சிறிது நேரத்திற்கு முன் எனது நண்பி/தோழி/க்ளாஸ்மேட் திவ்யாவுடன் ( ஆம், இப்போது இந்தியாவில் இருக்கிறார்! ) பேசிக்கொண்டு இருந்தேன்.
எப்படி சில "அனானிமஸ் கமன்ட்டர்கள்" மக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.
இங்கே பாருங்கள்...
பெங்களூரில் நான்யாரோ ஒருவர், அவர் தந்தையார் பெயரில் எழுதி வரும் தமிழ் ப்ளாகில், ஒரு அனானிமஸ் கம்பட்டார் கிண்டலாக திவ்யாவின் ப்ளாகை எழுதுவதும் அவர் தான் என்ற கிண்டல் தொனியில் எழுதிவிட்டார். அதற்காக அந்த நபர், "சிறு விஷயம்" தெளிவுப்படுத்த திவ்யாவை, அவர் ப்ளாக்கில் கமன்ட் இட கேட்டுக்கொண்டார். திவ்யாவும், "நான் அவரில்லை, அவள்" என்று விவரம் சொல்லி ஒரு கமன்ட் போட்டார்.
அதன் பிறகு, அதே அனானிமஸ் கமன்ட்டார், மிகவும் கொச்சைபடுத்தி திவ்யாவை விமர்சனம் செய்துள்ளார். தேவையற்றது அது.
இப்போது அது சீரியசான ரூட்டில் போய்க்கொண்டு உள்ளது. யார் அந்த அனானிமஸ் கமன்ட்டார் என்று "ஐ.பி. அட்ரெஸ்" வைத்து கண்டுபிடித்து தக்க சன்மானம் வழங்க போகிறார்கள்.
எதற்கு இதை நான் எழுதுகிறேன்?
இந்த ப்லோக்கிலேயே நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த தொந்தரவு இருந்தது. சிலர் மிரட்டல் தொனியிலும், சிலர் மிகவும் என் இனத்தை குறிப்பிட்டு கேவலமாகவும் எழுதினார்கள் ( அதுவும், மேல் ஜாதி என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிலர் அடித்த கூத்து சொல்லி மாளாது ).
ஆனால், கமன்ட் மாடரேசன் இருந்ததால், தான் ஒழுங்கானவற்றை மட்டும் பிரசுரித்தேன். இப்போது பார்த்தாலும், ஐ.டி. ஆக்ட் பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.
ஆகவே, நண்பர்களே நிங்கள் தயவாய், உங்கள் ப்ளாகில் கமன்ட்களை மாடரேசன் செய்யவும்.
ஒழுங்கானவற்றை அனுமதித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகாது. நன்றிகள்.