தமிழர்களும் சாதிகளும் - நான் ரசித்த பின்னூட்டம் (ப்ளோகில் தான்!) இது என்னுடைய கருத்து கிடையாது...
=============================================================
தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.
வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.
தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் - அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.
தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.
பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.
உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.
இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு
அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.
இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.
என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.
இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.
அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.
ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.
உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை - அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் - தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.
இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.
இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது