Showing posts with label பெர்க்சயர் ஹாத்வே. Show all posts
Showing posts with label பெர்க்சயர் ஹாத்வே. Show all posts

Friday, September 26, 2008

வாரென் பபே: பெர்க்சயர் ஹாத்வே

வாரென் பபே மிக சிறந்த தொழில் அதிபர். அவர் நடத்தும் பெர்க்சயர் ஹாத்வே ஒரு மிக பெரிய நிறுவனம். இன்று அவர் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார். அமெரிக்கா எட்டு பில்லியன் டாலர்கள் இப்போது கோல்ட்மன் சச் இன்வேச்ட்மன்ட் பாங்கிற்கு முதலீடு செய்தார்.

இன்றைய ஸ்டாக் மதிப்பு அமேரிக்கா டாலர் 133,100 மட்டுமே. அதாவது சுமார் ருபாய் 61,22,600 (அறுபத்தி ஒரு லட்சத்து இருபத்தி இரண்டயிரத்த்து அறுநூறு). என் குழந்தைகள் இருவரை வாரிசாக போட்டு விட்டேன், சரி பங்காக.

மார்ச் 1992 சமயத்தில் நான் ஒரு ஸ்டாக் 8,700 டாலருக்கு வாங்கினேன் (ருபாய் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம், அது வரை அங்கு மிச்சம் செய்தது), எனது புது டாக்டர் மச்சான் அறிவுரை படி. இன்று அது பதினைந்து முறை வளர்ந்துள்ளது பதினாறு வருடத்தில். நாற்பது முறை ஆகி உள்ளது. வருடத்திற்கு ஐம்பத்து சதவிகித வளர்ச்சி. ஸ்டாக் பிரிக்க மாட்டார்கள். போனஸ் கொடுக்க மாட்டார்கள். அதே பணத்தை இன்போசிஸ் ஸ்டாக் வாங்கி போட்டிருந்தால் இப்போது அது ருபாய் இரண்டாயிரம் கோடி ஆகியிருக்கும். சொந்த் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு ப்லோக் செய்திருப்பேன். அரசியல்வாதி ஆகியிருக்கலாம். எல்லாம் அதிர்ஷ்டம் என்றும் சொல்லெலாம்.

இடையில் பத்தாயிரம் டாலர்கள் டிவிடென்ட் ஆக கொடுத்து விட்டனர். ஆனால் வருட வருடம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்குஅமெரிக்காவில் டாக்ஸ் கட வேண்டும். இந்தியாவிலும் கணக்கு காட்டவேண்டும்.

பெர்க்சயர் ஹாத்வே ஒரு சிறிய நூற்பாலை. ஆனால் முக்கிய வேலை கம்பெனிகளில் முதலீடு செய்வது. மூசுவல் பண்டு ஆக எடுக்க வேண்டாம். வரை முறைகள் ஜாஸ்தி. ஒரு அளவுக்கு மேல் பண்டு நடத்த விழா எடுக்ககூடாது. இந்த வருடம் மட்டும் நாற்பது பில்லியன் டாலர்கள் காசாக வைத்திருந்தார்.

வாரென் பபே ஒரு மகா கஞ்சர். வருடத்திற்கு நான்கு முறை தான் துணி எடுப்பாராம். ஆனால் நல்ல மனது. உலகத்திற்கு பணம் சொத்தில் முக்காவாசி எழுதி வைத்து விட்டார் ( ஏழைகளுக்கு செலவு செய்ய, நோய், நிவாரணம்). பில் கேட்ஸ் அடுத்த படி இவள் தான் உலகில் பெரியபணக்காரர்.

நியூ யார்க் செவெந்த் அவனூவில் (மண்ஹட்டன்) ஒரு முறை திஜிஐஎப் ஹோடேலில் பார்த்து, அட்டோக்ராப் வாங்கியுள்ளேன். அதுவே இப்போது ஒரிஜினல் என்றால் பத்தாயிரம் டாலர் கிடைக்குமாம்.