அந்தபுரத்து ராஜா
ஒரு நாள் நான் காட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். சிலு சிலுவென்ற கற்றுஅடித்து கொண்டு இருந்தது. main road ஒரு கிலோமீட்டர் தூரம் . வாரம் ஒரு நாள்இப்படி செல்வது வழக்கம், சிங்கூர் காட்டிலே. மணி சுமார் காலை பத்து இருக்கும். அப்போது ஒரு நரி வந்தது. கையில் வைத்திருந்த துப்பாகியால் சுடலாமா என்றுகுறி பார்த்தேன். அப்போது நரி என்னோடு பேச ஆரம்பித்தது.
"நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் அளித்தால் உனக்கு ஒரு அந்தப்புரம் கொடுப்பேன்" என்றது நரி. கிடைத்தால் லாபம் தான். சினிமாவில் பார்த்தது. டூயட்எல்லாம் ஓட ஆரம்பித்தது மனசில்.
"நீ என்னை கடிக்காமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கிறேன். எனக்கு எதற்குஅந்தப்புரம்" என்றேன். துப்பாக்கி காட்டிகொண்டே இருந்தேன்!
"மன்னிக்கவும். நான் சாதரான நரி கிடையாது. சக்தி வாய்ந்தவன். உனக்குவிஷயம் தெரியாத. சட்டங்கள் உன்னை கட்டுப்படுத்தாமல் இருக்கவேண்டுமானால், உனக்கு ஒரு அந்தப்புரம் தேவை. அதற்கு நீ ராஜா ஆகவேண்டும். ராஜா என்றால், சேவகர்கள், மந்திரிகள் உன் பேச்சை கேட்பார்கள்." நரிஎதோ ஒரு தந்திரத்தோடு பேசுவது போல இருந்தது.
எனக்கு மனசு பொறி தட்டியது. காட்டில் நடப்பதே ஒரு கொடுமை. வாழ்கையும்விரக்தி ஆக உள்ளது. செத்தாலும் பரவாயில்லை. கெட்டது குட்டிசெவர் என்று பதில் கொடுத்தேன். "சரி" என்றேன். வருவது வரட்டும் பார்க்கலாம்.
****
நரி வாயில் ஒரு பெட்டியை கவ்விக்கொண்டு வந்தது. எனக்கு "த மாஸ்க்" படம்ஞாபகம் வந்தது. "சே சே அவ்வளவு இருக்காது என்று மனம் தேற்றிக்கொண்டது.
ஆசையோடு வாங்கினேன். அதில் ஒரு கிரீடம் இருந்தது. எனக்கே அளவு செய்த மாதிரி.
"பத்திரமாக உன் கை ஆளவேண்டும். வெற்றி நிச்சயம் உனக்கு. கிரீடத்தைதலையில் வைக்கும் போது, நீ அந்த நாட்டிற்கு செல்வாய். பிறகு, உன்வலிமையை உபயோகித்து, இந்த நாட்டிற்கு வந்து விடு. நான் செல்கிறேன். உன்முன் நீ என்னை நினைத்து கேட்கும் போது தோன்றுவேன்" என்று சொன்ன நரிகாட்டிற்குள் ஓடி மறைந்தது.
****
கிரீடம் வைப்பதற்கு முன்னால், என்னிடம் இருந்த watch, camera , notebook எடுத்து , எனக்கு தெரிந்தவர்கள் விவரம், நான் என்ன செய்ய போகிறேன் என்பதை எழுதி வைத்தேன் மரத்தடியில். முக்கியமாக, என் அம்மாவிற்கு ஒரு கடிதம். "நிச்சயம் திரும்பி வருவேன்" என்று. அம்மா சோறு ஊட்டி விட்டது எல்லாம் ஞாபகம் வந்தது. கண்களில் கண்ணீர்.
****
அந்த கிரிடத்தை எடுத்து வைத்தேன் தலையில். பழைய காலத்து படம் போல, என் முன் வட்டங்கள் சுற்றியது. சில நொடிகளில் நான் ஒரு பாலைவனத்தில் ஒரு அரண்மனை அந்தப்புரம் முன் நின்றிருந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு ஒட்டகம் கூட காணவில்லை. ராஜஸ்தான் மாதிரி இல்லை. வெக்கை வெய்யில். "வெயிலோடு விளையாடி" பாடு ஒலித்தது என் மனதில்.
கதவை தட்டினேன்.
இரண்டு அழகான பெண்கள், தமிழ் சினிமா கதாநாயகிகள் மாதிரி, திறந்தனர் .
"வணக்கம். நாங்கள் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் பேசுவோம். இது ஒரு மந்திரலோகபுரி. சுலபமாக யாரும் வர முடியாது . உங்களுக்கு விருப்பட்ட வரை இருக்கலாம் . வாருங்கள்" என்று சொல்லி அழைத்து சென்றனர். ஒரே குஷி தான் போங்கள். சம்பந்தம் இல்லாமல் "தேரடி வீதியில் தேவதை வந்தாள்" பாட்டு மனதில் ஓடியது.
பெரிய அரண்மனையின் ஒரு பாகத்தில் இருக்கும், அதனை விசயங்களும் இருந்தன . பணியாட்கள் யாரையும் காணவில்லை. எதோ மர்மமாக இருந்தது.
ஒரு மாடிப்படி தெரிந்தது. அங்கே ஒரு படம், ஒரு ராஜா ஒரு நரியோடு , நின்றிருந்தார் . வேறு எந்த படங்களாம் காணவில்லை. யாரோ ஒருவர் இருமும் முனகல் சத்தம்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! வீராசாமி அண்ணன் மாதிரி ஆகிவிட்டேன்.
இது நிச்சயமாக உலகம , இல்லை வேறு எங்கவதா? சத்தமாக கேட்டேன். நான் பெரு முச்சு விட்டுக்கொண்டிருந்த சத்தம் எனக்கு நன்றாக கேட்டது. நிசப்தம். லப் டப். லப் டப். இருதயம் துடிப்பது கூட கேட்டது.
"ஆமாம் . இது உலகம் தான். ஆனால் யாரும் எளிதில் இங்கு வர முடியாது. இது எங்கு எந்த நாட்டில் உள்ளது என்பதும் உங்கள்ளுக்கு தெரியாது. உங்களை இங்கே அனுப்பியவர் தான் சொல்ல வேண்டும்." என்றார் ஊர்வசி மாதிரி இருந்த ஒரு பெண்.
அப்போது தான் கவனித்தேன் , நான் அணிந்திருந்த உடை, முகலாய ராஜாக்கள் அணிவது போல இருந்தது. கிரீடம் பத்திரமாக இருந்தது. கழட்ட தான் முடியவில்லை.
பாட்டு வேண்டும் என்று நினைத்தேன் . "வாரான் வாரான் பூச்சாண்டி" கேட்க ஆரம்பித்தது.
திடீரென்று ஒரு குள்ள மனிதன் ஓடி வந்தான். மனிதனா அவன். பன்றி மாதிரி இருந்தான்... "ராஜாவுக்கு வணக்கம். உங்கள் பாசை பேசும் பணியாளர்கள் கொஞ்சம் குறைவு. நாங்கள் சிக்கீரம் கற்று கொள்கிறோம் . நீங்கள் சொன்னால் தர்பாரில் அனைவரையும் பார்க்கலாம்." என்றான்.
"பசிக்குது " என்றேன். "பழங்கள் வேண்டுமா இல்லை அரிசி உணவு பரிமாறட்டுமா " என்று கேட்டான்.
"இப்போது பழம். சிறிது நேரம் கழித்து உணவு" என்றேன்.
தேவதைகள் போல இருந்த பெண்கள் பழ தட்டு கொண்டு வந்தனர்.
உலகின் அனைத்து பழங்களும் கிடைத்தது. பிஜபூரின் பாரிய பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். ரொம்ப சுவை.
பெண்கள் யாரையும் காணவில்லை. வேறு ஒருவரையும் காணவில்லை.
எங்கே அந்தே அழகான பெண்கள். அவர்கள் நடனம்ஆடினால் சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். திடீரென்று அவர்கள் ஒருகூட்டமாய் தோன்றி "நாதா.." என்று பாடி ஆடினார்கள்.
****
பாட்டு முடிந்தது எழுந்து நடக்க ஆரம்பித்தேன். எல்லா அறைகள் எல்லாம் மூடபடிருந்தன. சிறு சிறு முனகல்கள் வந்துக்கொண்டிருந்தன. பயம் தொற்றியது. லப் டப். லப் டப்.
பெரிய பெரிய மண் ஜாடியில் தண்ணீர் இருந்தது அங்கே. ஒரு சில பனி ஆட்கள், பெரிய பெரிய வாளியோடு, அங்கே சென்று வருவதும் போவதுமாக இருந்தனர் .
"என்ன செய்கிறார்கள்" என்று கேட்டேன். "தண்ணீர் சரியாக உள்ளதா தேவைக்கேற்ப என்று பார்கிறார்கள் " என்றான் ஒருவன். எதோ ஒரு மர்மம் இங்கே.
கையில் இருந்த பழம் சாப்பிட பிறகு......
****
என்னை கட்டி போட்டிருந்தார்கள். கரு கும்மென்று இருந்தது அந்த் அறையில்.
என் உடம்பெல்லாம் டுபுகள் குழாய்கள் . பாம்பு போல சுற்றி சுற்றி இருந்தது. வலி தாங்க முடியவில்லை.
என் உடம்பிலிருந்த தண்ணீர் எல்லாம் வெளியேறிக்கொண்டு இருந்தது. உறிஞ்சிக்கொண்டு இருந்தன அட்டை போன்ற ஜந்துக்கள்.
தாகமாக இருந்தது. நான் "தண்ணீர் , தண்ணீர் " என்று கத்தினேன் . யாரும் வரவில்லை.
சரி அந்த நரியை மனதில் நினைத்து கூப்பிட்டேன், அது சொன்ன மாதிரி.
அப்போது, அந்த நரி தோன்றியது. கடுங்கோபமாய் "என்னை ஏமாற்றி விட்டாய்" என்றேன்.
"இல்லை நீயாக தான் இந்த தண்ணியில்லா காட்டிற்கு வந்தாய் . நீ என்னை சுட்டிருக்கலாம். நாங்கள் நரி ராஜா வம்சத்தை சேர்தவர்கள். எங்களுக்கு தண்ணீர் வேண்டுமானால், மனிதர்களை கொண்டு வந்து தன் இறக்கி கொள்வோம்! மனிதர்கள் தான் எழுபது சதவிகிதம் தண்ணீரால் ஆனவர்கள் ஆயிற்றே " என்று எக்காலமாக சிரித்தது .
மயங்கி சரிந்தேன் .
அப்போது தான் ஆண்டவன் நினைவுக்கு வந்தார். சில சமயம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் ஒரு நாள் முன்பு வரை.
காப்பற்றுங்கள் என்று நினைத்து கொண்டேன்.
நடந்தது.
****
விழித்த பிறகு காட்டில் இருப்பதை போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நான்ஒரு சிறு குழந்தை வற்றி போல இருந்தேன். வற்றிய உடம்பு. எலும்புக்கூடு உடம்பெல்லாம் வலித்தது . ஆனால் சிறிது பலம் இருந்த மாதரி இருந்தது.
எழுந்து நின்றேன் . அறை ட்ரவுசர் முழு பாண்ட்ஸ் ஆகி இருந்தது. பாக்கெட்டில்கையை விட்டு, பெரிய வாட்சு எடுத்து பார்த்தேன். சாயந்திரம் நான்கு மணி. அதேநாள்.
வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை . சிறிது சல சலப்பு கேட்டது. அதுவும் நின்றுவிட்டது . காட்டின் கீதம் மட்டும் தான் . வீட்டிற்க்கு செல்ல வேண்டும், தேடுவார்கள்.
"இந்த மர்மத்தை ஒரு நாள் நிச்சயம் கண்டு பிடிப்பேன் " என்று நினைத்துக்கொண்டு நடந்தேன். இல்லை இல்லை தவழ்ந்தேன்.
**** முற்றும் ****
என் தாத்தா சொல்லிய பல ராஜா கதைகள், எனக்கு இன்ஸ்பிரேசன்.
(இந்த கதையை, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொல்லி உள்ளேன். திருடாமல் சுடாமல் இருந்தால் சரி. நானே இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்க ஆசை.)
(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
No comments:
Post a Comment