Saturday, November 15, 2008

சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு

பதிவர் சந்திப்பு ... அந்த கூட்டம் இல்லைங்க, இது வேற.

பீச் பக்கம் நான் போகலே. அந்த சந்திப்பு கொஞ்சம் கார சாரமாக இருக்கும் போல.

நான் சந்தித்தவர்கள் பதிவு போட்டுளார்கள்... என்ன ரவி மட்டும் ப்ளோக்கர் இல்லை. நாளை காலையில் நாகேஸ்வர ராவ் பார்க்கில் சந்திக்கிறோம்!

சென்னையில் பதிவர் சந்திப்பு

சென்னை மற்றும் கோவை

எனக்கு பிடித்த விஷயம், ப்லோக் பற்றி பேசாமல், உலக விஷயங்கள் பேசியது. நல்ல நண்பர்கள். குழந்தைகள் எல்லாம் கொஞ்சம் அடங்கி நடந்தார்கள்.

****

ரொம்ப நாளைக்கு பிறகு சென்னையில் ஒரு ப்ராஜெக்ட் முடிந்தது. திருப்தி. ஒருவர் கமன்ட் போட்டுள்ளார், எவ்வளவு கமிசன் வரும் என்று. அவர் சொல்றான், இவன் செய்யறான், பூவாக்கு எதோ கொஞ்சம் வருது.

நான் வெள்ளி காலை ப்ளைட்டில் சென்னை கிளம்பினேன்.

என் மனைவி மற்றும் குழந்தைகள், சாயந்திரம் ப்ளைட்டில் வந்தார்கள்.

நாளை சாயந்திரம் ட்ரெயின். இன்னும் கன்போர்ம் ஆகவில்லை. கிடைக்கும். மாமா வாங்கி கொடுப்பார்!

இது திடீரென்று ஏற்பட்ட ட்ரிப்.

தீபாவளி முடிந்து இரண்டு வாரங்களில்... குழந்தைகள் சந்தோசம்.

எனக்கும் சினிமா வேலை ஒன்று நாளை காலை மீட்டிங் இருக்கு. அரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்ல வேண்டும்!

மாமனார் இப்போது பீச் சென்று வரலாம் என்கிறார். டின்னெர் டிபன் பாக்ஸ் கூட வரும். இன்று நான் பழம் மட்டும் தான்... பெங்களூர் போல சொல்லிட்டு வரதில்லே இந்த மழை! ஒரே தூறல் தான் போங்க!

குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஹிந்தி பரீட்சை. கிளம்பும் அவசரத்தில் மறந்து விட்டார்கள். நல்ல வேலை அதே புத்தகம் இங்கு கிடைத்தது, மனைவி வாங்கி வந்துள்ளார். மனைவி டின்னெர் செய்ய, மாமியார் சொல்லிக்கொடுக்கிறார். நான் உலகின் முக்கிய வேலை ப்லோக் டைப் செய்யறேன். (எதோ இன்னொரு ப்ரோஜக்ட் டிடேயில்ஸ் என்று நினைக்கொண்டு இருக்கிறார்கள்!)

அப்புறம் கனி என்ற கடையில் மூன்று செட் சுடிதார் எடுத்துள்ளார் மனைவி. மகளுக்கும் ஒன்று. நாளை மதியம் தைத்து ரெடி ஆக இருக்கும். பெங்களூருக்கு பாதி விலை. மகன் அழுகிறான். ஒரு ரெடிமேட் எடுக்கணும். திவ்யா ஒரு டி.ஷர்ட் கொடுத்திருந்தார்... Vote for Obama!

ஒரு நண்பருக்கு கல்யாணம் ஆன பத்து வருடங்கள் பிறகு இப்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... பிரார்த்தனையாக, சென்று பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு பவுன் தங்கம் காசு கொடுத்து அனுப்புகிறார். இப்படியும் சிலர்!

நாளை மதியம் நண்பர் வீட்டில் விருந்து. திவ்யாவின் குடும்ப நண்பர்.

*******

நல்ல தமாசான படங்கள் போட்டேன். பின்னூட்டங்கள் வரும் என்று நம்புகிறேன்!

தமாஸ் படங்கள்என்னமா செய்யறாங்க?

பொய் சொல்ல போறோம்

நேற்று என்னோடு நெருங்கி பழகிய சென்னை நண்பர் அழைப்பின் பேரில் காலை சென்னை வந்தேன்.

சிறு வேலை. நாளை வரை சென்னையில் அலைய வேண்டும். ஒரு நிலம் விஷயம். நாற்பது ஏக்கர். நேற்று வரை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் விற்றது, இன்று ஒரு கோடி கேட்கிறார்கள். நூறு வருட ரிகார்ட் பார்க்க வேண்டும். வில்லங்கம் போன்றவை. செங்கல்பட்டு மாவட்டம்... ஸ்ரீபெரும்புதூர்... வெளிநாடு கம்பனி... இருபது கோடிகள் பட்ஜெட். ஆளும்கட்சி ஆள், பதினைந்து பாத்திரம் கையில் வைத்திருக்கிறார். யார் யார் பேரிலோ இடங்கள்.... ஊரை ஏமாற்றி பறித்த சொத்து ஆக இல்லாமல் இருக்க வேண்டும். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும்... நானே வர வேண்டிய பிசினசை தொலைத்து விடுவேன்.

கூட வந்த ப்ரோகர் சொன்னார்... பொய் சொல்ல போறோம் படம் மாதிரி ஜல்லி அடிப்பாங்க இங்கே. புரிந்த மாதிரி இருந்தது. என் பாடி கார்ட் சிரித்துக்கொண்டார்! அவர் கையில் இருந்த ஏ.கே கன் நடுங்கியது.

கொஞ்சம் பயம் தான்.

********

அமெரிக்க நண்பர் ஒருவர் வருகிறார். இன்று இங்கே சென்னையில் சந்திக்கிறேன்.

நான் துவங்கவிருக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் குறித்து ஒரு ஆலோசனை நடத்த வேண்டும். சில கோடிகள் முதலீடு.

Friday, November 14, 2008

சென்னையில் இருந்து

சென்னையில் அக்கிரமமான விஷயம். லா காலேஜ் மாணவர்கள் தலை தொங்க போட்டு நடக்கிறார்கள். லாயேர்கள் அதை பற்றி பேசுவதில்லை..

போலிஸ் நண்பர்கள் (ஐ.பி.எஸ்) கூறிய தகவல் ஆச்சிரிய பட வைத்தது.

அடிவாங்கிய மாணவர்கள் தலித்கள். எப்போதும் போல அடி வாங்கும் சமூகம் (நானும் அதில் ஒருவன்). வாய் பேசி தகராறு ஆரம்பம். ஹாக்கி ஸ்டிக்ஸ் தடை செய்ய வேண்டும், காலேஜுக்குள்... விளையாடடு சாமான் என்ற வகையில் உள்ளே கொண்டு செல்கிறார்கள், சட்டம் தடுக்க முடியாது.

அடித்தவர்கள்... ஜாதி மூலம் சங்கம் அமைத்து பிறகு அரசியல் செய்யும் கட்சி சேர்ந்தவர்கள். அவர்கள் வாரிசு அரசியல் கண்டால் பிடிக்காதவர்கள். அந்த ஊர்க்காரர்கள்.

ஆளும் கட்சி மேலிடம் ஆர்டராம், அமைதியாக இருக்க சொல்லி. கொடுமை இது. அரசியல் விளையாடடு அதிகம். 2031 இல் சென்னை தண்ணீரில் முழ்குவது, இப்போதே முழ்கினால், ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பலாம். மதுரைக்கு தலைநகர் மாற்றுங்கள்.

அடித்தவர்கள் எழுபது பேர், பேருக்கு எட்டு பேர் (வசதி குறைந்த பரிதாபிகள்) என்று ஏற்கனவே, நினைத்த மாதிரி, சார்ஜ் சீட் போட்டுவிட்டார்கள். சஸ்பென்ட் ஆர்டர். ஒரு வருடம் கழித்து தேர்வு எழுதி பாஸ் ஆவர்கள். வழக்கறிஞ்சர்கள்... கொடுமை...அப்புறம் அவர்கள் மீது ஆளும் கட்சி கூட கை வைக்க முடியாது, ரமணாவின் எ.டி.எப். தவிர.

மாற்றல் கேட்ட சென்னை கமிஷனர் (ஏற்கனவே மனம் நொந்து இருந்தவர், சென்னை ரூரல் என்று வந்து காசு பண்ணுவது குறைந்தபடியால்...) மாற்றம் செய்யப்பட்டார்... வேண்டியது கிடைத்தது... ஹா ஹா

பாவம் காலேஜ் பிரின்சிபால், சஷ்பென்ட் பண்ணியிருக்கிறார்கள். அவர் பாண்டிச்சேரிக்காரர். அடித்த சமூகத்தை சேர்ந்தவர்! மத்தியில் ஆளும் அன்பான மணியான கட்சி. தமிழகத்தில் ஆழ்ந்து விட்டு, இப்போது எதிரணி. குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அவர் தான் அடுத்த பாண்டிச்சேரி யுனிவர்சிடி டீன்.

ஜாதி எப்படி விளையாடுது பாருங்க!

ஜாதி ஒழிய வேண்டும்! மனிதனுடைய கேரக்டர் பார்த்து பழகும் நிலை வேண்டும்.

இதை எழுதுவதால், தமிழ்நாட்டில் எனக்கு வர வேண்டிய பிசினஸ், சில கோடிகள் குறையலாம்... மயிர போச்சு!

வாழ்க இந்தியா!

Thursday, November 13, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

சுற்றும் உலகம் மேலே விமானம்

என்ற பதிவில் கேள்விக்கு விடை என்ன? என் கேள்விக்கு என்ன பதில்?

மூளை குலம்பிச்சா?

பதில் இங்கே:

ஒரு சுற்று முழுதும் வருவதற்கு 28500 கிலோமீட்டர்கள். ஆனால் விமானம் 24000 மட்டும் கிலோமீட்டர்கள் பறந்திருக்கும். கிளம்பிய இடம் வர இன்னும் 4500 கிலோமீட்டர்கள் இருக்கும். அவ்வளவு தான். ;-)

இந்த புவி ஈர்ப்பு விசை எல்லாம் சும்மா ஒரு கப்சா தான்.

*********

அப்புறம் ஒரு மணிக்கு 19000 வாசகர் பார்வைகள் பதிவுபோதைக்கு!

பதிலுக்கு பதில்

என்னங்க நடக்குது தமிழ்நாட்டிலே...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


காட்டுமிராண்டிக் கல்லூரி

சட்டக்கல்லூரி: கண்களில் பிறப்புறுப்பை சொருகிக்கொண்ட சக மாணவர்கள்..

எழுத்தாளர் ஞானி எழுதவில்லை இதை பற்றி இன்னும்...

வருங்கால வழக்கறிஞ்சர்கள் , வருங்காலநீதிபதிகள், வருங்கால எம்.எல்.ஏக்கள், வருங்காலமுதல்வர்கள், இப்படி செய்யலாமா?

அந்த எட்டு பேர் வீட்டிற்க்கு ஆட்டோ அனுப்ப யார்தயார்? டீடெயில்ஸ் என்கிட்டே வந்ததும்கொடுக்கிறேன்! :-(

நானும் ஆங்கிலத்தில் எழுதினேன்....

Barbarians

மனம் இன்னும் ஆறவில்லை...

தோணி கன் வாங்கியப்பிறகு நான் தான்... வச்சுக்கறேன்!

அய்யோ

லக்கிலூக் கலக்குறார்!

"கலைஞர் எனக்கு அனுப்பிய வாழ்த்துச்செய்தி!"

மு.க. அவருக்கு கடிதம் எழுதினாராம்! (கனவில்)

அருமையான பதிவு!

ஹி ஹி.... அய்யோ மூன்றெழுத்து...

சுற்றும் உலகம் மேலே விமானம்

இன்னொரு இன்டர்வியு கேள்வி இது, நார்மல் விஷயம் தான்..

உங்களுக்கு தெரியும் ஈர்ப்பு விசை ( பாக்டர் ஆப் க்ராவிடி )...

சரி கேள்வி, (குழப்பம் தான்)

  • ஒரு விமானம் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது பூமியின் மேலே.
  • பூமி 28500 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது 24 மணி நேரத்தில்.
  • பூமியின் சுற்று வட்டம் (சர்கம்பாரன்ஸ்) 28500 கிலோமீட்டர்
  • அந்த விமானத்தில் பறக்க 24 மணி நேரத்திற்கான எரிபொருள் இருக்கும்.
  • விமானம் ஈகுவேடார் மேல பறக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.
  • சரியாக 24 மணி நேரம் கழித்து அந்த விமானம் எங்கு இருக்கும்?

பதில் என்னவாக இருக்கும்..... ? அடுத்த பதிவில்.

பரிசெல்லாம் கேட்க்காதீங்க....

பரிச்சயங்கள்

என்னிடம் டாடா கம்பனி ஐ.ஐ.எமில் கேட்ட ஒரு இன்டர்வியு கேள்வி... 1991 ஜனவரி. நார்மலா இருக்காதுங்க. கொஞ்சம் டிபரண்ட் ஆக தான் இருக்கும் எம்பியே சமாச்சாரம்!

  • ரூமில் நூறு பேர், சீப் கெச்டுக்கு ஒருவரை தான் நன்றாக தெரியும் (பழக்கம்) ஆனால், நூறு பேருக்கும் சீப் கெஸ்ட் பற்றி தெரியும்.
  • ஒவ்வொருவரும், ஒரு கேள்வியில் எப்படி சீப் கெச்டிடம், அவருக்கு தெரிந்தவரா என்று கண்டு கொள்வீர்கள்?
  • என்னை உங்களுக்கு நன்றாக தெரியுமா என்று டைரக்ட் ஆக கேட்க கூடாது!

பதில் - கிழே!

*****

குமுதத்தில் நண்பர் நர்சிம் எழுதியுள்ளாராம். வாழ்த்துக்கள்.

பல படைப்புகள் நரசிம்ஹன் என்ற பெயரில் வந்திருக்கலாம்...?

பரிசல்காரன் எழுதுகிறார்... எல்லாரும் குமுதம் வாங்குங்கப்பூ..!

அப்புறம் நண்பர் எழுதிய கலங்கும் கண்கள் , என்னவோ செய்தது...

*****

மேலே உள்ள கேள்விக்கான் விடை ....

"எனக்கு உங்களை தெரிந்த மாதிரி, உங்களுக்கு என்னை நன்றாக தெரியுமா?"

Do you know me so well, like I know you?

Wednesday, November 12, 2008

ஷங்கரை காப்பாற்றுங்கள், இது எனது 350 வது பதிவு

இட்லிவடை குழுமம் எழுதுகிறார்கள்... ஷங்கரை காப்பாற்றுங்கள்...நிச்சயம் ஒரு மனித நேயம் மிக்க செய்தி...

கண்டிப்பாக உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்!

******

இது எனது... 350 வது பதிவு! பதிவு தொடங்கி மூன்று மாதங்கள் மேல் ஆகியுள்ளது... 18,700 சைட் விசிட்ஸ்... (இப்போதெல்லாம் எல்லோரும் கூகிள் ரீடர் தான் யூஸ் பண்றாங்க போல!) அஞ்சு நாளில் ஆயிரம் தலைகள் எட்டி பார்த்து பதிவுபோதை கொண்டுள்ளனர்!

நிறைய பேர் கேட்கிறீர்கள், ஏன் பதிவுகள் குறைகின்றன என்று....

வேலை தான்... பூவாக்காக!

******

குழந்தைகள் கேக் கேட்கிறார்கள், செலேப்ரேசனாம்... தேங்க்ஸ்.

பயிர்

பயிர் என்ற அமைப்பை பற்றி இங்கே படித்தேன். தேனூர் என்ற கிராமத்தில் நடக்கும் புரட்சி, நன்று.

ஒவ்வொரு கிராமமும், நிச்சயம் பார்த்து செய்ய வேண்டிய கடமைகள் அதிகம்!

செந்தில் மற்றும் குழுவினருக்கு, வாழ்த்துக்கள். நன்றிகள்.

****

முதலில் ஓர் தனி மனிதன், உணவிற்கு (தேவையான அளவு... கிராமத்தில் பீட்சா, பர்கர், பிரியாணி என்று கேட்க வேண்டாம்..)... முதல் முயற்சி செய்ய வேண்டும்! ஒரு ஜான் துணி மானத்தை மறைக்க...

செய்யும் வேலை விட்டு விட்டு, ஒரு வருடம் வீட்டில் உணவிற்கு வழி உண்டு எனில், இந்த மாதிரி, நீங்கள் பிறந்த ஊருக்கு திருப்பி கொடுக்கலாம்! திரும்பி சென்று நிச்சயம், இன்னும் சிறப்பாக வேலை செய்ய முடியும் உங்களால். செபாடிக்கல் என்பார்கள் இதை.

நான் என் நண்பர் சிவக்குமாரும், ராசிபுரம் அருகில் அரிசி சாகுபடி நிலம் வாங்க முயற்சி செய்து வருகிறோம். இடை தரகர் இல்லாமல், மூன்று வருடங்களில் போட்ட பணத்தை எடுக்கலாம். இது ஒரு கோடி ருபாய் திட்டம்!

காதலும் பாடல்களும்

பரிசல்காரன் தான் பதிவில் அழகாக எழுதுகிறார், கவிஞர் வாலியை பற்றி...

சூப்பர்... இங்கே படியுங்கள்...

வைரமுத்து கூறியதை போல வாலி, வார்த்தை நெசவாளி!

*****

அப்புறம், இப்போது தான் படித்தேன்... நண்பர் எழுதியது...

பாடல்கள்

*****

என்ன இது எல்லாம் பாடல் நாளாக உள்ளது?

அப்புறம், இந்த ஆர்டிகள் நல்லா இருக்கு (ஆங்கிலத்தில்)

Ethics, Corruption, and Economic Freedom

இதையும் படியுங்கள்...

10 tips to survive a layoff

Tuesday, November 11, 2008

உடல் தானம்

நல்ல விஷயம் தான்.. ஆனால் சிலர் விவரம் தெரியாமல் உள்ளார்கள்..

உயிருள்ள மகனை தானம் செய்ய விளைந்த கோவை தம்பதியினர்...

அவர்களுக்கு தெரியாது, இந்த மாதிரி குழந்தைகள், 18 வயது வரையாவது வாழும் என்று!

கிளிக் பண்ணி படியுங்கள்... தினகரன் செய்தி...


[MOOLAIVALARCHI.jpg]

யுகங்களும் வேலைகளும்

காலையில் இருந்து வேலை வேலை என்று அலைந்துக்கொண்டு இருக்கிறேன்.

இடையில் மெயில் செக் செய்ய மட்டும் டைம் இருந்தது!

இப்போது தான் கொஞ்சம் ஒக்கே.

என் என்.ஆர்.ஐ. கஸ்டமர் ஒருவர், பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் சில ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்டார். வெகு நாட்களுக்கு பிக ஒரு பெரிய ப்ராஜக்ட். ரிசார்ட் மற்றும் ஹோட்டல் கட்ட துடிக்கிறார்... புதிய ஏர்போர்ட் அருகில்..

அதிசயமாய் பார்கிறார்கள், என் ப்ரோகர் நண்பர்கள், நிஜமா வாங்குவார்களா என்று கேட்கிறார்கள். விலை குறைவு, பணம் இருப்பவர்கள் போடுகிறார்கள்.

பத்து நிமிடம் முன்பு வரை பதினைந்து இடங்கள் பற்றி விவரம் வந்தது. ஒரு ஆளும்கட்சி ஆள், பெரிய பீஸ் தருகிறேன் என்று வேறு சொல்கிறார்! இதுவும் பிரச்சனையில்லாத இடம்... அந்த இடம் தங்கம்.

சில சமயங்களில், நாம் நினைப்பது மாதிரி உலகம் இருப்பதில்லை...

Monday, November 10, 2008

ஒரு லட்சத்தை ஒரு கோடி ஆக்கும் வித்தை

எங்கே இது நடக்கும்?

நிச்சயம் இந்தியன் ஸ்டாக் மார்கட் தான்!

அப்புறம், லாபத்தை எடுத்து ரியல் எஸ்டேட்டில் போட வேண்டும்.

ரெகுலர் ஆக லாபம் எடுக்க வேண்டும்.

டாக்ஸ் 15% ஒரு வருடத்திற்குள் வருமானம் இருந்தால்..

ஒரு வருடத்திற்கு மேல் டாக்ஸ் இல்லை... இருந்தாலும் மக்கள் ஏன் ஸ்டாக் மார்கட்டில் பணம் போடுவதில்லை?

நண்பர் சொல்லுகிறார், இப்போது உள்ள நிலையில், சென்செக்ஸ் ச்டாக்சில் பணம் போட்டால், 18 முதல் 24 மாதங்களில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று.

பாங் வட்டி 10% தான் வருது இல்லையா?

குழப்பங்கள்

குழப்பங்கள் வந்து
போகும் காலம்
குறைகள் இல்லை,
நிறைகள் தான் எந்நாளும்

கவலைகள் விலகின
கவிதைகள் மருந்தானது
கசப்புகள் இல்லை
கதை கப்ஸாக்கள் உதவியானது

என் வீட்டு தோட்டம்
உன் வீட்டு தோட்டம்
கண்களில் நீர்
அவர்களை நினைத்து

என்று பிறக்கும்
விடிவு காலம்
என் அருமை
இலங்கை தமிழருக்கு!

Sunday, November 9, 2008

காமமும் கதைகளும்

கதை என்பது என்ன? மனிதன் கவலை மறக்க சொல்லப்படும் கப்ஸா.

ஒரு போதை தான்!

சில காவியங்கள் உள்ளன. ராமாயாணம், மகாபாரதம் போன்றவை, மனிதர்களால் எழுதி, கடவுள் கதை என்று சொல்லப்பட்டவை.

சரி என் புது தமிழ் வாத்தியார், என்ன சொல்கிறார்?

ஒரு எழுத்தாளர், எழுவது ஆபாசம் என்றும் அப்படி சொன்னால் தவறு என்று சொன்னார்! எது சரி எது தவறு?

நான் வாங்கும் ஹிந்தி நாவல்கள் பாதி, பேபெர்பக், காமம் மிகுந்த கழிசடைகள்... வேறு வார்த்தை தெரியவில்லை. அவை தமிழில் வந்தால்... கருமம் ஆகிவிடும்..... காமம் அல்ல.. அந்த எழுத்தாளர்கள் சொல்வது, நான் எழுதிய காவியம்! ஓகே.

கொடுமை என்னவென்றால், காதலும் காமமும் ஒன்று தான், ஒரு இனகவர்ச்சி என்பது மக்களுக்கு புரியாதது..

கல்யாணமான ஆண் இன்னொரு பெண்ணை காதலிப்பது மாதிரி நடிப்பது கதை.. நன்று. அதுவே நிஜமானால், தவறு.

புரிகிறதா?

தொடர்புடைய பதிவு இங்கே.

சுத்தம் சோறு போடும்

எவ்வளவு அருமையான பழமொழி?

காலையில் இன்று டிபன் கிடைக்கவில்லை. ஞாயிறு ஆதலால் ... ஒரூ ரெஸ்ட் டே.... ஆனால்... தோசை வரவில்லை...

குளித்தால் தான்... சுத்தம் சோறு போடும் .... தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறோம்.. டான்க்க் கிளீன் செய்கிறார்கள். புழு பூச்சி...போன்றவை.. மண் புழுவும் இருந்தது... என்ன கிளீனிங் செய்கிறார்கள் பெங்களூர் முனிசிபல் தண்ணீர் சப்ப்லையர்ஸ்? கொடுமை.

ஆளை ஸ்விம்மிங் கிளாஸ் செல்ல வேண்டும். க்ளோரின் வாசத்தோடு திரும்புவார்கள் குழந்தைகள்.

***

நேற்று நண்பர்கள் குழந்தைகள் எங்கள் வீடு வந்து தங்கினார்கள். நண்பரின் குழந்தைகள், அவ்வளவு அருமையாக ஸ்லீப்-ஓவர் பழகி உள்ளனர். எங்கள் குழந்தைகள் நல்ல பழக்கம் பழகினால் சரி.

என்ன டிவி மட்டும் கிடைக்கவில்லை. மனைவிக்கு எப்போதும் போல, புஸ்தகம் படிப்பு. போன் அரட்டை, நண்பர் கோவை வந்துள்ளதால்...

சினிமா கதை வடிவமைப்பு செய்வதால், பரவாயில்லை. நேரம் தான் கிடைக்கவில்லை.

அப்புறம் இந்த புதிய நோவா ஆப் ஆர்க் என்ற படம் பார்த்தோம். அருமை.

A.R.K. என்ற தத்துவம்... Act of Random Kindness என்பது கடவுள் மனிதருக்கு சொன்னதாம்... நல்ல தத்துவம்.. முடிந்தவரை, எதாவது வகையில் சிறு உதவி செய்யுங்கள், அது உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

ஒரு உதாரணம்.. நான் எம்.ஜி. ரோடு செல்லும் போது, கார் பார்க் செய்ய இடம் கிடைக்காது... ஆனால் ஒரு திருப்பத்தில், எப்போதும் நின்று ட்ராபிக் கவனிக்கும் ட்ராபிக் போலிஸ் நிறுத்திக்கொள்ள சொல்வார். ஒரு சிறு உதவி. மக்கள் மனதில் போலிசும் நல்லவர் என்ற எண்ணம் கிடைக்கிறது...

சிந்தித்து பாருங்கள்...