Showing posts with label ரஞ்சிதா. Show all posts
Showing posts with label ரஞ்சிதா. Show all posts

Thursday, March 4, 2010

ஒழுக்கம்

கம்யுனிஸ்டு ப்ளாகர் ஒருவர் பதிவை படித்து ஒரு கமன்ட் போட்டேன்.

அவர் அனுபவித்து எழுதியதை பார்த்தால் - ஒழுக்கசீலர்கள் அவர் கட்சிக்காரர்கள் என தெரிகிறது! :-)

கல்கத்தாவில் பிறந்த வளர்ந்த நான், கம்யுனிச்டுக்களை பற்றி நன்கு அறிவேன்.

சங்கம், செயலாளர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டு, அப்படியே தலைவர், முடிந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என காசுக்கு ஆசைப்படும் ஆட்களையும் தெரியும். மறைந்த அஜீத் பாஞ்சா மாதிரி ( குடும்ப நண்பர் ) பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களையும் தெரியும்.

சங்கம் என்று உழைத்து விட்டு, தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட ஆட்களையும் தெரியும்.

சங்கம் அமைத்துக்கொண்டு வேலை செய்பவர்களையும் ( கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் ) வேலை செய்ய வைக்காமல் ) அவர்கள் நலனுக்காக மற்றவர்கள் துன்புறுத்தும் ஆட்களையும் தெரியும்.

மதுரையில் எம்.பி ஆக இருந்த மறைந்த ஒரு கம்யுனிஸ்டு என்னை தேடி ஒரு முறை வந்திருந்தார். சிபாரிசு செய்ய. கான்றேக்டுக்காக. என்ன கொடுமை அய்யா? என் கொள்கைக்காக நான் முடியாது என்றவுடன், தூக்கியடிக்கபட்டேன். ஆளுங்கட்சி உபயம்!

அவர்களை பற்றி நீங்கள் எழுத விழைகிறேன்.