கண்ணில் தெரிகிறது
கார்காலம்
கனவுகள் மறைகின்றன
தினம்தோறும்
வாழ்க்கை ஒரு மீன்படகு
அனுபவம் மீன்பிடித்தல்
வைத்துக்கொள்வதும் விட்டுவிடுவதும்
அவரவர் இஷ்டம்
மனம் சுகம் தேடுவதில்லை
வாழ்ந்தால் போடும் என்கிறது
இருப்பதை வைத்து உண்டுவாழ்
எதற்கு இந்த வீண் ஆசைகள்
கருப்பு பணம் பதுக்குதல்
இருக்கத்தான் செய்யும்
தன்மானம் கெட்ட ஆட்கள்
நிலத்தில் இருக்கும் வரை
ச்விச்ஸ் என்ன
கேய்மன் என்ன
மரூசியஸ் என்ன
இருப்பவனுக்கு தான் வெளிச்சம்
சூடு சொரணை இல்லாமல்
வோட்டுக்கள் என்ற குறியில்
தின்னென்று வீம்பி நிற்கும்
அரசியல்வாதிகளின் கொட்டம்
இனி வருகிறது அவர்களுக்கு
தீர்ப்பு என்ற முடிவு
அடுத்தவனின் சொத்தை ஆள்பவர்
இருப்பதை வைத்து மடிவதே மேல்!
பயணம் என்பது அறிதலே
4 hours ago
2 comments:
அருமை.
பி.ஜே.பியை தாக்குறீங்க!
கவிதை, அரசியல்வாதிகளின் ( அத்வானி) சுயரூபத்தை தோலுரித்து... காட்டுது...
Post a Comment