மறுமணம் எல்லோர் சமூகத்திலும் உண்டோ?
நான் பார்த்த வரை பெங்காலிகள் அதிகம் செய்கிறார்கள். தமிழர்கள் முடிந்தவரை இல்லை எனலாம். விதி யாரை விட்டது (விதவை), அவள் படட்டும் (கொழுப்பு - விட்டு வந்துட்டாள்) என்று விட்டு விடுகிறார்கள். அவனுக்கு மட்டும் விதிவிலக்கு?
எனக்கு தெரிந்த ஒரு அடையாறு அபார்ட்மேன்ட் ஆன்டி, சென்னையில் கணவனை மும்பையில் விட்டு விட்டு, தன் மகளை சங்கீதம் சொல்லி கொடுத்து வாழ்க்கை நடத்தினார். வண்ணாரபேட்டை பைரவி என்ற பெயர் கொண்ட குழுவில் மகள் பாடினாள் (?). பிறகு ஒரு நண்பர் மூலம் சினிமா பாட்டு வாய்ப்பு என்று கேள்வி. முறை மதியம் வீடு திரும்பிய பிரபல (!) மகள், அம்மா வீட்டு டரிவரோடு சல்லாபம் செய்ததை பார்த்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். (கேள்விப்பட்டது - உண்மை நிலை தெரியாது). டபுள் வாம்மி என்பதை போல, உயிரை காப்பாற்றிய டாக்டர் சொன்னது - அவளும் ப்ரெக்னன்ட்! என்ன கொடுமையான உலகமடா.
என் மகள் ஒருவரிடம் ஒரு வருடம் பாட்டு படித்தாள் - மிக மங்களகரமான மாமி. லக்ஷ்மி கடாட்சம். அவரை பார்க்கும் போது கை எடுத்து கும்பிட தோன்றும். அவரும் மறுமணம் செய்தவராம். முதல் கணவன் அமெரிக்காவில் கொடுமை செய்ததால் - விட்டு வந்து விட்டார்.
வாட்டர் படம், தீபா மேத்தா சொல்லிய மாதிரி இருகிறது இப்போது. குழந்தைகளுக்கு என்று ஒரு மனம். கல்வியும் நடக்கும். சில உயர் சாதியினர் ஆட்டம் அட்டகாசம்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் - சிலர் - குறிப்பாக அரசியல்வாதிகள், இரண்டு இல்லாமல் முடிவதில்லை. ஆசைக்கு ஒன்று. ஆஸ்திக்கு?
இன்னும் ஒரு அழகான பெண் கல்யாணம் வேண்டாம் என்று இப்போது திருச்சியில் வாழ்கிறார் பெற்றோரோடு, ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. தேடல் சுகமில்லை. படித்த பெண். எனது நண்பரின் அண்ணன் மகள் அவர், ஒரு முறை காதல் செய்து கல்யாணம் முடித்து (அதே கம்பெனிஇல் ), ஆறு மாதத்தில் சரி வராத காரனித்தினால் (மாபிள்ளை சாப்ட்வேர் மேனேஜர், குடிகாரர், சாடிஸ்ட் என்று சொல்வாள் - கல்யாணம் செய்த பிறகு சுயரூபம்) விலகி, தனியாக வாழ்ந்தார், சில காலம். இப்போது வேலை விட்டு விட்டு பெற்றோரோடு. நண்பர்கள் எல்லாம் சொன்ன பிறகு, இளம் வயது ஆனதால்...வெளி நாட்டு பையன் கிடைத்தால் தேவலாம் என்கிறார் இப்போது (அட்ஜஸ்ட் மேண்டாலிட்டி வாழ்க்கை இருக்கும்). இருபத்தி எட்டு வயதில், ஈசியாக மாபிள்ளை கிடைப்பார். ஆணடவன் அருளட்டும்.
தேனீ மாவட்டத்தில் ஒரு இருளர் குடும்பத்தில் பார்த்தேன், மிக்ஸ் and மேட்ச் என்பதை போலே, துணை தேடுவது சுலபம். பெண்களும் அதிகம் அவர்கள் விகிதாரத்தில். குகை மனித வாழ்க்கை. ஆனால் ஒரு குழந்தை பெற்று விட்டால், அவன் தான் சாகும் வரை காப்பாற்ற வேண்டும். அப்போது தான் கல்யாணம் காய்ச்சி எல்லாம்.
சில நேரங்களில் சில மனிதர்கள்.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment