Showing posts with label சத்தியவான் சாவித்திரி. Show all posts
Showing posts with label சத்தியவான் சாவித்திரி. Show all posts

Thursday, October 9, 2008

சத்தியவான் சாவித்திரி

இன்று நடிகர் ரமேஷ் அரவிந்த் (நிஜ பெயர்) மீட் செய்தேன்.

அவரிடம் காமடி செய்த ரோல் எது நன்றாக செய்தீர்கள் என்று கேட்டேன்.

உடனே பதில் வந்தது. சதி லீலாவதி. தமிழ். கமல் கலக்கியிருப்பார். எனக்கு பிடித்தது கோவை சரளா செய்யும் டைமிங், கட்டு கத்தல் வேற....கன்னடத்தில் ராமா ஷாமா பாமா வந்தது. கமலும் மங்களூர் கன்னடா (மலையாள, ஸமஸ்கிரது மிக்ஸ் ஏசி) நடித்தது...வெள்ளி விழா படம். அவர் தான் டைரக்ட் செய்தார். விழா மேடையில் அவர் உட்காரவில்லை. தமிழர் என்பதால். அப்போது காவிரி பிரசனை.

சந்திரமுகி செய்த போது, விழாவின் போது பி.வாசுவும் இப்படி தான்.

கன்னட நடிகர்களில் ஹீரோ கணேஷ் நன்றாக காமடி செய்கிறார் என்றார். அவருடைய மூங்காறு மாலே ( கோடை / மான்சூன் மழை? ) படம் ஒரு சூபர்ஹிட் என்றார். எவ்வளவு ஒற்றுமை.

சரி இன்னொரு காமெடி சொல்லுங்கள் என்றேன். சாத்தியவான் சாவித்திரி, டைரக்டர்
அஜதா சத்ரு படம் என்றார். பெரிய ஹிட். மூன்று வருடம் முன்ன வந்தது. யாருங்க அவர் பேரு வித்தியாசமா இருக்கு என்றேன். "நான் தான்" என்றார். "ஒரு கன்னட டச், சிறு வயது முதல்". என் இரண்டாவது டைரக்சன். நல்ல மனிதர். ஒரு சிறு குழந்தை வைத்திருந்தார் அவர் மனைவி. ரமேஷ் அரவிந்த் என் வயது இருக்கலாம். மேற்கொண்டு கேட்கவில்லை.

அப்புறம் அவர் ஆக்சிடான்ட் படம் பற்றி கேட்டேன். என் பெங்கால் நண்பர்அவரோடு திரைக்கதை அமைத்தது. சுமாராக போயிற்று என்றார். தமிழில்அதை எடுக்க முயற்சி செய்யலாம் என்றார். மூலம் ஹாரிசன் போர்ட் நடித்த படம். 1999 வந்தது. Random Hearts. ஒரு பெண் பார்வையில்.... இவர் ஆண் பார்வையில்... அவளளவு தான், கன்னடபடுத்தி.. ஹீரோ ஒரு ரேடியோ ஜாக்கி. சுடும் போது ஹீரோ ஹீரோயின் தொழில் மாறும். மனைவி இறந்து விட, அதுவும் கூட வேலை செய்யும் தோழனோடு... அப்புறம் the யூசுவல் ...ஆனால் ஒன் லைன் 'நீதிக்கு தலைவணங்கு' போல இருக்கும் என்றார். த்ரில்லேர்? யாராவது சொல்லுங்கள்.

அவர் தமிழ் சரியாக படிக்க மாட்டாரம்... ப்லோக் எல்லாம் ஆங்கிலம் தான்.

ஹீரா போன்ற நடிகைகள் அவரை தமிழில் இருந்து துரத்தி விட்டனர். கடைசி படம் பஞ்ச தந்திரம். அப்புறம் அதே சமயத்தில் மும்பை எக்ஸ்பிரஸ்.

அப்புறம் ஒரு கொசுறு நியூஸ். இவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மகன் ஒருவரோடு படித்தவர்.

அப்புறம் எங்க வம்ச கதை படத்தில், கமல் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார். (மர்மயோகி)

*****

இன்னைக்கு ஆர்த்தி கதை தட்டனும். வேலை மோக களியாட்டம். ப்லோக் உலகம் எல்லாம் சைலன்ட். வாசகர் குறைவு. ஆயுத பூஜை லீவு ... அதான். திங்கள் முதல் மீண்டும் கும்மிதொடரும்... அப்படியா?

அப்புறம் எங்கள் ஊர் (கல்கத்தா) துர்க்கா பூஜா இன்று. ரொம்ப மிஸ் செய்கிறேன். அது தான் கெஞ்சி கேட்டு பூரி டிபன்.

மனைவி பூரி சுட்டுள்ளார். நேற்றைய சுண்டல், உருமாறி இப்போது காபூலி சன்னாவாக உருபெற்று தட்டில் காத்துக்கொண்டு உள்ளது.

ஆறு சின்ன பூரி போதும். நூறு கிலோ எடை தொட்டு விட்டேன். பயம்.