Friday, September 25, 2009
பரிசல்காரன் வலைப்பூவில் என்ன பிரச்சனை?
parisalkaaran.com என்ற தளம், ஏதோவொன்றை காட்டுகிறதே?
கொஞ்சம் அவருக்கு தகவல் கொடுங்களேன்!
கவிதையாய் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?
நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?