Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Monday, September 15, 2008

வேலைக்காரி

அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகம் ஒரு வரலாற்று மைல் கல்.
தி.மு.க. கட்சியின் கொள்கை பிரசார நாடகம் என்றும் கூறுவார்கள்.

என் வேலைக்காரி பற்றி இங்கு எழுதியாக வேண்டும். சம்பளம் கிடக்கட்டும். அறுபது வயது மேல் இருக்கும். ஒரு பரிதாபதிற்காக தான இருக்கிறார்.
பாதி நாள் வருவதில்லை. தமிழ் என்பதால் ஒரு கரிசனம். இரண்டு மடங்கு சம்பளம் தினம் ஒரு மணி நேரம் வேலைக்கு - கூட்டி பெருக்க மட்டும். வீடு இரண்டு பெட்ரூம் தான. வீட்டு சாமானங்கள் மிக குறைவு. என் மனைவி, அவர் வேலை பார்க்கும் இடத்திலிருந்து யாரவது அழைத்து வருவாள். அப்போது, நான் தான் வீட்டை சீக்கிரம் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

லீவு என்றால் எனக்கு டபுள் டுடி. ஜன்னல் சுத்தம் செய்ய, ஸ்ஹொவ்கஸெ சரி செய்ய, பழைய பேப்பர் அடுக்க, குழந்தைகள் ஹோம் வொர்க் செய்ய என்று டைம் பத்தாது. சாம்பார் போரடித்த சமயம், நான் தான ராஜ்மா குருமா வைப்பேன். மொசார்ட் கன்புடடிஸ் கேட்டுக்கொண்டே. டெம்போ வருவதற்குள் ரெடி.

சில சமயம் பார்த்தால், ஒரு பெருமைக்காக தான் வேலைக்காரி இருக்கிறார் என்று தோன்றும். கேடு கெட்ட மிடில் கிளாஸ் உலகம்.