சில கருத்துக்கள் நல்ல கோர்வை செய்யப்பட்டுள்ளது. நன்றி.
பெங்களூரில் தமிழ் படிக்க என் குழந்தைகள் பள்ளியில் நான் போய் கேட்டது உங்களுக்கு தெரியும். பிரின்சிபால் கேட்கிறார்...இரண்டு பேர் மட்டும் படிக்க வைக்க முடியுமா? மனைவி வீட்டில் சொல்லிக்கொடுக்கிறார்.
தமிழ் தெரியாமல், அதுவும், நான் காதல் செய்த போது, காதலி (இப்போ மனைவி) அவர் தமிழ் சொல்லிக்கொடுப்பார். தேர்ந்தெடுத்து, கெட்ட வார்த்தைகளாக கற்றேன். அப்புறம் இரண்டு வருடத்தில், ஒரு மசாலா கலவையாக... அப்புறம் 1994 முதல், கவர்மென்ட் ட்ரைனிங் முடித்தவுடன், சென்னை வந்த போது, டாகுமென்ட்ஸ் எல்லாம் தமிழில்.
கஷ்டப்பட்டு படித்தேன். இப்போது உங்களுக்கே தெரியும், கதையெல்லாம் எழுதும் அறிவு. நல்ல வேலை மறதி கிராமர் ஸ்டைல் தமிழ் மாதிரி தான். டப்பிங் ஈசி. என் மனைவியும் மராட்டி பழகி விட்டார், என் அம்மாவுடன் பேசும் அளவு. ஹி ஹி. (பேசுகிறார்கள் தான்..)
தாய்மொழி தவிர ஒரு நாட்டு மொழி படித்துவிடுவது நல்லது. இந்தியாவில் ஹிந்தி படிக்காவிட்டால் (ஜெயலலிதா ராமர் கோவில் கட்டும் விஷயம் பற்றி சொன்ன மாதிரி) வேறு எங்கு போய் படிக்க முடியும்? ஹிந்தி பேசுவது 60% பேர். எல்லோரும் திணிக்கவேண்டாம் என்று சொல்வது ஒக்கே தான். ஆனால், மூளை வளர்ச்சி பெற, அச்சுதானந்தன் மாதிரி ஆகாமல் இருக்க ஹிந்தி அவசியம்.
அட யோசிச்சு பாருங்க, ஹிந்தி இல்லாவிட்டால் டெல்லி மும்பை எர்போர்ட்டுகளில், நீங்கள் டாக்சிக்கு இரண்டு மடங்கு கொடுப்பீர்கள், நிச்சயம்... பாதி ஆட்கள் சாப்ட்வேர், வெளிநாடு என்று செல்பவர்கள் தனி ராகம்...
அப்புறம் இந்த ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்றவை... யுரோப் டூர் போகும் போது, பாதி காசு மிச்சம் செய்யலாம் மொழி தெரிந்தால். இண்டர்நெட்டில் தேடும் அளவு பயிற்சி வேண்டும். ஒரு ஸ்டைல் தான்... தாட் பூட் தஞ்சாவூர் என்கிறார் மனைவி. எனக்கு புரிகிறது. உங்களுக்கு?
எனக்கு என் தாய்மொழி எழுத படிக்க தெரியாது... கொஞ்சம் தான் தெரியும். நல்லா பேச தெரியும், மராட்டி. ரஜினிகாந்தும் அப்படி தான். ஆனால் அவர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி அருகே நாச்சிகுப்பதில் பிறந்தவர். நானோ கல்கத்தாவில்... அதனால்...பெங்காலியில் விட்டு விளாசுவேன்.
நரி குறவர்கள் சொல்வார்கள் ஒரு எம்.ஜி.ஆர் படத்தில்... தாம் டிக்கோ தமுக்கு டப்பா... அதன் அர்த்தம் இன்னும் தெரியவில்லை. அது என்ன?
இப்போவெல்லாம், தமிழ் கெட்டவார்த்தையில் பாட்டு வருகிறது. மொழி அறிவு உச்சத்தில்.... அடல்ட்ஸ் ஒன்லி... ஜாக்கிரதை. ஆபீஸில் ஸ்பீகர் ஆப் ப்ளீஸ்.