Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, March 31, 2011

உலக கோப்பை வெற்றி

இந்தியா உலக கோப்பை வெற்றி அடையுமா? இது கேள்வி.

பாகிஸ்தானை நன்றாக ஜெயித்தது, பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.

ஒரு ஜோக்

நிருபர்: இந்தியா கடைசிச்சுற்றுக்கு வந்திருக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? மன்மோகன் சிங்: I don't know

டிவிட்டரில் பார்த்து ரசித்தது

@TupTamil: முரளிதரன் (தமிழன்) இருக்கும் சிறிலங்காவை வென்று உலக கோப்பை ஜெயிக்கனுமாம். கொடுமை. தமிழன் இல்லாத இந்தியா டீம் ( அஷ்வின்? )

சரி - ஹோரோரரியில் - சனியன்று இந்தியா வெற்றி தட்டு தடுமாறி பெறும் என்று தெரிகிறது.

Tuesday, June 8, 2010

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை

அமெரிக்காவில் இந்தியா சிறுமி சாதனை.... அவர் பெயர் காவ்யா சிவசங்கர்.... ஸ்பெல்லிங் பீ என்று சொல்லப்படும் வார்த்தை விளையாட்டில் இவர் 2009 வென்றார்.

ஒபாமாவுடன் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம்.... கிழே. எவ்வளவு பெருமை பாருங்கள் பெற்றோரின் முகத்தில்!

President Barack Obama on Thursday met with Kavya Shivashankar, left, the 2009 Scripps National Spelling Bee winner, and her family in the Oval Office. Joining Kavya were her sister, Vanya, and parents, Sandy and Mirle Shivashankar.

வாழ்த்துக்கள்.

Monday, June 7, 2010

இந்தியா திரும்புதல்

ஏப்ரல் எட்டு முதல் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.

நேற்று அதிகாலை வந்தோம்.

மேரிலாண்டில் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ஏரியா தான். அக்கா வீடு.

குழந்தைகள் பள்ளி விடுமுறை நன்றாக கழித்தார்கள்.

ஜூன் முதல் வாரத்தில், பத்து நாட்கள் ஐந்தாயிரம் மையில்கள் அமெரிக்கா முழுதும் சுற்றியது தான் விசேஷம்.

இன்று பள்ளி சென்றார்கள்.

அடுத்த வருடம் அங்கு செல்வோமா? தெரியலையேப்பா!

இந்தியா இந்தியா தான்!

***

ப்ளாகர் உலகில் தகராறு என்று படித்தேன்.

என்னையும் திவ்யாவையும் வைத்து கிண்டல் செய்த ஒருவன், இப்போது செய்வதை பார்த்தால் சிரிப்பு வருது.

ஒரு வருடமாக ஒருவரை ஒரு பெண், கிண்டல் கேலி பகடிகளால் துன்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு அவர் ஒரு பதில் புனைவு போட்டு எடுத்தாராம். இவ்வளவு நாள் தான் ஒருவர் பொறுத்துக்கொள்வார்?

சமரசம், நல்லது நடந்தால் சரி.

Thursday, April 30, 2009

கோவேரி கழுதையில் இந்தியா தேர்தல்

படம் பார்த்து புரிந்து கொள்க...




கிள்ளம்கொட்டா, வைசாக் அருகில் (மாவோவிச்டுகள் அதிகம் இங்கு...)

அப்புறம் ஒரு வோட்டு இருக்கும் பூத்து ( ஒரு பத்து பேர் பனி செய்ய வேண்டும் அதற்கு ). குஜராத்தில். கிர் காட்டின் உள்ளே ஒரு கோவில் பூஜாரிக்காக ( அங்கேயே வாழ்பவர்).

Monday, December 8, 2008

இந்தியா மாநில எலக்சன்கள் முடிவுகள்

சமீபத்தில் ஆறு மாநில எலக்சன்கள் நடைபெற்றன. இன்னும் ஜம்மு காஸ்மீர் பாக்கி.

இன்று ஐந்து எண்ணப்படுகிறது. மக்களுக்கு என்ன லாபம்?

ராஜஸ்தானில் பி.ஜே.பி. விழுகிறது, காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

டெல்லியில் காங்கரஸ் ஆட்சி தொடர்கிறது.

மத்ய பிரதேஷில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

ஷடீஷ்கரில் பி.ஜே.பி. ஆட்சி தொடர்கிறது.

மிசோராமில்
காங்கரஸ் ஆட்சி பிடிக்கிறது.

மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி.

Wednesday, November 5, 2008

தேர்தல்: இந்தியாவும், அமெரிக்காவும்

இந்தியாவும், அமெரிக்காவும் தேர்தலில் சளைத்தவர்கள் இல்லை போல.

சில இடங்களில் தனித்து போட்டி இடுகிறார்கள். ஐம்பத்து சதவிகிதம், வாக்குகள் வேண்டும். எதிராளி இல்லாமல், இந்தியாவில் முடியுமா? அன் அப்போசிட்.

இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பிலேதேல்பியாவில், சில கவுன்டிகளில் ஒபாமாவிற்கு 100% வோட்டுக்கள் விழுந்துள்ளன! அதை அனுமதிக்கிறார்கள்!

கள்ள வோட்டு இந்தியா போல இல்லை எனலாம்...

ஆனால், எனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பு உள்ளது.

நான் 1992 எலெக்சன் டைம் நியூ யார்க்கில் இருந்தேன். அப்போது தான் லைசன்ஸ் வாங்கினேன். ஆடோமாடிக்காக என்னை, வோட் லிஸ்டில் இணைத்து விட்டார்கள். எனக்கு வோட்டளிகுமாறு, பில் கிளிண்டன் மற்றும், பலர் எனக்கு லெட்டர் போட்டார்கள்.

நல்ல வேலை பார்டி ஒன்றிக்கு ரெஜிஸ்டர் செய்யவில்லை.

இப்போது, வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன! இப்போது பேசிய நண்பர் கூறினார், அவரது கணவர், ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதிகாலை அவர்கள் இருக்கும் அபார்த்மன்டில் டோனட்ஸ் பாக்கட் கொடுத்தாராம்!

எல்லாமே தமாஸ் தான்!

அமேரிக்கா தேர்தல், இந்திய கண்ணோட்டம்

ஒபமாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! முதல் கறுப்பர் (வெள்ளை + கென்யா கருப்பு)... ஆண்டவன் அமெரிக்கவைகாபற்றுவான், ஜார்ஜ் புஷ்ஷின் தந்திரம் இல்லாமல்... இதுவரை ஒரு நியூஸ் வரவில்லை, அவர் பற்றி. நாளை சாவகாசமாக, ஒப்புக்கு சப்பாணி வாழ்த்து தெரிவிப்பார்! அவருக்கு டெக்சாஸ் ஆயில் கம்பனி உள்ளது, என்ன கவலை!

எனக்கு மெக்கைனின் பழைய பிரசார வீடியோக்கள், யூடுபே மூலம் கிடைத்தன.

மனதிற்கு கஷ்டம், இந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கை கால்கள் இழந்த வீரர்களை பார்க்கும் போது!

சரி இந்தியாவிற்கு என்ன லாபம்?

முதலில் அரசியல் சரியாகும். சினிமா மூலம் வோட்டுக்கள் வராது என்பது அறிவுக்கு தெரிய வேண்டும்! அங்கேயும் அடி தான்!

ஐடி கம்பனிகளுக்கு, ப்ராப்ளம் தான்!

இராக்கிற்கு விடுதலை! ஆப்கநிஸ்தான்க்கு விடுதலை.

பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுப்பார் என்று சொல்கிறார். பார்க்கலாம்.

அப்புறம் இந்த பெட்ரோல் நாடுகளுக்கு வேண்டுகோள் வைத்து, விலை குறைக்க உதவ வேண்டும்.

Friday, October 24, 2008

இந்தியாவின் தேசிய கொடி கேவலபடுத்தபட்டது





கொஞ்ச நேரம் முன்னாடி நண்பர் ஒருத்தர் அனுப்பியிருந்தார்.

Friday, October 10, 2008

பங்கு வர்த்தகம்

இங்கே ஒரு நல்ல ப்லோக்.

பங்கு வர்த்தகம் இந்தியாவில் ஒரு மாயை.

தயிரியம் உள்ளவர்கள் தான் விளையாட (?) வேண்டும்.

என் நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வீடு வாங்குங்கள் முதலில். வாடகை மாதிரி அதற்க்கு கட்டுங்கள். கொஞ்சம் தங்கம் வருடம் ஒரு முறை வாங்குங்கள். அப்புறம் மிச்சம் இருந்தால், பாதி
ஸ்டாக் மார்க்கெட் பாதி பிக்ஸ்ச்ட் டெபாசிட்.

என்னை பொறுத்த வரை, இடமும் தங்கமும் வாங்கலாம். ஒரு பகுதி ஸ்டாக் மார்க்கெட்.

பணம் பண்ண சில வழிகள் உள்ளன.

இந்தியாவில் மொத சேமிப்பு 24% அதில் 3% மட்டும் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் போகிறது. எல்லாம் வெளி நாட்டு பணம் தான் வருகிறது. அதுதான் ப்ரோப்ளம். அவர்கள் தும்மினால், நமக்கு காய்ச்சல்.

அளவோடு ஆசை பட்டால், வளம்.

Wednesday, October 1, 2008

படித்ததில் பிடித்தது

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள்

இது இன்னும் தொடரும் போல. வாழ்த்துக்கள். நன்றி.

ஆங்கிலத்தில் இதுவும் படிக்கலாம்....

ஆசியன் இந்தியன் அமெரிக்கன்ஸ்

எப்படி இந்தியர்கள் அங்கு பாடுபடுகிறார்கள் என்பது தெரியும். டாக்டர்ஸ் ஆர் திபெஸ்ட் பரீட். இல்லே? (என் அக்காவும் மச்சானும் டாக்டர்ஸ் ;-))

Monday, September 22, 2008

இந்தியா அரசியல்

அரசியல், வாரிசு, கமிசன் போன்றவைகள் இல்லாமல் இருந்தால், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் நாற்காலி பிடித்து கொள்ளும் பயம் இல்லாமல் இருந்தால் நாடு சுபிசமடையும்.

அமெரிக்காவில் கோல்டன் கேட் பிரிஜில் ஒரு நாள் ஒரு குழந்தை விழுந்து விட்டாள் சிறு ஓட்டையில். உடனடியாக, மாநகராட்சி மன்னிப்பு கேட்டது. ஓரிரு நாட்களில் தவறு எல்லாம் சரி செய்யப்பட்டது.

ஹீரோ வொர்ஷிப் என்பது இந்தியாவில் ஒழிக்க வேண்டும்.

அப்போது தான், இப்போது நடக்கும் கூத்துகள் (காமடி நடிகர் ஹீரோ நடிகரை எதிர்த்து பேசுவது) இருக்காது.

சிறு துளி பெரு வெள்ளம். அதனால் தான் இந்த ப்லோக் இடுகை.

*****

என் ப்லோக் நண்பர்களே, திட்டி எழுதினால் ஆட்டோ அனுப்பும் காலம் இது.

நல்ல வேளை, நான் நடு நிலைமையோடு இருக்கிறேன்.

Tuesday, September 16, 2008

சமையல்: இந்தியாவும் அமெரிக்காவும்

அமெரிக்காவில் சமையல் செய்வது சுலபம்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு அங்கே இருப்பதால் இப்போதெல்லாம் அங்கேவெஜிடரியன் தான் பேசன்.

ஒரு எக் ட்ரோப் சூப் இரண்டு அல்லது மூன்று டாலர்கள். பன் ரோல்ல்ஸ் சிலதுஒரு டாலர் இருக்கும். பன்னை கட் பண்ணி சீஸ் தடவினால் போதும், சாப்பாடுஓவர். ஐஸ் கிரீம் ரெகுலர் ஆக சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.

டோர்டில்லஸ் என்பது மெக்சிகன் சப்பாத்தி. ஊருகாயோடு சாப்பிட்டால் நிம்மதி.
சிலர் பழங்கள் கட் பண்ணிய டின் ஒன்று மட்டும் தின்பார்கள். அல்லது மாக்கிநூடுல்ஸ் மாதிரி ஒரு பாக்கெட்.

ஆனால் மக்டோனல்ட்ஸ், பர்கர் கிங் போன்ற இடங்களுக்கு சென்றால், உங்கள்உணவு தேவை, கலோரி அளவில், எகிறி விடும்.

குளிர் பதனபெட்டியில் (பிரிஜ்) வைத்து சாப்பிடுவது அங்கே வாடிக்கை.

இந்தியாவில் அரிசி சாப்பாடு. பிறகு சப்பாத்தி அல்லது ரொட்டி. சாம்பார் அல்லதுஒரு கூர்மா. பிறகு காய். அப்பளம். ஓவர் வெயிட் ஒருவர் ஆக எவ்வளவு ஈசி. சிலசமயம் மணக்க கொஞ்சம் நெய்.

காலை உணவு ஒரு உப்புமா அல்லது இட்லி என்று ஓடும். தக்காளி சாப்பாடுகாலையும், மதியமும், மீந்தால் இரவும் சாப்பிடுவது எங்கள் வீட்டில்.

தோசை டைம் அடுக்கும் பதார்த்தம். சுடுவது ஈசி. தொட்டுக்கொள்ள சட்னி செய்வது ஒரு யுத்தம் நடைபெறும் களம். கரண்ட் போய்விட்டால், கிடைப்பது மிளகாய் போடி அல்லது ஊறுகாய்.

இதில் நான்-வெஜிடரியன் என்றால் மணக்க ஒரு சிக்கன் / மட்டன் / மீன். அந்தகவலை எனக்கு மட்டும். இப்போது நிறுத்தி விட்டேன்.

இருந்தாலும் நாம் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் ஏழைகள் உள்ள நாடு!

Thursday, August 21, 2008

இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் நிச்சயம்

இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் நிச்சயம், விஜேந்திர குமார் மூலமாக. குத்து சண்டை. எழுபத்தி ஹயிந்து கிலோ எடை பிரிவு.

வரும் வெள்ளி மதியம் என்ன மெடல் (பிரோன்சு கண்டிப்பாக) என்பது தெரியும்.

ஆகா மொத்தம் மூன்று பதக்கங்கள். முதல் முறையாக இந்தியாவிற்கு. இன்னும் யாரவது ஸுர்ப்ரிஸெ கொடுப்பார்களா?

வாழ்த்துக்கள்!

Wednesday, August 20, 2008

மல்யுத்தம் இந்தியா வெற்றி - சுஷில் குமார்

படியாலவை சேர்ந்த இந்தியா ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெற்றி பெற்றார் அறுபத்தி ஆறு கிலோ எடை போட்டியில்.

பிரான்சு மெடல் வெற்றி பெற்றார். சேமி பினல்ஸ் தோல்வி. மனம் தளராமல், பிரான்சு மெடல் போட்டியில், போவுள் கொடுத்த பின்னும் வெற்றி பெற்றார்.

லாலு பிரசாத் யாதவ் சொன்ன மாதிரி ஒரு கோடி ருபாய் பரிசு நிச்சயம்! (தங்கதிற்கா?)

அவர் ஒரு சிறப்பான முயற்சி செய்தார். வாழ்த்துக்கள்.

56 வருடம் கழித்து இப்போது இரண்டு மெடல்கள் இந்தியாவிற்கு.

(இத நேரத்தில் கே. டே. ஜாதவ் அவர்கள் நிலைமை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். அவர் தான் 1952 இல் ஹெல்சிங்கியில் முதன் முதலில் தனி ஒரு ஆளாக மெடல் வாங்கினார் (பிரன்சு). பரிதாபமாக செத்தார். அரசாங்கம் எதாவது செய்ய வேண்டும். பிறகு லீயண்டேர் பயெஸ் அட்லண்டவில் பிரன்சு மெடல் வாங்கினார் 1996 இல் )