Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Saturday, October 11, 2008

திவ்யாவின் ஐம்பது பதிவுகள், வாழ்த்துக்கள்

திவ்யா இப்போது ஐம்பது பதிவுகள் எழுதி விட்டார், வாழ்த்துக்கள்!

இந்த முயற்சி பதினேழு நாட்களில். அப்புறம் 2000 ஹிட்ஸ்.

அதற்காக நான் ஒரு கவிதை எழுதினேன்.... அவரும் அதை, அவருடைய ஐம்பதாவது பதிவில் போட்டார்.

ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்

அழகான எழுத்துக்கள்
அழுகையான நினைவுகள்
அமெரிக்க மோகங்கள்
அம்சமான பயணங்கள்
ஆழமான கருத்துக்கள்
இம்சையான பின்னூட்டங்கள்
ஈகையான நேசங்கள்
உவர்பூட்டும் உள்ளங்கள்
ஊருக்கெல்லாம் நன்மைகள்
எவருக்கு கவலைகள்
ஏற்றம் மிகும் வாழ்க்கைகள்
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
ஒருகிணைந்த கருத்துக்கள்
ஓம் என்ற மந்திரங்கள்
ஒளவையாரின் ஆத்திசூடி கதைகள்

வாழ்க வளமுடன்!

(என் மனைவி உடனே என்னை சினிமா பாடல் ஆசிரியர் ஆகு என்று சொல்கிறார். வாய்ப்பு கிடைக்குமா?)

Wednesday, September 3, 2008

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


- ரமேஷ் டெண்டுல்கர் மற்றும் குடும்பத்தினர்





வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
( குறள் எண் : 50 )
மு.வ : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
கருணாநிதி :தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா :மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.