தமிழ் ஓவியர் என்று என் வயது ஒத்த ஒருவர், பழநிக்காரர் எழுதுகிறார், என் பதிவில் ஒரு பின்னூட்டம் போடுகிறார்! முதலில் நான் தமிழனே கிடையாது! என்னுடைய பழைய பதிவுகள் படித்து பார்த்திருக்கலாமே?
"தீபாவளி தமிழர் விழாவா? சிந்தியுங்கள்!"என் பதில் இதோ...
இதையும் சிந்தித்து பாருங்கள்.
சுப.வீரபாண்டியனும் ஒத்துக்கொள்வார்! அவரை எனக்கு நன்றாக தெரியும்!
இது ஒரு பண்டிகை - அவ்வளவே! சைன்டிபிக் ஆக தினக் செய்யவும். சப்பைக்கட்டு இல்லை.
அக்டோபர், நவம்பர் மாதங்கள், மலை காலம், குளிர் வாட்டி எடுக்கும்.
அதற்க்கு எதாவது போட்டு எரித்தால், கொஞ்சம் சூடாவது காலை வரை இருக்கும், நிம்மதியாக தூங்கலாம்!
அப்படி வந்தது தான் நரகாசூரன் எரிப்பு. காவியங்கள், கட்டுக்கதைகள்... கூட்டமாக இருந்து பேசி காலம் காலமாய் ஆயிரம் ஆண்டுகளாக வருவது.
அப்புறம், பண்டிகைகள் எல்லாம், ஒரு சந்தோஷ முயற்சி. சொந்தங்கள் வரும்... எழவிற்கு மட்டும் தானா சொந்தம்?
எதற்கு ஞாயிறு லீவு? எல்லாம், ஒரு தினம் குறித்துக்கொண்டு, உலகம் முழுதும் ரெஸ்ட் எடுக்க தான்... அதை போல சிந்தியுங்கள்.
நாத்திகவாதிகர்களாக இருந்து கொண்டு, பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்னை நியாயம்? மரியாதையை, ஏன் கடவுளுக்கு செய்கிற மாதிரி செய்கிறார்கள்? அநியாயம்.
இதில் நாத்திகம் இல்லை, ஆத்திகம் இல்லை. ஆத்திகர்கள் செய்வது தான் அஞ்சலி. ஆனால் முதலில் நிற்பது கி.வீரமணி தான். கமல் தான். நானும் சென்றிருந்தேன் சுஜாதா செத்த சமயம். கண்ணீர் வேறு! செத்த உடம்பு தானே என்று தூக்கி போட்டு எரிக்க வேண்டியது தானே? எதற்கு மாலை மரியாதை?
ஒன்று தெரியுமா.. சாஸ்திரங்கள் கரைத்து குடித்த என் தாத்தா திரு ரத்தன் டெண்டுல்கர், சொன்னது, ஈம சடங்கு செய்வது, வேசியின் குழந்தைகளுக்கு தான். நல்ல முறையில் பிறந்தவர்கள் எல்லாம் கழுகுக்கு தின்ன போட வேண்டும்.. டாட்டா குடும்பம் இன்னும் அதை தான் செய்கிறது. (பார்சிகள்) எனக்கு அதில் உடன்பாடில்லை. உடல் தானம் செய்யுங்கள் முதலில் ஆத்திகரோ, நாத்திகரோ.
இன்றும் மஹராஸ்த்ராவில் அம்பேத்கர் சிலைக்கு எங்கள் வம்சம் மாலை அணிவிக்காது. புத்த மதம் ஒரு காரணம். நாத்திகவாதிகள் அதிகம், எங்கள் வம்சத்தில்.
என் அப்பா பயங்கர ஆத்திகவாதியாக இருந்து நாத்திகவாதி ஆனவர். அவர் ஒன்றும் எங்களை, தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று கல்கத்தாவில் சொல்லவில்லை. தடுக்கவில்லை. ஒரு கொண்டாட்டம் தான். புது துணி உடுத்த ஒரு வழி. சந்தோசங்கள் பகிர்ந்து கொள்ள ஒரு வழி. ஸ்வீட் கிடைக்கும். போனஸ் கிடைக்கும் தோழர்களுக்கு.
எங்கள் மராட்டி ராவ் வம்சத்தில்... தலித்.. மர்மயோகி கதை... தீபாவளி கிடையாது.
மனைவி தமிழ் பிராமணாள்... கடவுள் நம்பிக்கை உள்ளவர்... ஆனால் பண்டிகை ஒரு நாட்டு மரபு என்று கொண்டாடும் உணர்வு உள்ளவர்! அவ்வளவு தான்.
எதிர்த்து பேசுபவர்கள், பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.
ஏழைகள் இன்றும் மலத்தை உண்டு வாழ்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள். இந்தியாவை ஏழைகள் இல்லாத நாடாக மாற்றுங்கள்.
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுங்கள், நானும் என் குடும்பமும் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தி விடுகிறோம்.