Showing posts with label தோணி. Show all posts
Showing posts with label தோணி. Show all posts

Thursday, August 28, 2008

தோனிக்கு கேல் ரத்னா விருது

தோனிக்கு கேல் ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய அப்பா வாங்குகிறார்.

என்ன அன்பு! என் மனம் குளிர்ந்தது.

நிச்சயம் இது திருவள்ளுவருக்கு பிடித்திருக்கும்.

சான்றோன் என்ற குறள், படிப்புக்கு பதில் விளையாட்டு என்று வாசிக்கவும். தாய்க்கு பதில், தந்தை.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
( குறள் எண் : 69 )
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.