Friday, March 27, 2009

பா.ம.க. வெற்றி தொகுதிகள்

சென்ற 2004 லோக்சபா தேர்தலில் பா.ம.க. வெற்றி தொகுதிகள் இவை. (தமிழ்நாடு)

செங்கல்பட்டு
அரக்கோணம்,
திண்டிவனம்,
தர்மபுரி,
சிதம்பரம்

மற்றும் புதுச்சேரி

மேலும் இப்போது தொகுதி சீரமைப்பு என்று சிறிது, பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அதனால், சுமார் மூன்று தொகுதிகள் தி.மு.க வசம் போகும்! மிச்சம் காங்கிரஸ் பலம் மிகுந்தவை. ஜாதிகள் (வன்னியர்) போட்டி சிறிது இருக்கும்.

பா.ம.க. முதல் அல்லது இரண்டாம் இடங்களை பிடிக்கும் தொகுதிகள் இவை. (அ.தி.முக பலத்துடன் மட்டும்)

விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், ஆரணி, சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், மயிலாடுதுறை, புதுச்சேரி.

மேலே உள்ள பத்தில், நிச்சயம் அவர்கள் தான் வெற்றி நினைக்கும் ஆறு தொகுதிகள்.... பலத்த போட்டி... விஜயகாந்த் வோட்டை பிரித்தால் (இதில் கவர்ன்மென்ட் தளத்தில் நான் பார்த்தபடி 2006 எலெக்சனில் தே.மு.தி.க பெற்ற வோட்டுக்கள் நிச்சயம் பாதிக்கும்), தி.மு.க சாகசம் செய்யும், காங்கிரஸ் மூன்றில் வெற்றி நிச்சயம்.... திருமாவளவனும் வெற்றி பெறுவார்.

அரக்கோணம் (மீண்டும்),
ஆரணி,
காஞ்சீபுரம்,
தர்மபுரி (மீண்டும்),
சிதம்பரம் (மீண்டும்),
கள்ளக்குறிச்சி (இது மட்டும் .தி.முக பலத்துடன் நிச்சயம் ஜெயிக்கலாம்)

சரி எல்லோரும், ப்ளோக்கை மட்டும் படிக்காமல் வோட்டு போடுங்க.

நல்லவர்கள் ஜெயிக்கட்டும்! நாடு வளம்பெறட்டும்.

Thursday, March 26, 2009

தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு

என்னுடைய தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு இப்படி இருக்கும்....

தி.மு.க (16)+ காங்கிரஸ்(13) + தே.மு.தி.. (10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நிச்சயம் 40 / 40 (முஸ்லீம் கட்சிகள், மற்றும் ஆர்.எம்.வி போன்றோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்)

தே.மு.தி.எங்கெல்லாம் பா.ம.க நிற்கின்றதோ, அங்கு போட்டியிடவேண்டும், சூடு பறக்கும்!

மற்றவர்கள் 0 / 40

அப்படி விஜயகாந்த், மாற்றம் செய்யாவிட்டால்! மே 13 தான் எலெக்சன். ஏப்ரல் ஆறு தான் கெடு குறிக்கும் நாள். அது வரை டைம் உள்ளது.

அ.தி.மு.க (15) + ம.தி.மு.க (5)+பா.ம.க.(5)+கம்மூனிஸ்ட்ஸ்(4) 29 / 40
தி.மு.க (6)+ காங்கிரஸ்(3) + முஸ்லீம் கட்சி (1) 10 / 40
தே.மு.தி.க 1/40 (அதுவும், விஜயகாந்த் மனைவி நின்றால்)

இதை குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும், மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுக்க, போட்டி போட்டு தமிழ்நாட்டிற்கு மீண்டும் பன்னிரண்டு அமைச்சர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இது ப.ஜ.க. கூட்டணி (என்.டி.ஏ) 250 சீட்டு லெவலில் வந்தால் கூட நடக்கும்.

தேர்தல் தமாஷா

இது என்ன கூத்து... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சி. ராமதாஸ் (தமிழ் குடிதாங்கி அய்யா!). இப்போது நண்பரோடு (தொல்.திருமா) மோதும் சிதம்பரம். அதிலும் தி.மு.., தென்காசி தொகுதியைவிடுதலை சிறுத்தைகளுக்கு கொடுத்தால் தப்புவார்! (இப்போது - குற்றாலமா?). மேலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி கொஞ்சம், அ.தி.மு.க விற்கு போகும்...

விஜயகாந்த் நிச்சயம், தி,மு.காவிற்கு சாதகமாக தான், வாக்குகளை பிரிப்பார். என் இஷ்டம், அவர், பத்து சீட் கேட்டு வாங்கி, தி.மு.க (16)+ காங்கிரஸ்(12) + தே.மு.தி.(10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நலம். தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் வரும். பாண்டிச்சேரி காங்கிரஸ் வசம் கொடுத்துவிடுவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி: அன்புமணி ராமதாஸ் தேர்தலில் நிற்க மாட்டார்! ராஜ்ய சபை வழி தான் , தனி வழி.

இங்கே கர்நாடகாவிலும், குடும்பம், சண்டை கோஸ்டி என பி.ஜே.பி ஓடுகிறது..

தேவ கவுடாவின் மகன்களின் அக்கப்போர் தாங்க முடியவில்லை.

Wednesday, March 25, 2009

எவ்வளவு பெரிய சைக்கிள்



இவர் ஜெர்மானியர்! கொடி தெரியுதா?