Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Tuesday, September 16, 2008

சமையல்: இந்தியாவும் அமெரிக்காவும்

அமெரிக்காவில் சமையல் செய்வது சுலபம்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு அங்கே இருப்பதால் இப்போதெல்லாம் அங்கேவெஜிடரியன் தான் பேசன்.

ஒரு எக் ட்ரோப் சூப் இரண்டு அல்லது மூன்று டாலர்கள். பன் ரோல்ல்ஸ் சிலதுஒரு டாலர் இருக்கும். பன்னை கட் பண்ணி சீஸ் தடவினால் போதும், சாப்பாடுஓவர். ஐஸ் கிரீம் ரெகுலர் ஆக சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.

டோர்டில்லஸ் என்பது மெக்சிகன் சப்பாத்தி. ஊருகாயோடு சாப்பிட்டால் நிம்மதி.
சிலர் பழங்கள் கட் பண்ணிய டின் ஒன்று மட்டும் தின்பார்கள். அல்லது மாக்கிநூடுல்ஸ் மாதிரி ஒரு பாக்கெட்.

ஆனால் மக்டோனல்ட்ஸ், பர்கர் கிங் போன்ற இடங்களுக்கு சென்றால், உங்கள்உணவு தேவை, கலோரி அளவில், எகிறி விடும்.

குளிர் பதனபெட்டியில் (பிரிஜ்) வைத்து சாப்பிடுவது அங்கே வாடிக்கை.

இந்தியாவில் அரிசி சாப்பாடு. பிறகு சப்பாத்தி அல்லது ரொட்டி. சாம்பார் அல்லதுஒரு கூர்மா. பிறகு காய். அப்பளம். ஓவர் வெயிட் ஒருவர் ஆக எவ்வளவு ஈசி. சிலசமயம் மணக்க கொஞ்சம் நெய்.

காலை உணவு ஒரு உப்புமா அல்லது இட்லி என்று ஓடும். தக்காளி சாப்பாடுகாலையும், மதியமும், மீந்தால் இரவும் சாப்பிடுவது எங்கள் வீட்டில்.

தோசை டைம் அடுக்கும் பதார்த்தம். சுடுவது ஈசி. தொட்டுக்கொள்ள சட்னி செய்வது ஒரு யுத்தம் நடைபெறும் களம். கரண்ட் போய்விட்டால், கிடைப்பது மிளகாய் போடி அல்லது ஊறுகாய்.

இதில் நான்-வெஜிடரியன் என்றால் மணக்க ஒரு சிக்கன் / மட்டன் / மீன். அந்தகவலை எனக்கு மட்டும். இப்போது நிறுத்தி விட்டேன்.

இருந்தாலும் நாம் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் ஏழைகள் உள்ள நாடு!