Saturday, November 1, 2008

கன்னட ராஜ்யோத்சவா

கன்னட ராஜ்யோத்சவா!

குழந்தைகள் மயங்கி விழும் காட்சி டிவியில், பாவம்.

எட்டியுரப்பாவும், ஷோபாவும் அமர்ந்து ராஜ பரிவட்டம் போல ரசிக்கிறார்கள். கேமரா வெள்ளையர்களை zoom செய்கிறது. அவர்களுக்கு, யாரோ ஒரு ஆபிசர், இலவசமாக தண்ணீர் பாட்டில் கொடுக்கிறார்.

குழந்தைகள் கையில் Lays சிப்ஸ் பாக்கெட்!

கர்நாடக மற்றும் ஆந்த்ரா உதயம் ஆனா நாள் இன்று. ராஜ்யோத்சவா. ஐம்பத்து ஐந்து வருடங்கள் முன்பு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது காவிரி பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள்!

ஆந்த்ராவில் வேலை செய்யம் கன்னட பெண்ணுக்கு ராஜ்யோத்சவா விருது. எட்டியுரப்பாவிர்க்கு பிடித்த பெயர் ஷோபா. ஆனால் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ரீட்டா ஆப்ரகாமிற்கு, திருப்பதி நாமம். மலையாளியாம்! ஹிந்து கிடையாது. அதிகம் போட்டிகள் வெற்றி பெற்றும் பயன் என்ன?

கொடுமை என்னவென்றால், தீபிகாவிற்கும் சிபாரிசு செய்தார், அவர் அப்பா பிரகாஷ் படுகோனே. தலை தப்பியது சி.எம்.மிற்கு. பத்திரிக்கைகள் கொன்றிருப்பார்கள்...

தமிழ் மக்களுக்கு வரம்... கன்னட மக்கள் கொடுத்து சரோஜா தேவி!

Befitting!

No comments: