சென்னையில் இரண்டு நாட்களாக, அங்கும் இங்கும் சென்று, நண்பர்களை பிடித்து பேசி...
எங்கு சென்றாலும் நண்பர்கள், ப்லோக் பற்றி பேசுகிறார்கள்.. ஆனால் எவரும் கமண்ட்ஸ் இடவில்லை. காரணம், சைலன்ஸ்.
அப்புறம், செல்போனும் பெண்களும் பற்றி ஒரு பேச்சு. ரகசிய சிநேகிதிகள் ஆகிறார்கள். என் மனைவியின் செல் போனை தொட விடுவதில்லை! உங்களுக்கு எதுக்கு?
கல்கத்தாவில் எங்கள் வீட்டில் முதல் முதலில் டிவி வந்த வருடம் நான் எட்டாவது படிக்கும் போது, 1981. டிவி வருவதற்கு முன் சில காலங்களுக்கு முன் தான் வீட்டில் டெலிபோன் வந்தது.
அப்பா பாக்டரியில் இருந்தது ஒரு பழங்காலத்து போன். லாக் போட்டு வைத்திருப்பார்கள்.. எஸ்டிடி கிடையாது. த்ரந்க் கால் தான். சில சமயம் அந்த டெலிபோன் புக்கிலிருந்து ஒரு நம்பரை கூப்பிட்டு, துணிக்கடை ... என்று கேட்டு தமாஸ் செய்தது ஞாபகம்.... இதுவும், ஸ்க்ரெவ் டிரைவர் வைத்து லோக் ஓபன் செய்து. ஒரு முறை அக்கா மாட்டிவிட்டுவிட்டாள். இடி அடி.
சென்னையில், ஒரு ஹிந்தி பட இயக்குனர் பார்த்து பேசினேன்.
என் ப்லோக் மூலம் வந்த மூன்று சினிமா கதைகளும் அவருக்கு பிடித்திருந்தது. படம் வரலாம். கொஞ்சம் காலம் ஆகும். என் மனைவி சொல்கிறாள், ப்ளோக்கை கட்டி அழாமல், சினிமா கதை எதாவது பண்ணுங்கள் என்று.
டி.நகர் ஏரியா. எப்படி மக்கள் செலவு செய்கிறார்கள். அந்த ஹோட்டலில் ஒரு குடும்பம் வந்தது. தீபாவளி ஸ்பெசல் புப்பெ. நாங்கள் பேசிக்கொண்டு இருந்த மூன்று மணி நேரம் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்! ;-)
எனக்கு மாமனார் வீட்டில், இரவு தான் எனக்கு பிடித்த பூரி கிழங்கு. இன்றும் நாளையும், சென்னையில் நடை பயணம். குட்டி இட்லி சாம்பார், முடிந்தது. கோவில் பக்கம் போக வேண்டும். ரெட் and வைட் ஸ்ட்ரைப்ஸ் ஷர்ட் போட்ட ஒரு ஆள், அநியாய விலை சரவணா பவன் பக்கம் பார்த்தால், நான் தான். மாமனாரின் பென்ஸ் நிற்கும்! அப்புறம் ஒரு எழுத்தாளரோடு சந்திப்பு என் சீனியர் போலிஸ் நண்பர் வருகிறார் என்னோடு, ஒரு கணக்கு பாக்கி இருக்கிறது!
வாசகர் ரெஸ்பான்ஸ் பார்க்க பதிவுபோதையில் போட்டேன். மீள் பதிவு, இன்னொரு சினிமா கதை ப்லொக்கில் இருந்து! இன்றும் போடுவேன். தீபாவளி லீவ் ஆதலால், குறைவாக படிக்கப்பட்டது.
இம்சை தான்!
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
4 comments:
Very Nice! Nanbare, you have now 16000 visitors too, I am the one! Congrats and keep writing and do well in Cinema.
///என் ப்லோக் மூலம் வந்த மூன்று சினிமா கதைகளும் அவருக்கு பிடித்திருந்தது.///
:) which ones?
நல்ல பதிவு.
வித்தியாசமான எழுத்து நடை!
ரொம்ப நன்றி vijay, surveysan & சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
இந்த பதிவிற்கு முன் போட்ட மூன்ற மீள் பதிவு கதைகள் தான்.
சினிமா கதை என்று தேடுங்கள்.
Post a Comment