Showing posts with label ஒரு நாள். Show all posts
Showing posts with label ஒரு நாள். Show all posts

Wednesday, July 22, 2009

சூரிய கிரகணம்

இன்று சூரிய கிரகணம் இந்தியாவில் சரியாக தெரியவில்லை என்றார்கள் டிவியில்.
(தினமலரில் வந்த புகைப்படம்... நன்றி... )

என் வாழ்க்கையில் இன்னுமொரு நாள் வந்தது... இப்போ பாதி நேரம் போனது...

ஆனால் இது ஒரு அற்புத நிகழ்வு கொடுத்த நாள்... இறைவனின் ( டிவையின் ) எனர்ஜி வந்த நாள்... சந்தோசமான நாள்...

குழந்தைகளுக்கு இந்தூர் பள்ளி ஒரு மணி நேரம் லேட்டாக தான் செல்ல வேண்டும் என்பதால் எனக்கு சில பூஜைகள் செய்ய வசதி.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து, பூஜா ரூமில் என் குரு படம் முன் அமர்ந்து மூல மந்திரத்தை 1008 முறை சொன்னேன். நல்லா மன அமைதி. நிறைய டிவையின் எனர்ஜி கிடைத்த சந்தோசம்.

இன்று மந்திர உச்சாடனை சொல்வது, ஒரு முறை சொன்னால் ஆயிரம் முறை சொல்வதற்கு சமம்... ஆயிரம் முறை சொன்னால் ஒரு கோடி முறை சொன்னதற்கு சமம்... மன அமைதி வேண்டுவோர், வரம் வேண்டுவோர் செய்ய வேண்டியது இது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டும் தான்! (வாரம் அல்லது மாதம் ஒரு முறை செய்யலாம்... )

***

பிறகு குளித்து விட்டு, சூடான இட்லி சாம்பார்!

மனைவி டிபன் எல்லாம் செய்து வைத்து விட்டு தான் வேலைக்கு பறந்துவிட்டார். .டி.கம்பெனியில் கிரகணமாவது ஒன்றாவது!

குழந்தைகளுக்கு இன்று ஒரு மணி நேரம் அதிகம் டிவி பார்க்க கிடைத்தால் முகத்தில் ஒரே பிரகாசம்! சில பள்ளிகள் இன்று விடுமுறை!

ஒவ்வொரு நாளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?