Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, September 25, 2009

கவிதையாய் ஒரு வீடு

முச்சந்தியிலும் ஒரு வீடு
அது வீடற்றவர்க்கு
புறம்போக்கில் பெறுவார்
சிலர் அரசியலினால்
நிம்மதி இருக்காது
சில ரவுடிகளினால்
சில தொந்தரவுகளினால்
மழையில் மிதக்கும்
சில வீடுகள்
படகும் இருக்கும்
சில இடங்களில்!
குளத்தை வாரி சுருட்டினால்
என்ன தான் நடக்கும் ?

நான் இன்னும் மறக்கவில்லை
என் தாத்தா காலத்து வீடு
அருமையான வேலைப்பாடு
அருமையான அறைகள்
காற்றோட்டமான ஜன்னல்கள்
ஒவ்வொரு ஜன்னலும்
ஒரு கதை சொல்லும்
காதலும் உண்டு
எதிர்வீட்டு கன்னியை பார்த்தது!
வீடு எப்படி என்று
யாருக்கு தான் ஆசையில்லை
புறாவிற்கும் இருக்கு வீடு
சரி நிதானம் தவறின் உங்களின்
வீடென்று எதைச் சொல்வீர் ?

Thursday, May 28, 2009

பிச்சையும் காசும்

பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!

********

இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)

Monday, May 4, 2009

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அனைவருக்கும் கொண்டாட்டம்

அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள்
அகில உலகிலும் பட்டையை கிளப்பும்

அரசாங்கம் கோட்டை விட்டு
அல்லும் பகலும் கரண்டிர்க்கும் அலையும்

அக்னி நட்சத்திரம் முடியும் நேரம்
அலைபாயும் மழை வரும்

அனைவரின் நெஞ்சத்தில் புது
அரசாங்கம் ஆட்சி அமைக்கும்

அன்பான தேசமிது திருடர்களையும்
அரவணைத்து பதவி தரும்!

Wednesday, April 29, 2009

கார்காலம்

கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்

வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்

மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்

கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை

ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்

சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்

இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!

Sunday, April 19, 2009

சோகம்

கண்ணுக்குள்ளே சோகம்
நண்பர்கள் இல்லை
வேலை செய்யும் இடத்தில்
ஏமாற்றும் சிரிப்பும்

இது ஒரு கவர்ச்சி நாடகம்
பார்த்தவர்களுக்கு புரியாது
புரிந்தாலும் தெரியாது
அறிந்தவர்களுக்கும் சாமன்யமில்லை

பவுடர் பூசும் முகமும்
வென்னிரமாக்கும் க்ரீமும்
புருவம் உயர்த்தி பேசுமழகும்
ஒரு நாகரீக நடிகன் ஆகிறான்

கடன் எனும் கந்துவட்டி
அலையன திரண்டு வரும் மக்கள்
வசுலாகுமா கேள்வி சுருங்கும் முகம்
வாங்க சார் லோன் நிச்சயம்!

Tuesday, March 10, 2009

என் கவிதை

என் கவிதை ஒன்று கிழே... (பழசு)

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

*************

இது புதுசு

காற்றினிலே சொல்லும் வார்த்தைகள்
கடலலை போல தவழ்ந்திடும்
உன் நெஞ்சத்தை அடைந்திடும்
உன் கண்ணீர் நெஞ்சினை மூழ்காதவரை!


Friday, January 9, 2009

மீண்டும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ

நான் எழுதிய பதிவு குறித்து நினைவு கூறுங்கள், கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும். இன்று நியூஸ் பேபரில் சில விஷயங்கள், எப்படி பெண்கள் ஆண்களுக்கு எதிராக பயன் படுத்துகிறார்கள் என்று.

என் எதிர் வீட்டுக்காரர் ஒரு ஸ்டுவர்ட். அவர் மனைவி ஸ்வீடன் நாட்டுக்காரி. தினமும் சண்டை. மாதம் பதினைந்து நாள் வெளி நாடு வேலை என்று சென்றுவிடுகிறார்கள். ஒரே சண்டை.

நேற்று நான் பெல் அடிக்க வேண்டிய நிலைமை! ஒரே சத்தம். அந்த பெண் வெளியே சென்று போலீசிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்துள்ளார். அப்போது எழுதப்பட்ட சட்டம் ஐ.பி.சி. செக்சன் 498 ஏ. தெரியவில்லை, ஏன் என்று.

ஒரு பாயின்ட், இன்னும் இருவரும் ஒன்றாக தான் உள்ளார்கள்.

போலிஸ் விஷயம் என்ன ஆயிற்று?

Tuesday, November 25, 2008

விண்வெளியும் மனதும்

நிலவை காட்டி சோரூட்டினேன்
பசியாறினான் மகன்
நிலவை காட்டி மகிழ்வு செய்தேன்
கொஞ்சினால் மகள்

உன் முகத்தில் நிலவு பார்க்கிறேன்
என்று சொன்னேன் மனைவியிடம்
அன்போடு தழுவி
ஆனந்தம் அடைந்தாள்

நிலவை பிடித்துவிட நீ
நன்றாக படித்துவிடு என்றேன்
அட போப்பா நீ
என்று சொன்னான் மகன்

Monday, November 10, 2008

குழப்பங்கள்

குழப்பங்கள் வந்து
போகும் காலம்
குறைகள் இல்லை,
நிறைகள் தான் எந்நாளும்

கவலைகள் விலகின
கவிதைகள் மருந்தானது
கசப்புகள் இல்லை
கதை கப்ஸாக்கள் உதவியானது

என் வீட்டு தோட்டம்
உன் வீட்டு தோட்டம்
கண்களில் நீர்
அவர்களை நினைத்து

என்று பிறக்கும்
விடிவு காலம்
என் அருமை
இலங்கை தமிழருக்கு!

Sunday, October 26, 2008

கவிதை உறங்கும் நேரம்

விடியாத இரவுகளின் கரிசனங்கள்
விடிந்த பின் தீராதா
முடியாத வேலைகளின் அலைச்சல்கள்
முடிந்த பின் தீராதா

உறங்காமல் இருபவனுக்கு மனக்கவலைகள்
மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி

Friday, October 24, 2008

பதிவுகளும் பாதைகளும்

பதிவுகளும் பாதைகளும் வேறு வேறு. அது சில சமயம் போதை ஆகும்.

ஒரு கவிதை அதை பற்றி!

மனதில் இல்லை காயம்
வழியில் எல்லாம் சாணம்
புரிகிறது வெக்கைகள்
ரோட்டில் ஆட்டு புழுக்கைகள்

எச்சில் கோழைகள்
ஊனத்திற்கு எரிமலைகள்
கையுன்றி நடப்பவர்களுக்கு
தெரியும் அதன் கஷ்டங்கள்

போதைகள் சில காவியங்கள்
அவை பயணங்களில் இல்லை
புரியாத மோகங்கள்
அவை காண்ட்ராக்ட் திருமணங்கள்!

*****
This is the post that influenced me to write this கவிதை!

ஊட்டி சென்று வந்த கதை - 2

Thangavel is a good writer, who comments on my blogs!

பரிசல்காரனின் கவிதை

பரிசல்காரனின் கவிதை (அவர் எழுதுனாரா இல்லே திருப்பூர் கவிஞர் வைரமுத்து எழுதுனாரா தெரியாது!)

அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன்
நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்!

சூப்பர்!

A poem is one which tells or simulates the state of an author to titillate the feelings of the reader!

மாட்டு சாணி, யானை சாணினு சிலர் கவிதைகளை கிண்டல் பண்றாங்கோ, அதனால் தான் கி.ரா. சொல்ற மாதிரி, அவீங்க இருக்க வேண்டிய இடத்தில் வச்சிருக்கான் அவன்.

கி.ரா. எழுதிய ஒரு வரி, நான் அவரை சென்னையில் ஜெயகாந்தனோடு ஒரு முறை சந்தித்த போது சிலாகித்து போய் சொன்னது.. (வார்த்தைகள் அப்படியே ரீபீட் முக்கியம் இல்லை, மீனிங் இது தானுங்) குழந்தை முலைப்பால் வேண்டாங்குது, மனம் கணம் கனக்க அவள் தூங்கும் குழந்தை பார்த்தாள்.. பின் செவிரிலே, தன் முலைப்பாலை பீச்சி அடித்தாள்...

True story artist! Brought in front of my eyes, the feelings of the village ladies feelings! I have seen the depiction of similar passion scene with dagger in Othello, by Shakespeare.

அப்புறம், பரிசல்காரனின் பதிவு, என் கதை! நெஞ்சை தொட்டது... நான் கேட்க வேண்டிய கேள்விகள், பதில் சொல்லியுள்ளார்!

Monday, October 20, 2008

சொல்லாடல்

சுகத்திற்கு இல்லை சொல்லாடல்
மனதிற்கு இல்லை தள்ளாடல்

வார்த்தைகள் வேண்டாமடி கண்ணே
உன் மௌனம் ஒன்று போதுமே!

நீ பேசும் மொழி தாலாட்டு
இதமாய் இருக்கிறது உன் பாட்டு!

காதலுக்கு ஏதடி கண்
கண்மூடி காதை வருடு தெரியும்!

(கவிதை காலையில் எழுதினேன்!)

**************
படித்ததில் பிடித்தது!

ஜ்யோவ்ராம் சுந்தரின் பார்வைப் பிழை .... நல்ல கவிதை! 1992 என்று சொல்கிறார்... நான் தமிழ் தட்டு தடுமாறி, என் மனைவி சொல்லிகொடுக்க படித்த வருடம்.

இப்போது புரிந்திருக்கும், ஏன் என் புது தமிழ் வாத்தியார் என்று சொன்னேன் என்று!

*************

அப்புறம் the யூசுவல். ஆயிரம் ஹிட்ஸ் இன் the போர்த் டே! 13000+ ஹிட்ஸ். 70 நாட்கள். அக்டோபரில் மட்டும் எழாயிரம் ஹிட்ஸ்!

நன்றி
.

கொஞ்சம்
ஸ்லோ தான்..

பரவாயில்லை
. திடம் முக்கியம்!


அப்புறம் என்னுடைய மலேசியா வாசகர்கள், என்னுடைய அலெக்சா ரேங்க் இம்ப்ரூவ் செய்தார்கள்!

Friday, October 17, 2008

கொடுமை

வாழ்க்கை ஒரு கொடுமை
அதை வாழ்வது மிக கொடுமை
கிடைப்பது தனிமை
நிறைவில்லா வெறுமை

தேடுவது புதுமை
நல்ல இனிமை
வேண்டுவது பொறுமை
பேசுவது அருமை

கேட்டது கிடைக்கவில்லை
பொழுதும் நிலைக்கவில்லை
போகவில்லை வறுமை
இது என்ன கொடுமை!

Thursday, October 16, 2008

இருநூற்றி ஐம்பதாவது பதிவு

இது எனது இருநூற்றி ஐம்பதாவது பதிவு ... நன்றிகள்...

வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

11,500 ஹிட்ஸ்.

எல்லாம் குறைந்த நாட்களில்.

மகிழ்ச்சி!

**********************************

தேடுவதெல்லாம் கிடைக்காது
நீ
தேடிசெல்வது தான் கிடைக்கும்
நினைப்பதெல்லாம்
நடக்காது
நீ
நினைப்பதை நடத்தி காட்டு!

காதலின் விதி

பதுங்குகிறாள் காதலி பயத்தோடு
நெருங்குகிறான் காமுகன் வெறியோடு
தொடுகிறான் அவளை உடல் பசியோடு
மயங்குகிறாள் அவள் முழு மனதோடு

அன்பும் பாசமும்
அறிவியல் நுணுக்கமும்
பண்பும் பயனும்
மனதில் மிகுந்தோட

சல்லாபத்தின் உச்சியில்
சரச நடனங்கள் செல்ல
உல்லாசபுரியில் உவமைகள்
உடலோடு நடனம் நடத்த...

இது தான் காதலின் விதியா
கல்லில் செதுக்கிய கட்டளையா?

எழுத்தாக்கம்

மொழி தெரியாதவன் எழுதினால்
அதை எழுத்தாக்கம் எனலாம்
கவிதை நடையை அங்கீகரிக்கலாம்
கதைகளை ரசிக்கலாம்

அறியாதவர்களுக்கு கோடிட்டு காட்டலாம்
அறிந்தவர்களுக்கு பாராட்டு சொல்லெலாம்
நண்பர்களுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்
குசும்பர்களுக்கு ஒரு குட்டு கொடுக்கலாம்

உணவு கவிதையாகாது
உணவில்லாதவன் எழுதும் வரை
எழுத்து எழுத்தாக்கம் ஆகாது
மொழி அறியாதவன் எழுதும் வரை!

வசந்த காலங்கள்

மனிதனுக்கு வரும்
வசந்த காலங்கள்
சோகங்கள் விலகும்
இசைக்கும் கோலங்கள்

கண்களில் இல்லை
கனா காணும் காலங்கள்
நெஞ்சினில் நிற்பது
பார்வையின் மோகங்கள்

தொழிலில் இருப்பது
சனதான தர்மங்கள்
விருப்பம் வேண்டுவது
ஏகத்தின் போகங்கள்

ஜாதி மதம் ஒழிக்கின்றன
வளரும் நாடுகள்
ஒரு மனதாய் நீங்கள்
பங்கு பெறுங்கள்

Wednesday, October 15, 2008

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

பிருந்தாவனம் உலகில் தான்
கோட்டைகள் பலவுண்டு
கொடிய நாகம மாமன் உண்டு
வீட்டிலேயே பகையுண்டு

கம்சா நீ தீர்ந்தாய் என்றாய்
ஒரு தினத்தில் கொன்றாய்
வான வேடிக்கைகள்
வாழ்க்கை சாஸ்திரங்கள்

பாகவதம் அருளினாய்
பிறப்பதால் ஒரு நன்மை என்றாய்
வாழ்ந்து பார்த்திவிடு, வளங்கள் பெற்றுவிடு
இது நீ சொன்ன கீதை

நல்லவை நன்மையாக
நடக்கும் என்றாய்
கலியுகத்தின் பாரம்
பாவங்களை ஏற்றாய்

ஆயர்பாடி கோபிகைகளுடன்
ஆட்டம் போட்டாய்
ராதை என்று ஒருவள்
வந்தவுடன் அடங்கி நின்றாய்

கவலை என்றால் கண்ணா தான்
அன்பு என்றால் கண்ணா தான்
ஆசை என்றால் கண்ணா தான்
உதவி என்றால் கண்ணா தான்

இனி நீங்கள் கண்ணா இல்லை
வாழ்க்கையில் கீதை சொல்லும்
பாகவதன் என்றாகி
இனி நந்தகுமாரனும் தான்!

எரிச்சல்

தொட்டதற்கெல்லாம் எரிச்சல் வேண்டாம்
வயதான காலத்தில் நல்லதில்லை
தேவையில்ல உடல் பிரசனைகள்
வேண்டாத வீண் வினைகள்

சிறு வயதில் அம்மாவிடம் அடி
பாகற்காய் கசக்குது என்றதற்கு
மனைவி திட்டுகிறாள் இன்று
பாகற்காய் தின்று நெஞ்சை காப்பாற்று!

பாவம் செய்திருக்கவேண்டும்
பாகற்காய் தின்ன...
பிடிக்காத ஒரு காய் மருந்தாகிறது
நெஞ்சினிலே கொஞ்சம் உரமாகிறது


ஒரு அடி ஏறினால் மூன்று அடி சறுக்குவது
மனித வாழ்கையின் நியதி
புரிந்து விளையாடி தான் பாருங்கள்
வாழ்க்கை ஒரு பரமபத விளையாடடு!

இளமை கொஞ்ச நாள் தான்
முதுமை அதிக நாள் இருக்கும்
பழையது நினைத்து பழையது உண்டு
ஜீரணித்து வாழ்வது வாழ்க்கை!