Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, June 7, 2010

இளையராஜாவின் ரசிகன்

பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம்...

இளையராஜாவின் பாடல்கள் தான் நினைவில் நிற்கின்றன.

ரஹ்மான் பாம்பே தவிர உயிரேவில் நிலைத்தார்... பிறகு ஏனோ தெரியலே...

சந்திரபாபுவின் பத்து பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை.

T M சௌந்தரராஜன் அவர்கள் பாடல்கள் இணையத்தில் எங்கு கிட்டும்?

Wednesday, October 22, 2008

வாழ்க்கை ஒரு மாயை

ஒன்னுமே புரியலே
உலகத்துலே !
என்னமோ நடக்குது
மர்மாய் இருக்குது !
கண்ணாலே கேட்டதும்
கனவாய் தோன்றுது!
காதலே கேட்டதும்
கதை போல் ஆனது !

சில சமயம் ஒருவருக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. பிடிக்காமல் போகிறது.

பிடிக்காவிட்டால், எதற்கு அந்த விஷத்தை செய்ய வேண்டும்?

சில விஷயங்கள் கனவாய் தோன்றும், ஆனால் அவை மாயை!

பொண்டாட்டி ஒன்று தான், மனதில் எத்தனை கனவுகன்னி வேண்டுமானாலும் வைத்துகொள்... (சரியான உவமை இதுவல்ல, மன்னிக்கவும்) ஆனால் ஒழுக்கமாக இரு. உத்தமனாக இரு... உத்தமளாக இரு...

எப்படி?

நான் நியூ யார்க்கில் வேலை செய்த நேரம், காதலும் பட்டிருந்தேன், மனைவியாக வேண்டியவர், ஆறு மணி நேரம் தள்ளி. நான் என் அக்கா விடு போகும் போது, பாதி தூரத்தில்...அவளும் சில மணி நேரங்கள் வண்டி ஓட்டி வருவாள். பாசம், பந்தம்... இருதாலும் முறை தவறி நடக்கவில்லை. போனில் பேசுவதை விட, நேரில் பேசுவது அழகு.

தனிமை ஒரு கொடுமை இல்லை.

நண்பர்கள் எல்லாம், நியூ ஜெர்சி சென்று நூடி பார் போவார்கள். தப்பில்லை. அளவோடு நிறுத்திக்கொண்டால். ஒரு முறை அது என்ன என்று பார்ப்பதற்கு சென்றேன். தப்பில்லை.

ஆனால் சில நண்பர்கள், மாதம் மிச்சம் செய்யும் ஆயிரம் டாலர்களை, பாதி அந்த விசயத்திற்கு செலவு செய்தார்கள். தவறு. வீடு என்று ஒன்று உள்ளது. கேவலம்.

அதே போல தான், லஞ்சம். கை காட்டி விட்டால், இன்சைட் இன்பார்மேசன் கொடுத்தால், கோடிகள் புழலும் பதவி, மோகம் வரும், ஆனால் அதற்கு ஆசைப்பட்டு, பிடிபட்டால்... கேவலம் வேறு இல்லை.

You have to live with principles, and take things as it comes along!

Monday, October 6, 2008

நாக்க மூக்க



வீக் எண்டு எல்லாம் ஆடல் பாடல் தான்... நாக்க மூக்க அடித்த அடி சூப்பர்...குழந்தைகள் ஆர்பாட்டம்...

சன் டிவி பிச்சர்ஸ் ... கலாநிதி மாறன்... அரசியல்... மதுரை மக்கள் பஸ் ஏறிபக்கத்து ஊரில் சென்று பார்க்க வைத்த கொடுமை... தாங்கலைங்க...

நாக்க மூக்க என்பது பறையடி வகை சார்ந்த பாடல். மாடு செத்தால்.. அந்ததோலை எடுத்து அதில் பறை செய்து, தப்பட்டை அடிப்பது ஒரு வாத்தியவழக்கம்.. ஒரு மரணத்தின் ஓலத்தில் விளைந்த அற்புதமான பாடல்..

சரியான் குத்து அது... இசையும் உண்டு, அப்புறம்... ஆட்டம்... (என்ன ராகம் என்பது கேள்வி இல்லை இங்கே...)

விஜய் டிவியின் யார் அடுத்த பிரபு தேவா என்ற ப்ரோக்ராம் பார்த்து என் குழந்தைகள், கஷ்டப்பட்டு அந்த கால் தூக்கி ஆடும் மூவ்மன்ட்ஸ்செய்தார்கள்... டிவி சில வகையில் நல்ல பொழுதுபோக்கு தான்..

எனக்கு?

பறை பறை என்று பார்த்தீபனும், லாரன்சும் ஆடி பாடல் (தங்கரின் படம்?) நினைவுள்ளது...