Saturday, September 20, 2008

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

வலையுலக நண்பர் பத்ரி எண்ணங்களில் அவர் வாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி எழுதியுள்ளார்...

வாழ்த்துக்கள், சமூக நலன் அக்கறை மீது. கோ கிரீன்!

ஆர்காட்டர்கிட்டே சொல்லிடீங்களா? நல்ல மின்வெட்டு வேறே.

உங்கள் வீட்டில் ஜென்ரடோர் இருக்கும் போலே? அதுக்கு உனிட் எவ்வளவு ஆகும்?

சார்ஜ் லெவல் காட்டுமா? சார்ஜ் தீர்ந்தால் தள்ளு வண்டி தானா? பெடல் உண்டா?


பெங்களூரில் பிரபலம் ரேவா என்ற எலெக்ட்ரிக் கார் தான். என் குழந்தைகள் டாக்டர் அதற்கு ஒரு டிரைவர் வேற வைத்துள்ளார். கிலோமீட்டருக்கு ஐம்பது பைசா ஆகிறது என்றார். பத்து மடங்கு மிச்சம், பெட்ரோல் காரை விட. (அவர் ஆஸ்பத்ரியில் பார்த்தால் நூற்றைம்பது ரூபாய், அவர் வீட்டில் முப்பது!)

பார்வட் மெயில்

இரண்டு நாள் முன்பு ஒரு பார்வட் மெயில் வந்தது. உங்களுக்கும் வந்தது போலே?

ஒன்று ஐகியா நாற்காலி பற்றி.... சில நண்பர்களுக்கு மட்டும் போட்டேன். (அதுதாங்க கலவி செய்ய பயன்படும் ஒரு ஓட்டை நாற்காலி)... எனது புது தமிழ் வாத்தியார், கண்டிப்பாக அதை வைத்து ஒரு பதிவு போடுவார்.

பதிவும் போட்டேன். பத்து நிமிடங்களில்...காலையில் எனக்கு விழுந்தது திட்டு, மனைவியிடமிருந்து. அழித்துவிட்டேன். "ஆபிசுலே, கருமம் பிலாக் ஓபன் பண்ண முடியலே, கழிசடை".

இந்தியாவின் சிறந்த விளம்பாரம் என்று ஒரு மெயில் வந்தது... இப்போது பரிசல்காரனின் பதிவிலும் உண்டு. லைக் மைன்ட்ஸ் தினக் அலைக்.

இப்போ தான் தெரிந்தது, நடிகை சங்கீதா என் மனைவிக்கு, ஓரு வகையில் தூரத்து சொந்தம் என்று. மாபிள்ளை தேடுகிறார்கள். நான் சொன்னேன், வெளி நாட்டு தொழில் அதிபர் கிடைப்பான் என்று. (சில காலம் கழித்து, நடிக்க வந்து விடுவார்கள், கேமரா மயக்கம்). நல்ல பெண்.
மார்கண்டேய நடிகர் சிவக்குமார் மனைவி வகையில் கூட எங்களுக்கு ஒரு சொந்தம் இருக்கிறதாம். அவர் செய்த ரேகமேண்டசொன் தான் இயக்குனர் பாலா பிதாமகன் படத்தில் நடிக்க வாய்ப்பு. எங்கள் குடும்பத்தோடு (மனைவி ஸைட்)அவ்வளவு நெருக்கம் இல்லை. சரவணன் கல்யாணத்திற்கு கூட அழைப்பு இல்லே. ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ததால், அதுவும் ஒரு தலித்? இப்போது சங்கீதாவின் ஒன்று விட்ட தங்கை கல்யாணம் தீபாவளி முடிந்து நடக்கும், அதற்கு கூப்பிடுவார்கள்!

படி பயணம் எழுத்து

ஆண்கள் பார்வை பெண்கள் மீது... பெண்கள் ஆண்களின் சாகசம் பார்க்கும் நேரம்..

பேருந்து பயணம். நான் அவ்வளவாக சென்றதில்லை. மயிலாப்பூர் டு ஜெமினி
மட்டும் ஒரு முறை, ஒரு எழுத்தாள நண்பர் பயணம் செய்து பார் என்று சொன்னதிற்காக, மதியம் நான்கு மணிக்கு... சத்யம் போய் ஒரு பாடாவதி படம் ஆங்கிலத்தில் பார்த்தோம், விசுவல் எபக்ட்ஸ் - குரங்கு காவியம். அநியாய டிக்கெட் விலை.

கோவையில் எல்லாம் நான் வாழ்ந்த போது, பேருந்து பயணம் தான். அரசாங்க அலுவல்களுக்கு, உதவியாளரோடு (டவாலி) கார் அல்லது ஜீப். சொந்த பயணம் எல்லாம் அட்டோ அல்லது
, பஸ் தான். கல்யாணம் ஆகியிருக்க வில்லை அப்போது. பீளமேடு செல்ல எஸ் 19 எடுத்து, சில சமயம் சிங்கநல்லூர் சென்று எழுந்து திட்டு வாங்கிய அனுபவம் உண்டு. கண்டக்டர் புது சீட்டு வேறு வாங்க வைப்பார்! ஒரு முறை அப்படி ஆன சமயம், சிங்கநல்லூர் அரவான் சாமி திருவிழா (எங்கள் ஊர் காளி கோவிலில் நடப்பதை போல) பார்த்தேன். மெய் சிலிர்த்தேன். கரகாட்டம் என்ற பெயரில் நடக்கும் தெரு கூத்து நன்றாக இருந்தது. கதையும் சொல்லி ஆடுகிறார்கள். திண்டிவனம் பக்கம் இருந்து வந்தவர்களாம். என்னை அடையாளம் கண்டு கொண்டவர்கள், வீட்டிற்கு அழைப்பதும் உண்டு. என்னுடைய பிரின்சிபல் காரணமாக போகமாட்டேன். பரதநாட்டியம் என்று சொல்லி பப்ளிக் காபரே நடந்தது, கன்றாவி, போலிசு சப்போர்ட் உண்டு. போலிசுக்கு என் அடையாளமும் தெரிந்தால், ஒரு சல்யுட் வைத்து விட்டு, ஓரம் போய் விடுவார்கள்.

பிற்பாடு பெங்களூரு வந்த பிறகு, சென்ற வருடம் வால்வோ சர்விசு அறிமுகம்
ஆன சமயம், எலேக்ட்ரோனிக்ஸ் சிட்டி சென்று வந்தேன், கல்கத்தா நண்பர்கள் கூட்டத்தோடு. இந்தியாவில் புகழ் பெற்ற கம்யூனிச தலைவரும் என்னோடு வந்திருந்தார். கல்கத்தாவில் வர இன்னும் காலம் ஆகும்.

இங்கே ஒரு அருமை பதிவு.... பொடி பொண்ணு என்பவர் எழுதுகிறார்... அதை
நினைவு கூர்ந்து எழுதுகிறார் கிருஷ்ணகுமார் (லக்கிலுக்)... வாழ்த்துக்கள்!

குறைகள் எல்லாம் நடப்பது அரசு போக்குவரத்து பேருந்துகளில் தான். அனந்த விகடனில் நாஞ்சில்
நாடன் எழுதிய பேருந்து பயணம் குறித்த கட்டுரை... நன்றாக இருந்தது. அவரை கிண்டல் அடிக்க ஒரு கூட்டம் இருக்குது... திருப்பூரை சேர்ந்த என் நண்பருக்கு அவரை நன்றாக தெரியும். எழுத்தாளர்கள் மத்தியில் இதெல்லாம் சகஜம்னு, ஒரு எழுத்தாள நண்பர், என்னோடு தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் பனி புரிந்தவர், சொல்லுகிறார். திட்ட திட்ட பெருமை விளையும்னு அறிஞ்சர்கள் சொன்னது, குட்ட குட்ட பனைமரம் வளையும் போல என்று சொல்லியது போலே. புதுவையில் ஒரு கூட்டம், தி.ஜ.ரா (ஜானகி ராமன்) பற்றி பேசினார் ஒரு எதார்த்த நாயகன் இயக்குனர். அதற்கு எதிர்த்து பேசியே ஒருவர், கரிசல் காடு மண்ணின் மைந்தர், சொன்ன விஷயங்கள் தமாசு. பெயர் சொல்லாமல் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் தமிழ் தெரியாத தலித் என்று திட்டுவார்கள்.

எனக்கு பிடிக்காத தமிழ் பேச்சாளர், அடாவடி செய்தவர்... நெல்லை கண்ணன். என் அருமை பாரதியை கேவலம் செய்துள்ளார். யாரும் மன்னிக்க முடியாது. விஜய் டிவியில் அவர் முற்போக்கு ஜாதிக்காரர் என்று சொல்லி பிற்போக்கு ஆனவர்.

பேராசிரியர் ராமசாமி உயிரோசையில், எழுதியது ஏற்கனவே நான் மேற்கோள்
காட்டியிருந்தேன், ஒரு பதிவில். மனுஸ்ய புத்திரன் நன்றாக தன் எடிட் செய்கிறார். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் அவருக்கும்.

ஆமாம் இப்படி கூட செல்வார்கள என்ன? எப்படி ஏறுவார்கள்?


நன்றி படம் சப்ளை செய்தவர்களுக்கு.


நிர்மல் வர்மா

எனக்கு எப்படி ஜெயமோகன் மூலம் தமிழ் காவியங்கள் படிக்கிறேனோ அதேமாதிரி நிர்மல் வர்மா ஹிந்தியில் ஓர் விற்பன்னர். சிறு கதைகளில் ஒரு புரட்சி செய்தவர். தமிழர் யாருக்கும் அவரை தெரியாது, சுஜாதா உட்பட.

பெண்களை வர்ணிப்பதில் ஒரு வல்லவர். செக்ஸ் ஒரு முக்கிய அம்சமாக வைத்துக்கொண்டு எழுவது எனக்கு பிடிக்காது. அது மஞ்சள் பத்திரிக்கை சமாச்சாரம். மட்டமான இலக்கியம்.

என்னை போலவே கம்முனிச சிந்தந்ததில் ஊறி வளர்ந்தவர். ப்ராகில் பத்துவருடம் வாழ்ந்து, இலக்கியத்தில் ஊறியவர். அவருடைய 'வோ தின்' நாவல் பிராகை (செக்ஸ்லோவாக்கியா) கண முன்னால் நிற்க வைக்கும். கம்முநிச்டுகள் பற்றி பயம் வருவிக்கும். ஒரு ஜீன்ஸ் விளம்பரம் (லீவிஸ்) ஒரு பழைய காருக்கு பண்ட மாற்றம் செய்யும்போது காட்டும் ஊர் தான் அது. ஒரு நாள் அங்கு செல்ல வேண்டும்.

அவருடைய 'தீன் யெகந்த்' ( மூன்று அழகான அம்சங்கள்) ஒரு அருமையான நாடகம். இங்கேயும் பெண்கள் தான் முக்கிய அம்சம். என்ன கொடுமை சார் இது. என் அப்பாவும் கல்கத்தாவில் நாடகம் போடுவார் அமெரிக்காவை சாடி. எனக்கே பிடிக்காது. அக்காவும் நானும் அங்கிருந்த காலம், சண் ப்ரன்சிச்கோவில் ஒரு நாடகம் போட்டார்.

அவருடைய ' தேஜ் ' கதையை படி பித்து பிடித்தவன் போலே இருந்திருக்கிறேன்.

இப்போது அவர் ஆத்மா சாந்தி அடைந்திருந்தாலும், வஞ்சனை இல்லாமல் புகழலாம். 1999 இல் ஞானபீடம் அவார்ட் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போதுஅவருக்கு எழுபது வயது. சிம்லாவில் அவரை சந்தித்தேன். அசோகமித்ரனும் எழுவதாவது வயதில்பெரிய அவார்ட்ஸ் வாங்குகிறார்.

கதை எழுத்தாளர்கள் எல்லாம் கவிதை எழுதுவது குறைவு. ஆனால் இவர் எழுதிய கவிதைகள் .... அருமை. பாதி மாசோ-சாடிசம் நிறைந்த உணர்வுகள். எப்படி என்றால், ஆண்கள் பெரியவர்கள், பெண்களை ரசிக்க படைத்தவர்கள் என்று இருக்க கூடாது. என் எண்ணம்.

குறைவாக எழுதினாலும்... நிறைவாக செய்தார் என்று சொல்ல வேண்டும். இன்னும் ரஷ்யாவில் அவர் எழுத்து பிரபலம்.

எனக்கு தினமணி நிறைய பிடிக்கும், படி படியாக தமிழ் கற்றேன் அதை வைத்து. தமிழ் படிக்க ஆரம்பித்த போது, 1991 சென்னை சாலிக்ரமத்தில் வீடு. டாடா கம்பெனியில் வேலை. காலை ஹிந்து நியூஸ் பேப்பர் படித்தவுடன்,
தின மணியில் சில சமயம் தலையங்கம் மற்றும் ஒரு அரை பக்கம் (நடுவில்) கட்டுரை (.என்.சிவராமன் எழுதுகிறார் என்று சொன்னார்கள் - கஸ்துரி ரங்கன் - தின மணி கதிர் ஆசிரியர் - கணையாழியில் சில காலம் இருந்தவர் - சொன்ன ஞாபகம்) படிப்பேன். சினிமாக்களில் நடிக்கவும் செய்தார் என்றார்கள். தெரியவில்லை. கூத்துப்பட்டறை முத்துசாமி, கற்பகம், வாத்தியார் ராமன் போன்றவர்களை நான்அறிவேன். அவர்கள் ஞாபகம் வைத்திருபார்களா என்று தெரியவில்லை. ரவி விசுவநாதன் என்பவர் அமேரிக்கா வாழ் இந்தியர் கூத்துப்பட்டறை ஆட்களை அங்கு அழைத்து சென்று விழா எடுத்துள்ளார்.

இப்போதும் இணையத்தில் தின மணி படிக்கிறேன்.

Friday, September 19, 2008

பொய் சொல்ல போறோம் -விமர்சனம்

படம் நன்றாக தான் இருக்குது... சீரியல் மாதிரி..


உம்மணாம் மூஞ்சி நடிகர் எவம்,
சென்னை (evam, chennai) குரூப் மெம்பெர் கார்த்திக். எப்போதும் பாரின் ரிடர்ன் வேஷம், அல்லது ஐடீ பணியாளர்... ரேடியோ ஜாக்கி, பாடகி சுசித்ரா புருஷன்.. வேஸ்ட் பண்ணிடாங்க.. பிரசன்னா போட்டிருக்கலாம்.

மௌலி ஒரு சிறப்பான நடிகர். அவருடைய
பிலயிட் நும்பெர் 172 பார்த்துடீங்களா?

இங்கேயும் விரிவாக படிக்கலாம்..

பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!
பொய் சொல்ல போறோம்! - விமர்சனம்


சில்வியா பலாத்

பல தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்த சில்வியா பலாத், தற்கொலைகள்பற்றி ஆழ்ந்து எழுதியுள்ளார். முற்றிலும் கன்பெசனால் கவிதைகள், பொயட்ரி. வாழ்க்கை வாழ வெருபேற்றி விடும் அவர் எழுத்துக்கள். வாழ வேண்டும் என்றுஒரு வெறி வரும்?

அவர் எழுதிய '
தி பெல் ஜார்' நாவல்- ஒரு (செமி) ஆட்டோபயோக்ரப்ஹி , என்னைமிகவும் பாதித்த ஒன்று. இணையத்தில் தேடினால் (Sylvia Plath) கிடைக்கும்.

சுஜாதா எழுதிய சில்வியா (சில்வியா பலாத் கோட்கள் அத்தியாயம் முதலில்கொடுத்தார்) நாவல், கணேஷ் மற்றும் வசந்த் வந்த கதை அது. ஹுமன் எமொசன்ஸ் பற்றி விரிவான கருத்துகள் விரும்புவோர்.. படிக்கலாம்.

அது எழுதிய சமயம், நான் அவரை சென்னையில் சந்தித்தேன் , அம்பலம் வேலைசெய்து கொண்டு இருந்தார் சுஜாதா. குமுதம் ஆசிரியர் ஆக இருந்து விலகியநாட்கள்?

Thursday, September 18, 2008

சோதிடத்தால் பயன் உண்டா?

சோதிடத்தால் பயன் உண்டா? அதை எடுத்துகொள்பவர்களின் நிலை பொறுத்து.

நேரம் காலம் என்று சத்யராஜும் (நடிகர்) சொல்கிறார்.

ஆமாம். ஒருவருக்கு நேரம் என்று எப்போது வரும் என்று தெரியாது.

பல சூழ்நிலைகள். வித்தியாசம்.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் பிறந்த அதே நேரம் பிற சிலர் பிச்சைக்காரர்கள் ஆக இருப்பார்கள் அல்லவா? ஆனால் சொகுசு வாழ்க்கை உண்டு... :-) ... சில மாற்றங்கள் நிகழும். முயற்சி பொறுத்து. அது தான் நேரம் காலம். எல்லாம் விதி என்று வீட்டில் உட்கார்ந்தால், ஒன்றும் நடக்காது. அந்த அந்த நேரங்களில் முயற்சி எடுக்கணும், முடிவு கிட்டும், போட்ட பலனுக்கு தகுந்த படி. மதியால் வெல்ல் வேண்டும்.

பரிகாரங்கள் கப்சா. மன நிம்மதிக்கு தான். ஒரு மற்றும் கிடைக்கிறது சிலகோவில் சென்றால். அவ்வளவு தான். சாஸ்திரங்கள் எழுதியவர்கள் அவா குடும்பம் வருமானம் பார்க்க செய்ப்பட்ட சூழ்ச்சி!

எனது இன்னொரு ப்லோகை பார்க்கவும். எவ்வளவு தியரி உண்டு என்று.

எனக்கு புது தொழில் துவங்க ஐந்து மில்லியன் டாலர்கள் தேவை. நேரம் நன்றாக உள்ளது. நண்பர்கள் உதவுவார்களா என்று பார்க்க வேண்டும்.

முயற்சி திருவினையாக்கும்.


யார் பெரியவர், பாரதியா? அவர் வழி தோன்றலா?

யார் பெரியவர், பாரதியா? அவர் வழி தோன்றலா?

சாதிகள் இல்லையடி பாப்பா எழுதிய போது , அவர் பூணூல் போடவில்லை..சேரியில் வாழவில்லை.

அச்சமில்லை
அச்சமில்லை எழுதிய போது அவருக்கு உணவில்லை. ஜெகம் தான்அழிந்துகொண்டு இருக்கிறது. சந்தைகடை வைக்க கூட சில ஜாதிகள் ஒடுக்குகின்றன.

சரி நான் கேட்ட கேள்வி பதில்....

காம்முனிசம், சோசலிசம் மனது கொண்டவர் பாரதி.

ஒரு முடிவுக்கு வருவோம், பாரதியை படித்து எழுதியவர்கள், இப்போதும் சிலர் , அன்பாய் அமர்களமாய் எழுதினார்கள், எழுதுகிறார்கள்.

இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான்!

பாரதி கஞ்சா அடித்தவர் என்று சொல்லி சிறுமை படுத்த வேண்டாம்.
பசியோடு வாழ்ந்தவர் என்பது தெரியுமா?
அவர் பெருமை மறப்பது நன்றண்டு.

வருங்காலத்தையும் கொண்டாடுவோம்!

காதல் : முற்றும் முடிந்தது முற்றியது

நான் காதல் கொண்டது ஒரு முறை
அது என் இக்கால மனைவியோடு

கண்ணழகு
இடையழகு
நடையழகு
என்று சொல்லவில்லை
உன் மனம் அழகு என்றேன்

பட்டாம்பூச்சிகள் படபடத்தன
உன் முதல் பார்வையால்
என் நெஞ்சிலே

கடைசி நாள் வரை
காக்கவில்லை
உன் காதலை சொல்ல

முடிவை சொன்னாய்
முற்றும்
முடிந்தது
முற்றியது
என் காதல் பைத்தியம்!

(இப்போ தான் எழுதினேன். கடைசி பாராவின் சில வார்த்தைகள் என் புது தமிழ் வாத்தியார் எழுதின கதைலே இருந்திச்சு!)

ராமன் தேடிய சீதை

என் இதயத்தில் நீ வந்தாய்
அன்பை நின்றாய்
இதயமே அழகானதே!

உன் சுகத்தை கண்டேன்
சுகமே எல்லை
வனவாசம் இல்லையே!

மண்ணிலிருந்து வந்த நீ
என் மஹாராணி ஆனாய்
ஆகவில்லை அரசியாய்!

தேடி கிடைத்த
தேவதை நீ
நான் பெற்ற வரம ஆனாய் !

காடிற்குள்ளும் எனக்கு
உன் வாசம்
சொர்க்கம் தானே!

பதினான்கு வருடம்
பதினான்கு நொடி
ஆனதே!

(எழுதிய காலம் தொன்னூறுகள் - கலீல் கிப்ரான் தாகத்தோடு)

ஓ மானே மானே

மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னை கண்டேன்
சின்ன பெண்ணே
ஆசை நெஞ்சே நான் போதை கொண்டேன்
பொன் மாலை கட்டிக்கொள்ளும் பேதை தானே!

மீண்டும் வருமே காலம் வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும் தீப ஒளியே சேரும்
உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்..

மானே மானே ...

பூவொன்று காற்றோடு சாய்ந்தால் செடியும் சாய்வதில்லை
பகல் மாறி இருளும் வந்து போகும் விதியில் மாற்றம் இல்லை
பாதை கொஞ்சம் மாறினாலும் பயணம் மாறுமா
பாசம் கொண்டு வாழ்வை நம்பு காலம் மாறுமே
எங்கே எங்கே இன்பம் எங்கே அங்கே
உந்தன் நெஞ்சில் உள்ளே தேடி வந்திடும் சந்தோசமே

மானே மானே ..

சொந்தங்கள் நான் கண்டதில்லை உறவு என்று வந்தாய்
உன் பார்வை சந்தித்தபோது மின்னல் நெஞ்சில் தந்தாய்
உந்தன் பாடல் கேட்ட போது தானே வந்த ஆனந்தம்
தேடல் இன்றி வந்த இன்பம் ஆயிரம்
உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை நானும் கண்டேன்
நீயும் கண்டாய் தேடி வந்திடும் சந்தோஷமே

மானே மானே ..

(என்னுடைய முந்தய பதிவின் உள் அர்த்தம் தெரிந்தால், இது புரியும்!)

கலீல் கிப்ரான்: கடவுள்

கலீல் கிப்ரான் (ஸல்) சொல்லுகிறார்

உனது வாழ்க்கையே
உனது மதம்!
நீ கடவுளை பார்த்தால் அவர்
உன் வாழ்க்கை முடிச்சுகளை
அவிழ்கமாட்டார்!
உன்னையே நீ நோக்கினால்
உன் குழந்தைகளோடு விளையாடும்
அருள் தருவார்!

உன்னுடைய அபிலாசைகளின்
ஆழத்தில்
அமைதியில் இருக்கின்றன
உன் அறிவாற்றல்

அந்த அமைதியின் ஆழத்தில்
நீ பாடு
மலையின் உச்சிக்கு சென்று
ஆடு
பூமி உனது கைகால்களை
கொணர்ந்த பின்னால்
அது களியாட்டம்!

நீ உன்னை குறை
கூறுவது
உன் குறைவுகளால்
காலத்தின் கண்போழுதுகளின்
மாற்றங்களின்
காரணமல்ல!

கட்வுளின் அழகால்
வாழ்க்கை ஓட்டங்களின் விளிம்பில்
நிற்கின்றேன் நான்
கைதி ஆகியுள்ளேன்
மனிதர்கள்
இயற்றிய சட்டங்களால்!

ஹஃபீஸின் கஸல்

என் கல்லறையை திறந்து பார்
ஒரு புகை மூட்டம் வரும்
சுற்றிய துணியில் பற்றிய தீ
எரியும் நெருப்பால் அல்ல
எனது உயிரின் சுடரால்!

- ஹஃபீஸின் கஸல்

புது கவிதை எழுத்தாளர் நா.காமராசன் அவர்களிடம் நான் சொன்ன மொழிபெயர்ப்பு! திருப்பூரில் திரு சாகுல் ஹமீதை சந்திக்க சென்ற போது (கோவையில் வேலைஅப்போது) அவரை பார்த்து பேசினேன். அவர் எழுதிய " மானே மானே.." வின் தாக்கம் (படம் - வெள்ளை ரோஜா) எங்கிருந்து வந்தது என்று கேட்டேன்.

கலீல் கிப்ரான்.

ஆண்களின் மார்பு பார்வை

ஆண்களின் மார்பு பார்வை பற்றி என் மனைவியுடன் ஒரு சூடான விவாதம்.

ஆண்கள் எல்லோரும் பெண்கள் என்றால் (அம்மா, அக்கா, தங்கை, வயதானஉறவினர்கள் மற்றும் பொருந்தாத உறவை விட்டு விடுவார்கள்) பார்க்கும் பார்வை விவகாரம் தான். கண்ணாடி போட்டவர்கள் சமாளித்து விடுவார்கள்.

சீனியர் என்பதால், அவருக்கு, கண்ணோடு கண் பார்வை. கண் நோக்கி பேசுதல்.

வக்கிரம் சில சமயம் உண்மை என்று தோன்றுகிறது.

மார்பு (முலை, கொங்கு) ஒரு உடல் பாகம் என்று இருந்து விட்டு போகட்டுமே. ஒரு மன நிலை வகை வக்கிரம் அது.

நான் அமெரிக்காவில் கொஞ்சம் காலம் வாழ்ந்த போது ஒரு வீட்டில் இரண்டு நண்பிகளோடு இருதேன், இரண்டு பெட்ரூம், பாத்ரூம் வீடு. ஆண்கள் ஒரு ரூம், பெண்கள் தனி - அட்டசெட் பாத்ரூம். வாடகை ஆளுக்கு ஐந்நூறு டாலர்கள். சாப்பாட்டிற்கு நூறு ஆகும். கரண்ட், ஸ்டீம், காஸ் போன்றவை இன்னும் ஒரு இருபது. தவறான் பார்வை பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. நான்கு பேர், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். ஒரே கம்பெனி. ஒரே வயது. மாதம் ஆயிரம் டாலர் மிச்சம் செய்வது குறிக்கோள்.
ஒவ்வொருவரும் பணம் மிச்சம் செய்யும் கவலை. அக்கா கல்யாணம் செய்த பின்னால் பால்டிமோர் மாதம் இருமுறை செல்வேன்.

சமையல் ஒவ்வொருவரும் உதவி செய்து சமைத்து, பரிமாறிகொள்வோம். காலை எப்போதும் ஸிரிய்ல்ஸ் தான். இரவு அதிகம் வைத்த குழம்பு மற்றும் சாதம் வைத்து அல்லது சப்பாத்தி, ஆபிஸ் கொண்டு போவோம். இரவு உணவு சமைத்து எட்டு மணிக்கு எல்லோரும் பேசிக்கொண்டு. (பிரண்ட்ஸ் டிவி சீரியல் வந்த சமயம்). சில சமயம் பக்கத்து வீட்டு (நம் சமூக நண்பர்கள் வரலாம்). ஆபிஸ் நண்பர்கள் வார இறுதியில், கட்டாயம் வருவார்கள். நாங்களும் போவோம். பாதி நாள் ஹோட்டல் சாப்பாடு. புப்பெ.

ஒரே ஒரு சமயம் உணவு உண்ணும் போது, சாப்பாடு மேஜையில் குழம்பு ஊற்றும்போது , என்னை அறியாமல் க்ளீவேஜ் பார்த்து (போட்டிருந்த டிரஸ் அபப்டி) வாங்கி கட்டிகொண்டேன் - "எங்கப்பா உன் பார்வை போகுது" என்றாள் அருணா. என் நண்பன் சுதாரித்து கொண்டு என்னை காப்பாற்ற "டிரஸ் அபப்டி போட்டால், என்ன செய்யறது" என்று. அன்று அவள் பரா போடவில்லை போல இருந்தது. திரும்பி கேட்டாள் " நீங்க ஷார்ட்ஸ் போடும் போது, தொடையை நாங்க பார்கிறோமா?"

பெருமாளே!


ஆனால் அந்த வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து பார்வையில் மிக கவனமாக இருந்தேன். (குளிக்கும் போது, டோவெல் எடுக்காமல் சென்று, உள்ளிருந்து கேட்டு வாங்கியது, மேல் சட்டை போடாமல் ஜூலை மாதத்தில் வெற்றுடம்போடு இருந்தது....)

நாங்கள் இன்னும் நண்பர்கள், குழந்தை குட்டி என்று ஆகிவிட்டது. அருணா தெலுகுக்காரி. பணக்காரி. சொந்த முயற்சியில் உழைத்து சம்பாரிக்க ஆசை.சென்னையில் வளர்ந்தவள். தமிழ் தெரியும். என் பதிவுகளை படிக்கிறாள்.இப்போது ஒரு பெரிய கம்பெனியில் டைரக்டர்.

சில மாதம் முன்பு, சுடிதாரில் பரா பட்டை தெரிய என் முன் அமர்ந்து பேசினார் ஒரு பெரிய இடது அழகு பெண், இடம் விசயமாக பேசிகொண்டிருந்தேன். நான் கவனமாக இருந்து விட்டேன். எதற்கு வம்பு. பட்டது ஒரு காலில்... பழைய ஞாபகம்.

விவாதத்தின் முடிவு - பார்வை பத்திரம். பார்த்துக்கோ என்று டிரஸ் பண்ணினால், நன்றாக பார்த்துக்கொள்.
இரு பாலாரும் அவரவர் உடைகளில் கவனம் செலுத்த வேண்டும்!

திருக்குறள் நட்பு

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்


யாராக இருந்தாலும், நம்பிக்கை வைத்து நட்போடு பழகினால், எந்த கஷ்டம் வந்தாலும் நிம்மதி தரும் தெளிவான நிலை இருக்கும். அப்படி இல்லாமல் சந்தேகம் என்ற நிலை கொண்டால், கூடா நட்பும் நல்ல நட்பாகும். பிறகு என்ன வரும்? இடும்பை = தொந்தரவு.

உடான்ஸ் நபர்களை விட்டு விட்டு, நல்ல நண்பர்களை பெறுவோம் இந்த ஜகத்தில்.

Wednesday, September 17, 2008

உண்மை சம்பவம்

நிச்சயம் ஒரு கேடு கெட்ட ஆசாமி தான் இது செய்தது. ஒரு வாரம் முன்னால்.

பெங்களூரில் பெண்களுக்கு பதுகாப்பு என்பது குறைவு என்று தான்தோன்றுகிறது.

என் மனைவி ஒரு முறை கம்பெனி காரில் அலைபேசி தொலைத்து விட்டார். தினம் காலை எட்டு வந்து அழைத்து செல்லும், பிற்பாடு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்புவார் அதில். குழந்தைகள் நான்கு மணி அளவில் வீடு திரும்புவார்கள். நான் இருப்பேன். இல்லாவிட்டால், பக்கத்து வீட்டில் சாவி. (வீட்டில் விலை உயர்ந்த பொருள் எதுவும் கிடையாது!).

கம்மி விலை போன் தான். அவர்கள் கம்பெனியில் கேமரா உள்ளது உள்ளேஅனுப்ப மாட்டார்கள்.

அதில் கிடைத்த நம்பர்கள் வைத்து (நிச்சயமாக, அந்த டிரைவர் இல்லை, போன் தொலைந்தது தெரியாது என்று சொல்லி, போனை விற்றிருக்கலாம்... பிரிபைட் கார்டு தான்.) எதாவது தில்லு முல்லு செய்யலாம்...

அதில் வீட்டு நம்பர் கிடைத்திருக்கும் போல தெரிகிறது. ஒரு நாள் மதியம் இரண்டு மணி இருக்கும் "நான் செகுரிட்டி பேசறேன், உங்க வீட்டம்மா புருஷன் வெளியே நிக்கிறார் என்று..." ஒரு திடுக்கிடும் கால். என்னடா நான் குத்து கல்லாடம் உட்கார்த்திருகிறேன் என்று நினைத்தேன்.
வேறு யாரவது இருக்கும் என்று சொல்லிவிட்டேன் முதல் முறை.

எங்கள் அபார்த்மேன்ட் சிறியது, பதினாறு வீடுகள் தான். அதனால் ஒரு புல் தடுக்கி பயில்வான் செகுரிட்டி தான் இருப்பார். சாயந்திரம் வேறு ஒருவர். பலசாலி. பதினோரு மணியில் இருந்து காலை ஐந்து வரை விசில் அடிப்பார், ஒரு மணிக்கு ஒரு தடவை. ரோந்து வருவார். பன்னிரண்டு மணி நேரம் டுட்டி.

மதியம் இரண்டு மணிக்கு தினமும் ஒரு போன் வருது... இது தொடர்ந்தது இரண்டு முறை. நான் முக்கால் வாசி நேரம் வீட்டில் இருந்து தான் வேலை / தொழில் செய்கிறேன். ஒரு நாள், ஒரு பொம்பை துப்பாக்கி எடுத்து கொண்டு, கீழே ஓடினேன் "அம்மா வருகிறார்" என்று செகுரிட்டி இடம் சொல்லி விட்டு. கூரியர் வந்தால் வீட்டிற்கே அனுப்பி வைப்பார்கள். விவகாரம் தான். சிலர் வீட்டு ஆட்கள், மனைவி கிழே வந்து சாமான் எடுத்து செல்ல சொல்வார்கள். அப்படி என்று நினைத்து இருக்கலாம்.

வெளியே ஹெல்மெட் போட்டு கொண்டு ஒருவன் நின்றிருந்தான். நல்ல வேலை ஒரு பெண்மணியும் என் பின்னால் வந்ததால், செகுரிடியை பார்த்தேன், கை காட்டினார் அவன் தான் என்று. அவன் ஓடவில்லை. "என்ன வேண்டும்" என்று கேட்டேன். அவன் ஹெல்மெட் கழட்ட வில்லை. "நீ யார் என்றான்..." துப்பாக்கி எடுத்து காட்டினேன்.. ஓடி விட்டான் பைக் விட்டு விட்டு, ஒரு மொபைல் போன் கிலே விழுந்தது. அது என் மனைவி தொலைத்த அலைபேசிதான். டோடல் சார்ஜ் டோவ்ன். கால் லோக் அழிக்கபட்டிருந்தன. (இன்னும் அந்த பைக் பி.டி.எம். லே அவுட் போலீஸ் நிலையத்தில் நிற்கிறது, தலைமை காவலர் யாரவது வந்து கேட்டால், தகவல் கொடுப்பார்! அது திருட்டு வண்டி.)

எதற்கு அப்படி தையரியமாக வர பார்த்தான் என்று விளங்கவில்லை எனக்கு அப்போது கொஞ்ச நேரம் ! கெட்ட எண்ணம் தான், இப்படியும் இந்த காலத்தில் இருப்பார்களா? ஆனால் எப்படி வீட்டு அட்ரஸ் கிடைத்தது என்று தெரியவில்லை. எஸ்.எம்.எஸில் ஒன்றும் இல்லை என்றார் மனைவி. அனேகமாக அந்த போன் கம்பெனி மூலம் விவரம் கிடைத்திருக்கும் அல்லது டிரைவர்?

இன்று அந்த கார் கம்பெனியில் இருந்து டிரைவர் வரவில்லை.

ஐ சி ஐ சி ஐ வங்கி திவால்?

நேற்று தான் ஒரு பதிவு போட்டேன்.... லேஹ்மான் பிரதர்ஸ் பற்றி... திவாலான கதை ( சாப்டேர் 11 என்றால், கடனை கேட்க திருப்பி கேட்க முடியாது, இருக்கும் சொத்தை பங்கு போட்டு கொல்லேலாம் அல்லது விற்று விடலாம், வாங்கும் இன்னொருவரும் கடன் அடைக்க வேண்டியது இல்லை).

ஐ சி ஐ சி ஐ வங்கி திவால்?

இப்படி அப்பாவியாக இருப்பார்களா மக்கள் ? இந்தியா அரசியல் அப்படி - குளோபல் டிரஸ்ட் பேங்க் மூலம் - காட்டியுள்ளது. ஆர் .பி .. சும்மா இருக்காது. வேறு ஒரு வங்கியோடு இணைத்து விடும். மக்களின் சொத்து திரும்பி வரும்.

மேலும் சிடிபான்க் பற்றி பேசுகிறார்கள் இப்போது...

Tuesday, September 16, 2008

லேஹ்மான் பிரதர்ஸ் திவால்

லேஹ்மான் பிரதர்ஸ் திவால்!

ஹென்றி லேஹ்மான் 1844 ஆம் வருடம் ஜெர்மனியிலிருந்து தம்பிகளோடு அமேரிக்கா வந்து மோன்ட்கோமேரி, அலபாமாவில் செட்டில் ஆனார். வட்டி வியாபாரம். ஜு இனத்தவர். (ஷ்ய்லோக் பற்றி நினைத்தால் நான் பொறுப்பல்ல) அலபாமாவில் கறுப்பின
மக்கள் அதிகம் வாழ்ந்தார்கள் அடிமைகளாக.. அப்போது. இப்போதும், சுதந்திரத்தோடு.

எவ்வளவு கொடுமை! நூற்றி ஐம்பத்தி எட்டு வருட சகாப்தம் முடிவா? தெரியவில்லை. 1930 மற்றும் 2001 மார்க்கெட் கிராஷ் தப்பித்த கம்பெனி. ஆயில் கம்பெனி முதலாளிகள் வாங்கிய கடன் (பேரல் 150 டாலர் இருந்த போது, இப்போது 92 மட்டும், பெரிய லாஸ்...). தலையில் முக்காடு! புஷ் பாலிசி ப்ரிச்சனை? ஒபாமாவிற்கு வந்த பிறகு மிகவும் கொடிய கஜானா உண்டு. விலைவாசி இப்போது அங்கு தலை விரித்து ஆடுது.

நான் ஐ.ஐ.எம்.இல் படிக்கும் போது (1989 முதல் 1991 வரை) ஐந்து லட்சத்திற்கு மேலே வருட சம்பளம் இந்தியாவில் கொடுத்த புண்ணியவான்கள். இப்போதெல்லாம் இருபது லட்சங்கள் குறையாது. என மனைவிக்கு (காதலி அப்போது) வேலை கொடுத்தார்கள். நான் ஐ.டி. அமேரிக்கா என்று வாழ்க்கை நினைப்பு காலம் டாட்டா க்ருபில் சேர்ந்தேன், அக்கா பிரியா வேறு அங்கு அமெரிக்காவில் இருந்தாள்.

சில வருடங்கள் மனைவி பம்பாயில் வேலை செய்தாள். பிறகு பிலேதேல்பியா ஆபீஸ் வேலை கொஞ்ச காலம்... (போனஸ் எல்லாம் ஒருவருட சம்பளம் அளவு கொட்டி கொடுத்தார்கள் மேர்ஜர்ஸ் தேபார்டுமேன்டில் ) கல்யாணம் ஆன பிறகு பெங்களூர் நிறுவனம் ஒன்றிற்கு பெரிய பொறுப்பில் வந்தாள், கால் சம்பளத்தில். நான் சென்னையில் அரசாங்க வேலை. மாதம் பத்து நாட்கள் தான் பெங்களூரில். வாரக்கடைசி. சில சமயம் லீவு சமயத்தில் அவர் சென்னையில் இருப்பார். சில சமயம் சேலம் வெள்ளி இரவு வருவார். நானும் இரவு ஒன்பதுக்குள் இருப்பேன். நண்பர் ஒருவர், சொந்தம் ஒருவர் என்று இடம் கொடுத்தார்கள். திங்கள் தான் காலை ஆறு மணிக்கு கிளம்புவோம். அவர் நோர்த், நான் ஈஸ்ட். வாழ்க்கை நன்றாக இருந்தது இரண்டு வருடம். குழந்தைக்காக ஒரு வருடம் சென்னையில். பிறகு வேறு கம்பெனி மாற்றல்...மனசு நிம்மதி தான் வேண்டும் என்று முடிவு... சென்ற வருடம் மீண்டும் பெங்களூர்... இப்போது மனித வள மேன்பாடு தலைமை பொறுப்பு. வாழ்க்கை ஓடுகிறது. என்ன அமேரிக்கா போன போது, பிசினஸ் லா படிப்பும் முடிதிருகிறாள், போனசுக்கு நன்றி. சென்னையில் ஒரு கொட்டிவாக்கத்தில் வீடு கட்டி ஐந்து வருடத்தில் செட்டில் ஆக வேண்டும். என்ன வேலை செய்வது?

லேஹ்மான் பிரதர்ஸ் தலைமை நிர்வாக ஆபிஸ் நியூ யார்க்கில், டைம்ஸ் சதுரம்அருகே. அது ஒரு சுற்றுலா தளம், மேலாண்மை படிப்பு படித்தவர்களுக்கு.... (கோவில் குளம் போகின்ற மாதிரி...) தி.மு.க. தலைவர் / அமைச்சர் (மறைந்த) பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மகனும் அங்கு தான் சீனியர் பார்ட்னர் ஆக இருந்தார். தனியாக ஒரு விமானம் வைத்திருக்கிறார்.

எப்படி இருந்த நான்... (1940)



எப்படி ஆகிட்டேன்? (
௨000)



நானும் ப்ராஜக்ட் விசயமாக சில காலம் அங்கு உள்ளே டாட்டா நிறுவனத்திற்காக வேலை செய்தேன். ஆப்பிரிக்க இனத்தவர்கள் அதிகம் வேலை செய்த நிறுவனம் (நாமும் ஜனனம் அங்கிருந்து தான் அல்லவா?)

இப்போ? (2008)





வருத்தமாக நிர்வாக ஊழியர்கள், கம்பெனி முன்னால்...

இந்தியாவிற்கு லேஹ்மான் பவுன்டசொன் மூலமாக கண் பார்வை கிடைக்க பணம் கொடுத்தார்கள். அதை பற்றி....

எல்லாம் நல்லது நடந்தால் சரி...

எமிரட்ஸ் A380 படங்கள்

எமிரட்ஸ் A380 படங்கள் ... ஆமாம் இதுவரை படமே காட்டலே இல்லையா? அங்கு எனது நண்பர் அஸ்லம் ஜெனரல் மேனேஜர் ஆக வேலை செய்கிறார்.

The delivery of Emirates' second A380 has been delayed by two months.

The Emirates A380 in New York last month after completing its maiden flight.

Louis Gallois (L), CEO of European Aeronautic Defence and Space company (EADS), poses at a bar inside the Emirates A380 aircraft. Photo: Reuters

The first class lounge on board the Emirates Airbus A380 superjumbo.

The Emirates A380 features 14 first class suites with an office and minibar. Photo: Reuters

மறுமணம்

மறுமணம் எல்லோர் சமூகத்திலும் உண்டோ?

நான் பார்த்த வரை பெங்காலிகள் அதிகம் செய்கிறார்கள். தமிழர்கள் முடிந்தவரை இல்லை எனலாம். விதி யாரை விட்டது (விதவை), அவள் படட்டும் (கொழுப்பு - விட்டு வந்துட்டாள்) என்று விட்டு விடுகிறார்கள். அவனுக்கு மட்டும் விதிவிலக்கு?

எனக்கு தெரிந்த ஒரு அடையாறு அபார்ட்மேன்ட் ஆன்டி, சென்னையில் கணவனை மும்பையில் விட்டு விட்டு, தன் மகளை சங்கீதம் சொல்லி கொடுத்து வாழ்க்கை நடத்தினார். வண்ணாரபேட்டை பைரவி என்ற பெயர் கொண்ட குழுவில் மகள் பாடினாள் (?). பிறகு ஒரு நண்பர் மூலம் சினிமா பாட்டு வாய்ப்பு என்று கேள்வி. முறை மதியம் வீடு திரும்பிய பிரபல (!) மகள், அம்மா வீட்டு டரிவரோடு சல்லாபம் செய்ததை பார்த்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். (கேள்விப்பட்டது - உண்மை நிலை தெரியாது). டபுள் வாம்மி என்பதை போல, உயிரை காப்பாற்றிய டாக்டர் சொன்னது - அவளும் ப்ரெக்னன்ட்! என்ன கொடுமையான உலகமடா.


என் மகள் ஒருவரிடம் ஒரு வருடம் பாட்டு படித்தாள் - மிக மங்களகரமான மாமி. லக்ஷ்மி கடாட்சம். அவரை பார்க்கும் போது கை எடுத்து கும்பிட தோன்றும். அவரும் மறுமணம் செய்தவராம். முதல் கணவன் அமெரிக்காவில் கொடுமை செய்ததால் - விட்டு வந்து விட்டார்.


வாட்டர் படம், தீபா மேத்தா சொல்லிய மாதிரி இருகிறது இப்போது. குழந்தைகளுக்கு என்று ஒரு மனம். கல்வியும் நடக்கும். சில உயர் சாதியினர் ஆட்டம் அட்டகாசம்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் - சிலர் - குறிப்பாக அரசியல்வாதிகள், இரண்டு இல்லாமல் முடிவதில்லை. ஆசைக்கு ஒன்று. ஆஸ்திக்கு?

இன்னும் ஒரு அழகான பெண் கல்யாணம் வேண்டாம் என்று
இப்போது திருச்சியில் வாழ்கிறார் பெற்றோரோடு, ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. தேடல் சுகமில்லை. படித்த பெண். எனது நண்பரின் அண்ணன் மகள் அவர், ஒரு முறை காதல் செய்து கல்யாணம் முடித்து (அதே கம்பெனிஇல் ), ஆறு மாதத்தில் சரி வராத காரனித்தினால் (மாபிள்ளை சாப்ட்வேர் மேனேஜர், குடிகாரர், சாடிஸ்ட் என்று சொல்வாள் - கல்யாணம் செய்த பிறகு சுயரூபம்) விலகி, தனியாக வாழ்ந்தார், சில காலம். இப்போது வேலை விட்டு விட்டு பெற்றோரோடு. நண்பர்கள் எல்லாம் சொன்ன பிறகு, இளம் வயது ஆனதால்...வெளி நாட்டு பையன் கிடைத்தால் தேவலாம் என்கிறார் இப்போது (அட்ஜஸ்ட் மேண்டாலிட்டி வாழ்க்கை இருக்கும்). இருபத்தி எட்டு வயதில், ஈசியாக மாபிள்ளை கிடைப்பார். ஆணடவன் அருளட்டும்.

தேனீ மாவட்டத்தில் ஒரு இருளர் குடும்பத்தில் பார்த்தேன், மிக்ஸ் and மேட்ச் என்பதை போலே, துணை தேடுவது சுலபம். பெண்களும் அதிகம் அவர்கள் விகிதாரத்தில். குகை மனித வாழ்க்கை. ஆனால் ஒரு குழந்தை பெற்று விட்டால், அவன் தான் சாகும் வரை காப்பாற்ற வேண்டும். அப்போது தான் கல்யாணம் காய்ச்சி எல்லாம்.

சில நேரங்களில் சில மனிதர்கள்.

பருத்திவீரன் மற்றும் படையப்பா

அமிரின் சிறந்த் படம் பருத்திவீரன். நேற்று கலைஞர் தொல்லைகாட்சியில் போட்டார்களாம் . விடு திரும்பும் போது பத்து மணி. இப்போதெல்லாம் யெர்போர்டில் இருந்து வெளிய வந்தவுடன் டாக்ஸி உண்டு. பெங்களூரு புது ஏர்போர்ட் ஒரு மட்டமான ஒன்று. ஒரு மணி நேரத்தில் ரிங் ரோடு வழியாக நாற்பது கிலோமீட்டர். குழந்தைகள் எழுந்திருந்தார்கள். மைசூர் பா மைக்ரோ வேவ் செய்து சாப்டோம். அண்ணா பிறந்த நாள். சென்ற வருடம் ஓணம் சமயம் அங்கு இருந்தோம். கிருஷ்ணா ஸ்வீட்சில் கிடைக்கும் பாலாடை பிரதமன் அருமை. சென்னைக்கு திரும்பி விடலாமா, குடும்பத்தோடு என்று தோன்றியது. இன்னும் ஒரு ஐந்து வருடம்?

ஆமாம் விஜய் டிவியின் பர்பிவீரன் லொள்ளுசபா அருமை தானே?

கே.டிவி.யில் படையப்பா கடைசி சில நிமிடம் பார்த்தேன். மன்னிப்பு என்பது அழகாக சொல்லப்பட்டது. வீடு வச்சுக்கோ. என்ன? அப்புறம் என்னங்கன்னா விஜயின் விவேக்கின் ஜோக்ஸ். தூக்கம். இருமல். பேனாடரில். மயக்கம். எழு மணி. வாக்கிங்....

தனம் - திரை விமர்சனம்

தனம் திரைப்படம் ஒரு வங்காள எழுத்தாளர் சிறுகதை ஒன்றை காப்பி அடித்து திரைக்கதை படைக்கப்பட்டது. தேவை இல்லாமல் வரும் கொண்றவரசிகள் என்பதால், இதோடு விட்டு விடுகிறேன்.

அந்த கதையின் சுருக்கம், ஒரு வேசி, எப்போதும் ஐந்து ரூபாய் தான் வாங்குவாள், சுத்தமாக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களை தான் கலவி செய்வாள், தன்னிடம் வரும் ஒரு வியாபார கனவானை மனம் செய்கிறாள். இரண்டாம்தாரமாக, முதல் தாரம் குழந்தை இல்லாமல் இறந்து விடுகிறாள். ஒரு
பெண் பிள்ளைக்குதாய் ஆகிறாள். அதனால் அவர்கள் வீட்டில் கொன்று விடும்படிசொல்கிறார்கள். அதை அவளுக்கு பிடித்த ஒரு ஜோசியகார மாமாவின் மூலம் செய்கிறார்கள். இதை தெரிந்த அவள், எல்லோரையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்கிறாள். அவளுக்கு மரண தண்டனை கிடைக்கிறது. தூக்கு ஏறும் முன், ஜெயிலில் தற்கொலை செய்து கொள்கிறாள். (சேலை)

சென்னைக்கு ஒரு வேலை விஷயம் செப்டம்பர் 15 (நேற்று) சென்றேன். எல்லாம் அரசாங்க அலுவல்கள் முடியவில்லை. கையுட்டு வாங்குபவர்கள் மட்டும் சந்திக்கபட்டனர். ரொம்ப சின்செயர். அவர்கள் லீவு எல்லாம் காசு கிடைத்தால் எடுக்க மாட்டார்கள்.

நண்பரின் அலுவலகம் டைடல் பார்க்கில். லீவு தினம் ஆனதால், யாரும் இல்லை. பார்கிங் சுலபம். நண்பரின் அறையில் சரவணா பவன் எடுப்பு சாப்பாடு. அநியாயம். என்பது ரூபாய்க்கு, அறை வயிறு. ஆனால் அந்த பாகிங்கிற்கு கொடுக்க வேண்டும்!

எனது லாப்டோபில் ஒரு 'வேலைக்காரி' பதிவு போட்டேன். இன்டர்நெட் கார்டு ரொம்ப ஸ்லோ. பத்து நிமிடம் ட்ய்பிங். அப்லோடு பத்து நிமிடம். என்ன கொடுமை அனில் இது?

கதேட்றல் ரோடு சென்றோம். கிரேசி மோகன் எச்சை துப்பிக்கொண்டு இருந்தார், வெத்தலை சீவல். கை அசைத்தேன். பார்த்த மாதிரி இல்லை?

அப்போது ஒரு நல்ல திரை அரங்கில், நண்பர் முருகனுடன் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டம் இல்லை. எட்டுமணிக்கு விமானம் என்பதால் மூன்று மணி ஷோ பார்த்தேன். ஆறு மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்டு, அண்ணா சாலையில் காரில் திரும்பியது ( கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வேறு சென்றேன் - மைசூர் பா - குழந்தைகளுக்கு, அல்வா மனைவிக்கு!) ஒரு பரபரப்பு. கிண்டியில் இருந்து அறை மணி நேரம் தான் ஆயிற்று. எப்போதும், கத்திபராவில் கொடுமையாக இருக்கும். எழு மணிக்கு வந்து, லவுஞ்சில் சென்று அமர்தேன். ஒரு நாள் டாக்ஸி வாடகை ஆயிரம். ஆட்டோவில் இரண்டாயிரம் ஆகியிருக்கும். மீண்டும் ஒரு ஜூஸ் மற்றும் காளிபிளவர் வறுவல், நன்றி ஜெட்.

எட்டு மணிக்கு விமானம். படம் பற்றி டைப் செய்தேன். (சூடு ஏற்றவேண்டும் பிறகு!)

படம் பற்றி....

ஜீவாவின் காமிரா அருமை. கண்களில் ஒற்றி கொல்லேலாம் போல இருந்தது.

படிக்க (வேலை செய்வது போல ஆபிஸ் காட்டுகிறார்கள்) செல்லும் ஆனந்த் (பிரேம்), தனத்தை (
சங்கீதா) பார்க்கிறன். ஆவல் வருது. கூடல் கொள்கிறான் ஐந்நூறு கொடுத்து. எதற்கு தனம் வேசி ஆகிறாள்? (அவள் தாயும் ஒரு வேசி - ஜமிந்தாருக்கு, தாசி என்கிறார்கள்). புரியலே. சினிமாடிக். லாஜிக் இல்லாமல். ஊருக்கு உதவி செய்கிறாளாம்! கும்பகோனதிர்க்கும் ஹைதேரபாதிர்கும் ஒரு முடிச்சு. காதல் கொள்கிறான். கல்யானம் செய்ய விருப்பம் கொள்கிறான்.ஒரு மாமாவிற்கு தெரியும் தனத்தைபற்றி. சிக்கல். ஒரு ஜோசியர் அவள் மீது கண் வைக்கிறான். அவன் தான் ஹீரோகுடும்ப குரு. அவன் சொல்லி கல்யானம் நடக்கிறது. இடையில் கொஞ்சம் ஜோக்மசாலா. பாட்டு. சினிமா.

பிரேம் மற்றும் கிரீஸ் கர்நாட் நடிப்பு மிகை. நயமான நடிப்பு சங்கீதா. நான் அவர் சொதப்பி விடுவார் என்று இருந்தேன் - ஜோடி நம்பர் ஒன்னு மாதிரி.

போஎடிக் ஜஸ்டிஸ் என்று கடைசியில் முடிக்கிறார்கள் (போலிஸ் கேசு க்ளோஸ்), அவள் மீண்டும் தெருவில், வேசியாக. (தாமினி கதை ஞாபகம் வருதா? அதில் விற்றவர்களை கொல்லுவாள் தாமினி...)

ஆமாம் கதை - அது தான் ஒரு முறை மேலே சொல்லிவிட்டேனே? (கிளைமாக்ஸ் மட்டும் மாற்றம்)

தெலுங்கு வாடை ஜாஸ்தி. தமிழ் ரசிகர்கள் கையை விரித்தால், இன்னும் ஒருகுத்து பாட்டு போட்டு தெலுங்கில் வெளியிட்டால் வெற்றி. (ரங்காச்சாரி ஒ.கே.வா?)

எழுத்தாளர் பௌலொ கொஎல்ஹொ

எழுத்தாளர் பௌலொ கொஎல்ஹொ மிகவும் ஒரு அறிய, அருமையான எழுத்தாளர். இந்தியாவிலும் பிரபலம் ஆகிறார். (ஆகி விட்டார்? டாப் டென் புத்தகங்கள் சொல்லும்)

அவருடைய பதிபகத்தார் ஹர்பேர் கோல்லின்ஸ் வருத்தப்பட வைக்கும் காரியம் செய்தார். தன்னுடைய ஒரு நாவலின் -புக் வாசகர்கள் டவுன்லோடு செய்ய அவுருடைய பிலாகில் இணைப்பு கொடுத்தார். காசு குறைவாக வந்தால் பரவாயில்லை என்று மெயில் செய்தார்.
சில சமயம் பிரபலங்கள், மன நிலை தவறி விடுகிறார்கள். (நல்ல எண்ணத்துடன் சொல்கிறேன்).

நானும் வாரம் ஒரு கடிதம் அவருக்கு எழுதுகிறேன். ஒரு முறை 'உணவிற்கு சம்பாரித்து விட்டு, பிறகு மனம் போல எழுதுங்கள் என்றார்'. அடுத்த வருடம் ஐரோப ட்ரிப் போகும் போது, அவருக்கு பிடித்த ஜெனிவாவில் சந்திக்க வேண்டும்.

சித்ரா பானெர்ஜீ ஜீவகருனி என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய மிஸ்த்ரெஸ் ஆப் ஸ்பிசெஸ் புத்தகம் பௌலொ கொஎல்ஹொ 'வின் ஒரு நாவல் பகுதியை தழுவியது. ஐஸ்வர்யா ராய் நடித்த டுப்பா படம். விட்ச்கள், மன வாழ்க்கை இல்லாமல், சாவு இல்லாமல், மருந்து கொடுக்கும் நல்ல (?) தொழில் செய்ய வேண்டி வருவது என்று.


இன்ச்பிரேசொன் பரவயில்லை, அது தேவை ஒரு நல்ல எழுத்தாளனுக்கு என்கிறார்.

சமையல்: இந்தியாவும் அமெரிக்காவும்

அமெரிக்காவில் சமையல் செய்வது சுலபம்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு அங்கே இருப்பதால் இப்போதெல்லாம் அங்கேவெஜிடரியன் தான் பேசன்.

ஒரு எக் ட்ரோப் சூப் இரண்டு அல்லது மூன்று டாலர்கள். பன் ரோல்ல்ஸ் சிலதுஒரு டாலர் இருக்கும். பன்னை கட் பண்ணி சீஸ் தடவினால் போதும், சாப்பாடுஓவர். ஐஸ் கிரீம் ரெகுலர் ஆக சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.

டோர்டில்லஸ் என்பது மெக்சிகன் சப்பாத்தி. ஊருகாயோடு சாப்பிட்டால் நிம்மதி.
சிலர் பழங்கள் கட் பண்ணிய டின் ஒன்று மட்டும் தின்பார்கள். அல்லது மாக்கிநூடுல்ஸ் மாதிரி ஒரு பாக்கெட்.

ஆனால் மக்டோனல்ட்ஸ், பர்கர் கிங் போன்ற இடங்களுக்கு சென்றால், உங்கள்உணவு தேவை, கலோரி அளவில், எகிறி விடும்.

குளிர் பதனபெட்டியில் (பிரிஜ்) வைத்து சாப்பிடுவது அங்கே வாடிக்கை.

இந்தியாவில் அரிசி சாப்பாடு. பிறகு சப்பாத்தி அல்லது ரொட்டி. சாம்பார் அல்லதுஒரு கூர்மா. பிறகு காய். அப்பளம். ஓவர் வெயிட் ஒருவர் ஆக எவ்வளவு ஈசி. சிலசமயம் மணக்க கொஞ்சம் நெய்.

காலை உணவு ஒரு உப்புமா அல்லது இட்லி என்று ஓடும். தக்காளி சாப்பாடுகாலையும், மதியமும், மீந்தால் இரவும் சாப்பிடுவது எங்கள் வீட்டில்.

தோசை டைம் அடுக்கும் பதார்த்தம். சுடுவது ஈசி. தொட்டுக்கொள்ள சட்னி செய்வது ஒரு யுத்தம் நடைபெறும் களம். கரண்ட் போய்விட்டால், கிடைப்பது மிளகாய் போடி அல்லது ஊறுகாய்.

இதில் நான்-வெஜிடரியன் என்றால் மணக்க ஒரு சிக்கன் / மட்டன் / மீன். அந்தகவலை எனக்கு மட்டும். இப்போது நிறுத்தி விட்டேன்.

இருந்தாலும் நாம் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் ஏழைகள் உள்ள நாடு!

Monday, September 15, 2008

வேலைக்காரி

அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகம் ஒரு வரலாற்று மைல் கல்.
தி.மு.க. கட்சியின் கொள்கை பிரசார நாடகம் என்றும் கூறுவார்கள்.

என் வேலைக்காரி பற்றி இங்கு எழுதியாக வேண்டும். சம்பளம் கிடக்கட்டும். அறுபது வயது மேல் இருக்கும். ஒரு பரிதாபதிற்காக தான இருக்கிறார்.
பாதி நாள் வருவதில்லை. தமிழ் என்பதால் ஒரு கரிசனம். இரண்டு மடங்கு சம்பளம் தினம் ஒரு மணி நேரம் வேலைக்கு - கூட்டி பெருக்க மட்டும். வீடு இரண்டு பெட்ரூம் தான. வீட்டு சாமானங்கள் மிக குறைவு. என் மனைவி, அவர் வேலை பார்க்கும் இடத்திலிருந்து யாரவது அழைத்து வருவாள். அப்போது, நான் தான் வீட்டை சீக்கிரம் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

லீவு என்றால் எனக்கு டபுள் டுடி. ஜன்னல் சுத்தம் செய்ய, ஸ்ஹொவ்கஸெ சரி செய்ய, பழைய பேப்பர் அடுக்க, குழந்தைகள் ஹோம் வொர்க் செய்ய என்று டைம் பத்தாது. சாம்பார் போரடித்த சமயம், நான் தான ராஜ்மா குருமா வைப்பேன். மொசார்ட் கன்புடடிஸ் கேட்டுக்கொண்டே. டெம்போ வருவதற்குள் ரெடி.

சில சமயம் பார்த்தால், ஒரு பெருமைக்காக தான் வேலைக்காரி இருக்கிறார் என்று தோன்றும். கேடு கெட்ட மிடில் கிளாஸ் உலகம்.

Sunday, September 14, 2008

பெரியதிருமொழி

குலந்தருஞ் செல்வந் தந்திடுமடியார்
படுதுயராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினுமாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
- பெரியதிருமொழி

எவ்வளவு அருமையான வார்த்தைகள். கடவுள் திருநாமம் சொல்பவர்கள் (எம்மதம் ஆனாலும் என்று கொள்ளுங்கள் இங்கே), காசு பணம் செல்வம் பற்றி கவலை படாமல், தங்கள் மனசெல்வத்தை நிலையாக்கி கொள்வது தான் சிறந்தது என்கிறார் பாடல் ஆசிரியர்.

அவ்வளவு உண்மை. ஜாதி மதம் ஒழிந்தால் எவ்வளவு நன்மை. ஒவ்வொருவரும் ஜாதி ஒழிக்க பாடுபடுவோம். காதல் புரிவோம் ஜாதி ஒழிக்க (கல்யாணம்ஆகாதவர்கள் மட்டும் - என் தமிழ் ஐயர் மனைவி சிரிப்பது கேட்கிறது, மராத்தி மஹர் தலித்தை மணந்தவள் ஆயிற்றே).

ரெட்டிகள் கோவில் கட்டியதால் (ஸ்ரீசைலம்), அவர்கள் ஜாதி பாராட்டட்டும் என்கிறார் ஜெயமோகன் . முட்டாள்தனமான எழுத்துக்கள்.