Tuesday, October 7, 2008

சவ்ரவ் கங்குலி தாதா ஓய்வு : உலக கிரிக்கட்

எனக்கு கிரிக்கட் விட பூட்பால் கால்பந்து தான் அதிகம் பிடிக்கும். பர்சனல் சாய்ஸ். ஆண்மையான குறுகிய கால விளையாட்டு. முரட்டுத்தனம்.

இன்றைய ரிப்போர்ட்....
உலக கிரிக்கட் : கங்குலி தாதா ஓய்வு - என் மனைவி அவர் பேன். சிறு வயதில் இருந்து கிரிக்கட் ரசிகை!

சவ்ரவ் கங்குலி வாழ்த்துக்கள். (
சவ்ரவ் என்றால் எல்லாம் நிறைந்தவன் என்று பொருள் ). ரொம்ப சவுரியமா இருக்கான்டா.

பெங்காலில் (கல்கத்தா) பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும்.

எங்கள் வீடு அவர் வீட்டு அருகில் தான். பணக்காரர்கள். பிரிண்டிங் பிரஸ். ஒரு ராஜா குடும்பத்து சொந்தம். நிஜமாகவே ராஜா மாதிரி டிரஸ் செய்வார்கள். அவர்கள் இருந்த இடம் பெஹலா.அவர்கள் வீட்டு பக்கத்தில் நல்ல சாட்ஸ் கிடைக்கும். சிறு பயனாக கங்குலியை மிக அருகில் பார்த்த ஞாபகம். அவர் பயின்ற விக்டோரியா ஸ்கூலுக்கு பூட்பால் ஆட செல்வோம். என் அக்காவின் மெடிக்கல் காலேஜ், அவர் படித்த சேவியர் காலேஜ் அருகில்.

அவருடைய அண்ணன் ஸ்நெஹாஸிஸ் என் வயது. எதோ ஓர்
பூட்பால் மாட்ச் சேவியர் காலேஜ் கிரௌண்டில் ஆடியதாக நினைவு. கிரிக்கட் பேட்டிங் நடத்தினார் என்று அவர் மீது குற்றசாட்டு இருந்தது என்று என் பெங்கால் போலிஸ் நண்பர் கூறினார். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ? மீண்டும் ரிஜ்வான் கொலை கேசில் அவருக்கு பெயர் பாதிப்பு. அவர் குடும்பத்திற்கும் காதுலும் ஆகாது. இருந்தாலும் சவ்ரவ் சாதித்தார். சாட் கடைக்காரர் மகளை கை பிடித்தார். அவர் நாட்டியம் ஆடுவார்.

அப்புறம் சவ்ரவ் நக்மா உறவு தமிழ்நாட்டுக்கு தெரியும். காசுள்ளவன் பண்ணும் வேலை. சின்னவீடு.

Certain things are better understood the way it is!

அவர்கள் குடும்பம் துர்கா பூஜாவிற்கு பெரிய பந்தல் அமைக்கும். (நாங்கள் இப்போது பெங்களூரு விஜயா பேங்க் லே அவுட்டில் வைத்துள்ளோம்...). கீழ் ஜாதிக்காரர்கள் போக கூடாது உள்ளே என்பார்கள். பந்தலுக்கு அதிக பணம் கொடுத்தவன் நான் தான். சாமிக்கு ஒக்கே.

No comments: