Saturday, January 24, 2009

ஸ்லம்டாக் மில்லியனேர்

ஸ்லம்டாக் மில்லியனேர் மனைவி குழந்தைகளுடன் இன்று மதியம் பார்த்தேன்... ஏ சர்டிபிகேட் இருந்தாலும், பி.வி.ஆரில், கூட்டம் இல்லை, அதனால் என்ன கவலை! திருட்டு டி.வி.டி தெரு தெருவாக கிடைக்குது. அப்படி ஒன்றும் என் குழந்தைகளுக்கு தெரியாத விஷயம் காட்டவில்லை. பேட் டச் இல்லை... ;-)

ரசித்தேன். படம் சுமார் தான். ஒரு நாவல் மாதிரி...

பம்பாய் படத்தில் இருந்து இரு சிறுவர்கள் நாட் உருவப்பட்டது. சலாம் பாம்பேவின் ஸ்லம் நிகழ்ச்சிகள், சூறை. இந்த நாவலின் ஆசிரியர் விகாஸ் ஸ்வரூப் . லவ்லீன் டேன்டன் (இந்தியர்) படத்தின் கோ டைரக்டர். சில இண்டர்வியுஸ் பார்த்தேன், சொதப்பல். எதோ ஒரு அதிர்ஷ்டம். ரஹ்மானின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது, படத்தின் பாதி நேரம், கோன் பனேகா கரோர்பதி லைப்ரரி மூசிக் இருந்தாலும்.

பத்து ஆஸ்கர் அவார்ட் நிச்சயம் கிடைக்குமா? பொறுத்திருந்து பாருங்கள்.

ஆஸ்கர் வாங்கும் முதல் இந்திய ஆண் ரஹ்மான் தான்... இல்லே... பெண் எலிசெபத் பட காஸ்ட்யூம் டிசைனர்.

////////////////////////////////////

இங்கேயும் படிங்க... அருமையாக எழுதியிருக்கார்.

"ஸ்லம் டாக் மில்லியனர் - என் அனுபவம்"

Thursday, January 22, 2009

நான் ரசித்த கார்ட்டூன்கள்

நிஜமா ரொம்ப நல்ல இருக்குங்க. அடிரா சக்கை. அடிரா சக்கை... நன்றி பாலா , கார்டூனிஸ்ட் .... (இதை அப்லோட் செய்த நரசிம் அய்யாவுக்கு கோடி நன்றிகள்..)செவ்வாய் கிரக சிறுவன்

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.

தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.

செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.

விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.

உதாரணமாக,

விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.

இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.

இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.


தகவல்:-http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

Monday, January 19, 2009

ஒரு நாளில் இரண்டு படங்கள்

சனிக்கிழமை, நானும் என் மனைவியும், இரண்டு படங்கள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மாமியாரும், மாமனாரும், எங்கள் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள ... கிளம்பினோம்.

முதலில் படிக்காதவன்... மதியம், மூன்று மணிக்கு.... தியேட்டர் விளம்பரம் எல்லாம் செய்யவில்லை... ஒரு நல்ல ஏசி அறை. சில பிரபலங்களை பார்த்தோம்.

என்ன சொல்ல, ஒரு கமர்சியல் படம்.ரஜினி நடித்த, படமும் இதுவும், தலைப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் தான் கரு. உலகத்தின் மசாலா... தெலுங்கு படத்தின் ரீமேக்!

வில்லத்தனம் கொடுமை. சுமன் (மேக்கப் கேவலம்) மற்றும் சாயாஜி ஷிண்டே! மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவார்கள்..... தமன்னா அழகு. அப்புறம் ஹீரோ? ஜிரோ!

*************************************

வில்லு பார்க்க சென்றது பத்து மணி இரவு ஷோ. அரை தூக்கம், மயக்கம், இரண்டு பாட்டில் தண்ணீர். இருந்தாலும், பாடல்கள் வித்தியாசமாக படம் பிடிக்கப்பட்டு இருந்தன, தூங்கவில்லை.

சரியான கரம் மசாலா. விஜய், நயன்தாரா காம்பினேசன். என்னவோ, வயதான் தோற்றம், பொலிவு நயனுக்கு. சரியா? கழுத்தில் சுருக்கங்கள்... முப்பதை தாண்டி விட்ட பருவம்? சில இடங்களில் விஜய்க்கு அக்கா மாதிரி இருக்கிறார்!


பிரபுதேவா கொஞ்சம் போக்கிரி லெவலில் ஏமாற்றி விட்டார். சொதப்பல் இல்லாமல், எடிட்டிங் செய்துள்ளார்கள்....

பிரகாஷ் ராய் என்ற வில்லன் நடிகர், போரடிக்க ஆரம்பித்து விட்டார்.

வேறு வில்லன் மூஞ்சி வேண்டும், தமிழ் சினிமாவிற்கு.

வடிவேலு காமெடி சுமார் தான், இருந்தாலும் சிரிப்பு தான்.

இந்த படத்தின் தொடக்கத்தில், அரசியல் வரும் ஆர்வம், கட்சிக்கொடி மாதிரி, ரசிகர் மன்றக்கொடி. எல்லோருக்கும் ஆசை தான்...

தேவி ஸ்ரீ பிரசாத் இசை. தெலுகு படம் மாதிரி இருந்தது. இதுவும் அங்கு டப் செய்யப்பட்டு சில ஊர்களில் ஓடும்.

உடல் எடை குறைப்பு

மேலும் ஒரு விஷயம்.... மூன்று இன்ஜக்சன் போட்ட (ஏமாறி விடுவோம் என்ற கமன்ட்சுக்கு பதிலாக) பயன்...

நிஜமாக வெயிட் குறைந்தது. பத்து நிமிடம் முன், சரியாக 5.3 கிலோ எடை குறைப்பு. இது நடந்தது 24 மணி நேரத்தில். இது எதோ ஒரு வகை கொழுப்பு இறக்கும் பிளாஸ்டி.. பேட் பர்னர். அடுத்த முறை, மூன்று மாதங்கள் கழித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு. என்னுடைய பி.எம்.. இன்னும் ஐந்து குறைக்க வேண்டும். இடுப்பு சைஸ் இன்னும் மூன்று இன்ச் குறைத்தால், நலம். நாற்பதற்கு கிழே இருந்தால் ரிஸ்க் இல்லை.

ஸைட் எப்பக்ட்ஸ் என்ன? உடல் உஷ்ணம் ஆன மாதிரி இருந்தது... அது தான் இரண்டு படம் பார்த்தேனே, ஏசி தியேட்டரில்... நிறைய குளிர்ந்த நீர் அருந்துகிறேன். லேசாக தலை வலி.

எங்கே எப்படி எவ்வளவு என்று கேட்க வேண்டாம், ஒரு பிரபல மருத்துவ மனையில்.... பெருங்குடி அருகே. ஒரு ஊசிக்கு ஒரு மூட்டை அரிசி விலை.

வேலை உட்கார்ந்துக்கொண்டே, அலைச்சல் ஆனதால், இது ஒரு முயற்சி. எக்சர்சைஸ் செய்ய இது ஒரு வகை உந்துதல். ஸ்வீட் சாப்பிடும் கெட்ட பழக்கம் (பெங்காலிகளின் வீக் பாயின்ட்) முழுதும் விட்டு விட வேண்டும்.

இனி "எந்த கடையிலே நீ அரிசி வாங்குறே?" என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

Sunday, January 18, 2009

சென்னை புத்தக கண்காட்சியும் நானும்

நான் இந்த பதிவில் எழுதியதை கிண்டல் செய்து நிறைய கமண்ட்ஸ். எதோ நான் பணம் படைத்தவன், உள்ளவன் என்று காட்டிக்கொள்ள எழுதுகிறேன் என்றார்கள்.. நான் அதை வெளியிடவில்லை. புத்தக லிஸ்டும் போடவில்லை. எதாவது காரணம் காட்டி, கும்மி அடிப்பது தான்.... இங்கே வழக்கம்.

இந்த பதிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்று வாங்கிய புத்தக லிஸ்ட்

புத்தகங்கள் வாங்குவது நல்ல விஷயம் தானே.

அப்புறம், ஒரு அடையாளத்திற்காக, எந்த வித உள் நோக்கமும் இல்லாமல் ஒருவர் பற்றி எழுதியதை, முகில் என்பவர் குறை கூறி இருந்தார். அதை மாற்றி விட்டேன். பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜங்க. மத்தளத்திற்கு எப்போதும் ரெண்டு பக்கம் இடி என்கிறார், என் மாமனார்.

*********

இன்னும் சிறிது நேரத்தில் சென்னை சென்ட்ரல் பயணம், பெங்களூர் திரும்ப.

கார்ட்டூனில் எம்.ஜி.ஆர்

இங்கே பாருங்கள் ....

3டி கார்ட்டூனில் எம்.ஜி.ஆர் !

நல்ல முயற்சி என நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் குரலில் டப்பிங் செய்ய ஈசி.

ரஜினிகாந்தும் கார்டூன் வடிவில் சுல்தான் என்ற படத்தில் வருகிறார்.

அடுத்த வருடம் படம் வருகிறது.