Showing posts with label கந்தசாமியின் அறிவுத்திறன். Show all posts
Showing posts with label கந்தசாமியின் அறிவுத்திறன். Show all posts

Monday, October 20, 2008

கந்தசாமியின் அறிவுத்திறன்

எல்லோரும் ஜோக் சொல்கிறார்கள். திவ்யாவும் ஒபாமா ஜோக் என்று சப்போர்ட் செய்பவரையே கலைக்கிறார்! கொடுமைங்!

சரி நானும் கொஞ்சம் தமிழ் வாசத்துடன் எனக்கு தெரிந்த ஜோக்ஸ் எழுதுறேன்!

மறக்க முடியாத சிறு துளி இது!

***

கந்தசாமியின் அறிவுத்திறன் , எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வளவு அட்டகாசமாக பேசுவான். எல்லோரும் அவனை நம்பிவிடுவார்கள். நீங்களும் படித்து பாருங்க.

ஒரு நாள், அவன் நின்று நிலவை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அங்கு அவனை கடந்த ரங்கசாமி, "என்ன கந்தசாமி செய்யறே" என்றுகேட்டான்.

அதற்கு கந்தசாமியின் பதில் "நான் சென்னையிலே பார்த்தே நிலா மாதிரியே இருக்கு இது!"

***

ஒரு நாள், கந்தசாமி ஆற்று ஓரமாக நடந்து போய்க்கொண்டு இருந்தான்.

அப்போது அவன் காலில் ஒரு மண்டை ஓடு இடறியது.

உடனே பக்கத்தில் குழி தோண்டி தேட ஆரம்பித்தான்.

அதை கவனித்த ரங்கசாமி, "என்ன கந்தசாமி தேடறே" என்று கேட்டான்.

கந்தசாமியின் அறிவு பதில் "இது பெரிய வயசு மண்டை ஓடு. சின்ன வயசுது கிடைக்குதா தேடறேன்" என்றான்.

***

ஒரு நாள் கந்தசாமி, பனை மரத்தடியில் நின்று கொண்டே இருந்தான்.

அதை கவனித்த ரங்கசாமி " என்ன கந்தசாமி வெகு நேரம் இங்கே நிக்குறே" என்றான்.

கந்தசாமியின் அறிவான பதில், "ஒண்ணுமில்லே. இந்த பனை மரத்து மேலேஒரு காக்க உட்கார்ந்து இருக்கு. பனம் பழம் விழாதானு பாக்குறேன்" என்றான்.