Saturday, October 11, 2008

திவ்யாவின் ஐம்பது பதிவுகள், வாழ்த்துக்கள்

திவ்யா இப்போது ஐம்பது பதிவுகள் எழுதி விட்டார், வாழ்த்துக்கள்!

இந்த முயற்சி பதினேழு நாட்களில். அப்புறம் 2000 ஹிட்ஸ்.

அதற்காக நான் ஒரு கவிதை எழுதினேன்.... அவரும் அதை, அவருடைய ஐம்பதாவது பதிவில் போட்டார்.

ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்

அழகான எழுத்துக்கள்
அழுகையான நினைவுகள்
அமெரிக்க மோகங்கள்
அம்சமான பயணங்கள்
ஆழமான கருத்துக்கள்
இம்சையான பின்னூட்டங்கள்
ஈகையான நேசங்கள்
உவர்பூட்டும் உள்ளங்கள்
ஊருக்கெல்லாம் நன்மைகள்
எவருக்கு கவலைகள்
ஏற்றம் மிகும் வாழ்க்கைகள்
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
ஒருகிணைந்த கருத்துக்கள்
ஓம் என்ற மந்திரங்கள்
ஒளவையாரின் ஆத்திசூடி கதைகள்

வாழ்க வளமுடன்!

(என் மனைவி உடனே என்னை சினிமா பாடல் ஆசிரியர் ஆகு என்று சொல்கிறார். வாய்ப்பு கிடைக்குமா?)

பெண்களும் அரசியலும்

சாரா பாலின் பற்றி எல்லோரும் ஒரு மாதிரி பேச... ஒரு கவர்னர் ஆக வாய்ப்பு பெற்றவர் என்ற முறையில் ஆச்சிரியப்பட வைக்கும் பெண். முன்னாள் அலாஸ்கா அழகி. 1984.

IMAGE: Gov. Sarah Palin

அவர்
ஒன்று நன்றாக பேசவில்லை, ஜோ பிடேனோடு பேச்சு போட்டியில் ;-) சொதப்பினார். அவர் ரஷ்யாவை பற்றி சொன்னது நகைப்புக்கு உரியது.

இப்போது அவர் மீது ஒரு குற்றச்சாட்டு. நிருபணம். தேர்தலில் அவருக்கு ஒருதடை ஆகலாம். நிற்பாரா, மாறுவாரா?



இங்கே படியுங்கள்.

அந்த குற்றச்சாட்டு, அவருடைய முன்னால் மச்சானை, கூட பிறந்தவளின்முன்னால் கணவன், போலிஸ் (ஸ்டாட் ற்றோப்பர்) வேலை விட்டு தூக்கியுள்ளார். சாட்சி நிரூபணம். எதாவது ஒரு பதில் குடுத்தாலும், அமெரிக்கர்கள் மனதில் நிற்க மாட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் என்று அமெரிக்காவில் நிலைத்து இல்லை. ஜெயில் தான்.

உதாரணம் ரிச்சர்ட் நிக்சன். வாட்டர் கேட். டெமோக்ரடிக் அலுவலகத்தில், டாலர் நோட்டு கற்றைகள் வைக்க உத்தரவு இட்டவர். குற்றம் நிரூபிக்கபடத்தால், அமேரிக்கா அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

அப்புறம், சொந்த காரணத்துக்காக, பில் கிளிண்டன், மோனிக்கா லுவின்ச்கியுடன் சல்லாபத்தில் மாட்ட, அமேரிக்கா அதிபர் பதவியிலிருந்து தூக்கி அடிக்க ஒரு வாய்ப்பு எதிர் கட்சிகளுக்கு...
வாய் புணர்ச்சி என்று ஒரு வித்தியாசம் காட்டி, அதில் தப்பித்தார்.

என் நண்பர் ஒருவர் அவரை (
பில் கிளிண்டன்)ஒரு மணி நேரம் பேச, வாஷிங்டனில், அறுபதாயிரம் டாலர் கொடுத்து அழைத்தார். ஒரு பெரிய நிறுவனம் என்றால், வெரி டிபாறேன்ட்.



சிகரட்டும் சில பிரச்சனைகளும்

எனக்கு சிறு வயதில் இருந்தே சிகரட் கண்டால் ஆகாது. அதுவும் பெண்கள் பிடிப்பது என்றால், தாங்காது. எதற்கு என்று மனம் கஷ்டப்படும்...

அதனால் ஒரு பதிவு....

எங்கப்பா அதிகம் புகை பிடிப்பார். அதால் தொண்டை ரொம்ப கேட்டு போய், சாகும் தருவாயில் பேச முடியாத நிலைமையில் இருந்தார். தொண்டையில் கான்செரா தெரியாது. தைரோய்ட் பிரச்சனை... என்னெனவோ வியாதி வரும்.

இன் பாக்ட், நான் வளர்ந்த ஊர் (கல்கத்தா) புகைக்கு பிரபலம். அதிகம் சினிமா தியேட்டர் உள்ளே பிடிப்பார்கள். வாசம் தாங்காது. அதுவும் .சி. இல் ....

சுட்டப்படம்

சினிமா - மலரும் நினைவுகள் ஒரு அப்டேட்

நான் எழுதியது... சினிமா - மலரும் நினைவுகள்!

நண்பர் விஜயஷங்கர் எழுதியது ...சினிமா - மலரும் நினைவுகள்!

திவ்யா எழுதியது ...சினிமா - மலரும் நினைவுகள்!

பா.ராகவன் எழுதியது..
சினிமாவும் நானும்

அதிஷா எழுதியது நினைவுகளாய் மலரும் சினிமா சினிமா ...

இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க தெரியலை!

ஒன்பதாயிரம் பத்தாயிரம்


ஒன்பதாயிரம் அக்டோபர் 9
பத்தாயிரம் அக்டோபர் 11

நல்ல ஸ்பீட்.

ஆவரேஜ் வாசகர்கள் ஒரு நாளைக்கு ஐந்நூறு.


என் கதைகள் நல்ல ஹிட்ஸ் பெறுகின்றன.


மிக்க நன்றி.

Friday, October 10, 2008

ஆர்த்தியின் கதை

ஆர்த்தியின் கதை பற்றி எழுதவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. குடும்பம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த கதையின் ஒரு சென்டிமன்ட். ஒரு சோசியல் மெச்செஜ்.

ஆர்த்தி திவ்யாவோடு வேலை பார்த்த பெண். நியூ யார்க்கில் படிப்பை முடித்துவிட்டு, திவ்யாவின் கம்பனியில் ஜுனியர் அனலிஸ்ட் ஆக சேர்ந்தால்.

அருமையான அழகு. கண்ணாடி போட்டிருப்பாள். பல் கொஞ்சம் தூக்கலாகஇருக்கும். மதுரையை சேர்ந்த சொவராச்ற்ற பாசை பேசும் பெண். டி.எம்.எஸ். சொந்தக்காரர் ஆக இருக்கலாம்.

கொஞ்சம் மூடி டைப். யாரோடும் ஓட்ட மாட்டாள். அமெரிக்காவில் அதுநடக்காது. சிறிது பேச வேண்டும். சிரிக்க வேண்டும்.

யாரோ இன்னொரு பெண்ணோடு தங்கி இருந்தால். காலேஜ் மேட்.

இருபத்தி ஐந்து வயது. கல்யாணம் செய்ய மாபிள்ளை பார்த்தார்கள். அப்போதுசாலமன் ஸ்மித் கம்பனியில் வேலை பார்த்த ஒருவன் கிடைத்தான். சிவஷங்கர். இது நடந்த வருடம் ௨000. சந்தோசமாக இருந்தால் என்று சொல்லமுடியாது. அவன் ஒரு சாடிச்டாக இருக்கலாம் என்று திவ்யாவிற்குதோன்றியது.

அவர்கள் வீட்டு பார்டி ஒன்றிற்கு அழைத்தாள். ஆனால் சரியாக நடந்துகொள்ளவில்லை. விழுந்து கவனிக்கவில்லை. விருந்த பலமில்லை.

கொஞ்சம் பைசா அதிகம் கொடுக்கிறார்கள் என்று டிசம்பர் போனஸ் வாங்கிவிட்டு, ஜனவரியில் 2001 புருஷன் கம்பனியில் சேர்ந்தாள்.

வேர்ல்ட் தரத் சென்டர் தொநூற்றி ஒன்றாம் மாடி. நியூ யார்க்கில் உயரமானகட்டிடம்.

அவர்கள் வீடு செவேந்த் அவநூவில் வாங்கினார்கள். அப்பர் வெஸ்ட் ஸைட்.

பார்டிக்கு கூப்பிடவில்லை. கஞ்சம். ஆர்த்தி புருஷன் சிவஷங்கர் குடும்பம்எல்லாம் அமெரிக்காவில் இருந்தார்கள். தினமும் வேலை என்று சொன்னால்திவ்யாவிடம். கொஞ்சம் ஒட்டுதல் இருந்தது.

வீட்டில் சண்டை எப்போதும் இருந்துள்ளது. மாமியார் வந்து இருந்துக்கொண்டு, சாப்பிட ப்ளேட் கூட கழுவ எடுத்து போடவில்லை. கால் அமுக்கு விடசொல்லி கொடுமை. அப்புறம் ஒரு லட்சம் டாலர் சம்பளம் வேறு வாங்கி வந்துதர வேண்டும். மெண்டல் ஆனால் ஆர்த்தி. கண் அடியில் கருமை. சோகம்.

சனி, ஞாயிறு வீட்டில் எல்லாம் வேலை.

தினமும் வேலையில் தான் அவள் மனம் சாந்தி அடைந்தது. அமெரிக்கன்சித்ஜன்ஷிப் அந்த வருடம் இருவருக்கும் வந்தது.

அவளுக்கு நல்ல உடல் நிலை இல்லாததால், குழந்தை ஆகவில்லை. மலடிஎன்று மாமியார் திட்டியுள்ளார். கருமாந்திரம்.. பீடை போன்ற வார்த்தைகள்ஆர்த்தியின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டு கொண்டு...

செப்டம்பர் ஆனது. அல் கைடா அட்டாக் 911. வேர்ல்ட் ட்ரேட் சென்டர் இடிந்தது. தரை மட்டம். ஐந்தாயிரம் பேர் மடிந்தனர். தொண்ணூறு மாடிகள் இறங்கிநடந்து வர முடியவில்லை. தப்பவில்லை ஆர்த்தி? சிவஷங்கர் அன்று காலைஅவன் அம்மாவை அழைத்து ஆஸ்பத்திரி போக இருந்ததால்... லேட்தப்பினான், ஆர்த்தி ஆபிஸ் சென்றாள்.

பொன் கால் இல்லை. அவளை பற்றி தகவல் இல்லை. வீட்டில் அழுகை. வேலைக்கு ஆள் போயிற்றே. சம்பளம் வராதே!

ஆர்த்தி இறந்து விட்டதாக முடிவு செய்தார்கள். அவள் கம்பனியும், இன்சூரன்சும் பல மில்லியன் டாலர்கள் கொடுத்தார்கள்.

அவன் அக்கவுண்டில் தான் இருந்தது. ஆர்த்தியின் அக்கவுண்டோடு சேர்ந்துஇன்வெஸ்ட் செய்திருந்தான்.

மூன்றே மாதத்தில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். துக்கம் கூட ஆறவில்லை.

திவ்யா சில மதங்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம், சிவஷங்கர் மெண்டல்ஆகிவிட்டான். அவன் பணம் ஐந்து மில்லியன் பூராம் யாரோ சுட்டுவிட்டார்கள். பைசா இல்லை. சமபளம் மட்டும். வேலைக்கு போகாத புதுமனைவி.

தெய்வம் நின்று கொல்லும்.

*****

வருடம் 2008. திடீரென்று ஆர்த்தி மெயில் ஐடியிலிருந்து ஒரு மெயில். திவ்யா எம் தேர். சீக்ரெட். வில் கால் ஒன் டே. ஆர்த்தி என்று ஒரு மெயில்.

திவ்யாவிற்கு திகைப்பு...

திடீரென்று ஒரு நாள், கனடாவில் இருந்து ஒரு கால். "திவி. ஷோர்ட். அம்ஓகே. ஹவ்டி?" திகைப்பு. ஆர்த்தியே தான். "நல்ல இருக்கேன். எங்கே?"

"கம் டு நயகரா பிரிஜ். திஸ் ஃப்ரைடே ஈவேநிங் சிக்ஸ்".

ஜோவிடம் ஒரு க்லியான்ட் மீட்டிங் என்று சொல்லி, வெள்ளி மதியம் அரைநாள் லீவு போட்டுவிட்டு சென்றாள். மதியம் பிளைட். அடுத்த நாள் திரும்பவேண்டும். நயாகராவில் ஹாலிடே இன்னில் ஒரு ரூம் எடுத்தாள்.

புபிபாலோ இறங்கி, கார் ரெண்ட் செய்து, கனடா செல்லும் பிரிஜ் கடந்தாள். டிரைவிங் லிசென்ஸ் போதும் பார்டர் க்ரோச்ஸ் செய்ய. காரை பார்க் செய்துவிட்டு.. பாலம் அருகே நின்றால். மனசு திக் திக். யாராவது ஏமாற்றி இருந்தால்?

தலையில் ஸ்கர்ப் கட்டியே ஒரு பெண், அருகில் ஒரு சிறு குழந்தை. ஆறுவயது இருக்கும் தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது. ஒரு ஆண் காரில் சாய்ந்துநின்றுகொண்டிருந்தான். இந்தியன்.

வந்தவள்.. "ஹாய் !" என்றாள். " எம் அம்ருதா" என்றாள். அவளே தான்.திவ்யா சத்தமிலாமல் "ஹாய்" என்றாள். "திவ்யா மீட் மி சன் ஷிவா!". "லேட்அச கோ". பார்கிங் லாடிற்கு சென்றார்கள். இருவரும் கையை பிடித்துநடந்தார்கள். கண்களில் நீர்.

"மீட் மை ஹஸ்பன்ட் ராம்." என்றாள். "அழகான வாலிபன். "ஹாய்!" என்றான். "ஹோவ்டி, அமு சொல்லி இருக்கிறாள்." என்றான்.

ஹோட்டல் சென்று பேசினார்கள்.

ஆர்த்தி என்ற அம்ருதா சொன்னது வியப்பாக இருந்தது. 911. காலை. கனடவில்வேலை பார்த்த ராம் அவனோட காதலி பார்க்க வந்திருக்கிறான். அவள்அம்ருதா. அவளும் சாலமன் ஸ்மித் தான். ஆர்த்தி கதை அனைத்தும்அம்ருதாவிர்க்கு தெரியும்.

ஏற்கனவே, ராமும் ஆர்த்தியும் அறிமுகம் ஆனவர்கள். அம்ருதாவை அன்றுகாலையில் ஒவ்ர்ல்து ட்ரேட் சென்டரில் கோடா வந்து விட்டு விட்டு, அவர்ப்ளைட் பிடிக்க பிளான். டாக்ஸ்சிக்காக காத்திருந்தான். அம்ருதா மாடி ஏறியசமயம் தான் 8.45 முதல் ப்ளைட் இடித்து. அவள் தப்பவில்லை.

ஆர்த்தி அந்த சமயம் தான் வந்திருக்கிறாள். கொஞ்சம் ட்ராபிக். லேட். எப்பவும்எட்டரைக்கு ஆபிஸ். ராமை பார்த்தவுடன், நின்று பேசினாள். அதற்குள்விமானம் இடித்து...

இருவரும் தப்பித்து அந்த ஏரியா விட்டு சென்றார்கள்.

சென்ட்ரல் பார்க்கில் அமர்ந்து பேசினார்கள். வீட்டிற்கு போக மனமில்லை. சிவசங்கரின் கொடுமை. வயிற்றில் ஒரு குழந்தை ஆகியிருந்தது. ஆர்த்திபுருசனிடம் இன்னும் சொல்லவில்லை அப்போது. ப்ளைட் எல்லாம்கேன்சல்ட். நல்ல வேலை கார் ரெண்டல் கிடைத்தது. அவனுடைய பேகில்அம்ருதா அவள் ஐடி , டிரைவிங் லைசன்ஸ் போன்றவை விட்டிருந்தாள். நல்லதாக போயிற்று.

ஆர்த்தி கிட்டத்தட்ட அம்ருதா போல இருப்பாள். இது தான் சான்ஸ். ராமும்ஒக்கே. சொன்னான். அவர்கள் டோரோண்டோவில் வாழ்க்கை அமைத்தனர்.துக்கத்தில் ஒரு புதிய வாழ்க்கை.

பேங்க் அக்கவுண்ட் பார்த்தாள். பணம் இருந்தது. ஒரு ஆப் சோர் அக்கவுண்ட்செட் செய்து பணம் எல்லாம் அங்கே திருப்பி விட்டாள். வாழ்க்கை இனி பயம்இல்லை. குழந்தைக்காக வாழ வேண்டும்.

அம்ருதா இறந்தது கனடா நாட்டிற்க்கு தெரிய வாய்ப்பில்லை. அம்ருதாஅமெரிக்காவில் இனி நுழைய முடியாது. வெளி நாடு எங்கும் செல்லவில்லை.

புது ஐடி, டாகுமன்ட்ஸ் செய்து எங்கு வேண்டுமானாலும் செல்லெலாம்.

அவர் செய்தது நியாயமா?

*****

சிறு குறிப்பு, சிறு வயதில், மதுரையில் ஆர்த்தியின் நிக் நேம், அமு.

இது ஒரு கற்பனை கதை தான்!

சினிமா - மலரும் நினைவுகள்!


இந்த பதிவு, இந்த இரண்டு பதிவுகளுக்குசம்பந்தம் கிடையாது... மன்னிக்கவும்....

அடுத்த ஓராண்டு தமிழ்ச்சினிமா இல்லை?

சினிமா - மலரும் நினைவுகள்!

ஏதோ என்னால் முடிந்தவரை நான் எழுதியுள்ளேன்.

சரி இதோ கேள்வி பதில்.

*********

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதலில் பார்த்தது என் அப்பா அம்மா அழைத்து சென்ற 'அமர் அக்பர் அந்தோணி' அமிதாப் நடித்தது. சிறு வயது ஒரு ஆறு இருக்கும். இன்னும் நினைவில் உள்ளது. இருட்டு . சிகரெட் புகை வாசம்... போப்கார்ன். பேல் சாட். பாண்டா. ஜாலியாக இருந்தது. அப்புறம் அக்காவின் ஜடை இழுத்து திட்டு வாங்கியது, மறக்கவில்லை. படம் கடைசியில் தூங்கி விட்டேன். காலையில் வீட்டில் எழுந்தேன். படம் முடிந்து விட்டதா என்று கேட்டேன். ஒரே அழுகை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. பெங்களூர். ஒரு தப்ப தேயடர்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கிழக்கே போகும் ரயில். என் மனைவி ரசித்த படம். டிவிடி வாங்கினோம். முதல் சீனில் இருந்து எனக்கு பிடித்தது. சினிமா என்றால் ஒரு நல்ல திரைக்கதை வேண்டும். பாரதி ராஜா அருமையாக செய்துள்ளார். தமிழ்நாடு மண் வாசம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பல. இருந்தாலும் காமடியில் சதி லீலாவதி. காதலில் ஒரு தலை ராகம். அருவெறுப்பு நியூ. அப்புறம் அழகி, வெற்றி கோடி கட்டு, இப்படி பல. என்ன இருந்தாலும் வீடு என்று ஒரு படம், பாலு மகேந்திராவின் படைப்பு. ஒரு கிழவரின் நடிப்பு (சதி லீலாவதி தாத்தா?) ... சரியான அடி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இதயக்கனி என்று ஒரு எம்.ஜி.ஆர். படம், சமீபத்தில்
டிவிடி பார்த்தேன். மலை தோட்ட தொழிலாளி சப்ஜெக்ட். அருமை. அதில் அவர் இரட்டை இல்லை சின்னத்தை அழகாக அறிமுகம் செய்து ஆட்சி பிடித்தார். 1977.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

வெய்யில். அந்த மஞ்சள் நிறம் காமிரா பில்டர். அருமை. கொஞ்சம் வருத்தம்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறையா டைம் இருக்கு. ஜே.கே.ரித்தீஷ். பற்றி தெரிந்து கொள்ள குமுதம், விகடன் மற்றும் பல ப்லோகர்ஸ்.

7.தமிழ்ச்சினிமா இசை?

டப்பாங்குத்து, ஒரு முறை 'நாக்க மூக்க' கேட்டு பார்க்கவும். அப்புறம் அந்த அராபிய ராய் இசை சுடல். இரைச்சல். பெங்காலி திரைப்படம் அந்த வகையில் பெட்டர். ஹரிப்ரசாத் சொவ்ராச்யா போன்றவர்கள் இசை அமைப்பார்கள். ரவிஷங்கரும் செய்தார். (காந்தியில் அவர் தான் இசை.)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பெங்காலி, மராட்டிய மற்றும் ஹிந்தி படங்கள். ஓம் சாந்தி ஓம். மிகவும் பிடித்தது. ஆங்கிலத்தில் நேற்று இரவு பார்த்த ராண்டம் ஹார்ட்ஸ். ஹாரிசன் போர்த் நடித்த படம். உணர்ச்சிபூர்வமான நடிப்பு. அதை தான் நண்பர் ரமேஷ் அரவிந்த் ஆக்சிடன்ட் என்று கன்னடத்தில் எடுத்தார். படம் ஹிட். அப்புறம் மீண்டும் மீண்டும் பார்ப்பது, மகேன்னாஸ் கோல்ட். என்ன அருமையான திரைக்கதை. இதே லெவெலில் தி கூட். தி பேட். தி அக்லி.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆம். மற்றும் இல்லை. யாரும் என் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். ராம் கோபால் வர்மாவோடு ஒரு முறை பேசினேன். என் பெங்காலி நண்பரோடு ஒரு படத்திற்கு திரைக்கதை அமைத்தேன். அந்த கதை ஹிந்தியிலும் எடுத்தார்கள். தமிழில் வராது. குத்து பாட்டுக்கு சான்ஸ் இல்லை. அந்த படம் வேண்டுமானால் நான் டைரெக்ட் செய்கிறேன். என்னிடம் பல கதைகள் உள்ளன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருப்தி படுத்த.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாதி செத்து விட்டது. பாக்யராஜ் போன்றவர்கள் படம் எடுக்க வேண்டும். இப்போது சிம்பு ஒரு வித்தியாச கோணத்தில் எடுக்கிறார். அப்புறம் இந்த சென்னை இருபத்தி எட்டு, சரோஜா, கோவா டீம். நான் தமிழ் சினிமாவிற்கு வந்தால், நல்லாட்சி அமையும். காவிரி பிரச்சனை தீர்த்து வைப்பேன். இது உறுதி!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோசம். ஆயிரம் படங்கள், அல்லது குறைந்த பட்சம் முன்னூற்றி அறுபத்தி ஐந்து உலக படங்கள் பார்ப்பேன். நன்றி.

தமிழர்கள் டிவி பார்பார்கள். பழைய படங்களையே இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக என்று சொல்லி பதினெட்டாம் முறை போடுவார்கள், அப்போது பார்பார்கள். அப்புறம் அழுகை டிவி சீரியல்கள் உள்ளன. கோலங்கள். சொந்தம். ... வீடா... போன்றவை. ஜவ்வு இழுப்பார்கள்.


புதிய நைஜிரியன் ஆன்லைன் திருட்டு

இந்த மெயில் பாருங்கள். என்னுடைய யாஹூ அக்கவுண்டில் இருந்து திவ்யாவிற்கு அனுப்பினார்கள் சில நைஜிரியன் ஆன்லைன் திருடர்கள். நல்ல வேலை அவர் என்னோடு காலை தன் பேசினார். எட்டு மணி நேரத்திற்குள் எப்படி நைஜீரியா என்று கேட்டார்!

அந்த ஈமெயில் ஐடி ப்லோக் செய்தேன். என் அரசாங்க செக்கூரிட்டி நண்பர்களுக்கு சொல்லியுள்ளேன்.

இது உங்கள் கவனத்திற்கு. கவனமாக இருங்கள்.

****************************************************************************************
How are you doing today? I am sorry i didn't inform you about my traveling to Africa for a program called "Empowering Youth to Fight Racism, AIDS, Poverty and Lack of Education,It as been a very sad and bad moment for me over here and the present condition that i found myself is very hard for me to explain.

I am really stranded in Nigeria because I forgot my little bag in the Taxi where my money, passport,documents and other valuable things were kept on my way to the Hotel am staying, I am facing a hard time here because i have no money on me to clear my Hotel bill, I am now owning a sum $2000 for my Hotel bill.

I need you to help me out with a sum of $2,500 urgently so that i can arrange and travel back home,I need this help so much and on time because i am in a terrible and tight situation here, I don't even have money to feed myself for a day which means i had been starving so please understand how important and urgent i needed your help.

I am sending you this e-mail from the city Library and I only have 30 min, I will appreciate what so ever you can afford to send me immediately through Western Union or Money Gram and I promise to pay back your money as soon as i return home so please let me know on time so that i can forward you the details you need to transfer the money through Money Gram or Western Union.

Regards
Rmaesh
****************************************************************************************

மேலே உள்ள மெயிலில் என்னுடைய கையெழுத்து தப்பு!

இந்த மெயிலை என் மனைவிக்கும் அனுப்பினார்களாம்.

திவ்யாவும் நானும் நன்றாக சிரித்தோம், இதை பார்த்து.

பார்த்ததில், படித்ததில் பிடித்தது

சூப்பர் சாமியார்... கொள்ளை அடிக்கும் குஜாலகடி கும்மாளம். அட்லாண்டா வாசிகள் ஏமாந்த கதை. (விளம்பரம்... என் அக்கவுண்டில் பணம் போடுங்கள் ... மன அமைதி குடுக்குறேன்.. கியாரண்டி இல்லை!)




நல்ல கவிதை... அன்புள்ள அம்மாவிற்கு .......

அப்புறம் திவ்யாவின்... இந்தியர்களும் யுஎஸ் எலெக்சன் முடிவும்

செல்போன் இல்லாத வாழ்க்கை

செல்போன் இல்லாத வாழ்க்கை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.

அது இருப்பதால் என் தொழில் ஓடுது... எங்கிருந்தாலும் கால் எடுக்கலாம்... (பாத்ரூம் தவிர...)

எனக்கு இன்டர்நெட் வேணும்... பாட்டு வேணும்.

கார்லே போகும் போது சைலென்ட் மோட்.

அப்புறம் சினிமா தியேட்டர். மிஸ்ட் கால் பார்த்து கூப்பிடனும்.

அப்புறம் வருஷம் ஒரு புது போன் வாங்கணும்.

துர்க்கா பூஜா

நேற்று பெங்காலில் (ஏன் இந்திய முழுவதும்) துர்க்கா பூஜா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய தசமி மற்றும் தஷேரா.

தசமி என்பதி துர்காவை ஆற்றில் விடுவது. விநாயகர் சதுர்த்தி போல.

நேற்று மதியம் செய்தார்கள்.




கல்கத்தாவில் கோலாகலம். இதை பார்க்க வெளி நாட்டு ஆட்கள் வருவார்கள்.

பங்கு வர்த்தகம்

இங்கே ஒரு நல்ல ப்லோக்.

பங்கு வர்த்தகம் இந்தியாவில் ஒரு மாயை.

தயிரியம் உள்ளவர்கள் தான் விளையாட (?) வேண்டும்.

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வீடு வாங்குங்கள் முதலில். வாடகை மாதிரி அதற்க்கு கட்டுங்கள். கொஞ்சம் தங்கம் வருடம் ஒரு முறை வாங்குங்கள். அப்புறம் மிச்சம் இருந்தால், பாதி
ஸ்டாக் மார்க்கெட் பாதி பிக்ஸ்ச்ட் டெபாசிட்.

என்னை பொறுத்த வரை, இடமும் தங்கமும் வாங்கலாம். ஒரு பகுதி ஸ்டாக் மார்க்கெட்.

பணம் பண்ண சில வழிகள் உள்ளன.

இந்தியாவில் மொத சேமிப்பு 24% அதில் 3% மட்டும் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் போகிறது. எல்லாம் வெளி நாட்டு பணம் தான் வருகிறது. அதுதான் ப்ரோப்ளம். அவர்கள் தும்மினால், நமக்கு காய்ச்சல்.

அளவோடு ஆசை பட்டால், வளம்.

Thursday, October 9, 2008

நான் ரசித்த பாடல்: துர்கா விஸ்வநாத்



http://www.durgaviswanath.com/v2-img/home-01bw.jpgதுர்கா விஸ்வநாத்!

சத்தியவான் சாவித்திரி

இன்று நடிகர் ரமேஷ் அரவிந்த் (நிஜ பெயர்) மீட் செய்தேன்.

அவரிடம் காமடி செய்த ரோல் எது நன்றாக செய்தீர்கள் என்று கேட்டேன்.

உடனே பதில் வந்தது. சதி லீலாவதி. தமிழ். கமல் கலக்கியிருப்பார். எனக்கு பிடித்தது கோவை சரளா செய்யும் டைமிங், கட்டு கத்தல் வேற....கன்னடத்தில் ராமா ஷாமா பாமா வந்தது. கமலும் மங்களூர் கன்னடா (மலையாள, ஸமஸ்கிரது மிக்ஸ் ஏசி) நடித்தது...வெள்ளி விழா படம். அவர் தான் டைரக்ட் செய்தார். விழா மேடையில் அவர் உட்காரவில்லை. தமிழர் என்பதால். அப்போது காவிரி பிரசனை.

சந்திரமுகி செய்த போது, விழாவின் போது பி.வாசுவும் இப்படி தான்.

கன்னட நடிகர்களில் ஹீரோ கணேஷ் நன்றாக காமடி செய்கிறார் என்றார். அவருடைய மூங்காறு மாலே ( கோடை / மான்சூன் மழை? ) படம் ஒரு சூபர்ஹிட் என்றார். எவ்வளவு ஒற்றுமை.

சரி இன்னொரு காமெடி சொல்லுங்கள் என்றேன். சாத்தியவான் சாவித்திரி, டைரக்டர்
அஜதா சத்ரு படம் என்றார். பெரிய ஹிட். மூன்று வருடம் முன்ன வந்தது. யாருங்க அவர் பேரு வித்தியாசமா இருக்கு என்றேன். "நான் தான்" என்றார். "ஒரு கன்னட டச், சிறு வயது முதல்". என் இரண்டாவது டைரக்சன். நல்ல மனிதர். ஒரு சிறு குழந்தை வைத்திருந்தார் அவர் மனைவி. ரமேஷ் அரவிந்த் என் வயது இருக்கலாம். மேற்கொண்டு கேட்கவில்லை.

அப்புறம் அவர் ஆக்சிடான்ட் படம் பற்றி கேட்டேன். என் பெங்கால் நண்பர்அவரோடு திரைக்கதை அமைத்தது. சுமாராக போயிற்று என்றார். தமிழில்அதை எடுக்க முயற்சி செய்யலாம் என்றார். மூலம் ஹாரிசன் போர்ட் நடித்த படம். 1999 வந்தது. Random Hearts. ஒரு பெண் பார்வையில்.... இவர் ஆண் பார்வையில்... அவளளவு தான், கன்னடபடுத்தி.. ஹீரோ ஒரு ரேடியோ ஜாக்கி. சுடும் போது ஹீரோ ஹீரோயின் தொழில் மாறும். மனைவி இறந்து விட, அதுவும் கூட வேலை செய்யும் தோழனோடு... அப்புறம் the யூசுவல் ...ஆனால் ஒன் லைன் 'நீதிக்கு தலைவணங்கு' போல இருக்கும் என்றார். த்ரில்லேர்? யாராவது சொல்லுங்கள்.

அவர் தமிழ் சரியாக படிக்க மாட்டாரம்... ப்லோக் எல்லாம் ஆங்கிலம் தான்.

ஹீரா போன்ற நடிகைகள் அவரை தமிழில் இருந்து துரத்தி விட்டனர். கடைசி படம் பஞ்ச தந்திரம். அப்புறம் அதே சமயத்தில் மும்பை எக்ஸ்பிரஸ்.

அப்புறம் ஒரு கொசுறு நியூஸ். இவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மகன் ஒருவரோடு படித்தவர்.

அப்புறம் எங்க வம்ச கதை படத்தில், கமல் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார். (மர்மயோகி)

*****

இன்னைக்கு ஆர்த்தி கதை தட்டனும். வேலை மோக களியாட்டம். ப்லோக் உலகம் எல்லாம் சைலன்ட். வாசகர் குறைவு. ஆயுத பூஜை லீவு ... அதான். திங்கள் முதல் மீண்டும் கும்மிதொடரும்... அப்படியா?

அப்புறம் எங்கள் ஊர் (கல்கத்தா) துர்க்கா பூஜா இன்று. ரொம்ப மிஸ் செய்கிறேன். அது தான் கெஞ்சி கேட்டு பூரி டிபன்.

மனைவி பூரி சுட்டுள்ளார். நேற்றைய சுண்டல், உருமாறி இப்போது காபூலி சன்னாவாக உருபெற்று தட்டில் காத்துக்கொண்டு உள்ளது.

ஆறு சின்ன பூரி போதும். நூறு கிலோ எடை தொட்டு விட்டேன். பயம்.

நான் என்னை கண்டிக்கிறேன்

இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி இருக்கு, ப்லாகர் அலம்பல்.

ஒவ்வொருததுரம் அவரை இவரை கண்டிப்பது.

இன்னைக்கு கொஞ்சம் வேலை பிசி. (ப்லோக் எழுதறதை விட்டுட்டு எதுக்கு?)

அதுக்காக என்னை 'நான் என்னை கண்டிக்கிறேன்!'

கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !

லக்கிலுக்கை கண்டிக்கிறேன்!

ஆஸ்திரேலிய அணியைக் கண்டிக்கிறேன் ...

குசும்பணை கண்டிக்கிறேன்.

ஜோக் தான். நல்லா தான் இருக்கு.

- எழுத்தாளர் ரமேஷ்

எழுத்தாளர்

எழுத்தாளர் ஆக ஆசைபட்டேன்
மன வலிமை இல்லை

குடும்ப சூழ்நிலை
கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை

வேலை செய்தேன் காசு வந்தது
குடும்பத்தில் திருப்தி இருந்திச்சு

பாடகரா வருவதற்கு குரல்
ராகம் நுணுக்கம் வேண்டும்

கொடுத்து வைத்தது அவ்வளவு
தான் என்று தொண்டை கட்டிச்சு

ப்லோக் எழுதுறது ரொம்ப
ரொம்ப நல்லா இருந்துச்சு

இப்போ நான் எழுத்தாளர்
ஆயிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு!

பிழைகள்

நேற்று ஆயுத பூஜை. கம்ப்யுட்டர் அருகே கொஞ்ச நேரம் தான் மனைவி விட்டார்.

தமிழ் தடுமாறுகிறது.

அப்புறம் நான் எழுதும் தமிழ் இன்னும் ஹிந்தி/மராட்டி/பெங்காலி டப்பிங்என்று மனைவி சொல்கிறார். இருந்தாலும் உங்களுக்கு புரிகிறது அல்லவா.

நீங்க நல்ல இருக்கீங்களா? என்பதை தமிழர்கள் நல்லா இருக்கீங்களா, நீங்க என்பார்கள் என்று கேள்விபட்டேன். என் மனைவி என்னோடு எப்போதும் ஒரு ஆங்கில தமிழ் கலவை பேசுவார்.

ஒரு உண்மை, இப்போது எல்லோரும், இங்கிலிசை டப் செய்து தமிழ் பேசுகிறார்கள். நிஜம்.

என் பயன் எப்பவும் இங்கிலீஷ் தான் பேசுகிறான். தமிழ் புரிந்து கொள்கிறான். ஹிந்தி சுத்தம். மகளோடு ஒரு வருடமாக கன்னடம் கொஞ்சம் பேசுகிறான்.

நான் வீட்டிற்குள் மராட்டி நுழைக்கவில்லை.

இன்னைக்கு கொஞ்சம் கதைகள், அப்புறம் சில கவிதைகள் எழுதனும். அப்டேர் the வொர்க்.

Wednesday, October 8, 2008

முடியாத இரவுகள்

இது எனது இருநூறாவது பதிவு.

*************************************

என் பெயர் இந்தியா
விடிந்தால் நான் சுதந்திர நாடு
பிரகடனம் எப்போது?
நடு நிசி என்று சொன்னார்கள்
ஜோசியர்கள் இரவை பிடிக்க
இரவு என்னை நன்றாக பிடிக்க..
நான் சொன்னது
நம் கொடுமை இரவுகள்!
என்று விடியும்?
கொண்டாட்டங்கள் இல்லா
முடியாத இரவுகள்.


(இந்தியாவே கவிதை சொன்னா எப்படின்னு உக்காந்து யோசிச்சேன்...)

ஆப்கானிஸ்தான்

காலித் ஹூசைனி என்பவர் எழுதிய தௌசாந்து ச்ப்லேண்டிட் சன்ஸ் என்பது மிகவும் ப்ரிபலம்.


A Thousand Splendid Suns

அதில் எப்படி வார் லார்ட்ஸ் ஆப்கனிஸ்தான் நாட்டை, அதுவும், கொஞ்சம் பெர்சிய, கொஞ்சம் மேற்கு பலுசிஸ்தான் மற்றும் கால் வாசி தஜிகிஸ்தான்கொண்டு உருவாகியது... ப்கானி மொழி தஜிகி தான். நூறு வார்லார்ட்ஸ் சேர்ந்து உருவாக்கியது... ஆயிரம் வார்லார்ட்ஸ் ஆக இப்போது வலுபெற்று உள்ளது. குட்டி பெரிய தாதாகள்.

அமெரிக்காவிற்கு எங்கோ அது பிடிக்கவில்லை. ஆயில் வேற அங்கு உள்ளது. போர் போட வேண்டும். நாட்டை பிடித்து விட வேண்டும்.

மழையும் மலை சார்ந்த் பிரதேசம். வார்லார்ட்ஸ் அங்கு இருந்து மறைந்து விடுவார்கள். பின் தோன்றுவார்கள்.

தியான பூமி. புத்த பிட்சுகள் அங்கு தான் சென்றார்கள்.

ஈபடியாக பின் லாடேன் தன் குழுவோடு சூடானில் இருந்து வந்து அங்கே முல்லா ஊமருடன் தங்கி விட்டான். இப்போது அவர்கள் பாகிஸ்தானில்இருப்பாதாக கேள்வி. அதனால் தான் புஷ் அங்கு குண்டு போடுகிறார்.

வித்தியாசங்கள், இந்தியாவை பார்க்கும் போது. புத்திசாலிகள். அதி.

கொங்கு நாடு

கொங்கு நாடு என்பது மேற்கு கங்கா வம்ச அரசர்கள் ஆண்ட பூமி. காலம் கி.பி. 350 முதல் 529.

கிழக்கு கர்நாடகாவும், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் சேர்ந்தது. அந்தகாலத்தில் இந்த ஏரியா புளியும் புலியும் பிரபலமாம். நிறைய பெண்கள் தான் ஆட்சி பண்ணி இருக்காங்க. அரசர்கள் எல்லாம் கூத்தடிசாங்க.

அனால் பேச்சு மொழி
கன்னடம் , தெலுங்கு மற்றும் தமிழ் தான்.

கொஞ்சம் மலையாளம் உண்டு மங்களூர் ராஜாங்கம்.

வடக்கு
கர்நாடகாவை ஆண்டவர்கள் போசலேக்கள். இந்தப்பக்கம் சாளுக்கியர்கள்.

கண்டராவரசி புகழ் வட்டாள் நாகராஜ் இதை தான் குறிப்பிடுகிறார். (ஆமாங்க, அவர் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி போய் பார்த்தார்!)
உக்காந்து யோசிபாங்களோ?

ரொம்ப கஷ்டமுங்க. ஆகா மொத்தம் தமிழ்நாடு தான் அந்த காலத்தில் மிகபெரிய நாடு. எல்லோரும் வந்து கொஞ்சம் போர் பண்ணி, ஆழ பார்த்தார்கள்.

அப்புறம் குறு நில மன்னர்கள், டிஸ்ட்ரிக்ட் லெவல் மற்றும் ஜமீன்தார்கள்.

எங்க தாத்தாவுக்கு தாத்தா அவுரங்காபாத் அருகே ஒரு ஜமிந்தாராம். சிவசுந்தரராவ். எங்க தாத்தா ஒரு முறை சொல்லி இருக்கார். சைவ சித்தாந்த விற்பன்னர். அவர்களுக்கு கங்கா வம்சதின ராஜாக்கள் தான் இடம், நிலம் கொடுத்தார்களாம். கொல்ஹபுர் அருகில் இன்னும் ஆயிரம் வருஷத்திய கோவில் உண்டு.

பிறகு ப்ரிடிஷ்காரனுக்கு
டாக்ஸ் கட்டாதனாலே, ஜாமீன் டேக் ஓவர் பண்ணினாங்களாம். அப்புறம் காடுகளில் மாடு மேச்சி ஒரு பெரிய வம்சம் உண்டு பண்ணியிருக்காங்க.

அப்படி வந்த கங்கா வம்ச கதை தான் மர்மயோகியில் கமல் எடுக்கிறாராம். எங்க தாத்தா கனவில் வந்து சொன்னார். இந்த ராஜ கதை தான் நானும் ஒரு நாள் படமா எடுக்க போறேன்.

இது ஒரு வரலாற்று ஆவணம்.

ரஜினி நியூஸ்


செம தமாஸ் - கிளிக் பண்ணி பாருங்க.


அப்புறம் எந்திரன் படம்

பிரா திருடன்

பிரா திருடன் சில பேர் மூளை எப்படயோ வேலை செய்யும்.

(நியூ யார்க்கில் நான் வேலை செஞ்சப்போ, என் ரூம் மேட் ஒருத்தியோட ப்ராவெல்லாம் ஒரு லாண்டரியிலே எவனோ சுட்டுட்டான். பரிதாபம். அங்கே லாண்டரி மிசின் கடையிலே இருக்கும். இல்லே அபர்த்மண்டுக்கு மொத்தமா ஒரு இடத்தில் இருக்கும்.)

பரா போட்டோஸ் தேடினேன்... இந்த நியூஸ் கண்ணில் பட்டது.

Carmen Kontur-Gronquist

இந்த போட்டோவில் இருக்கும் பெண், ஒருமேயர்.

தமாசுக்கு இப்படி மை ஸ்பேசில் போட்டோபோட்டாரம்.

வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

- கார்மன் கொண்டூர்

இவீங்க இம்சை தாங்க முடியலீங்க!

தற்கொலை

தற்கொலை ஒன்றும் முடிவல்ல.. கடைசி வரை வாழ்ந்து பார்ப்பது தான் மனிதன் சவால்.

அமெரிக்காவில் ஒரு இந்தியர். இப்படி செய்தது ஞாயமா? சூன்யம்.

திவ்யாவின் பதிவு... அமெரிக்கா குடும்பம் சோகம்

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை!

என் அக்காவும் பரிதாப பட்டார்.

சில சமயம் சில நிகழ்வுகள்.

Tuesday, October 7, 2008

ஆயுத பூஜையும் மூட நம்பிக்கையும்

நாம் தொழில் செய்யும் ஆயதங்களை நம்புவோம். ஆனால் ரெகுலராக சர்விஸ் செய்வோம்.

அமெரிக்காவில் டேலைட் சேவிங்க்ஸ் டைம் வரும் போது தானாக வீட்டில் பயர் அலாரம் பேட்டரி மாற்றுவார்கள்.

ஆயுத பூஜை மட்டும் செய்தால், சர்விஸ் வேண்டாம் என்று நினைக்கவேண்டாம்.

சாமியும் கும்பிடுங்கள். சர்விசும் செய்யுங்கள்.

மூட நம்பிக்கை.

அது விவேக் சொன்ன எழுநூற்றி சொச்சம் ஸ்பேர் பார்ட்சில் ஓடாத வண்டியா ஒரு எலுமிச்சங்காயினாலே ஓடுது? (அந்த எலுமிச்சை ஆடுறதை பார்த்து ரோடில் நிற்கும் மிருகங்கள் ஓடிவிடும் என்றும் சொல்வார்கள்!)

சிந்தித்து பாருங்கள்.

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
!

தமிழர் பார்வை, ஒரு அழகான பதிவு

கரிகாலன் அவர்கள் தமிழர் பார்வையில் எழுதுகிறார். வாசியுங்கள் .

மிகவும் நன்றாக எழுதறீங்க.

அய்யா பெரியாரின் அகண்ட தமிழ்நாடு விருப்பம் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்கள்.

He wanted all Tamils under one umbrella and rule. Please check with Suba.Veerapandian.

I feel the self rule with dignity is the best option, provided there is truce all over. Norway is working very hard.

Could you please detail out all the Tamil political democratic parties that are working (or earlier) in SriLanka for this. Would caste or religion be a matter of principle there?

நீங்கள் இப்போது அங்கு உள்ள நிலைமை குறித்து புகைப்படம் (கோகோ கோலா ஸ்பான்சர்து கேம்ஸ் எல்லாம் வேண்டாம்) போடுங்கள்.

நன்றிகள்.

சவ்ரவ் கங்குலி தாதா ஓய்வு : உலக கிரிக்கட்

எனக்கு கிரிக்கட் விட பூட்பால் கால்பந்து தான் அதிகம் பிடிக்கும். பர்சனல் சாய்ஸ். ஆண்மையான குறுகிய கால விளையாட்டு. முரட்டுத்தனம்.

இன்றைய ரிப்போர்ட்....
உலக கிரிக்கட் : கங்குலி தாதா ஓய்வு - என் மனைவி அவர் பேன். சிறு வயதில் இருந்து கிரிக்கட் ரசிகை!

சவ்ரவ் கங்குலி வாழ்த்துக்கள். (
சவ்ரவ் என்றால் எல்லாம் நிறைந்தவன் என்று பொருள் ). ரொம்ப சவுரியமா இருக்கான்டா.

பெங்காலில் (கல்கத்தா) பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும்.

எங்கள் வீடு அவர் வீட்டு அருகில் தான். பணக்காரர்கள். பிரிண்டிங் பிரஸ். ஒரு ராஜா குடும்பத்து சொந்தம். நிஜமாகவே ராஜா மாதிரி டிரஸ் செய்வார்கள். அவர்கள் இருந்த இடம் பெஹலா.அவர்கள் வீட்டு பக்கத்தில் நல்ல சாட்ஸ் கிடைக்கும். சிறு பயனாக கங்குலியை மிக அருகில் பார்த்த ஞாபகம். அவர் பயின்ற விக்டோரியா ஸ்கூலுக்கு பூட்பால் ஆட செல்வோம். என் அக்காவின் மெடிக்கல் காலேஜ், அவர் படித்த சேவியர் காலேஜ் அருகில்.

அவருடைய அண்ணன் ஸ்நெஹாஸிஸ் என் வயது. எதோ ஓர்
பூட்பால் மாட்ச் சேவியர் காலேஜ் கிரௌண்டில் ஆடியதாக நினைவு. கிரிக்கட் பேட்டிங் நடத்தினார் என்று அவர் மீது குற்றசாட்டு இருந்தது என்று என் பெங்கால் போலிஸ் நண்பர் கூறினார். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ? மீண்டும் ரிஜ்வான் கொலை கேசில் அவருக்கு பெயர் பாதிப்பு. அவர் குடும்பத்திற்கும் காதுலும் ஆகாது. இருந்தாலும் சவ்ரவ் சாதித்தார். சாட் கடைக்காரர் மகளை கை பிடித்தார். அவர் நாட்டியம் ஆடுவார்.

அப்புறம் சவ்ரவ் நக்மா உறவு தமிழ்நாட்டுக்கு தெரியும். காசுள்ளவன் பண்ணும் வேலை. சின்னவீடு.

Certain things are better understood the way it is!

அவர்கள் குடும்பம் துர்கா பூஜாவிற்கு பெரிய பந்தல் அமைக்கும். (நாங்கள் இப்போது பெங்களூரு விஜயா பேங்க் லே அவுட்டில் வைத்துள்ளோம்...). கீழ் ஜாதிக்காரர்கள் போக கூடாது உள்ளே என்பார்கள். பந்தலுக்கு அதிக பணம் கொடுத்தவன் நான் தான். சாமிக்கு ஒக்கே.

முடிவு

முடிவுகள் முடிவாய்
இல்லாத வரை
முடிவு முடிவு தான்.

இதயம்
மூளை
கண்
உடல் உறுப்புக்கள்
முடிவுள்ளவை...

மனதிற்கு மட்டும்
முடிவு கிடையாது!


( inspired by the recent organ donor episodes )

டர்கி நடிகை பாடகி : செர்டப் எறேனேர்

பிரிட்னி ஸ்பியர்ஸ் விட நல்லா இருக்கு... நல்ல பாடகி... நடிகை...

செர்டப் எறேனேர்

கொஞ்சம் அரேபியா வகை ராய், மையா மையா மாதிரி...

ஒன்று




இன்னொன்று

மொய்

கல்யாண பந்தல்
உறவுகள்
உணவு
உபசரிப்பு
கடைசியில்...
மொய் அங்க எழுதிருங்க...

திருந்த மாட்டார்கள்
பண்பாட்டு
குசும்பர்கள்!

டாடா நானோ குஜராத்தில் தயாரிப்பு...

டாடா நானோ குஜராத்தில் தயாரிப்பு...



நல்ல முடிவு.

வெஸ்ட் பெங்கால் ஏனுங்க இப்படி பண்ணுனீங்க? அவுட் பிரகாஸ் கரட்.

இதுக்கும் திரிணமூல் பி.ஜ.பி. கவர்மன்ட் சப்போர்ட் பண்ணிச்சு!

ஒருத்தன் தோத்தா தான், ஒருத்தன் ஜெயிக்க முடியும்...

பரிசல்காரனின் சிறப்புப் பார்வை : அபியும் நானும்

அபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை very nicely written....



But you missed telling where it was suttufied... அனுபம் கேர் 'டாடி' தானே இது?

காசு (99 ரூபாய்கள்) கொடுத்து சி.டி. வாங்க சொல்றார்... பிரீபீஸ் நல்லா இருக்காம்.

காசு கொடுத்து? What are you talking.. High speed Download இருக்கு நம்ம கைய்ல!

Net -> PC -> Laptop -> (friends) -> Ipod (small, big)... -> burn a CD for backup.

இப்படி போகுது லைப்!

ராதா மோகன் கவலை பட வேண்டாம். என்னோட கதை ஒன்னை சுடாம இருந்தா சரி. சுட்டாலும், காசு கொடுத்துடுங்க. 99 வேற... லட்சம் வேற. (அந்நியன் டயலாக் அஞ்சு பைசா அஞ்சு பேர் அஞ்சு வருஷம்.. வேண்டாம்...)

அவர் 'மொழி' ஒரு தெலுங்கு படத்திலே...பேர் மறந்திடுச்சு.. ஒன் லைன் சுட்டு.. அதாவது.. கதை வந்து... ஒரு சின்ன ஊமை பொண்ணு அக்கா கிட்டே உலகம் எப்படி சத்தம் வருதுன்னு கேட்பாங்க... அதை அந்த அக்கா எக்ஸ்ப்ளைன் பண்றது.. அழுகை வரும்.. பேபி ஷாலினி மாதிரி யாரோ நடிச்ச படம்... verybeautiful movie...

யு மீன் கிண்டல்?

வாய் விட்டு சிரியுங்க... மீன் கிண்டல்... அஜித் and விஜய் ... புரிஞ்சால்...


தேங்க்ஸ்... அப்புறம்... ரைட் சைட்லே பாருங்க யூடுப் சைட்லே.

அழைப்பு: கோழி புடிக்க?

அழைப்பு, படிக்கத் தவறாதீர்கள் ;-) நல்ல கதை சொல்றார்... with a social meaning?

அப்புறம், நண்பர் ஒருவர் சுட்டி காட்டியது... இப்பதான்... Surveyசன் எழுதுனது...

"hey John, if you are free over the weekend, could you join us for கோழி புடிக்க?"

என்னங்க சொல்றார் இவர்.... உக்காந்து யோசிபாய்ன்களோ?

அப்புறம்... மேலும் சுவையான விஷயம் தெரிய...

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு அப்படினூ.. கூகிள் சர்ச் பண்ணுங்க.

எழாயிரம் எட்டாயிரம்


என் கதைகள் தான் கூட்டம் கூட்டியது... அப்புறம் மற்ற பதிவுகள்.

எழாயிரம்
ஹிட்ஸ் அக்டோபர் ஐந்தாம் தேதி...

எட்டாயிரம் ஹிட்ஸ் அக்டோபர் எழாம் தேதி...

தினம் சுமார் ஐந்நூறு வாசகர்கள் வருகிறார்கள்.

நன்றி.

அப்புறம்... மண்டே டு பிரய்டே தான் அதிகம் வருகிறார்கள்.

ஆபிஸ் டைம் ஜாலி... அப்படிதானே?




படித்ததில் பிடித்தது

இங்கே படியுங்கள்... அழகாக எழுதுகிறார்...

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 7

வெரி இண்டரெஸ்டிங் டாபிக்.

அப்புறம்.. சாமான்யன் அருமை.,

இதையும் படீங்க...
பால் கலர்ஸ் திவ்யா எழுதுறாங்க.

Monday, October 6, 2008

ஒருவனுக்கு பயமும் முக்கியம்

ஒரு பிரபல எழுத்தாளர் நான் ஏற்கனவே எழுதியதியுள்ளேன் அவரை பற்றி.. பௌலொ கொஎல்ஹொ... அவர் ப்ளோகில் இருந்து... இதோ...

How does one tell the difference between intuition and fear? How do you know if you’re intuiting something, or whether it’s coming from your human hopes or fears?

The difference between intuition and fear is that your intuition will guide you towards action, while fear only paralyzes. As Jorge Luis Borges says in his writings "there is no other virtue than being brave". And one has to understand that braveness is not the absence of fear but rather the strength to keep on going forward despite the fear.

Your intuition is your guide out of fear.

ஒருவனுக்கு பயமும் முக்கியம். மனசாட்சி காக்கும்.

படித்ததில் பிடித்தது...


கிழே உள்ள பதிவில் நண்பர் லக்கிலுக் மோகன கிருஷ்ணா குமார் (அது தான் பேருன்னு ஒரு பதிவுலே சொன்னார்!)

எழுத்துலக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்!

அப்புறம் லாஸ்ட் 2 மொந்த்ஸ்... பெல்ட் தட் ... ப்லோக்கிங் இஸ் குட் கனெக்டிங் மிடியம்.

அப்புறம் இன்னொன்னு... தாமிரா என்கிறவர் எழுதுனது.

ஞாநிக்கு என் பதில் அப்படின்னு எழுதியுள்ளார்...

கிவ் and டேக் பாலிசி...

அப்புறம் லதானந்த்...
வெல்கம் பாக் ... ஒரு பதிவு நீண்ட நாட்கள் பிறகு போட்டுள்ளார்...... மறுபடியும்…….

திங்கள் நல்லாவே விடிஞ்சிருச்சு...

காத்திருக்க முடியாது

நிச்சயமாக புரிகிறது
காத்திருக்க முடியாது
காதல் என்ன ஐஸ் பாக்சிலா?
இல்லை பொட்டலத்திலா?

அது வரும் நேரத்தில்
கட்டாயமாக வருகிறது
காதல் நிற்காமல்
நெஞ்சுக்குள் ஊறுகின்றது

கண்மணி என்னை காக்க வைப்பதில்
என்ன நியாயம்?
காதலுக்கு நேரம் இல்லையடி
அழகு பெண்ணே!

(என் மனைவிக்கு நான் எழுதியது... பத்து வருடம் முன்பு!)

இதை படியுங்க








.
.


வெர்ஜின் குரூப் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் ஒரு விளம்பர விரும்பி... காரணம் உள்ளது.

அவர் யாரையும் நம்புவதில்லை.. பிசினஸ் மோதல்கள் யாரும் கிடையாது.

நண்பர் எழுதிய இந்த பதிவை ஆங்கிலத்தில்... பாருங்கள்...

தன் முயற்சி.. விருப்பம்... வெர்ஜின் ஏர்வேய்ஸ் ... வெர்ஜின் மொபைல் ...டாட்டா குரூப் இடம் ஒப்பந்தம் என்பன இவர் எடுத்த ஒரு மனதான முடிவுகள்.

மேவரிக் என்றும் சொல்லலாம்...


நாக்க மூக்க



வீக் எண்டு எல்லாம் ஆடல் பாடல் தான்... நாக்க மூக்க அடித்த அடி சூப்பர்...குழந்தைகள் ஆர்பாட்டம்...

சன் டிவி பிச்சர்ஸ் ... கலாநிதி மாறன்... அரசியல்... மதுரை மக்கள் பஸ் ஏறிபக்கத்து ஊரில் சென்று பார்க்க வைத்த கொடுமை... தாங்கலைங்க...

நாக்க மூக்க என்பது பறையடி வகை சார்ந்த பாடல். மாடு செத்தால்.. அந்ததோலை எடுத்து அதில் பறை செய்து, தப்பட்டை அடிப்பது ஒரு வாத்தியவழக்கம்.. ஒரு மரணத்தின் ஓலத்தில் விளைந்த அற்புதமான பாடல்..

சரியான் குத்து அது... இசையும் உண்டு, அப்புறம்... ஆட்டம்... (என்ன ராகம் என்பது கேள்வி இல்லை இங்கே...)

விஜய் டிவியின் யார் அடுத்த பிரபு தேவா என்ற ப்ரோக்ராம் பார்த்து என் குழந்தைகள், கஷ்டப்பட்டு அந்த கால் தூக்கி ஆடும் மூவ்மன்ட்ஸ்செய்தார்கள்... டிவி சில வகையில் நல்ல பொழுதுபோக்கு தான்..

எனக்கு?

பறை பறை என்று பார்த்தீபனும், லாரன்சும் ஆடி பாடல் (தங்கரின் படம்?) நினைவுள்ளது...

இவர்கள் தான்... விடாதீர்கள்!


இவர்கள் எல்லோரும் தான் காரணம்... அமேரிக்கா பினன்சியால் க்ரைசிஸ்

விட்டு விடாதீர்கள்... பணக்காரர்களுக்கு சப்போர்ட் இவர்கள் தான்...

என்ன சொல்ல வரேன்னு சொன்ன... தேவையில்லாமல் எல்லோரையும் வீடு வாங்க வைத்து... அந்த கடனை பண்டமாற்று மாதிரி ஸ்டாக் மார்க்கெட்டில் போட்டு... குழப்பி... பல நாடுகள் பணம் போட்டு... இன்னும் குழப்பி... எனையும் குழப்பி... அப்புறம் உங்களையும் குழப்பி...

வாழ்க்கை ஓடுதுங்க...