Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Friday, September 25, 2009

கவிதையாய் ஒரு வீடு

முச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?