Showing posts with label பஸ் பாஸ். Show all posts
Showing posts with label பஸ் பாஸ். Show all posts

Tuesday, September 9, 2008

உயிரோசையும் எனது பஸ் பாஸ் நினைவுகளும்

உயிரோசையில் ராமசாமி அவர்களின் இலவசங்கள் தரும் இழிவுகள் கட்டுரை, என் கண் முன் கிராமங்களின் இந்த காலங்களில் வாழ்கையும், நகர அவசர கண வாழ்க்கை முன் நிற்கிறது.

இங்கே படியுங்கள் இலவசங்கள் தரும் இழிவுகள்


நான் கல்கத்தாவில் பிறந்து வளர்ந்த காலங்களில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் மாணவர்களுக்கு எழுபத்தி ஐந்து சதவிகித தள்ளுபடி கொடுத்து பஸ் பாஸ் அளித்தார்கள். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடையாது.

என் பள்ளி பாட்பரவில் இருந்தது. டம் டம் அருகே இருந்த நல என்ற வண்ணார் குடியிருப்பு பகுதியில் தான் நாங்கள் இருந்தோம். தினமும் இரண்டு கிலோமீட்டர் கை ரிக்சாவில் சென்றால் மாதம் ௨0 ரூபாய். மலை காலங்களில் அதோ கதி தான்.அதனால் நானும் என் அக்காவும் சிவப்பு தகர டப்பா பஸ்சில் தான் செல்வோம். ட்ரம் கிடையாது. மாதம் ஒன்றுக்கு ஐந்து ருபாய் மட்டும். தலித் என்ற முத்திரை காரணமாக இது கட்டாயம் ஆக்கப்பட்டது. ரிக்ஷாகாரர்கள் வரமாட்டார்கள்.

அப்பா எஸ்டி பைக்கில் பாக்டரி செல்வார் (சொந்தம்). சில சமயம் வசூலுக்கு போகும் பொது (மிட்டல் கம்பெனி) எங்கள் இருவருக்கும் ட்ரோப் கிடைக்கும். இதெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரை தான். கன்டக்டர்கள் திட்டி கொண்டே இருப்பார்கள் அன்பாய். 'பாதிலே பாதிலே' சத்தம் இன்றும் கேட்கும் அங்கே. தூரமாக தெரியும் ஹூக்லி பிரிஜ் மற்றும் ஆற்றில் போகும் மீன் பிடி படகுகள், தரை இறங்கும் விமானங்கள் என அரை மணி நேரம் வேடிக்கை பார்த்து செல்வோம். அவ்வளவு நெரிசல் கூட்டம் இருக்கும் அப்போதே. குடிகுரா பவுடர் தப்பாவைத்திருப்பேன், வேர்வை வாசம் போக்க.

சில காலம் கழித்து, பள்ளி நேரம் அரை மணி முன்னதாக ஆகினார்கள், பத்து நிமிடம் மிச்சம் ஆனது. சாயந்திரம் வரும் நேரம் மட்டும் கொஞ்சம் காற்று வீசும் வகையில் சீட்டு கிடைக்கும். நடந்து வந்த காலமும் உண்டு, மதர் தெரேசா மிசன் இருக்கும் வீதிகள் வழியாக. சிக்கி மிட்டாயும், பஞ்சு மிட்டாயும் வங்கி தின்ற பருவம் அது.

பிற்பாடு அக்கா பெரியவள் ஆன பின்பு, பஸ்சில் செல்ல லாயக்கு இல்லை என்று, கை ரிக்சாவில் கொஞ்ச நாள், பிறகு ஆட்டோவில் சென்றோம். 1983 இல் அப்பா மாருதி கார் வாங்கினார். எட்டாவது படித்து கொண்டு இருந்தேன். லாட்டரி கிடைத்த மாதிரி இருந்தது. தினமும் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார். பெட்ரோல் ஒரு ரூபாய்
லிட்டருக்கு என்று நினைப்பு.

அக்கா மெடிக்கல் காலேஜ் 1984 இல் சேர்ந்தாள். காலேஜ் பஸ் வரும். நான் சில சமயம் என் பன்னிரெண்டாம் வகுப்பு சமயம் சைக்கிளில் செல்வேன். மாத்ஸ் வாத்தியார் வீடு மற்றும் ஐ.ஐ.டி. கோச்சிங் செல்ல வசதி. அது ஒரு சொர்க்க காலம்! காதல் இல்லாத ஹீரோ தான். 1985 கரக்பூர் செல்லும் வரை, சர்க்கஸ் செய்து கொண்டு செல்வேன் பஸ்சில். நினைவுகள் மறப்பதில்லை!