Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, June 18, 2009

வாழ்க்கை

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

97 வயது மகிழ்ச்சி

மிகவும், அருமையான பதிவு!

நன்றி...

Thursday, October 23, 2008

ஒற்றுமையான வாழ்க்கை

ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை என் நண்பரோடு ஒரு வாக்குவாதம் நேற்று இரவு.

இந்தியர்களும் ஒவ்வொரு இடத்தில் வேறு வேறு கொள்கை வைத்துள்ளார்கள். எனக்கும் அது தான் தோன்றுது.

இந்தியாவில் ஒரு மாதிரி பேசுவார்கள். வெளிநாடு போய்விட்டால்.... அதுவும் திரும்பி வந்து விட்டால்...பெருமை நம்ம ஆட்களுக்கு கை வந்த கலை! வெற்றி கொடி கட்டு படம் வடிவேல் ஞாபகம் இருக்கா?

காவேரி பிரச்சனை வைத்து கன்னடம், தமிழ் என்ற பாகுபாடு!

வேலை
பிரச்சனை வைத்து மராட்டி, பிஹாரி பாகுபாடு!

தேவையா?

ஒரு தாய்நாடு என்ற எண்ணம் வேண்டும். லோகல் ஆளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்ல விஷயம்.

இப்போது பெங்களூர் புது ஏர்போர்டில், லோகல் கிராமம் ஆட்களுக்கு தான் முத்தலில் வேலை என்ற கொள்கை. நான் ஒரு டாக்ஸி எடுத்தேன், அந்த டிரைவர் சொல்கிறான், இவ்வளவு ஆயிரம் கொடுத்து ப்ளைட்டில் போகிறீர்கள், எலிகளுக்கு பணம் கொடுக்க கூடாதா? வேலை செய்து சம்பாரிப்பது எதற்கு என்றேன். ஒன்றும் சொல்லவில்லை அவன். கேள்வி கேட்டதால், நான் கொடுக்கும் இருபத்து ருபாய் டிப் போனது அவனுக்கு. யாருக்கு நஷ்டம்?

தமிழ்
ஆள் கன்னடகாரனை திட்டினால் வெட்டிடமாட்டானா பெங்களூரில்?

அதே ஒரு கன்னடக்காரன் தமிழ் ஆளை சென்னையில் திட்டினால்?

அதனால் ஒற்றுமையான வாழ்க்கை எல்லோருக்கும் தேவை.

ஒன்று பட்டு வாழ்வோம் நன்மை செய்வோம்.

Friday, October 10, 2008

செல்போன் இல்லாத வாழ்க்கை

செல்போன் இல்லாத வாழ்க்கை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.

அது இருப்பதால் என் தொழில் ஓடுது... எங்கிருந்தாலும் கால் எடுக்கலாம்... (பாத்ரூம் தவிர...)

எனக்கு இன்டர்நெட் வேணும்... பாட்டு வேணும்.

கார்லே போகும் போது சைலென்ட் மோட்.

அப்புறம் சினிமா தியேட்டர். மிஸ்ட் கால் பார்த்து கூப்பிடனும்.

அப்புறம் வருஷம் ஒரு புது போன் வாங்கணும்.

Friday, September 5, 2008

உண்டி சுருங்குதல்

உண்டி சுருங்குதல்
பெண்டிற்கு அழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

பெருத்து பிருஷ்டமும்
இடை அழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

கச்சிதமான தாமரை மொட்டு
கொங்கழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

பெண்ணுக்கு
உண்டும் என்ன பயன்?
உண்ணாமல் என்ன பயன்?
அளவோடு உண்டு வாழும் வாழ்க்கை
வாழ்கைதான்.


உண்ணாமல் இருக்க முடியுமா?