும் என்றுபேசிக்கொண்டு இருந்தோம்.

ஞாயிற்றுகிழமை என்றால் நவரத்ன தைலம் (கேஸ் தேல்) போன்றவைகள் தலைக்கு இட்டு, தேய்த்து விடுவார்கள். ஜில்லென்று இருக்கும். அப்போது அம்மா. இப்போது மனைவி. தலையில் முடி இன்னும் இருப்பது அதனால் தான். ஆலிவ் ஆயில் போடுவேன். தேங்காய் எண்ணெய் நிச்சயம். பத்து நிமிடம் வெயிலில் நிற்பேன். உடம்பில் கொழுப்பு தான் அதிகம்.

பொஹ (அவல்) டிபன் தான். எப்போதும். அம்மா அல்லது அக்கா குடும்பம் வந்தால் பூரி. இன்று அஸ்லம் இருப்பதால் பூரியும் கிடைத்தது. ஒரு பத்து பூரி விளாசினேன். அவர் மகன் முட்டை கேட்டார். முகம் சுழிக்காமல் என் மனைவி செய்து கொடுத்தார். நண்பரின் மகள் செரியால்ஸ் சாபிட்டுவிட்டு, விஜய் டிவியில் மாயஜாலம் பார்கிறார். நண்பர் சண்டே டைம்ஸ் நியூஸ் பேப்பர் உஞ்சலில் உட்கார்ந்து படிக்கிறார். நண்பரின் மனைவி மதியம் மீன் சமைக்கிறேன் என்றார். என் மனைவி சமைத்தவுடன் (வெஜிடரியன்) அவர் சமைப்பார். ரொம்ப நாள் பிறகு சாப்பிடுவேன். அவர்கள் வீட்டில் துபாயில் குடும்பத்தோடு ஒரு பத்து நாட்கள் இருந்தோம், நல்ல கவனிப்பு. மழையில் ஒரு ஏப்ரல்.

பக்கத்தில் தான் மீன் கடை, வஞ்சிரம் கிலோ ருபாய் இருநூற்றி நாற்பது. வாசம் இருக்காது! பிரை வேனும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். வட சட்டி நான் ஸ்டிக் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் ஒரு பழைய கடாய் இதற்கு போட வேண்டும்.

மீன் என்றால் என் அப்பா நினைவுக்கு வருகிறார். அவர் தான் கல்கத்தா சென்ற பிறகு சாப்பிட பழகியவர். என் அம்மாவும் முகம் சுளிக்காமல் சமைத்து கொடுப்பார். இருபது வருடம் முன்னால் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை. எல்லாம் கடல் மீன்கள்.

வார வாரம் மதியம் உண்டவுடன் ஒரு புஸ்தகம் எடுத்து வைத்து படித்து அப்படியே தூங்குவேன். சாயந்திரம் எழுந்து எதாவது ஷாப்பிங். குழந்தைகளுக்கு கால் பரீட்சை. அதனால் நான் மட்டும் இன்று நண்பர் குடும்பத்துடன் ஷாப்பிங் செல்வேன். துணி எடுப்பார்கள். ரம்ஜானுக்கு. அவர் நாளை துபாய் கிளம்புகிறார். ரம்ஜானுக்கு இந்திய வருவார்கள். வருட லீவு பதினைந்து நாள் ரம்ஜான் சமயத்தில் எடுத்துகொள்வார்கள். மிச்சம் வறுக்கும் வெய்யில் காலம் - மே மாதம். இப்போது ஜூன் கூட. குளோபல் வார்மிங்.

ஆமாம் மீனுக்கும் செக்ஸ்சுக்கும் என்ன தொடர்பு? பூண்டுவிற்கு உள்ள தொடர்பு தான்.

நண்பருக்கு தெலுங்கு - உருது தாய் மொழி. தமிழ்நாட்டில் திருச்சியில் படித்தவர். (அவர் சொன்ன வேசி கதை ஒன்று வேறு ஒரு பதிவில் போடுகிறேன்). தமிழ் நன்றாக எழுதி படிப்பார்.

ஆஹா உலக புகழ் வாய்ந்த எழுத்து என்று என் சென்னை எழுத்தாள நண்பர் சொல்வது காதில் விழுகிறது. கிடக்கட்டும் கழுதை. பாதி நான் எழுதுவதை பார்த்து அதற்கு பதில் போடுவதே அவர் வேலை. அப்புறம் எங்கிருந்து கிடைக்கும் துட்டு. அவர் பீல்டு வர்க் என்று என் வீடு தேடி வந்த கதை, எழுத வேண்டும்.

ஆமாம் சில எழுத்தாளர்கள், செக்ஸ் சமாசாரம் எழுதிவிட்டு, பிச்சை கேட்பது போலே, பணம் தாருங்கள் என்று எழுதுகிறார்கள். மற்றவர்கள் செலவு செய்ய வைக்கிறார்கள். என்ன கொடுமை இது.