எட்டேமுகாலுக்கு ப்ளைட் இறங்கிய நாங்கள், ஒன்பதேமுக்கால் மணிக்கு வீடு வந்தோம். மழையோடு பயணம். சில்லென்ற காற்று.
இதமான பயணம்... குழந்தைகள் ரொம்பவும் சந்தோசப்பட்டார்கள். ஜனவரியில் மீண்டும் சந்திப்போம்
.
இன்று காலை பேரூர் மற்றும் மருதமலை சென்று வந்தோம். விட்டது மழை. திரும்பும் வழியில், துணி பர்சேஸ். சூடான உணவு... நண்பர் வீட்டில். பிறகு ஏழு மணி வரை பேச்சு, அவர் குடும்பத்தோடு. ... ஏழு பத்துக்கு ஏர்போர்ட். எட்டு மணிக்கு ப்ளைட் கிளம்பியது. குலுங்கி குலுங்கி பெங்களூர் வந்து இறங்கினோம்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெயிட் லிமிட் 80 கிலோ. கொண்டு சென்றது 20 கிலோ. 60 கிலோ நல்ல அரிசி ராஜபோகம், எடுத்து வந்தோம். பெங்களூரில் கிடைப்பது கஷ்டம். கையில் எடுக்கும் விதமாக, மூன்று 20 கிலோ பிளாஸ்டிக் பேக்ஸ். உருப்படியாக வீடு வந்துள்ளது.
நல்ல பர்சேஸ். முக்கியம் குழந்தைகள் துணி... மறக்காமல், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா...
ஒரு சந்தோசம், எங்களோடு ஐ.ஐ.எம் மில் படித்த ஒருவர், இப்போது தாத்தா ஆகி உள்ளார். சந்தோசம் சுவாமிநாதன். சென்ற வருடம் தான் அவர் மகளுக்கு கல்யாணம். வாழ்த்துக்கள்.
அதற்குள், நண்பர் ஒரு பதிவு போட்டுவிட்டார்.... சில வரிகள்
காரிலேயே டைப் செய்தேன். மேரு டாக்சி பரவாயில்லை. 080 44 22 44 22.
ஐந்து முகங்கள் – கடிதம்
9 hours ago
1 comment:
இளம் வயதில் தாத்தா! வாழ்த்துக்கள், சுவாமிநாதன்.
Post a Comment