Tuesday, December 9, 2008

படித்ததில் பிடித்தது

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

புத்தரும் நானும்

ஈரத்தெருக்களை ரசித்தவாறே
மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்..
உற்றுப் பார்த்த விழிகளுக்குள் புத்தர்
புத்தரா என வினவியதற்கு
ஆமென்று தலையசைத்தார்
இலங்கையிலிருந்து திரும்பியிருந்த புத்தர்
முடிவில்லா வன்முறைகளைப் பற்றிய
என் கேள்விகளுக்கெல்லாம்
புன்னகை பிரியாமல் சொல்லிக்கொண்டிருந்தார்
புத்தர்கள் தோன்றுவது இங்கு வீண் என்று.
மக்கள் திடீரென்று திரண்டனர்;
சிலர் அவரைக் கிள்ளிப் பார்த்தனர்
சிலர் இழுத்துப் பார்த்தனர்
கைப்பேசியில் அவசரமாய் புகைப்படம் எடுத்தனர்
அரசியல்வாதிகள் சிலர் கட்சியில் சேரும்படி
மிரட்டியும் கெஞ்சியும் கேட்டுக்கொண்டனர்
எல்லாத் தொலைக்காட்சியிலும்
அலை அலையாய் புத்தர் நிரம்பினார்!
முடிவில்லா கேள்விகளின் கூர்முனைகளில்
ஓய்ந்த புத்தர்
தப்பித்துப்போக எத்தனித்தார்
அவருக்கு முன் வந்து விழுந்த
ஒரு கைத்துப்பாக்கியையும்
ஒரு கூரான கத்தியையும்
தன் மென் கரங்கள் நடுங்க
எடுத்துப் பார்த்தபடி.

*******************

படித்ததில் பிடித்தது..

நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா..

வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான்

திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்

****

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு...

ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள்.

நன்றி.

Monday, December 8, 2008

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

இந்தியாவில் கல்யாணம் என்ற கூத்து பெற்றோர்கள் மனசு திருப்தி படுத்த மட்டும் நடைபெறும் விஷயம் ஆகிறது. குழந்தைகள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என காரணம் இருக்கலாம்.

நானும் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி குடும்பத்தோடு நன்கு பழகிய பிறகு தான் திருமணம் என்ற பேச்சு. முதலில் நண்பராக ஆரம்பித்து, பிறகு, ஒரு புது உறவு ஆனது... ஜாதியெல்லாம் இடம் பெறவில்லை.

எனது வக்கீல் நண்பர் ஷைலஜா சொல்கிறார்... இப்போதெல்லாம், 1990 இக்கு பிறகு நடந்த திருமணங்களில், இந்தியாவில் மட்டும் ௰% டைவேர்ஸ் ஆகிறது என்று.

கவலை ... நிஜம்... என்ன தீர்வு?

பெண்களுக்கு ஒத்துவராவிட்டால், கணவனை (முன்னால் செய்வதற்கு) மற்றும் அவர்கள் குடும்பத்தை... அடித்து துவைத்து விடுகிறார்கள்... ஐ.பி.சி. செக்சன் 498 ஏ கொண்டு.

ஆண்களுக்கு தெரியவில்லை, அதே செக்சன் கொண்டு பெண் மீதும் வழக்கு போடலாம்... பணக்கார பெண்கள் செய்யும் கொடுமை.

காதல் கல்யாணம் ஒரு தீர்வு. மறுமணம் இன்னொரு தீர்வு. நிறைய கல்யாணங்கள்....

நானும் கோபப்பட்டு குமரி ஒரு ஆங்கில பதிவு போட்டுள்ளேன்.

IPC SECTION 498A

மாடிசன் கவுண்டியின் பாலங்கள்

இங்கே வாங்கலாம்... ஒரு அருமையான கதை. காவியம். மாடிசன் கவுண்டியின் பாலங்கள்!

லதனாந்த் அவர்களின் பரிசு போன்ற கதை இது.

சும்மா ஒரு அறிமுகம்.

இந்தியா மாநில எலக்சன்கள் முடிவுகள்

சமீபத்தில் ஆறு மாநில எலக்சன்கள் நடைபெற்றன. இன்னும் ஜம்மு காஸ்மீர் பாக்கி.

இன்று ஐந்து எண்ணப்படுகிறது. மக்களுக்கு என்ன லாபம்?

ராஜஸ்தானில் பி.ஜே.பி. விழுகிறது, காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

டெல்லியில் காங்கரஸ் ஆட்சி தொடர்கிறது.

மத்ய பிரதேஷில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

ஷடீஷ்கரில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

மிசோராமில்
காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி.