Thursday, May 28, 2009

பிச்சையும் காசும்

பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!

********

இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)

Monday, May 25, 2009

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது

கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது - ஐலா தான் அதன் பெயர்.

ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!

லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.

ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.

************

ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.

என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.

Sunday, May 24, 2009

மந்திரிகள் முடிவு

தி.மு. குடும்பம் தான் கட்சி அரசியல், எல்லாம். என்ன செய்வது, தமிழ்நாட்டுக்கு விதி அப்படி. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் செய்தது சரி என்றே தோன்றுது!

பேரம் பேசுவதற்கு சென்ற கூட்டம் டிவியில் பார்த்தேன். டி.ஆர்.பாலு இல்லை! அய்யோ பாவம்!

அவர்கள் குடும்பம் என்ன செய்ய போகிறது. காசை அள்ளுவார்கள். பாவம் தயாநிதி மாறன், டெக்ஸ்டைல்ஸ் துறையாம்... கிளிஞ்சது... நல்லது செய்வார் என நம்புகிறேன்! கனிமொழி பெண்களுக்கு ஏற்ற துறை. நிறைய டிவியில் பேச வேண்டும். நன்றாக செய்வார். மீண்டும் ராஜா .டி. மற்றும் தொலை தொடர்பு துறை - வேலை ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தலைவருக்கு தோல் கொடுக்க வேண்டும். என்ன இந்த 3G பிசின்ஸ்ஸை கொல்லுவார். எல்லாம் டிலே ஆகும், கம்மி விலைக்கு கம்பெனிகளுக்கு கொடுத்து, மார்க்கெட் ரெட் வித்தியாசம் ஆளுக்கு பாதி. ஒரு லட்சம் கோடி அனைவரும் சேர்ந்து அடித்தார்கள்.. ஜெயலலிதாவிற்கு மீண்டும் அட்டேக் செய்ய வாய்ப்பு.

பாவம் டி.ஆர். பாலு , தலைவர் குடும்பத்திற்கு உழைத்தது வீண். இப்போ துணை சபாநாயகர். என்ன ஆகும்? ஐந்து வருடம் வேஸ்டா? அதிலும் எதாவது லாபம் இருக்கும். மரியாதையான போஸ்ட்.

சரி இன்னும் மூன்று லக்கி ஆட்கள் யார் யார்? பழனிமாணிக்கம் - கலைஜர் ஆள். அப்புறம் ஜெகத்ரட்சகன், ஜாதி புது கட்சி செய்வார், மீண்டும் வந்துவிட்டார்... இன்னும் ஹெலன் டேவிட்சன் - சுற்றுலாத்துறைக்கு ஒரு துணை பதவி. பேசுவார்களா?

தமிழகத்தில் இருந்து ஒரு முஸ்லீம் கூட ஆட்சிக்கட்டிலில் இல்லையா?

தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பார்களா? சம உரிமை அங்கு எப்போதும் வேண்டும்!