எங்கள் வீட்டு அருகில் இருக்கும் குட்டை குளம் அருகே இருக்கும் ஷண்டியில் வாழும் ஒரு இராப்பிச்சைக்காரி , தினமும் காலை பூ விற்கிறாள்.
ஏன் இராப்பிச்சைக்காரி ? அவள் இரவுகள் இரந்து உன்னுவாள்.
தினம் காலை ஏழு மணிக்கு வந்து விடுவாள், பார்ப்பதற்கு படு சுத்தமாக இருப்பாள்...
இன்று காலை பூவிற்கு காசு கொடுக்கும் போது கேட்டேன்... (காசு உடனே வாங்கிவிடுவாள், கறார்... கடன் இல்லை...) ஏன் இரவல் பிச்சை எடுத்து உண்ணுகிறாய்?
*********
அவர் ஒரு ஜாமீன் பரம்பரை சேர்ந்தவளாம்... தும்கூர் அருகே..
அவர்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவனோடு காதல் வயப்பட்டு நகரத்திற்கு வந்துவிட்டாள், பதினெட்டு வயதில். குழந்தை இல்லை. இருபது வருட குடும்ப வாழ்க்கை, நல்ல வீடு, கணவன் எதோ வொர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தான்.
ஒரே ஒரு முறை, மீனாட்சி கோவிலில் (அவள் இருக்கும் இடம் அருகில் தான்) அவள் அப்பா அம்மாவை பார்த்தாளாம்... எதோ கட்சியில் இருக்கிறார்... பேரன் பேத்திகளுடன் வந்திருந்தாராம்... இப்போது தெரியவில்லையாம்..
அதனால் தான் அந்த கோவில் அருகே இருக்கிறாள். கணவன், இன்னும் தனியாக வயதான காலத்தில், வாழ்கிறான்.
இப்போது அவளுக்கு வயது அறுபது, நாற்பது என்று சொல்ல தோன்றும் ...
சரி ஏன் பிச்சை? அவர் அடுப்பு பற்ற வைப்பதில்லை. காலையில் பூ விற்கும் காசில் எதாவது உணவு. பிறகு கோவிலில் சென்று பூ விற்க, அபப்டியே எதாவது பிரசாதம் வந்தால், சாப்பாடு. வரும் வருமானத்தை, கணவனுக்கு கொடுத்து விடுகிறாள். இரவு மட்டும் நோந்துகிட்ட வேண்டுதலாம்... அதனால் பிச்சை.
எப்படியாவது அவள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் அவளை அழைத்து செல்வார்களாம் கூடிய விரைவில். நம்புகிறாள்.
அவள் கணவன் அவள் ஊரில் இராப்பிச்சைக்காரி
யின் மகன்.