ஆணாதிக்கம் என்ற சொல், மகிழ்ச்சி தராத ஒன்று.
பூ வாங்க சென்றேன். நடை தான். மனைவி குடும்பம், என்னை பற்றி சொல்லியிருப்பார் போல. பத்து ருபாய் முழம் என்றாள். பத்து முழம் வாங்க வேண்டும்!
"குறைத்து கொடுக்க கூடாதா அம்மா", என்றேன்.
அவர் முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு, "என்னைய தோரே, கலக்டரா இருந்தவன் நீ, ஒத்த ருபாய் ஐடத்துக்கு இம்மாம் பெரிய வார்த்தை சொல்றே... (கவனிக்கவும், டோடல் பிசினஸ் நூறு ருபாய்!)... ஆம்பிளைகளே இப்படி தான். தோ அங்கு சுருண்டு படுத்திருக்கிதே, கஸ்மாலம்.. என்ன கட்னவன் தான். கொஞ்ச நேரத்திலே எழுந்து, குவார்ட்டருக்கு காசு கேப்பான்!..."
ஆணாதிக்கத்தின் உச்சகட்டமா?
பெங்களூரில் இந்த கவலை இல்லை. பாசை அப்படி. பத்து ருபாய் கொடுப்பேன், இது பேக்கு என்பேன். கொடுப்பதை வாங்குவேன்.
சில கேள்விகள், சில பதில்கள்.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
No comments:
Post a Comment