Saturday, November 1, 2008

கன்னட ராஜ்யோத்சவா

கன்னட ராஜ்யோத்சவா!

குழந்தைகள் மயங்கி விழும் காட்சி டிவியில், பாவம்.

எட்டியுரப்பாவும், ஷோபாவும் அமர்ந்து ராஜ பரிவட்டம் போல ரசிக்கிறார்கள். கேமரா வெள்ளையர்களை zoom செய்கிறது. அவர்களுக்கு, யாரோ ஒரு ஆபிசர், இலவசமாக தண்ணீர் பாட்டில் கொடுக்கிறார்.

குழந்தைகள் கையில் Lays சிப்ஸ் பாக்கெட்!

கர்நாடக மற்றும் ஆந்த்ரா உதயம் ஆனா நாள் இன்று. ராஜ்யோத்சவா. ஐம்பத்து ஐந்து வருடங்கள் முன்பு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது காவிரி பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள்!

ஆந்த்ராவில் வேலை செய்யம் கன்னட பெண்ணுக்கு ராஜ்யோத்சவா விருது. எட்டியுரப்பாவிர்க்கு பிடித்த பெயர் ஷோபா. ஆனால் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ரீட்டா ஆப்ரகாமிற்கு, திருப்பதி நாமம். மலையாளியாம்! ஹிந்து கிடையாது. அதிகம் போட்டிகள் வெற்றி பெற்றும் பயன் என்ன?

கொடுமை என்னவென்றால், தீபிகாவிற்கும் சிபாரிசு செய்தார், அவர் அப்பா பிரகாஷ் படுகோனே. தலை தப்பியது சி.எம்.மிற்கு. பத்திரிக்கைகள் கொன்றிருப்பார்கள்...

தமிழ் மக்களுக்கு வரம்... கன்னட மக்கள் கொடுத்து சரோஜா தேவி!

Befitting!

Friday, October 31, 2008

நான் அமேரிக்கா தேர்தலில் நின்றால் ?

என்னுடைய அமேரிக்கா தேர்தல் கனவு பற்றி ஒரு வீடியோ!

அங்கே கிளிக்கி, வீடியோ > பிளே பட்டன் அமுக்கவும்.

செம தமாசு.

என் அமேரிக்கா நண்பர் அனுப்பியது இது!

குடைச்சல்

குடைச்சல் எப்படியெல்லாம் வரும்?

மனிதன் ஒருவன் தான் மறக்க முடியாது.

என் நண்பர் ஒருவர், அயர்லாந்து சென்றார். அங்கு குடிக்காவிட்டால் கேவலம்.

அதனால், நான் அல்கொஹலிக் பியர் குடிக்க ஆரம்பித்தார். காப்பி ப்ளேவர். செலவு 30 ருபாய் ஒரு கேன்.

இப்போது இந்தியாவில், அது கிடைப்பதில்லை. அதை குடிக்காமல் இருக்க முடியவில்லை. லீ மேரிடிஎன் அல்லது ஓபராய். செலவு 500 ருபாய் ஒரு கேன்.

இதுவல்லவோ குடைச்சல்!

சொருபம்

சுயரூபம் என்றாள் சுத்த தமிழ். சொருபம் இந்த வகை தான்.

லூகஸ்.

பெங்களூரில் எவ்வளவு வகை துணிகள்... ஆடைகளின் அரசாங்கம்.

அருமை.

என் நண்பர் ஒருவர், பொள்ளாச்சிக்காரர். இப்போது நாற்பதாவது வயதில் எம்பியே படிக்கிறார். அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டுமாம்! இதற்கும் அவரது இரண்டாவது மகன் அங்கு பிறந்தவன்.

புரியவில்லை. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!

சரி, இதெல்லாம் மேல் மட்டத்து வர்க்கம் போல உள்ளது?

என் நண்பர் ஒருவர், ஒரு பிரிண்டர் வாங்கினார். 1500 ரூபாய். மூன்று மாதத்தில் இங்க தீர்ந்துவிட்டது. காட்ரிஜ் 1500 ருபாய்.

எங்கு போய் சொல்வது?

சொருபத்தை கண்டு மயங்காதே!

சாந்தம்

சாந்தம் மனிதனுக்கு அவசியம்.

கொஞ்ச யோசனை!

கொஞ்சம் அதிர்வு.. நிச்சயம் வெற்றி...

அப்புறம், ப்லோக் உலகம் எப்போதும் போல தீபாவளி லீவிற்கு பிறகு சூடு பிடிக்கிறது!

எல்லாம் வேலையில் இருந்து போடும் கும்மிகள்? பயம் இல்லை?

சௌக்கியமா

சௌக்கியமா என்று கேட்பது ஒரு வாடிக்கை சென்னையில்.

நிறைய நண்பர்கள்.

ஆனாலும் குசும்பர்கள் அதிகம். என் நண்பர் ஸ்டாலினிடம் எக்ஸ்செகூடிவ்! நிலைமையை பாருங்கள்....

என்னப்பா நீ, பெங்களூர் வாசி. ஏசி மாதிரி இருக்கும்.

அவர்களுக்கு எங்கள் நிலைமை எப்படி தெரியும்?

வேலை பளு அதிகம். ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி. குஜராத்திகள், கோடிகள் கொட்டுகிறார்கள். தீபாவளி முடிந்துவிட்டால் போதும்!

தந்தேராஸ். தனங்கள் வரும் வாரம்.

Thursday, October 30, 2008

சோகம்

நேற்று குழந்தைகள், ஸ்கூல் செல்ல கஷ்டப்பட்டார்கள்.

மூன்று நாட்கள் சென்னையில்.

அதிகம் செல்லம்.

நல்ல கவனிப்பு.

இப்போது சோகம். குழந்தைகள் எல்லாம் இப்படித்தான்.

நானும் கல்கத்தாவில், எப்போதும் இப்படித்தான், சிறு வயதில்....

உயிர் பிச்சை

உயிர் பிச்சை கெட்ட ஒருவர் மீண்டும் நினைவுக்கு வருகிறார்.

இது நடந்தது, குஜராத்தில். பல வருன்டங்கள் ஆனது...

மீண்டும் பஸ் கடத்தல் ரூபம்... மும்பை... ராஜ் தாக்கரே எதிர்ப்பு.

லாலு சொல்கிறார்... ரயில்கள் ரத்து செய்வோம்.

மகாராஷ்ட்ரா கவர்மன்ட் சொல்வது.. அவர் மன நலம் தவறியவர்!

ஜன்னல் சீட் கிடைக்காததால், நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டாராம்... அதனால் திருப்பி சுட்டு கொன்றார்களாம். மூன்று லச்சம் வேறு கொடுக்கிறார்கள்.

என்னையா நடக்குது இங்கே?

Wednesday, October 29, 2008

வயோதிகம்

கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்று வளமான் வாழ்வு வாழ்ந்து..

வயோதிகம் எதிர்நோக்கும் போது...

என் மாமனாரின் அறிவுரை.

தொழில் எதுவானாலும் முடிந்த வரை செய்யுங்கள். முயற்சி விட்டு விட வேண்டாம். (ரியல் எஸ்டேட் ரொம்ப குடைச்சல்!).

எவ்வளவு சம்பாரித்தாலும், சிறிது சேமிப்பு (தனியாக, வயோதிகம் காலத்திற்கு) எடுத்து வையுங்கள்.

கெட்ட பழக்கம் (குடி, ஹோட்டல் சாப்பாடு தேவையில்லாமல்.. போதை, புகையிலை.. ) எல்லாம் விட்டுவிடுங்கள்.

தினம் ஒருவருக்கு, வீட்டில் உள்ளவர் கணக்கு, என் வீட்டில் நான்கு, அதனால், நான்கு ருபாய் ஒரு உண்டியலில் போடுங்கள், நாள் தவறாமல், மாதம் ஒரு முறை ஒரு ரேகரிங் டெபாசிட் போடுங்கள். வளரும் காலம். இப்போது 10% வட்டி கொடுக்கிறார்கள்.

பல வகை சேமிப்பு அமைப்புகள் உள்ளன!

பதிவுகள்

புதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது ? படித்தீர்களா?

மேலே உள்ள பதிவு திரு கோவி.கண்ணன் அவர்கள் எழுதியது.

எவ்வளவு அழகா சொல்கிறார்.

16,000 ஹிட்ஸ்+ வாங்கிய புதிய பதிவர் நான் தான். ;-)

இதையும் படியுங்க ...

புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம்

நீங்க எந்த இடத்தில்?

பங்கு சந்தை

இதுவல்ல நேரம், பங்கு சந்தை முதலீடு செய்ய.

இரண்டு மாதம் பொறுத்திருங்கள்.

என் பங்கு வர்த்தகம் கவிந்து கொள்ளும், நண்பர்கள் சொல்வது இது.

ஸ்டாக் மார்க்கெட் அறுபது சதவிகித வீழ்ச்சி.

எனது பிஎம் நடத்துவது... நஷ்டமில்லை! (ஓஸ்வால் மற்றும் கோடக்)

தீபாவளி சினிமாக்கள்

தீபாவளி சினிமாக்கள் ஒன்றும் பார்க்க முடியவில்லை.

ஏகன் மற்றும் சேவல் தான் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்.

இன்று பார்க்க முடியுமா?

மதியம் ஊருக்கு கிளம்ப வேண்டும்.

நல்ல படங்கள் பற்றி விமர்சனம் படிக்க ஆசை.

நானும் திவ்யாவின் காதலர்களும்

நான் எழுதிய திவ்யாவின் காதலர்கள் கதையில் சில மாற்றங்கள் செய்து, மீண்டும் சில பதிவுகளாக எழுத எண்ணம். நாவல் மாதிரி.

ப்லோக் போஸ்டுகள் சிறியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்...

இருந்தாலும் கதை என்று வரும் போது பெரியதாக எழுத எண்ணம்.

சிலர் என் கதை மாதிரி எழுதுகிறார்கள். கட்சியின் கரு சுடப்படுகிறது. பரவாயில்லை. இதெல்லாம் நாட்டிலே சகஜமப்பா என்கிறார், எனக்கு தெரிந்த எழுத்தாளர் ஒருவர்!

ஒரிஜினல் ஒரிஜினல் தான்.

Tuesday, October 28, 2008

ஹும்

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம் என்ற சொல், மகிழ்ச்சி தராத ஒன்று.

பூ வாங்க சென்றேன். நடை தான். மனைவி குடும்பம், என்னை பற்றி சொல்லியிருப்பார் போல. பத்து ருபாய் முழம் என்றாள். பத்து முழம் வாங்க வேண்டும்!

"குறைத்து கொடுக்க கூடாதா அம்மா", என்றேன்.

அவர் முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு, "என்னைய தோரே, கலக்டரா இருந்தவன் நீ, ஒத்த ருபாய் ஐடத்துக்கு இம்மாம் பெரிய வார்த்தை சொல்றே... (கவனிக்கவும், டோடல் பிசினஸ் நூறு ருபாய்!)... ஆம்பிளைகளே இப்படி தான். தோ அங்கு சுருண்டு படுத்திருக்கிதே, கஸ்மாலம்.. என்ன கட்னவன் தான். கொஞ்ச நேரத்திலே எழுந்து, குவார்ட்டருக்கு காசு கேப்பான்!..."

ஆணாதிக்கத்தின் உச்சகட்டமா?

பெங்களூரில் இந்த கவலை இல்லை. பாசை அப்படி. பத்து ருபாய் கொடுப்பேன், இது பேக்கு என்பேன். கொடுப்பதை வாங்குவேன்.

சில கேள்விகள், சில பதில்கள்.

செல்போனும் பெண்களும்

சென்னையில் இரண்டு நாட்களாக, அங்கும் இங்கும் சென்று, நண்பர்களை பிடித்து பேசி...

எங்கு சென்றாலும் நண்பர்கள், ப்லோக் பற்றி பேசுகிறார்கள்.. ஆனால் எவரும் கமண்ட்ஸ் இடவில்லை. காரணம், சைலன்ஸ்.

அப்புறம், செல்போனும் பெண்களும் பற்றி ஒரு பேச்சு. ரகசிய சிநேகிதிகள் ஆகிறார்கள். என் மனைவியின் செல் போனை தொட விடுவதில்லை! உங்களுக்கு எதுக்கு?

கல்கத்தாவில் எங்கள் வீட்டில் முதல் முதலில் டிவி வந்த வருடம் நான் எட்டாவது படிக்கும் போது, 1981. டிவி வருவதற்கு முன் சில காலங்களுக்கு முன் தான் வீட்டில் டெலிபோன் வந்தது.

அப்பா பாக்டரியில் இருந்தது ஒரு பழங்காலத்து போன். லாக் போட்டு வைத்திருப்பார்கள்.. எஸ்டிடி கிடையாது. த்ரந்க் கால் தான். சில சமயம் அந்த டெலிபோன் புக்கிலிருந்து ஒரு நம்பரை கூப்பிட்டு, துணிக்கடை ... என்று கேட்டு தமாஸ் செய்தது ஞாபகம்.... இதுவும், ஸ்க்ரெவ் டிரைவர் வைத்து லோக் ஓபன் செய்து. ஒரு முறை அக்கா மாட்டிவிட்டுவிட்டாள். இடி அடி.

சென்னையில், ஒரு ஹிந்தி பட இயக்குனர் பார்த்து பேசினேன்.

என் ப்லோக் மூலம் வந்த மூன்று
சினிமா கதைகளும் அவருக்கு பிடித்திருந்தது. படம் வரலாம். கொஞ்சம் காலம் ஆகும். என் மனைவி சொல்கிறாள், ப்ளோக்கை கட்டி அழாமல், சினிமா கதை எதாவது பண்ணுங்கள் என்று.

டி.நகர் ஏரியா. எப்படி மக்கள் செலவு செய்கிறார்கள். அந்த ஹோட்டலில் ஒரு குடும்பம் வந்தது. தீபாவளி ஸ்பெசல் புப்பெ. நாங்கள் பேசிக்கொண்டு இருந்த மூன்று மணி நேரம் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்! ;-)

எனக்கு மாமனார் வீட்டில், இரவு தான் எனக்கு பிடித்த பூரி கிழங்கு. இன்றும் நாளையும், சென்னையில் நடை பயணம். குட்டி இட்லி சாம்பார், முடிந்தது. கோவில் பக்கம் போக வேண்டும். ரெட் and வைட் ஸ்ட்ரைப்ஸ் ஷர்ட் போட்ட ஒரு ஆள், அநியாய விலை சரவணா பவன் பக்கம் பார்த்தால், நான் தான். மாமனாரின் பென்ஸ் நிற்கும்! அப்புறம் ஒரு எழுத்தாளரோடு சந்திப்பு என் சீனியர் போலிஸ் நண்பர் வருகிறார் என்னோடு, ஒரு கணக்கு பாக்கி இருக்கிறது!

வாசகர் ரெஸ்பான்ஸ் பார்க்க பதிவுபோதையில் போட்டேன். மீள் பதிவு, இன்னொரு சினிமா கதை ப்லொக்கில் இருந்து! இன்றும் போடுவேன். தீபாவளி லீவ் ஆதலால், குறைவாக படிக்கப்பட்டது.

இம்சை தான்!

அந்தபுரத்து ராஜா

அந்தபுரத்து ராஜா

ஒரு நாள் நான் காட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். சிலு சிலுவென்ற கற்றுஅடித்து கொண்டு இருந்தது. main road ஒரு கிலோமீட்டர் தூரம் . வாரம் ஒரு நாள்இப்படி செல்வது வழக்கம், சிங்கூர் காட்டிலே. மணி சுமார் காலை பத்து இருக்கும். அப்போது ஒரு நரி வந்தது. கையில் வைத்திருந்த துப்பாகியால் சுடலாமா என்றுகுறி பார்த்தேன். அப்போது நரி என்னோடு பேச ஆரம்பித்தது.

"நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் அளித்தால் உனக்கு ஒரு அந்தப்புரம் கொடுப்பேன்" என்றது நரி. கிடைத்தால் லாபம் தான். சினிமாவில் பார்த்தது. டூயட்எல்லாம் ஓட ஆரம்பித்தது மனசில்.

"நீ என்னை கடிக்காமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கிறேன். எனக்கு எதற்குஅந்தப்புரம்" என்றேன். துப்பாக்கி காட்டிகொண்டே இருந்தேன்!

"மன்னிக்கவும். நான் சாதரான நரி கிடையாது. சக்தி வாய்ந்தவன். உனக்குவிஷயம் தெரியாத. சட்டங்கள் உன்னை கட்டுப்படுத்தாமல் இருக்கவேண்டுமானால், உனக்கு ஒரு அந்தப்புரம் தேவை. அதற்கு நீ ராஜா ஆகவேண்டும். ராஜா என்றால், சேவகர்கள், மந்திரிகள் உன் பேச்சை கேட்பார்கள்." நரிஎதோ ஒரு தந்திரத்தோடு பேசுவது போல இருந்தது.

எனக்கு மனசு பொறி தட்டியது. காட்டில் நடப்பதே ஒரு கொடுமை. வாழ்கையும்விரக்தி ஆக உள்ளது. செத்தாலும் பரவாயில்லை.
கெட்டது குட்டிசெவர் என்று பதில் கொடுத்தேன். "சரி" என்றேன். வருவது வரட்டும் பார்க்கலாம்.

****

நரி வாயில் ஒரு பெட்டியை கவ்விக்கொண்டு வந்தது.
எனக்கு " மாஸ்க்" படம்ஞாபகம் வந்தது. "சே சே அவ்வளவு இருக்காது என்று மனம் தேற்றிக்கொண்டது.

ஆசையோடு வாங்கினேன்.
அதில் ஒரு கிரீடம் இருந்தது. எனக்கே அளவு செய்த மாதிரி.

"பத்திரமாக உன் கை ஆளவேண்டும். வெற்றி நிச்சயம் உனக்கு. கிரீடத்தைதலையில் வைக்கும் போது, நீ அந்த நாட்டிற்கு செல்வாய். பிறகு, உன்வலிமையை உபயோகித்து, இந்த நாட்டிற்கு வந்து விடு. நான் செல்கிறேன். உன்முன் நீ என்னை நினைத்து கேட்கும் போது தோன்றுவேன்" என்று சொன்ன நரிகாட்டிற்குள் ஓடி மறைந்தது.

****

கிரீடம் வைப்பதற்கு முன்னால், என்னிடம் இருந்த watch,
camera , notebook எடுத்து , எனக்கு தெரிந்தவர்கள் விவரம், நான் என்ன செய்ய போகிறேன் என்பதை எழுதி வைத்தேன் மரத்தடியில். முக்கியமாக, என் அம்மாவிற்கு ஒரு கடிதம். "நிச்சயம் திரும்பி வருவேன்" என்று. அம்மா சோறு ஊட்டி விட்டது எல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் கண்ணீர்.

****

அந்த கிரிடத்தை எடுத்து வைத்தேன் தலையில். பழைய காலத்து படம் போல, என் முன் வட்டங்கள் சுற்றியது. சில நொடிகளில் நான் ஒரு பாலைவனத்தில் ஒரு அரண்மனை அந்தப்புரம் முன் நின்றிருந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு ஒட்டகம் கூட காணவில்லை. ராஜஸ்தான் மாதிரி இல்லை. வெக்கை வெய்யில். "வெயிலோடு விளையாடி" பாடு ஒலித்தது என் மனதில்.

கதவை தட்டினேன்.

இரண்டு அழகான பெண்கள், தமிழ் சினிமா கதாநாயகிகள் மாதிரி, திறந்தனர் .

"வணக்கம். நாங்கள் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் பேசுவோம். இது ஒரு மந்திரலோகபுரி.
சுலபமாக யாரும் வர முடியாது . உங்களுக்கு விருப்பட்ட வரை இருக்கலாம் . வாருங்கள்" என்று சொல்லி அழைத்து சென்றனர். ஒரே குஷி தான் போங்கள். சம்பந்தம் இல்லாமல் "தேரடி வீதியில் தேவதை வந்தாள்" பாட்டு மனதில் ஓடியது.

பெரிய அரண்மனையின் ஒரு பாகத்தில் இருக்கும், அதனை விசயங்களும் இருந்தன . பணியாட்கள் யாரையும் காணவில்லை. எதோ மர்மமாக இருந்தது.

ஒரு மாடிப்படி தெரிந்தது. அங்கே ஒரு படம், ஒரு ராஜா ஒரு நரியோடு , நின்றிருந்தார் . வேறு எந்த படங்களாம் காணவில்லை. யாரோ ஒருவர் இருமும் முனகல் சத்தம்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! வீராசாமி அண்ணன் மாதிரி ஆகிவிட்டேன்.

இது நிச்சயமாக உலகம , இல்லை வேறு எங்கவதா? சத்தமாக கேட்டேன். நான் பெரு முச்சு விட்டுக்கொண்டிருந்த சத்தம் எனக்கு நன்றாக கேட்டது. நிசப்தம். லப் டப். லப் டப். இருதயம் துடிப்பது கூட கேட்டது.

"ஆமாம் . இது உலகம் தான். ஆனால் யாரும் எளிதில் இங்கு வர முடியாது. இது எங்கு எந்த நாட்டில் உள்ளது என்பதும் உங்கள்ளுக்கு தெரியாது. உங்களை இங்கே அனுப்பியவர் தான் சொல்ல வேண்டும்." என்றார் ஊர்வசி மாதிரி இருந்த ஒரு பெண்.

அப்போது தான் கவனித்தேன் , நான் அணிந்திருந்த உடை, முகலாய ராஜாக்கள் அணிவது போல இருந்தது. கிரீடம் பத்திரமாக இருந்தது. கழட்ட தான் முடியவில்லை.

பாட்டு வேண்டும் என்று நினைத்தேன் . "வாரான் வாரான் பூச்சாண்டி" கேட்க ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு குள்ள மனிதன் ஓடி வந்தான். மனிதனா அவன். பன்றி மாதிரி இருந்தான்... "ராஜாவுக்கு வணக்கம். உங்கள் பாசை பேசும் பணியாளர்கள் கொஞ்சம் குறைவு. நாங்கள்
சிக்கீரம் கற்று கொள்கிறோம் . நீங்கள் சொன்னால் தர்பாரில் அனைவரையும் பார்க்கலாம்." என்றான்.

"பசிக்குது " என்றேன். "பழங்கள் வேண்டுமா இல்லை அரிசி உணவு பரிமாறட்டுமா " என்று கேட்டான்.

"இப்போது பழம். சிறிது நேரம் கழித்து உணவு" என்றேன்.

தேவதைகள் போல இருந்த பெண்கள் பழ தட்டு கொண்டு வந்தனர்.

உலகின்
அனைத்து பழங்களும் கிடைத்தது. பிஜபூரின் பாரிய பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். ரொம்ப சுவை.

பெண்கள் யாரையும் காணவில்லை. வேறு
ஒருவரையும் காணவில்லை.

எங்கே அந்தே அழகான பெண்கள். அவர்கள் நடனம்ஆடினால் சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். திடீரென்று அவர்கள் ஒருகூட்டமாய் தோன்றி "நாதா.." என்று பாடி ஆடினார்கள்.

****

பாட்டு முடிந்தது எழுந்து நடக்க ஆரம்பித்தேன். எல்லா அறைகள் எல்லாம் மூடபடிருந்தன. சிறு சிறு முனகல்கள் வந்துக்கொண்டிருந்தன. பயம் தொற்றியது.
லப் டப். லப் டப்.

பெரிய பெரிய மண் ஜாடியில் தண்ணீர் இருந்தது அங்கே. ஒரு சில பனி ஆட்கள்,
பெரிய பெரிய வாளியோடு, அங்கே சென்று வருவதும் போவதுமாக இருந்தனர் .

"என்ன செய்கிறார்கள்" என்று கேட்டேன். "தண்ணீர் சரியாக உள்ளதா தேவைக்கேற்ப என்று பார்கிறார்கள் " என்றான் ஒருவன். எதோ ஒரு மர்மம் இங்கே.

கையில் இருந்த பழம் சாப்பிட பிறகு......

****

என்னை கட்டி போட்டிருந்தார்கள். கரு கும்மென்று இருந்தது அந்த் அறையில்.

என் உடம்பெல்லாம் டுபுகள் குழாய்கள் . பாம்பு போல சுற்றி சுற்றி இருந்தது. வலி தாங்க முடியவில்லை.

என் உடம்பிலிருந்த தண்ணீர் எல்லாம் வெளியேறிக்கொண்டு இருந்தது. உறிஞ்சிக்கொண்டு இருந்தன அட்டை போன்ற ஜந்துக்கள்.

தாகமாக இருந்தது. நான் "தண்ணீர் , தண்ணீர் " என்று கத்தினேன் . யாரும் வரவில்லை.

சரி அந்த நரியை மனதில் நினைத்து கூப்பிட்டேன், அது சொன்ன மாதிரி.

அப்போது, அந்த நரி தோன்றியது. கடுங்கோபமாய் "என்னை ஏமாற்றி விட்டாய்" என்றேன்.

"இல்லை நீயாக தான் இந்த தண்ணியில்லா காட்டிற்கு வந்தாய் .
நீ என்னை சுட்டிருக்கலாம். நாங்கள் நரி ராஜா வம்சத்தை சேர்தவர்கள். எங்களுக்கு தண்ணீர் வேண்டுமானால், மனிதர்களை கொண்டு வந்து தன் இறக்கி கொள்வோம்! மனிதர்கள் தான் எழுபது சதவிகிதம் தண்ணீரால் ஆனவர்கள் ஆயிற்றே " என்று எக்காலமாக சிரித்தது .

மயங்கி சரிந்தேன் .

அப்போது
தான் ஆண்டவன் நினைவுக்கு வந்தார். சில சமயம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் ஒரு நாள் முன்பு வரை.

காப்பற்றுங்கள் என்று நினைத்து கொண்டேன்.

நடந்தது.

****

விழித்த பிறகு காட்டில் இருப்பதை போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நான்ஒரு சிறு குழந்தை வற்றி போல இருந்தேன். வற்றிய உடம்பு. எலும்புக்கூடு உடம்பெல்லாம் வலித்தது . ஆனால் சிறிது பலம் இருந்த மாதரி இருந்தது.

எழுந்து நின்றேன் . அறை ட்ரவுசர் முழு
பாண்ட்ஸ் ஆகி இருந்தது. பாக்கெட்டில்கையை விட்டு, பெரிய வாட்சு எடுத்து பார்த்தேன். சாயந்திரம் நான்கு மணி. அதேநாள்.

வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை . சிறிது சல சலப்பு கேட்டது. அதுவும் நின்றுவிட்டது . காட்டின் கீதம் மட்டும் தான் . வீட்டிற்க்கு செல்ல வேண்டும், தேடுவார்கள்.

"இந்த மர்மத்தை ஒரு நாள் நிச்சயம் கண்டு
பிடிப்பேன் " என்று நினைத்துக்கொண்டு நடந்தேன். இல்லை இல்லை தவழ்ந்தேன்.

**** முற்றும் ****

என் தாத்தா சொல்லிய பல ராஜா கதைகள், எனக்கு இன்ஸ்பிரேசன்.

(இந்த கதையை, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொல்லி உள்ளேன். திருடாமல் சுடாமல் இருந்தால் சரி. நானே இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்க ஆசை.)

(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.

மனிதனில் காதல் தீ

எங்கோ செல்லும் நினைவுகள் இது. பேசி பார்த்து புரியாத வயது. கால் போன போக்கிலே நடந்தேன். பசிக்கு டீ அருந்தினேன். சாமியார் வாழ்க்கை. சொத்து இருந்து என்ன பயன், அப்பா அம்மா அண்ணன் தங்கை யாரும் என்னை சீண்டுவதிலேயே குறியாக இருந்தனர். இருப்பதை பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்டார்கள். வாழ்க்கை வெறுக்கும் நேரம் இது. வாழ்ந்தே தீருவேன் என்ற வைராக்கியம் வேறு எனக்கு இருந்தது. இந்தியா தேசத்தில் அலைந்து திரிந்த நாட்கள் அவை.

காசியிலே கஞ்ச விற்ற அனுபவம், ஜைசல்மீரில் பாங்கு குடித்து, வாகக்வில் கொட இருக்கும் காட்சி. எவனோ ஒருவன் பாஸ்போர்டில் வெத்தலை கடத்தியது... நினைவுகள்... சிரிப்பு தான் வருகின்றது.

கார்கில் யுத்தம் சூடாக நடந்த சமயம், அவள் - காஸ்மீர்த்து பண்டிட் பைங்கிளி, என் கண்ணம்மாவாய் வந்தாள் ரேஷ்மா. மேஜர் ராம் என்ற மராட்டியர் ஒருவருக்கு எடுபிடி வேலை ஆளாக வேலை செய்தேன். கீழ் வீட்டில் தங்கல். அவளும் வாழ்ந்தால் பக்கத்து வீட்டில். மேஜரின் மனைவி ஒரு மலையாள நர்சு. அரசாங்க அரவணைப்பு அவர்களுக்கு உதவியது. எனக்கும் சிறிது மலயாளம் கலப்பட தமிழ் பேச்சு துணை கிடைத்தது. கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு வேறு ஊர் சென்று விடலாம் என்று இருந்த நேரம் அது.

காதல் வசத்தால் கண் இமை மழுங்க, நான் ரேஷ்மாகாக காத்திருந்த நாட்கள் அவை. உயிரின் சுடர் தீ, ஆனது. மூண்டது.
ஹோமகுண்டம் ஆனது. காதல் இருக்கும் ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒரு ஹோமகுண்டம் இருக்கிறது. அங்கே ஒவ்வொருவரும் தான் காதலியை பொருத்து ஒரு வகைத் தீயை வளர்க்கிறார்கள். காதல் குட்சிகளை பொறுத்து.... தீ எதுவாகவும் இருக்கலாம். அதை வளர்க்க வேண்டியது மட்டுமே முக்கியம். தீயை அணையாமல் காக்க வேண்டியது அதைவிட முக்கியம். எனக்கு ரேஷ்மா ஒரு தீ. தீயின் தன்மை அது தானே? அதை வளர்த்து வருவது அவசியம். தீ இல்லையென்றல் இதயத்தில் ஹோமகுண்டம் இருந்து பயனில்லை. தீ அணைந்து போனால், உயிர் அணைந்தது என்றே அர்த்தம். காதலுக்கு அவ்வளவு சக்தி. ரேஷ்மா என் உயிர் தீ.

அந்த காதல் தீக்காக, நான் காஸ்மீரில் இருக்க முடிவு செய்தேன். அவளும் என்னை தீவிரமாய் விரும்பினாள்.

காஷ்மீர் தான் எனக்கு வீடு என்று ஆயிற்று. யார் என்னை வெளியேற்றுவார்கள். உருது பேசினேன். அவர்களோடு ஒன்றாய் கலந்துவிட்டேன். தமிழ்நாடு மறந்துவிட்டேன். தமிழை மறக்கவில்லை.

ரேஷ்மாவின் அப்பா ஒரு பழ வியாபாரி. அம்மா இறந்துவிட்டாராம். வீட்டில் வேறு யாரும் இல்லை. ஹிந்துவாய் பண்டிட்டாய் அங்கு வாழ்வது கொடுமை. தாடி வைத்து முஸ்லீம் மாதிரி இருப்பார். "பிறந்த இடம். விட்டு போக மனசில்லை" என்பார். ராஜா ஹரி சிங்கதிற்கு வேண்டியவர் என்று சொன்னார். ராஜா கலை இருந்தது அவருக்கு. சில சமயம் குங்கும பூவும் விற்பார். பார்டர் கடந்து விற்று வருவார். காசு டாலரில். உயிர் பணயம். நிறைய பேர், விதிவசத்தால், டேரறிச்டு என்று மடிந்தார்கள். வாழ்க்கை வாழ பணம் வேண்டும் அல்லவா?

காஸ்மீர் பார்டர் இரு பிரிவுகள் என வாழ்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் அவர்களை இணைக்க வேண்டும். ஒரு நாள் ரேஷ்மாவின் அப்பா திரும்பவில்லை. ஊடுருவ முயற்சி என்று கொல்லப்பட்டார். மேஜர் ராம் தான் தகவல் சொன்னார். ரேஷ்மாவிற்கு துயரம் தாங்கமுடியவில்லை. சோகம் என்பது சொல்லி அடஙாதது. ரேஷ்மா தனி மரம் ஆனாள்.

மேஜர் ராமுக்கு எங்கள் காதல் கதை தெரியும். கல்யாணம் செய்து வைத்தார் அமர்நாத் போகும் வழியில். மேஜரின் மனைவியும் எங்களுக்கு நன்றாக உதவி செய்தார்கள்.

ரேஷ்மாவும் நானும் குடும்பத்தை ஆரம்பித்தோம். அந்த முதல் ராத்திரி....அனுபவம் உணர்ச்சிகளால் கரைந்தது. காதல் தீக்கு சூடு பற்றியது. ஒருவரோடு ஒன்றானோம்.

மே மாதம். அங்கு நிலைமை மோசம் ஆனது. மீண்டும் மீண்டும் தாக்குதல். எப்போது குண்டு வந்து விழும் என்பது தான் கவலை. ஸ்ரீநகரில் பரவாயில்லை, பார்டர் தான் மிகவும் கொடுமை.

எங்க்ளுக்கு ஒரு சிறிய வாக்கி டாக்கி கிடைத்தது. மாட்டிகொண்டால் பேசிக்கொள்ள. பழம், கும்கும பூ வியாபாரம் தொடர்ந்தோம். இருட்டும் போது, பார்டர் கடந்து சென்றோம்... காலையில் விற்று விட்டு மாலையில் இருட்டும் போது திரும்பினோம்.

மேஜர் ராமுக்கும் இது தெரியும். நிஜ டேரரிசடுகள் பற்றி உண்மை கிடைத்தால் நல்லது என்று விட்டு வைத்தார்கள். இது ஐம்பத்து வருடங்கள் நடப்பது தான். இரண்டு பக்கமும் பிடித்தால் வசூல் மழை தான், கையில் இருக்கும் டாலர் பணம் பிடித்து கொண்டு துரத்தி விடுவார்கள். ஜெயில் என்பது கிடைத்தாலும் கிடைக்கலாம். உயிர் நிச்சயம் இல்லை.

அமர்நாத் சீசன் வந்தாலே, குண்டு வெடிப்பு அதிகம் ஆகும். வியாபாரம் உள்ளூரில் தான். இந்த முறை ஹிந்து வெறியர்களின் கோட்டம் தாங்க முடியவில்லை. யத்ரிகர்களுக்கு எப்போதும் போல ஸ்கூல் கிரவுண்டில் தாங்காமல், சத்திரம் கட்ட ஒரு மிக பெரிய போராட்டம். அரசாங்கம் வேறு கவிழ்த்துவிட்டது.

ஒரு நாள் முடிவு செய்தோம், பெரிய வியாபாரம் ஒர்ன்று செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு திரும்பி செல்லலாம் அவளோடு என்று. தாயகத்தோடு ஒத்து கொண்டால். இரண்டு கோவேறு கழுதைகள் லோடு. கும்குமபூ மட்டும். வழித்துணைக்கு யாரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும் தான்.

ஓடையை கடந்து பார்டர் கடந்து, மலை ஏறி முசாபராபாத் செல்லும் வழியில் நின்றோம். வானம் கருத்து காலை ஆனது. எங்களது வியாபாரி வரவில்லை. பாகிஸ்தான் அறமி கூட்டம் தெரிந்தது.
எங்களை விசாரித்து விட்டு, உள்ளூர் என்று விட்டு விடுவார்கள் என்று நினைத்தோம். பிடித்துகொண்டார்கள். அவர்கள் குடிலுக்கு அழைத்து சென்றார்கள். ஒரு தூணில் கட்டி வைத்தார்கள். ஆயுத கிடங்குகள். மிக பெரிய தாக்குதல் ஒன்றுக்கு ஆயுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். நிலைமை மிகவும் மோசம்.

மூன்று மணிக்கு தாக்குதல் என்று பேசிகொண்டார்கள். இது பெரிய அளவு என்றார்கள். கடைசி முயற்சியாம். பேரல் பேரலாக எதோ வந்து இறங்கியது. விஷ வாயூ? புரியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் ரணங்களாக கழிந்தன. உயிரோடு விட மாட்டார்கள் என திரிந்தது.

இது நடக்க கூடாது என்று முடிவு செய்தோம். "ரேஷ்மா, எப்படி இருந்தாலும் கொல்ல தான் போகிறார்கள். ஒரு முடிவு கட்டி விடலாமா?" என்று கேட்டேன். சரி என்று தலை ஆட்டினாள். அவள் வாயால் எனது கட்டுகளை பறித்து விட்டாள். பைஜாமாவில் இருந்து இருப்பதை எடுத்தேன். கையிலிருந்த தீப்பெட்டியை பார்த்தேன். அந்த குடில்கள் தீபிடிக்கும் துணிகள். காய்ந்த குட்சிகள் அங்கு இருந்தன. சேர்த்து வைத்து. ஒவ்வொரு குட்சியாக பற்றி வைத்தேன்.

தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பக்கத்தில் எல்லாம் பரவியது. குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டு ஓடினார்கள் எதிரிகள். இன்னும் சிறிது நேரத்தில், இந்த கூட்டம் காலி. ஜெய் ஹிந்த்.

ரேஷ்மாவின் கண்களில் ஒரு நிறைவான சந்தோசம். "சாவு நம்மை எப்படி சேர்க்கிறது பார்த்தீர்களா?" என்றாள். அவள் என்னை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தவாறு இருந்தாள். பிறகு என் தோளில் தன் கையைச் சுற்றிக் கொண்டாள். இந்த அனுபவமும் அந்த முதல் அனுபவம் போலவே இருந்தது. காதலும் தீ மாதிரிதான். தீ அனைத்தும் ஒரு தன்மையையே கொண்டவை அல்லவா?

*****
இந்த கதை நான் ஐ.ஐ.டியில் படிக்கும் போது ஹிந்தியில் எழுதியது. பரிசும் வாங்கினேன். பிற்பாடு ரோஜா, மற்றும் உயிரே (தில் சே),
பானா, பார்டர் போன்ற படங்கள் வந்துள்ளன. இருந்தாலும் எனது கதை ஒரு வேறு முறையில் ஆக எடுத்து பண்ணலாம், ஒரு ஹிந்துவின் கண்ணோட்டத்தில்.

(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.

Monday, October 27, 2008

வேசி ஒரு கதை

வேசி ஒரு கதை - இது ஒன் லைன் ஆக எடுத்து கொள்ளலாம். திரைகதை நான் அமைக்கிறேன்.
*****

கஷ்டப்பட்டு ரயிலில் இடம் பிடித்து திருச்சி நோக்கி சென்றேன். பல்லவன் ஒரு கழுதை. பொதி சுமக்கிறது.

பெல் அருகே ஆறீசீ. கம்ப்யூட்டர் சயன்ஸ்.
நான்கு வருடங்கள் மட்டும் உழைக்கவேண்டும்.

அப்பா பட்ட கஷ்டம் எல்லாம் தீரபோகிறது. இப்போது தான்அவருக்கு தலைமை ஆசிரியர் பட்டம் கிடைத்தது. அக்கா எப்படியோ ஒருஆசிரியரை கட்டி, தானும் ஆசிரியர் ஆக இருக்கிறாள். தம்பி எப்படியோ ஐஏஎஸ்என்ற கனவில் இருக்கிறான். பன்னிரெண்டாம் வகுப்பு. அதற்கும் உதவி செய்யவேண்டும். அதற்காக அடுத்த வருடம் டெல்லி சென்று ..டி. சேர வேண்டும்.

தமிழ் பழக வேண்டும். தெலுங்கு சிலருக்கு தெரிகிறது. ஆங்கில கலப்படம்வேலை செய்கிறது.

முதல் வாரத்திலேயே ஸ்ரீரங்கம் சென்று பார்த்தாச்சு. தோசை காப்பி கிரிக்கெட்என்று ஆரம்பம். மணி ஆர்டர் அடுத்த மாதம் தான் வரும். சுஜாதாவின் தெருக்கள், மாடசாமி கடை என்று பார்த்தாகிவிட்டது. தெலுகிலே என்டமுரி விறேன்ட்ரநாத் மொழி பெயர்த்த காரணம். கேது விஸ்வநாத ரெட்டி அறிமுகம் செய்த ஊர்.

*****

தெலுங்கு பேச தெரிந்த ஒரு பெண் காயத்ரி, என் வகுப்பு தோழி. அழகு மயில்.

யாரோடும் வைத்துக்கொள்வது இல்லை. அவள் குடும்பம் ஊர் பற்றி தெரியவில்லை.

பெத்தாபுரம் அவரது ஊர். அந்த ஊர் செக்ஸ் விசயத்திற்கு பெயர் போனது. சினிமாக்காரர்கள் அடிக்கடி அங்கு தான் செல்கிறார்கள், கதைநாயகி கண்டு பிடிக்க (ஹீரோயின்).

எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றியது. அவள் மனதில் எப்போதும் ஒரு சோகம்.

ஒரு நாள் விளையாட்டாக, ஊருக்கு எப்போ போகிறாய், நானும் வருகிறேன் என்றேன். முறைத்தாள்.

மலைக்கோட்டை, சந்த்யா பவன் என்று சுற்றினோம். கழுதை (குதிரை?) வண்டி சவாரி பெண்டு எடுத்து.

ஆனாலும் அவள் குடும்பம் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. நண்பர்கள் தான் அரசல் புரசலாக பேசினார்கள்.

*****

ஆங்கில வலி கல்வி ஆனாலும், பாதி நேரம் தமிழ் தான் பேசினார்கள்.

என்ன செய்வது. பழகினோம். காயத்ரியும் (காய் என்று செல்லமாக) ...

முதல் செமஸ்டர் வரை எல்லாம் நன்றாக போனது. ஹொஸ்டல் சாப்பாடு ஒத்து கொண்டது.

நான் வெஜ் கிடைக்கவில்லை எங்களுக்கு தோதாக.

*****

ஆண் ந்ன்பர்களோடு காலை காட்சி மகாலஷ்மியில் பார்த்தோம்.. மலையாள பிட் படம்.. அந்த படத்தில் நம்ம காலேஜு பொண்ணு ஒன்னு இருக்குது என்றார்கள். எனக்கு தெரிந்தவள் யாரும் இல்லை.

*****

ஒரு நல்ல, எக்ஸாம் முடியும் தறுவாயில் ஒரு ஆண் காயத்ரியை பார்க்க வந்தாள்.

ஊரிலிருந்து என்றாள். அவளுக்கு வேண்டியவர் பார்க்க வேண்டுமாம் என்றாள்.

எனக்கு புரியவில்லை.

"என்னோடு சந்த்யா லாட்ஜு வரை வருகிறாயா?" என்று கேட்டாள். எனக்கு தான் குழப்பமாக இருந்தது.

"என்ன விஷயம்" என்றேன்.

அப்புறம், என்றாள்.

*****

அந்த சனிக்கிழமை காலை குளித்து சேலை உடுத்தி, அழகாக அலங்காரம் செய்து என்னோடு புறப்பட்டாள். ஒன்றுமே பேசவில்லை.

சந்த்யா லாட்ஜு சென்றோம். நீ கிழேயே இரு நான் பேசிவிட்டு வருகிறேன் என்றாள். யார் என்றுபார்க்க வேண்டும், மனசு குறுகுறுத்தது. ரூம் நம்பர் முன்னூற்றி எழு. மெல்ல நடந்தேன். கதவு சரியாக சாத்தவில்லை போலே, அங்கே ஒரு மிருகம், தான் காமத்தை தணிக்க வேட்டை ஆடிக்கொண்டு இருந்தது. பாவம் பெத்தாபுரம் காயத்ரி.

சத்தமில்லாமல் கிழே வண்டு உட்கார்ந்துகொண்டே. பேய் அறைந்தது போல் ஆகிவிட்டது.

*****

சிறிது நேரம் கழித்து காயத்ரி வந்தாள். சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள்.

என்ன ஆச்சு என்றேன், பூரியை மென்றபடி.

"சாரி டா... இந்த விஷயம் உனக்கு மனக்கசப்பு ஏற்படுத்தும்... ". மிழுங்கியபடி. ஒன்றும் தெரியாத மாதிரி இருந்து என்ன பயன், "சொல்லு" என்றேன்.

அவள் குடும்ப கதையை விவரிக்க ஆரம்பித்தாள்.

அவளுடைய அம்மாவிற்கு யாரோ போட்டு கட்டினார்களாம். பிறகு இவள் பிறந்து, வளர்ந்தாள், யார் கண்ணும் படாமல். சாப்பாட்டிற்கு எப்படியோ பணம் வந்தவண்ணம் இருந்தது. நிறைய சினிமாக்காரர்கள் வந்து போய்கொண்டு இருந்தார்கள். இவளுக்கு ஒரு தங்கையும் வந்தாள். அப்பா என்று யாரையும் அழைத்த்தில்லையாம். மாமா மட்டும் தான்.

பதினோரு வயது, வயதுக்கு வந்தாள். குடும்ப சடங்கு. ஏலம் நடந்தது. ஒரு பெரிய சீமான் இவளை பத்தாயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார்.

நாள் நட்சத்திரம் பார்த்து ஒரு நாள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளர். மூன்றெழுத்து கம்பனி.

"படிக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறாள். "நீ படிக்கும் வரை படி, ஆனால் எனக்கு நீ வேண்டும். வேண்டும் போதெல்லாம், எங்கிருந்தாலும்" என்றார்.

"சரி என்று ஒத்துக்கொண்டேன் டா..." அழுதாள். "நன்றாக தான் நடந்து கொள்கிறார். ஆனால்....படித்த பிறகு என்ன செய்வது?".

"இப்படியே இருந்தால் அவர் சாகிறவரை, எனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் இருக்க வேண்டும்.." என்றாள்.

தங்கையும் இதே தொழிலில். இப்போதிருக்கும் யைட்ஸ் போன்றே நோய்கள் கொன்றுவிடும் என்றாள்.

*****

அவள் மீது இருந்த ஒரு தலை காதல் மடிந்தது. பரிதாபம் தான் வந்தது.

*****

இள வயசு பெண்கள் மீது தான் அவர்களுக்கு காதல். உடல் இசைக்கு அந்த மாதிரி தான் கேட்கிறார்கள்.

அந்த ஆள் வந்து போவது தொடர்தந்து. நான் தான் கூட போய் வந்தேன். விதி!

*****
நான்காவது வருடம் முடிவு. வெளிநாடு செல்ல அட்மிசன் எனக்கு கிடைத்தது. அவளும் முயற்சி செய்தாள்.

அப்போது ஒரு செய்தி. ஊரிலிருந்து. நல்லதாக இருந்தது அவளுக்கு. அவளுடைய வேட்டை ஆள் மண்டையை போட்டு விட்டான்.

*****

நான் அமேரிக்கா கிளம்பினேன். அவளும் வந்தாள். அவளை அவள் குடும்பம் வருத்ததோடு வழி அனுப்பியது ஹைதேரபாதிலிருந்து. என்னை கல்யாணம் செய்து கொள் என்று அவளிடம் அவள் அம்மா சொன்னது, கிசுகிசுபாய், எனக்கு கேட்டது.

*****
அவள் மீது எனக்கு கல்யாணம் ஆசை வரவில்லை. அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் போதும் என்று இருந்தது.

*****
மேல்படிப்பு முடிந்தவுடன், அவள் தன்னோடு படித்த ஒரு தெலுகு பையனை கல்யாணம் செய்து அமெரிக்காவில் வாழ்கிறாள். அமெரிக்காவில் சந்தோசமாக சுற்றினாள் அவனோடு.

வீட்டு எதிர்ப்புடன் தான் கல்யாணம் திருப்பதியில் நடந்தது. அப்பா இல்லையாம். இவள் குடும்பம் பற்றி விரிவாக அவனுக்கு தெரியாது.

ராஜமுந்த்ரியில்அவர்கள் பெரிய வீடு. சென்னையில் வீடு இருந்ததாம். அழைத்து சென்றான்.

மாலை போட்டு மாறியிருந்த போட்டோ ஒன்றில் தன்னை வேட்டை ஆடிய அந்த ஆள் இருந்தான். "யார் இது என்று " கேட்டாள். "என் அப்பா" என்றான் அவன்.

***
காயத்ரி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தவிர எனக்கு மட்டும் தான் அந்த உண்மை தெரியும்.

விதியின் விளையாடடு யாராலும் மாற்ற முடியாது.

இப்போது அவள் சான் ஹோசேவில் வாழ்கிறாள். நான் அமேரிக்கா பயணம் செய்யும் போது கண்டிப்பாக பார்ப்பேன். அவள் மகனுக்கு என் பெயர் வைத்திருக்கிறாள்.

(இந்த கதை பற்றி அஸ்லம் சொன்ன போது, அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவர், கசின்ஸ், அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட விஷயம், பர பரப்பாக நியூசில் வருகிறது. ஒன்றாக வாழ்ந்தார்களாம். காரணம் தெரியவில்லை.)

(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.

அந்தபுரத்து ராஜா

அந்தபுரத்து ராஜா

ஒரு நாள் நான் காட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். சிலு சிலுவென்ற கற்றுஅடித்து கொண்டு இருந்தது. main road ஒரு கிலோமீட்டர் தூரம் . வாரம் ஒரு நாள்இப்படி செல்வது வழக்கம், சிங்கூர் காட்டிலே. மணி சுமார் காலை பத்து இருக்கும். அப்போது ஒரு நரி வந்தது. கையில் வைத்திருந்த துப்பாகியால் சுடலாமா என்றுகுறி பார்த்தேன். அப்போது நரி என்னோடு பேச ஆரம்பித்தது.

"நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் அளித்தால் உனக்கு ஒரு அந்தப்புரம்கொடுப்பேன்" என்றது நரி. கிடைத்தால் லாபம் தான். சினிமாவில் பார்த்தது. டூயட்எல்லாம் ஓட ஆரம்பித்தது மனசில்.

"நீ என்னை கடிக்காமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கிறேன். எனக்கு எதற்குஅந்தப்புரம்" என்றேன். துப்பாக்கி காட்டிகொண்டே இருந்தேன்!

"மன்னிக்கவும். நான் சாதரான நரி கிடையாது. சக்தி வாய்ந்தவன். உனக்குவிஷயம் தெரியாத. சட்டங்கள் உன்னை கட்டுப்படுத்தாமல் இருக்கவேண்டுமானால், உனக்கு ஒரு அந்தப்புரம் தேவை. அதற்கு நீ ராஜா ஆகவேண்டும். ராஜா என்றால், சேவகர்கள், மந்திரிகள் உன் பேச்சை கேட்பார்கள்." நரிஎதோ ஒரு தந்திரத்தோடு பேசுவது போல இருந்தது.

எனக்கு மனசு பொறி தட்டியது. காட்டில் நடப்பதே ஒரு கொடுமை. வாழ்கையும்விரக்தி ஆக உள்ளது. செத்தாலும் பரவாயில்லை.
கெட்டது குட்டிசெவர் என்று பதில் கொடுத்தேன். "சரி" என்றேன். வருவது வரட்டும் பார்க்கலாம்.

****

நரி வாயில் ஒரு பெட்டியை கவ்விக்கொண்டு வந்தது.
எனக்கு " மாஸ்க்" படம்ஞாபகம் வந்தது. "சே சே அவ்வளவு இருக்காது என்று மனம் தேற்றிக்கொண்டது.

ஆசையோடு வாங்கினேன்.
அதில் ஒரு கிரீடம் இருந்தது. எனக்கே அளவு செய்த மாதிரி.

"பத்திரமாக உன் கை ஆளவேண்டும். வெற்றி நிச்சயம் உனக்கு. கிரீடத்தைதலையில் வைக்கும் போது, நீ அந்த நாட்டிற்கு செல்வாய். பிறகு, உன்வலிமையை உபயோகித்து, இந்த நாட்டிற்கு வந்து விடு. நான் செல்கிறேன். உன்முன் நீ என்னை நினைத்து கேட்கும் போது தோன்றுவேன்" என்று சொன்ன நரிகாட்டிற்குள் ஓடி மறைந்தது.

****

கிரீடம் வைப்பதற்கு முன்னால், என்னிடம் இருந்த watch,
camera , notebook எடுத்து , எனக்கு தெரிந்தவர்கள் விவரம், நான் என்ன செய்ய போகிறேன் என்பதை எழுதி வைத்தேன் மரத்தடியில். முக்கியமாக, என் அம்மாவிற்கு ஒரு கடிதம். "நிச்சயம் திரும்பி வருவேன்" என்று. அம்மா சோறு ஊட்டி விட்டது எல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் கண்ணீர்.

****

அந்த கிரிடத்தை எடுத்து வைத்தேன் தலையில். பழைய காலத்து படம் போல, என் முன் வட்டங்கள் சுற்றியது. சில நொடிகளில் நான் ஒரு பாலைவனத்தில் ஒரு அரண்மனை அந்தப்புரம் முன் நின்றிருந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு ஒட்டகம் கூட காணவில்லை. ராஜஸ்தான் மாதிரி இல்லை. வெக்கை வெய்யில். "வெயிலோடு விளையாடி" பாடு ஒலித்தது என் மனதில்.

கதவை தட்டினேன்.

இரண்டு அழகான பெண்கள், தமிழ் சினிமா கதாநாயகிகள் மாதிரி, திறந்தனர் .

"வணக்கம். நாங்கள் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் பேசுவோம். இது ஒரு மந்திரலோகபுரி.
சுலபமாக யாரும் வர முடியாது . உங்களுக்கு விருப்பட்ட வரை இருக்கலாம் . வாருங்கள்" என்று சொல்லி அழைத்து சென்றனர். ஒரே குஷி தான் போங்கள். சம்பந்தம் இல்லாமல் "தேரடி வீதியில் தேவதை வந்தாள்" பாட்டு மனதில் ஓடியது.

பெரிய அரண்மனையின் ஒரு பாகத்தில் இருக்கும், அதனை விசயங்களும் இருந்தன . பணியாட்கள் யாரையும் காணவில்லை. எதோ மர்மமாக இருந்தது.

ஒரு மாடிப்படி தெரிந்தது. அங்கே ஒரு படம், ஒரு ராஜா ஒரு நரியோடு , நின்றிருந்தார் . வேறு எந்த படங்களாம் காணவில்லை. யாரோ ஒருவர் இருமும் முனகல் சத்தம்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! வீராசாமி அண்ணன் மாதிரி ஆகிவிட்டேன்.

இது நிச்சயமாக உலகம , இல்லை வேறு எங்கவதா? சத்தமாக கேட்டேன். நான் பெரு முச்சு விட்டுக்கொண்டிருந்த சத்தம் எனக்கு நன்றாக கேட்டது. நிசப்தம். லப் டப். லப் டப். இருதயம் துடிப்பது கூட கேட்டது.

"ஆமாம் . இது உலகம் தான். ஆனால் யாரும் எளிதில் இங்கு வர முடியாது. இது எங்கு எந்த நாட்டில் உள்ளது என்பதும் உங்கள்ளுக்கு தெரியாது. உங்களை இங்கே அனுப்பியவர் தான் சொல்ல வேண்டும்." என்றார் ஊர்வசி மாதிரி இருந்த ஒரு பெண்.

அப்போது தான் கவனித்தேன் , நான் அணிந்திருந்த உடை, முகலாய ராஜாக்கள் அணிவது போல இருந்தது. கிரீடம் பத்திரமாக இருந்தது. கழட்ட தான் முடியவில்லை.

பாட்டு வேண்டும் என்று நினைத்தேன் . "வாரான் வாரான் பூச்சாண்டி" கேட்க ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு குள்ள மனிதன் ஓடி வந்தான். மனிதனா அவன். பன்றி மாதிரி இருந்தான்... "ராஜாவுக்கு வணக்கம். உங்கள் பாசை பேசும் பணியாளர்கள் கொஞ்சம் குறைவு. நாங்கள்
சிக்கீரம் கற்று கொள்கிறோம் . நீங்கள் சொன்னால் தர்பாரில் அனைவரையும் பார்க்கலாம்." என்றான்.

"பசிக்குது " என்றேன். "பழங்கள் வேண்டுமா இல்லை அரிசி உணவு பரிமாறட்டுமா " என்று கேட்டான்.

"இப்போது பழம். சிறிது நேரம் கழித்து உணவு" என்றேன்.

தேவதைகள் போல இருந்த பெண்கள் பழ தட்டு கொண்டு வந்தனர்.

உலகின்
அனைத்து பழங்களும் கிடைத்தது. பிஜபூரின் பாரிய பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். ரொம்ப சுவை.

பெண்கள் யாரையும் காணவில்லை. வேறு
ஒருவரையும் காணவில்லை.

எங்கே அந்தே அழகான பெண்கள். அவர்கள் நடனம்ஆடினால் சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். திடீரென்று அவர்கள் ஒருகூட்டமாய் தோன்றி "நாதா.." என்று பாடி ஆடினார்கள்.

****

பாட்டு முடிந்தது எழுந்து நடக்க ஆரம்பித்தேன். எல்லா அறைகள் எல்லாம் மூடபடிருந்தன. சிறு சிறு முனகல்கள் வந்துக்கொண்டிருந்தன. பயம் தொற்றியது.
லப் டப். லப் டப்.

பெரிய பெரிய மண் ஜாடியில் தண்ணீர் இருந்தது அங்கே. ஒரு சில பனி ஆட்கள்,
பெரிய பெரிய வாளியோடு, அங்கே சென்று வருவதும் போவதுமாக இருந்தனர் .

"என்ன செய்கிறார்கள்" என்று கேட்டேன். "தண்ணீர் சரியாக உள்ளதா தேவைக்கேற்ப என்று பார்கிறார்கள் " என்றான் ஒருவன். எதோ ஒரு மர்மம் இங்கே.

கையில் இருந்த பழம் சாப்பிட பிறகு......

****

என்னை கட்டி போட்டிருந்தார்கள். கரு கும்மென்று இருந்தது அந்த் அறையில்.

என் உடம்பெல்லாம் டுபுகள் குழாய்கள் . பாம்பு போல சுற்றி சுற்றி இருந்தது. வலி தாங்க முடியவில்லை.

என் உடம்பிலிருந்த தண்ணீர் எல்லாம் வெளியேறிக்கொண்டு இருந்தது. உறிஞ்சிக்கொண்டு இருந்தன அட்டை போன்ற ஜந்துக்கள்.

தாகமாக இருந்தது. நான் "தண்ணீர் , தண்ணீர் " என்று கத்தினேன் . யாரும் வரவில்லை.

சரி அந்த நரியை மனதில் நினைத்து கூப்பிட்டேன், அது சொன்ன மாதிரி.

அப்போது, அந்த நரி தோன்றியது. கடுங்கோபமாய் "என்னை ஏமாற்றி விட்டாய்" என்றேன்.

"இல்லை நீயாக தான் இந்த தண்ணியில்லா காட்டிற்கு வந்தாய் .
நீ என்னை சுட்டிருக்கலாம். நாங்கள் நரி ராஜா வம்சத்தை சேர்தவர்கள். எங்களுக்கு தண்ணீர் வேண்டுமானால், மனிதர்களை கொண்டு வந்து தன் இறக்கி கொள்வோம்! மனிதர்கள் தான் எழுபது சதவிகிதம் தண்ணீரால் ஆனவர்கள் ஆயிற்றே " என்று எக்காலமாக சிரித்தது .

மயங்கி சரிந்தேன் .

அப்போது
தான் ஆண்டவன் நினைவுக்கு வந்தார். சில சமயம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் ஒரு நாள் முன்பு வரை.

காப்பற்றுங்கள் என்று நினைத்து கொண்டேன்.

நடந்தது.

****

விழித்த பிறகு காட்டில் இருப்பதை போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நான்ஒரு சிறு குழந்தை வற்றி போல இருந்தேன். வற்றிய உடம்பு. எலும்புக்கூடு உடம்பெல்லாம் வலித்தது . ஆனால் சிறிது பலம் இருந்த மாதரி இருந்தது.

எழுந்து நின்றேன் . அறை ட்ரவுசர் முழு
பாண்ட்ஸ் ஆகி இருந்தது. பாக்கெட்டில்கையை விட்டு, பெரிய வாட்சு எடுத்து பார்த்தேன். சாயந்திரம் நான்கு மணி. அதேநாள்.

வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை . சிறிது சல சலப்பு கேட்டது. அதுவும் நின்றுவிட்டது . காட்டின் கீதம் மட்டும் தான் . வீட்டிற்க்கு செல்ல வேண்டும், தேடுவார்கள்.

"இந்த மர்மத்தை ஒரு நாள் நிச்சயம் கண்டு
பிடிப்பேன் " என்று நினைத்துக்கொண்டு நடந்தேன். இல்லை இல்லை தவழ்ந்தேன்.

**** முற்றும் ****

என் தாத்தா சொல்லிய பல ராஜா கதைகள், எனக்கு இன்ஸ்பிரேசன்.

(இந்த கதையை, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொல்லி உள்ளேன். திருடாமல் சுடாமல் இருந்தால் சரி. நானே இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்க ஆசை.)

(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.

Sunday, October 26, 2008

முன்னூறாவது பதிவு: ஆட்டு புழுக்கை இல்லை

அதிசயம் ஆனால் உண்மை, முன்னூறாவது பதிவு!

ஒரு சில நல்ல பதிவுகள், மற்றும் கதைகள், கவிதைகள், மற்றும் விமர்சனங்கள் எழுதியுள்ளேன்.

பத்திரிக்கைகளில் எழுதுவது எனக்கு விருப்பம் இல்லை. சினிமா சம்பந்த பட்ட விஷயங்கள் தான் பிடிக்கும். லிவிங் இன் அன்ரியல் வேர்ல்ட்.

கான்சன்டிரேசன் ஜாஸ்தி வேண்டும்.

அப்புறம் ஆட்டு புழுக்கை என்பது அஜஷக்ருத் என்கிறன, ஆரிய புராணங்கள்!

மருந்துங்க! ஆட்டின் மலம்.. சாணிங்க! ;-) (சென்னையில், சில சினிமா போஸ்டர்கள் மீது தாம்பரம் சைட் அடித்திருப்பார்கள்)

மாட்டின் சாணி, மெழுக பயன் படுகிறது, நான் பார்த்த சில கிராமங்களில். கோவை, பொள்ளாச்சியில், வழக்கம் உள்ளது. பச்சை கலர் போட்டு மெழுகுவார்கள். நோய் நிவாரணி...

யானையின் சாணி, அர்த்ரைடிஸ் நோய் குணம் ஆக பூச வேண்டும் என்கிறார்கள்.

சாணி பற்றி எழுதும் போது, எனக்கு மனித மூத்திரம் நினைவுக்கு வருகிறது... மொரார்ஜி தேசாய், நிலக்கடலை ஊற போட்டு (காலையில் வரும் தன் முதல் மூத்திரம்) சாப்பிடுவாராம்... அதிக நாள் வாழ்ந்த ஒரு சக்தி கொடுத்தா?

நாளைக்கு ஒரு ஆட்டு புழுக்கை... சீ... கவிதை எழுதனும். (சென்னையிலிருந்து!)

கம்முன்னு கெட

கம்முன்னு கெட என்று சொல்கிறார் என் மனைவி, தீபாவளி அதுவுமாக, கம்ப்யுட்டர் பக்கம் எதுக்கு!

குழந்தைகள் கொஞ்ச நேரம் பட்டாசு வெடித்தார்கள்.

பாதி நேரம் நான் தான் வேடிக்கை காட்டினேன்!

கல்கத்தா ஞாபகம் வந்து விட்டது! ஒரு பத்து வயது வரை, எனக்கும் அக்காவுக்கும், அப்பா தான் ப்ரோடேக்சன்!

வித்தியாசமான, பட்சணங்கள் நிரம்பிய பண்டிகை.

எங்கள் வீட்டில், ஸ்வீட் பூரி, ரவ லாடு, தேங்காய் பர்பி மற்றும் முறுக்கு!

என் மனைவிக்கு தேங்க்ஸ்.

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ற விதம்

கவிதை உறங்கும் நேரம்

விடியாத இரவுகளின் கரிசனங்கள்
விடிந்த பின் தீராதா
முடியாத வேலைகளின் அலைச்சல்கள்
முடிந்த பின் தீராதா

உறங்காமல் இருபவனுக்கு மனக்கவலைகள்
மனம் ஆகிறது பட்டாம்பூச்சி
இது உறங்கும் நேரம்
சொல்கிறது மின்மினிப்பூச்சி