Friday, October 17, 2008

இன்டெர்நெட்டை புறக்கணியுங்கள்

இன்டெர்நெட்டை புறக்கணியுங்கள் ... நிச்சயமாக...

ரொம்ப தொல்லைங்க! வேலை பார்க்க முடியலைங்க!

தூக்கம் வருது.. இருந்தாலும் கட்டிக்கிட்டு அழறேன்!

இன்டர்நெட் இல்லது உலகம்... சூப்பர், தேவையில்லா மொக்கைகள் இல்லாமல் இருக்கும்!

ரேடியோ மட்டும்.. அஹா... நினைக்கவே சுகம் ...

(யாராவது முயற்சி பண்ணி, இந்த ஷடேலைட், அண்டேர்க்ரவுன்ட் ஸீ கேபிள் எல்லாம் கொஞ்ச நாள் நிறுத்துங்க! வீட்டு பக்கம் வந்தால், நம்ம நண்பர் ஒருத்தர் ஆயுதம் கொடுப்பார் ...)

தூக்கம் வருது, நாளைக்கு கொஞ்சம் பார்க்கலாம்..

வெளிநாடு நண்பர்கள், கொஞ்சம் நம்ம கதை எல்லாம் நல்ல படியுங்க.

ஒன்னு ரெண்டு சினிமா எடுக்கலாம்னு சொல்லுங்க?

தொடர்ந்த பதிவு மாற்றங்கள்

தொடர்ந்த பதிவு மாற்றங்கள்... பெரிதாக ஒண்ணுமில்லே!

எனக்கு 12,000 ஹிட்ஸ் வந்தது, அப்போ பார்க்க மறந்துட்டேன்!

அப்புறம், ஏன் மத்தியானத்தில் இருந்து போஸ்ட்ஸ் போடலே?

கொஞ்சம் ரெஸ்ட். சில கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

போஸ்ட்களின் தரம் குறையாமல் இருக்கு இது ஒரு வழி. நன்றி.

படித்து பயன் பெறுக.

நன்றிகள்

நான் ப்லோக் படித்து, கமண்ட்ஸ் மட்டும் போட்டேன் சில வருடங்கள். அப்புறம் தான் ப்லோக் ஆரம்பித்தேன். ஒரு போஸ்ட் போட அரை மணி நேரம் ஆகுது...

தமிழ் தெரியாத நான் (தாய்மொழி, திங்கிங் இன் மராட்டி) பரிசல்காரன் எழுத ஒரு தூண்டுகோல். அவருக்கு நன்றிகள்.

சில கமன்ட்ச்கள் நான் போட்டது, அங்கே இங்கே ... ஒரு பதிவு இப்போ.

அப்புறம், நான் மறக்க கூடாத தமிழ் வாத்தியார் ஜ்யோவ்ராம் சுந்தர். அவருக்கு ஸ்பெஷல் நன்றிகள். அவர் எழுத்துக்கள் வாசித்து ஒரு தமிழ் நடை கிடைத்தது!

கொஞ்சம் ப்லோக்கிங் செய்வது எனக்கு ஒரு பிரேக்.

ஒரு திரைக்கதை வாய்ப்பு. ரொம்ப டைம் வேணும் அதுக்கு. என் தொழில் மூலம், கிடைக்கும் ஒரு வார சம்பளம், ஒரு மாதம் செலவு செய்து எழுத வேண்டும். எந்த மொழி, எந்த படம்? சொல்லமாட்டேன்.

ப்லோக்கிங் மூலம், காசு ஒன்றும் வரவில்லை. எதோ சில கிறுக்கல்கள். மனுசு திருப்தி. ஒரு பைசா பிரயோஜனம் இல்லை.

என்ன திருடர்கள் என் கதையை திருடிவிடாமல் இருக்க வேண்டும். ப்ளோகில் டைம் ஸ்டாம்ப் போட்டு ரெகர்ட் உள்ளது. எவனாவது கதையை சுட்டால், அவர்கள் தீர்ந்தார்கள்! (விஜயகாந்த் டயலாக் மாதிரி மனதில் நினைத்து கொள்ளுங்கள்!)

தினம் ஒரு போஸ்ட் போடணும்.

12000 ஹிட்ஸ்

சிறு சிறு சந்தோசங்கள், வாழ்க்கையை ஒட்டுகின்றன! ப்லோக் எழுத ஆரம்பித்து அறுபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன! நான் ப்லோக் தொடங்கியதற்கு இன்ஸ்பிரேசன் பரிசல்காரன்! (KB கிருஷ்ணா குமார்) நன்றி அவருக்கு! அவர் பதிவுகள் விடாமல் வாசித்து தான், நானும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது!

என் தமிழை மேம்படுத்த முயற்சி எடுக்க வைத்த என் புது தமிழ் வாத்தியாருக்கும் நன்றி!

கடந்த் இரண்டு நாட்களில் அதாவது சுமார் நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் ஆயிரம் வாசகர்கள்! நன்றி! நன்றி!

இப்போது 12000 ஹிட்ஸ்.

ஆயிரங்கள் வரும் போகும், ஆனால், அந்த வேகம் மெய் சிலிர்க்க செய்கிறது!

என்ன ஏதோவொன்று, இருபத்தி இரண்டு பதிவுகள் இந்த சமயத்தில்... டைம் இருக்குது!

Son, I don't wish for material satisfaction, to a limit!

சாப்பாட்டு ராமன்

Image: Brad Sciullo

பிலேதேல்பியாவில்
ஒருவர் சுமார் ௨0.௨ பவுண்ட் பர்கர் சாப்பிட்டார்.. ஐந்து மணி நேரத்தில்.. இது ஒரு நிஜ விளையாட்டு! (ஒன்பது கிலோ)

சரி எதற்கு சாப்பிட்டாராம்? சும்மா தான்...

அவருக்கு வயது 21. 5 அடி 11 இன்ச் உயரம் 80 கிலோ எடை.

பரிசு? 400 டாலர்கள், மற்றும் மூன்று டி ஷேர்ட்ஸ் அப்புறம் சாதனை சர்டிபிகேட்.

பரிசல்காரனும் பதிவுபோதையும்

பரிசல்காரனும் பதிவுபோதையும் , அலெக்ஸ்காவில் இருந்து சில விவரங்கள்

இது சும்மா டைம்பாஸ் மச்சி!

ரொம்ப
போர் அது தான்!

ஒரு
மாசம் கழித்து இதே மாதிரி வேறு ஒருவருடன் ஒரு போஸ்ட்!

மலேசியா, Other Countries நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். ;-)

எல்லோருக்கும் மிகுந்த நன்றிகள்!

கொடுமை

வாழ்க்கை ஒரு கொடுமை
அதை வாழ்வது மிக கொடுமை
கிடைப்பது தனிமை
நிறைவில்லா வெறுமை

தேடுவது புதுமை
நல்ல இனிமை
வேண்டுவது பொறுமை
பேசுவது அருமை

கேட்டது கிடைக்கவில்லை
பொழுதும் நிலைக்கவில்லை
போகவில்லை வறுமை
இது என்ன கொடுமை!

தமிழ்நாடு ஸ்ரீலங்கா ஒரு சர்வே


இந்த சர்வே படித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

யாரையும் திட்டியோ, மனம் புண்படுத்தவோ இதை எழுதவில்லை.

எல்லோரும் வாழ்க வளமுடன்.

காப்பி குடிச்சாச்சு!

காலை எழுந்து இப்போ தான் வாக்கிங் போயிட்டு வரேன்.

குளிச்சுட்டு கம்புடர் முன்னாலே உட்கார்ந்து மெயில் செக்.

அப்புறம் ப்லோக் செக்.

எட்டு மணி ஆக போறது. குழந்தைகள் ஸ்கூலுக்கு ரெடி.

டிபன் சாப்பிட போகணும்.

லெமன் சாதம். தயிர் பச்சிடி.

அதை செய்வது பற்றி ஒரு சமையல் குறிப்பு...

சாதம் வைத்து விடுங்கள். இரண்டு லெமன் வேண்டும் , நான்கு பேருக்கு. அதை ஸ்குவீஸ் செய்து ஜூஸ் எடுத்து வையுங்கள். சத்தத்தில் குழப்பி வையுங்கள்.

கொஞ்சம் வெங்காயம், கடலை பருப்பு மற்றும் நில கடலை போட்டு தளிப்பு செய்து, கொஞ்சம் மஞ்சள் போட்டு, மிக்ஸ் செய்து விடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள்.

லெமன் சாதம் ரெடி.

தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர் பச்சிடி அல்லது தேங்காய் சட்னி தான் சரி.

*****

சில சமயம் வாழ்க்கை இப்படி தான் போகிறது.

வேண்டியது கிடைப்பதில்லை!

இருப்பதை வைத்து ஓட்ட வேண்டியது தான்!

அப்புறம் ஒஜே சிம்ப்சன் என்ற அமேரிக்கா கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கை பற்றி படித்தேன்.

அவர் எழுதியே நான் செய்திருந்தால்... என்ற பத்தகம் விற்பனைக்கு வந்ததா தெரியவில்லை.

இப்போது வெளியே வர முடியாத அளவில், ஒரு கேஸ். திருட்டு கேஸ். அவருடைய விளையாடடு பரிசுகள் யாருக்கோ விற்றுள்ளார். அதை துப்பாக்கிவைத்து ஆட்களுடன் திருட முயற்சி வழக்கு. திருந்தவில்லை. எப்படியோ குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்து, ஒரு வழி செய்துவிட்டார்.

தெய்வம் நின்று கொல்லும்!

Thursday, October 16, 2008

டின்னெர் சாப்டாச்சு!

டின்னெர் சாப்டாச்சு!

வெளியே சென்றோம். இட்லி சாம்பார்! மழை காலத்தில் இது ஒரு அற்புத உணவு.

தொல்லை இல்லாத சமாச்சாரம்.

குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஓர் ஐடம்.

என்ன ஹோட்டலில் கொடுக்கும் தண்ணீரை பார்த்தால் தான் பயமாக இருக்குது.

பக்கத்தில் ஒரு டாய் கடை. மகன் சண்டை போட்டு ஒரு ரவ்லட் செட் வாங்கினான்.

இந்த மாதிரி விசயத்தில் பெண் குழந்தைகள் கொஞ்சம் குறைவான லூட்டி.

எங்கள் ஏரியாவில் ஒரு புது சிக்னல் போட்டுள்ளார்கள். அதை மறந்து எப்போதும் போல ஓட்டுகிறார்கள் மக்கள். :-(

கொடுமை. திருந்தமாட்டார்கள்!

இரவு தூக்கத்தை கொண்டு வருகிறது...

டீ குடிச்சாச்சு !

இப்போதுதான் கஷ்டப்பட்டு ஒரு கப் பாலில் கொஞ்சம் சக்கரை சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்து, டிப் டிப் டீ போட்டு.. ஆற்றி...

டீ குடிச்சாச்சு!

டீ செய்வது எப்படி?

இந்த பதிவை பாருங்கள்...

வந்தாச்சு அவன் விகடன் (21 Nov 05)

டீ குடிச்சப்புறம், எதாவது ஸ்நக் சைடில்...

பஜ்ஜி செய்வது எப்படி?

இருநூற்றி ஐம்பதாவது பதிவு

இது எனது இருநூற்றி ஐம்பதாவது பதிவு ... நன்றிகள்...

வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

11,500 ஹிட்ஸ்.

எல்லாம் குறைந்த நாட்களில்.

மகிழ்ச்சி!

**********************************

தேடுவதெல்லாம் கிடைக்காது
நீ
தேடிசெல்வது தான் கிடைக்கும்
நினைப்பதெல்லாம்
நடக்காது
நீ
நினைப்பதை நடத்தி காட்டு!

ஹேமாமாலினிக்கு அறுபது வயது

ஹேமாமாலினிக்கு அறுபது வயது இன்று. நம்ப முடியவில்லை! என் அப்பாவின் கனவுக்கன்னி.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அபார்த்மன்ட் ஆண்டி போல தான் இருக்கிறார். வயது தெரியவில்லை.



தர்மேந்திராவிர்க்கு அவர் இரண்டாவது மனைவி.

இரண்டு பெண் குழந்தைகள். ஈஸா தியோல் மற்றும் அஹானா தியோல்.

வீடு மாற்றல் ஒரு கதை

எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ஒரு புது பதிவு....

கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி

அவர் வீடு மாற்றும் அனுபவத்தை சொல்லியுள்ளார். அழகான பதிவு. அடிக்கடி நடக்காத விஷயம், ஆனாலும் தினம் நாம் கேள்வி படுவது!

எழுத்து என்பது எந்த விசயத்தையும் சொல்லும் விதம் தான் என்பதை அருமையாக கூறுகிறார்.

சென்னையில் நான் முதலில் வேலை செய்த போது இருந்த வீடுகள், புறா கூடுகள்.

நான் அரசாங்க வேலையில் சென்னை வந்த புதிது, க்ரீன்வய்ஸ் சாலையில் ஒரு வீடு கொடுக்கப்பட்டது. பெரிய அரசாங்க வீடு. எனக்கு தேவையான ஒன்றும் பக்கத்தில் இல்லை. நண்பர்கள் வீட்டிற்க்கு இரவு அல்லது விடுமுறையில் கழியும். எனக்கு பிடித்தது இப்போது அம்பேத்கர் பார்க் மட்டும்... அருமை.

அதன் பிறகு கல்யாணம், மனைவி, குழந்தைகள் என செட்டில் ஆன சமயம்...

அதற்க்கு ஒரு மிக பெரிய பதிவு போட வேண்டும்.

நினைவுகள் அசைபோடுகிறேன்.

நான் கண்ட குறுந்தொகை

குறுந்தொகை என்றாலே தலைவனும் தலைவியும் தான் வருகிறார்கள்..

ஒரு த்ரீ டைமேன்சனால் அவுட்லூக் இருக்கும்...

பிரிந்த த்யரம்.. குழந்தைகளின் ஏக்கம்.. பணம் திரைகடலோடி தேடி வருவான் என்ற ஆதங்கம், சொல்லி தீராது அந்த வலியின் உணர்ச்சிகள்.

காதலின் நினைவுகள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் சுற்றியே அமைந்துள்ளன.

அந்த காலத்தில் டி காப்பி ஷாப்கள் இல்லை காதலின் பாடம் படிக்க...

டிஜிட்டல் டைரி எழுதி நினைவுகள் தக்க வைத்துக்கொள்ள...

ஒரு சிறு உதாரணம் இங்கே...

காமம் காமம் என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்

முதைசுவல் கலித்த முற்றா இளம்புனம்

மூதா தைவந்தாங்கு

விருந்தே காமம் பெரும் தோளோயே.


வேண்டியவள் அருகில் இல்லாவிட்டாலோ, கிடைக்காவிட்டாலோ அன்பு நோயாகி ... தனிமை தேடும் மனது.. தீர்வு மருந்தல்ல, அரவணைப்பு தான்.

இந்த குறுந்தொகை பாடலில் காமத்தை அன்பு என்று பொருள் படும்படி வாசித்தேன்!

காதலின் விதி

பதுங்குகிறாள் காதலி பயத்தோடு
நெருங்குகிறான் காமுகன் வெறியோடு
தொடுகிறான் அவளை உடல் பசியோடு
மயங்குகிறாள் அவள் முழு மனதோடு

அன்பும் பாசமும்
அறிவியல் நுணுக்கமும்
பண்பும் பயனும்
மனதில் மிகுந்தோட

சல்லாபத்தின் உச்சியில்
சரச நடனங்கள் செல்ல
உல்லாசபுரியில் உவமைகள்
உடலோடு நடனம் நடத்த...

இது தான் காதலின் விதியா
கல்லில் செதுக்கிய கட்டளையா?

ஒரு ருபாய் கதை

இந்த கதையின் நாயகன் பிச்சைக்காரன் அல்ல, சிவாஜி படம் ஹீரோவும் அல்ல.

நாயகன் விஜய் தினமும் பஸ்சில் செல்லாமல் நடந்து தான் பள்ளி செல்வான். பஸ்சுக்கு காசு தினம் ஒரு ருபாய். அந்த காலம்.

அவன் அப்பா சந்தை வியாபாரி. வாரம் சில நாட்கள் சந்தை. அப்புறம் ஊரில் கூலி வேலை. அம்மாவிற்கு தோட்டத்தில் வேலை.

அரை மணி நேரம் நடை. என்ன வெயிலுக்கு ஒரு கப். மலைக்கு குடை. நேர்வழி. சந்தோசமான நடை பயணம். வழியில் செல்லும் மாடுவன்டிகளும், சில சமயம் கட்டாயமாக அழைத்து செல்லும் முருகு மாமாவும்.. அவன் நினைவில்.

தினமும் அந்த ஒரு ருபாய் சேர்த்து வைப்பான் உண்டியலில். ஊரில் சனி காலை சந்தை செல்வான். சனி ஞாயிறுகளில், விளையாட செல்லும் இடங்களில் ஒரு கூடை நிறைய கொய்யா, மாங்காய் போன்ற பழங்கள், மிட்டாய்கள் விற்பான். நண்பர்கள் இவன்டியாம் தான் வாங்குவார்கள். சந்தோசம்.

லாபம் வந்தது. மிகுதி ஆகும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பான். அவர்களுக்கு சந்தோசம். தங்கை ஒருத்தி. அன்பானவள். இந்த வியாபாரத்திற்கு சிறு உதவி செய்வாள். பேபர் கட் செய்து கொடுப்பாள்.

நாட்கள் சென்றன. அவனும் நன்றாக படித்தான். சம்பாரிக்கவும் செய்தான்.

பத்தாம் வகுப்பில் தேறியவுடன், அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. காசு இருந்தது என்றாலும் தினமும் நடை தான். உடல் பயிற்சி. மன வலிமை கொடுத்து என்றான்.

சேர்த்த பணத்தை, ஊரில் இருந்த ஒரு சிறு வங்கியில் போட்டான். போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டான். பணம் வளர்ந்தது.

நன்றாக படித்தான். ஸ்காலர்ஷிப் வந்தது.

அப்போதும் அந்த சிறு வியாபாரம் தொடர்ந்தது.

சுமார் பத்தாயிரம் ருபாய் அளவு நான்கு வருடங்களில் சேமித்து விட்டான்.

படிப்பு நன்றாக வந்தேதால், வாத்தியார்கள் ஊக்குவித்து, எஞ்சினீரிங் செல் என்று சொன்னார்கள். அவனுக்கு அவன் ஊர் அருகிலேயே இடம் கிடைத்தால் தேவலாம் என்று இருந்தது. சென்னையில் தான் கிடைத்தது. நல்லது தான், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும்.

பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல், அவன் சேர்த்து வைத்த பணம் மற்றும்
ஸ்காலர்ஷிப் மூலம் படிப்பை முடித்தான். வேலையும் பிடித்தான்.

படி படியாக முநீரி, இன்று சென்னையில், பதினைந்து வருடங்கள் கழித்து, ஒரு பெரிய நிலையில், தொழில் செய்து வாழ்கிறான். அப்ப அம்மாவை, நன்றாக வைத்து பார்த்துக்கொள்கிறான். அவனோடு படித்த ஒரு பெண்ணை காதல் மனம் புரிந்தான்.

அவன் தங்கைக்கு நல்ல முறையில், படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.

அவன் ஊரில் இருக்கும் நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்கிறான்.

இதற்க்கு அவனுக்கு தினம் கிடைத்த ஒரு ருபாய் தான் காரணம்!

*****
ஒரு ரூபாயால் ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. என் நண்பர் ஒருவர் சொன்ன உண்மை சம்பவம் இது. 1980 களில் நடந்தது. நானும் இந்த கதையை, 1987 சமயம் ஐ.ஐ.டியில் படிக்கும் போது கல்லூரி ஹிந்தி மாத இதழில் எழுதியுள்ளேன்.

எழுத்தாக்கம்

மொழி தெரியாதவன் எழுதினால்
அதை எழுத்தாக்கம் எனலாம்
கவிதை நடையை அங்கீகரிக்கலாம்
கதைகளை ரசிக்கலாம்

அறியாதவர்களுக்கு கோடிட்டு காட்டலாம்
அறிந்தவர்களுக்கு பாராட்டு சொல்லெலாம்
நண்பர்களுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்
குசும்பர்களுக்கு ஒரு குட்டு கொடுக்கலாம்

உணவு கவிதையாகாது
உணவில்லாதவன் எழுதும் வரை
எழுத்து எழுத்தாக்கம் ஆகாது
மொழி அறியாதவன் எழுதும் வரை!

தீபாவளி நன்கொடை

தீபாவளி நன்கொடை என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்கள்.

எங்கள் அபார்த்மன்ட் தொத்தல் வத்தல் வாட்ச்மன், சிரித்து சல்யுட் அடிப்பது தமாஸ். நைட் டுடி இன்னொருவர். அப்புறம் கரண்ட் ஆள், கூட்டுபவர், போஸ்ட்மன்...

பதினாறு வீடுகளில், அசொசியாசன் மூலம் ஒரு மாதம் சம்பளமும் (மூன்றாயிரம் ) நாங்கள் எல்லோரும் சேர்ந்து சுமார் மூன்றாயிரம்+ ஒருவருக்கு கொடுப்போம்.

இன்று காலை, வட்ச்மன் வந்து சொன்னார். இந்த வருடம் விலைவாசி ஜாஸ்தி, மொத்தம் போனஸ் பத்தாயிரம் வேண்டும் என்றார். கொடுக்கலாமா? இருவர் இருக்கிறார்கள். சம்பளம் முன்னூறு ருபாய் ஜாஸ்தி செய்ய வேண்டும்.

அபர்த்மன்ட் மைண்டனன்ஸ் ஒரு மாதம் ஆயிரத்து ஐந்நூறு போல வருது. அதை அடுத்த மாதம் முதல் நூறு அதிகம் செய்ய வேண்டும்.

இரண்டு வேலைக்காரிகள், சென்றது ஒரு ஐந்நூறு (சேலை+ பணம்), வாட்ச்மன்களுக்கு ஐந்நூறு+. தனியாக பட்ஜெட்டில் ஆயிரம் கூடுகிறது.

எனக்கு இந்த வருடம் தீபாவளி டிரஸ் ஒரு ஷர்ட் போதும். பல முறை அது இதுஎன்று துணி எடுத்தேன்.

வீட்டில் மனைவிக்கு ஒரு இரண்டாயிரம் லெவெலில் சுடிதார். குழந்தைகளுக்கு மூன்றாயிரம் ஆகும்.

ஆக மொத்தம் இந்த வருடம் பத்தாயிரம் செலவு. சென்ற வருடம் போல. பரவாயில்லை?

கடைசியில் பார்த்தால் என் டவுசர் காலி! (வாங்கலே!)

வசந்த காலங்கள்

மனிதனுக்கு வரும்
வசந்த காலங்கள்
சோகங்கள் விலகும்
இசைக்கும் கோலங்கள்

கண்களில் இல்லை
கனா காணும் காலங்கள்
நெஞ்சினில் நிற்பது
பார்வையின் மோகங்கள்

தொழிலில் இருப்பது
சனதான தர்மங்கள்
விருப்பம் வேண்டுவது
ஏகத்தின் போகங்கள்

ஜாதி மதம் ஒழிக்கின்றன
வளரும் நாடுகள்
ஒரு மனதாய் நீங்கள்
பங்கு பெறுங்கள்

Wednesday, October 15, 2008

பரிசல்காரனின் சிந்தனை சின்னசாமி


சிந்தனை சின்னசாமி

இப்போதெல்லாம் சில கார்களில் வண்டிபின்னோக்கி வரும்போது போடப்படும் மியூசிக்காகசாரே ஜஹான் ஸே அச்சா'வையோ, 'வந்தேமாதர'த்தையோ பயன்படுத்துகிறார்கள். போயும்போயும் பின்னோக்கிச் செல்லத்தானா இந்தப்பாடல்களைப் பயன்படுத்துவது? அதுவும் தவிர, இதுபோன்ற தேசபக்திப் பாடல்களைக் கேட்டால்இருந்த இடத் திலேயே அட்டென்ஷனில்நிற்கவேண்டுமென்று காருக்குப் பின்னால்இருப்பவர் நின்றுவிட்டால் என்னாவது? மாத்தியோசிங்கப்பா!

ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய தலை வரைப் பற்றிப்புகழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.

''உனக்கு ஏண்டா அவரைப் பிடிக்கும்?'' என்று கேட்டேன்.

''அவர் ஒரு தடவை சொன்னாரு... அடிமைத் தளைகளைஉடைத்தெறிவோம்னு. அதிலிருந்து அவரோட கொள்கைக்கு நான்அடிமையாய்ட்டேன்!''

''அதுசரி!''

துணிக்கடையில் பேன்ட் கேட்டால் இப்பொதெல்லாம் குறைந்தது ஆறுபாக்கெட்டுக்குக் கம்மியாக இருக்கும் பேன்ட்களே இல்லை போல! Ôகார்கோ... பூர்கோÕ என்று மிரட்டியெடுக்கிறார்கள்.

''ஏம்பா... எல்லா பேன்ட்லயும் இவ்வளவு பாக்கெட் இருக்கே... பாக்கெட்கம்மியா...''

முடிக்கும் முன் கடைப் பையன் கேட்டான்... ''பாக்கெட் கம்மியா இருக்கறதுவேணுமா, பாக்கெட்டே இல்லாதது வேணுமா?''

''பாக்கெட்டே இல்லாததா..?''

''ஆமா. வேஷ்டி. அதான் பாக்கெட் இல்லாம இருக்கும்.''

எங்கப்பா, முப்பது வருஷத்துக்கு முன்னாடி சொன்னதுதான் ஞாபகத் துக்குவந்தது. 'வர வர இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்களை மதிக்கறதேகிடையாதுப்பா!'

பீர் மட்டுமே குடிக்கும் பழக்கமுடையவர்கள் 'ஹாட் அடிக்க மாட் டேன்'

என்று சொல்வதுண்டு. அது ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ் அல்ல. ஹா(ர்)டு (HARD) ட்ரிங்க்ஸ்.

பெப்சி, கோக் சாஃப்ட் ட்ரிங்க்ஸ்.

காபி, டீ ஹாட் (HOT) ட்ரிங்க்ஸ்.

மது வகைகள் ஹா(ர்)ட் ட்ரிங்க்ஸ்.

இனி சியர்ஸ§க்குப் போகும்போது கரெக்டா சொல்லுங்கப்பூ!

கேரளாவில் புதிய கல்வித்திட்டத்தின்படி, இந்த ஆண்டு முதல், காலாண்டுத்தேர்வு இல்லையாம்! அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள்தானாம்! இதைச்சொல்லி, ''நீ கேரளாவுல படிச்சிருக்கலாம்னு தோணுதா?'' என்று ஒருசிறுவனிடம் கேட்டபோது.. ''இல்லை...'' என்றான். புரியாமல், 'ஏன்டா அப்படிசொல்றே?'னு கேட்டேன். ''எக்ஸாம் இல்லைன்னா, லீவும் இருக்காதுல்ல?'' என்றான் அவன்!

'சாப்பிடும்போது பேசக்கூடாதுடா. உடம்புல ஒட்டாது'-ன்னு எங்க அம்மாசொல்லுவாங்க. ஆனா, சாப்பிட ஹோட்டலுக்குப் போனப்ப ஒருத்தர்பாக்கியில்லாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க. 'என்னகொடுமையான இரைச்சல்டா இது'ன்னு வெளில வந்துதான் செல்போன் பேசவேண்டியதா போச்சு!

*****

மேலே உள்ளவை இரண்டு இடத்தில் சுட்ட வடை.

( நல்ல முயற்சி பரிசல்காரரே... காபிரைட் உங்களுது தான்!)

பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!

நல்ல தமாஸ்

பார்த்து பயன் பெறுங்கள்! நன்றி!

கொலம்பியா

கொலம்பியா நாட்டைப்பற்றி எவள்ளவு எழுதினாலும் தீராது. நிறைய சினிமா (ப்ரோப் ஆப் லைப் என்று ஒரு படம், ஆள் கடத்தல் தொழிலை கருவாக வைத்து, அந்த நாட்டை கண் முன் வைத்தது. இப்போது ஒரு ஹெலிகாப்டரில் ஒரு பெண் தப்பி வந்தார், மாபியாவின் கண் முன்னாள்.)

தென் அமேரிக்கா நாடு அது.



அந்த நாட்டின் உயிர் மூச்சு - போதை மருந்து. வேலையில்லா திண்டாட்டம் அதற்க்கு தூண்டுகிறது. போதை மருந்து கடத்துவது நிருத்தமாட்டார்களா?

கோல் அடிக்காத கால்பந்து வீரனை சுட்டுக்கொன்றனர் சிலர் அங்கு.... விளையாடடு வெறி.

அமெரிக்காவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் வெனிஜுஹலா நாடு அருகில் தான்....

அதிகம் அங்கு உயிர் பலி... கேங்க்... வார்லோர்ட்ஸ்.

மஹாத்மா காந்தி காட்டிய வழி அங்கு செல்லாதா?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

பிருந்தாவனம் உலகில் தான்
கோட்டைகள் பலவுண்டு
கொடிய நாகம மாமன் உண்டு
வீட்டிலேயே பகையுண்டு

கம்சா நீ தீர்ந்தாய் என்றாய்
ஒரு தினத்தில் கொன்றாய்
வான வேடிக்கைகள்
வாழ்க்கை சாஸ்திரங்கள்

பாகவதம் அருளினாய்
பிறப்பதால் ஒரு நன்மை என்றாய்
வாழ்ந்து பார்த்திவிடு, வளங்கள் பெற்றுவிடு
இது நீ சொன்ன கீதை

நல்லவை நன்மையாக
நடக்கும் என்றாய்
கலியுகத்தின் பாரம்
பாவங்களை ஏற்றாய்

ஆயர்பாடி கோபிகைகளுடன்
ஆட்டம் போட்டாய்
ராதை என்று ஒருவள்
வந்தவுடன் அடங்கி நின்றாய்

கவலை என்றால் கண்ணா தான்
அன்பு என்றால் கண்ணா தான்
ஆசை என்றால் கண்ணா தான்
உதவி என்றால் கண்ணா தான்

இனி நீங்கள் கண்ணா இல்லை
வாழ்க்கையில் கீதை சொல்லும்
பாகவதன் என்றாகி
இனி நந்தகுமாரனும் தான்!

எரிச்சல்

தொட்டதற்கெல்லாம் எரிச்சல் வேண்டாம்
வயதான காலத்தில் நல்லதில்லை
தேவையில்ல உடல் பிரசனைகள்
வேண்டாத வீண் வினைகள்

சிறு வயதில் அம்மாவிடம் அடி
பாகற்காய் கசக்குது என்றதற்கு
மனைவி திட்டுகிறாள் இன்று
பாகற்காய் தின்று நெஞ்சை காப்பாற்று!

பாவம் செய்திருக்கவேண்டும்
பாகற்காய் தின்ன...
பிடிக்காத ஒரு காய் மருந்தாகிறது
நெஞ்சினிலே கொஞ்சம் உரமாகிறது


ஒரு அடி ஏறினால் மூன்று அடி சறுக்குவது
மனித வாழ்கையின் நியதி
புரிந்து விளையாடி தான் பாருங்கள்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாடடு!

இளமை கொஞ்ச நாள் தான்
முதுமை அதிக நாள் இருக்கும்
பழையது நினைத்து பழையது உண்டு
ஜீரணித்து வாழ்வது வாழ்க்கை!

11000 ஹிட்ஸ்


11000 ஹிட்ஸ் இப்போது தான் வந்தது, சுட்டிய காட்டிய திவ்யாவிற்கு நன்றி!

எல்லா வாசகர்கும் நன்றி.

கொஞ்ச நாளா கொஞ்சம் கம்மி ஹிட்ஸ்.

ப்லோக் உலகம் நல்ல தான் இருக்கு.

என் மகன் கேள்விக்கு என்ன பதில்?

Son, I like you more than you like me, da!

பரிசல்காரனின் சந்திப்புகள்

ரொம்ப நல்ல எழுதறார்! இது இரண்டாம் பாகம். இன்னும் வரும்!

பரிசல்காரனின் சந்திப்புகள் அப்பிடின்னு ஓர் தனி ப்லோக் போடுங்க!

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்

நன்றி.

அப்புறம், அவருக்கு உறுதுணை ஆக இருந்த நண்பர் வெயிலானுக்கும் நன்றி.

அதிஷாவின் இந்த கட்டுரையும் படிங்க பரிசல்காரனுக்கு வாழ்த்துக்கள்...!!

எழுத்தாளர் பரிசல்காரன் சிந்தனை சின்னசாமி வாழ்க!

பதிவுபோதை பற்றி ஜூனியர் விகடனில் எழுதுங்க....

யோசனை

என்ன செய்வது
எது செய்வது
கண்கள் கட்டுகின்றன
காலத்தின் ஓட்டம் பார்த்து

சொல்லுங்கள் பாடங்கள்
சொல்லாத கீதங்கள்
வாய் விட்டு சிரிக்கும்
விவரமறியா பருவங்கள்

தேவை ஒரு வேலை
வேலை தேடி ஒரு நாளை
தினம் தினம் செலவிட்டு
தேடுகிறார் வருது கவலை

கேட்கிறார் ஒரு கேள்வி
சரி என்ன தான் செய்வது?
மனிதனாக இரு,வெற்றி பெறு
இது தான் என் யோசனை!

நரசிம் ஒரு பதிவு

இதை படியுங்கள், எவ்வளவு அழகாக ரசித்து எழுதியுள்ளார்.

கிராமத்து அப்பாவும் ஏரோப்ளேனும்...

என் மறைந்த அப்பாவின் ஞாபகம் வந்தது!

நன்றி நரசிம். வாழ்த்துக்கள்!

தீபாவளி சீசன்

தீபாவளி சீசன் என்றாலே நினைவுக்கு வருவது ஸ்வீட்ஸ், காரம், பட்டாசு and சினிமா! ஆங்... புது துணி. எது எல்லோரும் பல்லொவ் பண்ணும் ஒரு சீரிஸ்!

சரி,

தமிழ் படங்கள் என்ன வருது?

பதிவர்கள் கொஞ்சம் வேலை பார்த்து, சீக்கிரம் லிஸ்ட் போடுங்க!

அப்புறம், வேலை இருக்குது.

Tuesday, October 14, 2008

படிக்க வேண்டிய பதிவு...

கை கவாசாகி எழுதிய, இந்த பதிவு, கொஞ்சம் பெருசு, படிக்க வேண்டிய பதிவு...

நண்பர் இப்போது பார்வட் செய்தது... (ஆங்கிலம்)


Stennis97-r_s.jpg


இருபத்தி ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு பதிவு இட்டுள்ளார். அது ஒரு சாதனை?

USS John C. Stennis என்ற விமான தாங்கி கப்பல் மீது சென்ற அனுபவம் அது...

தேங்க்ஸ் கை.

கண் கட்டிய குதிரைகள்

கண் கட்டிய குதிரைகள்
நாங்கள், தேடுவதோ காசு
கரை கடந்து வந்தோம்
கனவுகள் சுமந்தோம்

அங்கே ஒருத்தி தனியாய்
காத்திருக்கிறாள் நிஜத்தில்..
ஒரு ஜான் மஞ்சள் கயிறு
தாலியாகி மனைவியானவள்

துள்ளி விளையாடின குழந்தைகள்
எங்கள் மனதில் தான்
நிஜமாய் துள்ளுவது
லீவு வாழ்க்கையில் தான்

எங்கள் வாழ்வும் வளமும்
ராணூவ வீரர்கள் போன்றது
தேசம் காக்கிறார்கள் அவர்கள்
குடும்பம் காக்கிறோம் நாங்கள்


(திரு நரசிம் அவர்கள் எழுதிய ஒரு பதிவு, இந்த கவிதை எழுத தூண்டியது.)

விடை தெரிய வாருங்கள்

பதிவுபோதை இது.. விடை தெரிய வாருங்கள் ..

செம காமடி அதிஷாவின்... ஜோதி தியேட்டரும் சில பிரபலங்களும் டவுசர் பாண்டியும்....

**பாருநீபேதிதா = எழுத்தாளர் (எல்லோருக்கும் தெரிந்தவர் பா = சா, பே = வே )
**பெருசு = விஜயகாந்த்
**பீயாரு = நம்ம டி. ஆர். (**சின்ன பீயாரு = சிம்பு )
**சுத்ரன் = டாக்டர் ருத்ரன்
**இரும்பு பொம்மை = எந்திரன் = ரஜினிகாந்த் (கலர்?)
**பக்கிமுக் = வலையுலக பதிவாளர் லக்கி லுக் (மோகன கிருஷ்ண குமார்?)
**வெடிவேலு = சிரிப்பு நடிகர், பெருசுக்கும் இவருக்கும் இப்போ ஆகாது. (வே = வ )

அப்புறம்...ரோடு பேர் எல்லாம் டைரக்ட் ஆக இருக்கு. கத்திபாரா, சுத்திபாரா ஆகவில்லை.

நான் ரசித்த ப்லோக் போஸ்ட்கள்

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி

அழகாக எழுதியுள்ளார் பரிசல்காரன்.

இந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசை.

அப்புறம் திவ்யாவின் இரண்டு கமண்ட்ஸ் மாத்திரமா? சுருக்கமாக எழுதினாலும், ஒரு ஆதங்கம்! மற்றும் இன்வேச்த்மேன்ட் பான்கிங்கின் விளக்கம்...தலைவலி

நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டியது... ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதனது..

புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்

இதை எப்படி மிஸ் பண்ணலாம்... அதிஷாவின் என்ன அலைகள்...

என்ன புள்ள செஞ்ச நீ...! பாவிப்பய நெஞ்ச நீ...! - A LOVE LETTER

அப்புறம் சும்மா டைம் பாஸ் மச்சியின்...

நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!

ப்லோக் டைம் இடைவெளி

எனக்கு கொஞ்சம் ப்லோக் ப்லோக் டைம் இடைவெளி கொடுக்க வேண்டும் என்று தோன்றுது! நேற்று கொஞ்சம் ப்ரீ...

அப்படி ஒன்னு வாசகர்கள் விரும்பி வந்து படிக்கிறார்கள் போல தெரியவில்லை.

தினம் காலையில் ஒரு போஸ்ட். லன்ச் டைம். அப்புறம் ஈவேநிங் கதை இருந்தால்... மற்றவர்கள் போஸ்ட் படித்தால், சுவையாக இருந்தால், ஒரு போஸ்ட்.

எப்படி!

வேலை இருக்குதுங்க. என் பயன் கேட்கிறான், ப்லோக் எழுதினால், உங்க வேலை ஈசி ஆகுமா? எனக்கு தெரியல பா....

Monday, October 13, 2008

தலைவலி - மருந்து - காஜா பாம்

தலைவலி - மருந்து - காஜா பாம்



மேட்டர் என்னன்னா மேலே உள்ளது தான்... எப்படி விளம்பரம்?

அப்புறம் ப்லோக் செய்தால் தலைவலி போகுமா?

நீங்கள் சொல்லுங்கள். ஹி ஹி ஹி ! ;-)

நானும் கேள்வி பதில் பகுதி ஒன்னு ஆரம்பிக்கணும். மெயில் போடுங்க. தேங்க்ஸ். (லதானந்த் அவர்கள் ஐடியா)

சொகுசு வேலை

இப்போதெல்லாம் ப்லோக் செய்யும் டைம் குறைவு. வேலை தான்.... பூவா!

பாருங்க ஏழு மணி நேரம் இங்கே ப்லோக் பக்கம் வர முடியலே.

சொகுசு வேலை எது வாழ்கையில். எதுவும் இல்லை. நோகாமல் நோம்பி கும்பிடுவது இரண்டு தொழிலில். ;-)

எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்புறம் இரண்டு ருபாய் நோட்டு என்று ஒரு கதை திவ்யா எழுதேறேன் என்றார். நன்றி. எப்போ வரும் தெரியாது, ஆனா வர வேண்டியே நேரத்தில் கட்டாயம் வரும்...

அந்த கதையிலிரிந்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேசன். ஒரு ருபாய். நாளை வரும்.

பிறந்த நாள்

பிறந்த நாள் என்றாலே நினைவுக்கு வருவது கிப்த்ஸ்.

நேற்று ஒரு நண்பர் வீட்டிற்கு வர சொல்லி அழைத்திருந்தார். குடும்பத்தோடு செல்லெலாம் என்றால் தூங்கி விட்டோம். மதியம் நான்கு மணி.

அப்புறம் கேக் வெட்டி விட்டார்கள். அவர்கள் யாரை அழைப்பது? நண்பர்கள் தானே. மறதி. ஸாரி சொன்னேன். கஷ்டமாக இருந்தது.

ஆறு மணிக்கு மேல் கேக் வெட்டினால்... டின்னெர் ப்ரோப்ளம்? நான் வெஜ் காரர் வீடு. சண்டே. புரிகிறது. சே... அப்படி இருக்காது.

சரி இன்னைக்கு கிப்த்ஸ் வாங்கி செல்லவேண்டும். குழந்தை... எதிர்பார்ப்பு...

மஸ்ரூம் குழம்பு

அதிசயமாய் இன்னைக்கு மஸ்ரூம் குழம்பு வீட்டில்.

காளான். உயிர் தானே அது. செடி மாதிர இருப்பதால்.. வெஜிடரியன் தான்... ஒக்கே.

இட் இஸ் லைக் சிக்கன் கிரேவி.

காலை இட்லிக்கே அது தான்.

அப்புறம் மகன் சொன்னே உவ்வே, அரை பாட்டில் சாஸ் திர்ந்தது.

சரி மதியம் பார்க்கலாம்... வேலை...

Sunday, October 12, 2008

வாசகர் ப்ளொக்ஸ்

காலையில் காப்பி குடிக்கும் போது நான் பார்ப்பது... வாசகர் ப்ளொக்ஸ்

கதைகள் ஏன் ஸ்லோ?

எப்ப தான் வரும்?

கேட்கிறார்கள் வாசகர்கள்.

சரி எதாவது கசா மூஸா கதை ஒன்னு எழுதனும்.... ஹிட்ஸ்? அதுக்கில்லே!

என் கதைகள் யாரவது சுட்டால்... நான் சுடுவேன்... ஹி ஹி.... தமாசு...

அப்புறம் கமண்ட்ஸ் பத்தி நண்பர்கள் ரொம்ப வருத்தப்பட்டாங்க. பப்ளிக் லைப். சகஜம்னு எடுத்துக்க முடியாது. பொண்ணுங்க விட்ருங்க. ப்ளீஸ்! ப்லோக் தானே.

நல்லா தூங்கினேன்

நல்லா தூங்கினேன் ... மதியம் நல்லா சாப்பாடு.

அப்புறம் குலப் ஜாமூன்.

அருமையா அருமை (சாலமன் பாப்ஸ் ஸ்டைல்).

ஆமா என் ப்லோகிர்க்கு என்ன வாசகர் வரவு குறைவு?

என்ன பண்ணலாம்? என் தமிழ் முயற்சிக்கு அதரவு தேடலாம்?

இது வரை எழுதுனது எல்லாம் சுமாரான பதிவுகள். ஒரு சில கதைகள், சூப்பர், அஞ்சு பதிவு, எல்லாம் சுய தம்பட்டம் இல்லை...

நல்ல கதை இருக்கு படியுங்க. கொஞ்சம் நல்லா தப்பு கண்டுபிடிச்சு எடிட் வேற செய்யறேன். புக் போட போறேன் இல்லே. வேணுமா வேண்டாமா?

கவிதை இருக்கு ரசியுங்க... ஆட்டு புழுக்கை மாதிரி இல்லைங்க. யோசிச்சு, நல்ல தான் போடறேன்.

வரட்டா? குழந்தைகள் கேக் கேட்டார்கள் அப்படியே ஒரு நடை போயிட்டு... அதை பத்தி ஒரு பதிவு போடணும்...

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?

நேற்று என்னிடம் நண்பர் ஒருவர் ஒரு புஸ்தகம் கொடுத்தார்.

டானல்ட் ட்ரம்ப் மற்றும் ராபர்ட் கியோசாகி எழுதியது.

ஒரு சிறு குறிப்பு ...