சிறிது காலம் முன், கடன் தொல்லையால் அவதிப்பட்ட மைகேல் ஜேக்சனும் மன அமைதியும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். முஸ்லிமாக மதம் மாறினார் என்று கூட ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். பெயரை கூட மிகாயீல் என்று மாற்றினாராம்!
ஐம்பது வயதிற்குள் இறந்து விட்டார். அமேரிக்கா நாகரிகம் போல, என்பது வயது நிச்சயம் என்ற அளவில் தான் இருந்தார் - அதுவும், கச்சிதமான எடை அளவு ( என்னை மாதிரி குண்டர்களுக்கு தான் இது பற்றிய அவஸ்தை தெரியும்! ) கொண்டு எப்போதும் ட்ரிம்மாக வாழ்ந்தார்....
அவர் நடன அசைவுகள், பெண்களை ( ஏன் ஆண்களை கூடத்தான் ) வெறுக்க வைக்கும் அளவு , தேய்த்துக்கொள்ளும் முறையில் இருக்கும்! என் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு இது வரை நான் அது ஸ்டையில் , நீங்க பண்ணாதீங்கோ என்று தான் கூறி வருகிறேன்.
மைக்கேல் ஜேக்சன் குழந்தைகளை துன்புறுத்தியதாக நிறைய வதந்திகள். சில காலம் முன் காசு கொடுத்து 8, 14 வயது பயன்களின் கேசை வாபஸ் பெற்றார்!
மைக்கேல் ஜேக்சன் இறந்த நியூஸ் பார்த்து எனக்கு என்னை அறியாமல் ஒரு பரிதாபம் வந்தது.
எப்படி இருந்த அவர், எப்படி ஆகிவிட்டார்!
கடைசி காலத்தில் நிறைய பேர், அதுவும், குருக்கள் மோடிவேசன் செய்கிறேன் என்ற வகையில்... டோனி ராபின்ஸ், தீபக் சோப்ரா போன்றோர், மில்லியன்களாக கறந்து அள்ளியுள்ளனர்! பக்ரையின் இளவரசரிடம் வாங்கிய ஏழு மில்லியன் ( என்ன பரிசு அது? ) டாலர்களை, கடன் அடைக்க மற்றும் குருமார்களுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
அப்புறம் எம்.சி.ஹேமர் என்ற ஒரு பாடகர் / டேன்சர் இருந்தார். அவர் தான் மைக்கேல் ஜேக்சன் டேன்ஸ் பழக காரணம் என்று சொல்லப்படுகிறது. போட்டி வேறு நடத்தலாம் என்று இருந்தார்களாம் ( 1992 )... வேலைக்கு சேர்ந்த புதிது, அமேரிக்கா சென்ற சமயம், நியூ யார்க்கில் பேட்டரி பார்க் அருகில் எல்லோரும் மைக்கேல் ஜேக்சன் ஸ்டெப்ஸ் தான் போடுவார்கள்.... ( கருப்பு இனத்தவர்கள்... ) நானும் மூன் வாக் முயற்சி செய்துள்ளேன். முடியலே!
அவர் "அமர ரஹே!".
இன்று விஜய் டிவியில் - இந்தியாவின் மைக்கேல் ஜேக்சன் - லைவ்வாக ஒரு ப்ரோக்ராம் செய்கிறார். " யார் அடுத்த பிரபு தேவா?" ...
சரி யார் அடுத்த மைக்கேல் ஜேக்சன்?
ஐந்து முகங்கள் – கடிதம்
12 hours ago