வேசி ஒரு கதை - இது ஒன் லைன் ஆக எடுத்து கொள்ளலாம். திரைகதை நான் அமைக்கிறேன்.
*****
கஷ்டப்பட்டு ரயிலில் இடம் பிடித்து திருச்சி நோக்கி சென்றேன். பல்லவன் ஒரு கழுதை. பொதி சுமக்கிறது.
பெல் அருகே ஆறீசீ. கம்ப்யூட்டர் சயன்ஸ். நான்கு வருடங்கள் மட்டும் உழைக்கவேண்டும்.
அப்பா பட்ட கஷ்டம் எல்லாம் தீரபோகிறது. இப்போது தான்அவருக்கு தலைமை ஆசிரியர் பட்டம் கிடைத்தது. அக்கா எப்படியோ ஒருஆசிரியரை கட்டி, தானும் ஆசிரியர் ஆக இருக்கிறாள். தம்பி எப்படியோ ஐஏஎஸ்என்ற கனவில் இருக்கிறான். பன்னிரெண்டாம் வகுப்பு. அதற்கும் உதவி செய்யவேண்டும். அதற்காக அடுத்த வருடம் டெல்லி சென்று ஐ.ஐ.டி. சேர வேண்டும்.
தமிழ் பழக வேண்டும். தெலுங்கு சிலருக்கு தெரிகிறது. ஆங்கில கலப்படம்வேலை செய்கிறது.
முதல் வாரத்திலேயே ஸ்ரீரங்கம் சென்று பார்த்தாச்சு. தோசை காப்பி கிரிக்கெட்என்று ஆரம்பம். மணி ஆர்டர் அடுத்த மாதம் தான் வரும். சுஜாதாவின் தெருக்கள், மாடசாமி கடை என்று பார்த்தாகிவிட்டது. தெலுகிலே என்டமுரி விறேன்ட்ரநாத் மொழி பெயர்த்த காரணம். கேது விஸ்வநாத ரெட்டி அறிமுகம் செய்த ஊர்.
*****
தெலுங்கு பேச தெரிந்த ஒரு பெண் காயத்ரி, என் வகுப்பு தோழி. அழகு மயில்.
யாரோடும் வைத்துக்கொள்வது இல்லை. அவள் குடும்பம் ஊர் பற்றி தெரியவில்லை.
பெத்தாபுரம் அவரது ஊர். அந்த ஊர் செக்ஸ் விசயத்திற்கு பெயர் போனது. சினிமாக்காரர்கள் அடிக்கடி அங்கு தான் செல்கிறார்கள், கதைநாயகி கண்டு பிடிக்க (ஹீரோயின்).
எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றியது. அவள் மனதில் எப்போதும் ஒரு சோகம்.
ஒரு நாள் விளையாட்டாக, ஊருக்கு எப்போ போகிறாய், நானும் வருகிறேன் என்றேன். முறைத்தாள்.
மலைக்கோட்டை, சந்த்யா பவன் என்று சுற்றினோம். கழுதை (குதிரை?) வண்டி சவாரி பெண்டு எடுத்து.
ஆனாலும் அவள் குடும்பம் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. நண்பர்கள் தான் அரசல் புரசலாக பேசினார்கள்.
*****
ஆங்கில வலி கல்வி ஆனாலும், பாதி நேரம் தமிழ் தான் பேசினார்கள்.
என்ன செய்வது. பழகினோம். காயத்ரியும் (காய் என்று செல்லமாக) ...
முதல் செமஸ்டர் வரை எல்லாம் நன்றாக போனது. ஹொஸ்டல் சாப்பாடு ஒத்து கொண்டது.
நான் வெஜ் கிடைக்கவில்லை எங்களுக்கு தோதாக.
*****
ஆண் ந்ன்பர்களோடு காலை காட்சி மகாலஷ்மியில் பார்த்தோம்.. மலையாள பிட் படம்.. அந்த படத்தில் நம்ம காலேஜு பொண்ணு ஒன்னு இருக்குது என்றார்கள். எனக்கு தெரிந்தவள் யாரும் இல்லை.
*****
ஒரு நல்ல, எக்ஸாம் முடியும் தறுவாயில் ஒரு ஆண் காயத்ரியை பார்க்க வந்தாள்.
ஊரிலிருந்து என்றாள். அவளுக்கு வேண்டியவர் பார்க்க வேண்டுமாம் என்றாள்.
எனக்கு புரியவில்லை.
"என்னோடு சந்த்யா லாட்ஜு வரை வருகிறாயா?" என்று கேட்டாள். எனக்கு தான் குழப்பமாக இருந்தது.
"என்ன விஷயம்" என்றேன்.
அப்புறம், என்றாள்.
*****
அந்த சனிக்கிழமை காலை குளித்து சேலை உடுத்தி, அழகாக அலங்காரம் செய்து என்னோடு புறப்பட்டாள். ஒன்றுமே பேசவில்லை.
சந்த்யா லாட்ஜு சென்றோம். நீ கிழேயே இரு நான் பேசிவிட்டு வருகிறேன் என்றாள். யார் என்றுபார்க்க வேண்டும், மனசு குறுகுறுத்தது. ரூம் நம்பர் முன்னூற்றி எழு. மெல்ல நடந்தேன். கதவு சரியாக சாத்தவில்லை போலே, அங்கே ஒரு மிருகம், தான் காமத்தை தணிக்க வேட்டை ஆடிக்கொண்டு இருந்தது. பாவம் பெத்தாபுரம் காயத்ரி.
சத்தமில்லாமல் கிழே வண்டு உட்கார்ந்துகொண்டே. பேய் அறைந்தது போல் ஆகிவிட்டது.
*****
சிறிது நேரம் கழித்து காயத்ரி வந்தாள். சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள்.
என்ன ஆச்சு என்றேன், பூரியை மென்றபடி.
"சாரி டா... இந்த விஷயம் உனக்கு மனக்கசப்பு ஏற்படுத்தும்... ". மிழுங்கியபடி. ஒன்றும் தெரியாத மாதிரி இருந்து என்ன பயன், "சொல்லு" என்றேன்.
அவள் குடும்ப கதையை விவரிக்க ஆரம்பித்தாள்.
அவளுடைய அம்மாவிற்கு யாரோ போட்டு கட்டினார்களாம். பிறகு இவள் பிறந்து, வளர்ந்தாள், யார் கண்ணும் படாமல். சாப்பாட்டிற்கு எப்படியோ பணம் வந்தவண்ணம் இருந்தது. நிறைய சினிமாக்காரர்கள் வந்து போய்கொண்டு இருந்தார்கள். இவளுக்கு ஒரு தங்கையும் வந்தாள். அப்பா என்று யாரையும் அழைத்த்தில்லையாம். மாமா மட்டும் தான்.
பதினோரு வயது, வயதுக்கு வந்தாள். குடும்ப சடங்கு. ஏலம் நடந்தது. ஒரு பெரிய சீமான் இவளை பத்தாயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார்.
நாள் நட்சத்திரம் பார்த்து ஒரு நாள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளர். மூன்றெழுத்து கம்பனி.
"படிக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறாள். "நீ படிக்கும் வரை படி, ஆனால் எனக்கு நீ வேண்டும். வேண்டும் போதெல்லாம், எங்கிருந்தாலும்" என்றார்.
"சரி என்று ஒத்துக்கொண்டேன் டா..." அழுதாள். "நன்றாக தான் நடந்து கொள்கிறார். ஆனால்....படித்த பிறகு என்ன செய்வது?".
"இப்படியே இருந்தால் அவர் சாகிறவரை, எனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் இருக்க வேண்டும்.." என்றாள்.
தங்கையும் இதே தொழிலில். இப்போதிருக்கும் யைட்ஸ் போன்றே நோய்கள் கொன்றுவிடும் என்றாள்.
*****
அவள் மீது இருந்த ஒரு தலை காதல் மடிந்தது. பரிதாபம் தான் வந்தது.
*****
இள வயசு பெண்கள் மீது தான் அவர்களுக்கு காதல். உடல் இசைக்கு அந்த மாதிரி தான் கேட்கிறார்கள்.
அந்த ஆள் வந்து போவது தொடர்தந்து. நான் தான் கூட போய் வந்தேன். விதி!
*****
நான்காவது வருடம் முடிவு. வெளிநாடு செல்ல அட்மிசன் எனக்கு கிடைத்தது. அவளும் முயற்சி செய்தாள்.
அப்போது ஒரு செய்தி. ஊரிலிருந்து. நல்லதாக இருந்தது அவளுக்கு. அவளுடைய வேட்டை ஆள் மண்டையை போட்டு விட்டான்.
*****
நான் அமேரிக்கா கிளம்பினேன். அவளும் வந்தாள். அவளை அவள் குடும்பம் வருத்ததோடு வழி அனுப்பியது ஹைதேரபாதிலிருந்து. என்னை கல்யாணம் செய்து கொள் என்று அவளிடம் அவள் அம்மா சொன்னது, கிசுகிசுபாய், எனக்கு கேட்டது.
*****
அவள் மீது எனக்கு கல்யாணம் ஆசை வரவில்லை. அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் போதும் என்று இருந்தது.
*****
மேல்படிப்பு முடிந்தவுடன், அவள் தன்னோடு படித்த ஒரு தெலுகு பையனை கல்யாணம் செய்து அமெரிக்காவில் வாழ்கிறாள். அமெரிக்காவில் சந்தோசமாக சுற்றினாள் அவனோடு.
வீட்டு எதிர்ப்புடன் தான் கல்யாணம் திருப்பதியில் நடந்தது. அப்பா இல்லையாம். இவள் குடும்பம் பற்றி விரிவாக அவனுக்கு தெரியாது.
ராஜமுந்த்ரியில்அவர்கள் பெரிய வீடு. சென்னையில் வீடு இருந்ததாம். அழைத்து சென்றான்.
மாலை போட்டு மாறியிருந்த போட்டோ ஒன்றில் தன்னை வேட்டை ஆடிய அந்த ஆள் இருந்தான். "யார் இது என்று " கேட்டாள். "என் அப்பா" என்றான் அவன்.
***
காயத்ரி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தவிர எனக்கு மட்டும் தான் அந்த உண்மை தெரியும்.
விதியின் விளையாடடு யாராலும் மாற்ற முடியாது.
இப்போது அவள் சான் ஹோசேவில் வாழ்கிறாள். நான் அமேரிக்கா பயணம் செய்யும் போது கண்டிப்பாக பார்ப்பேன். அவள் மகனுக்கு என் பெயர் வைத்திருக்கிறாள்.
(இந்த கதை பற்றி அஸ்லம் சொன்ன போது, அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவர், கசின்ஸ், அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட விஷயம், பர பரப்பாக நியூசில் வருகிறது. ஒன்றாக வாழ்ந்தார்களாம். காரணம் தெரியவில்லை.)
(c) காபிரைட் - ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர்.
ஐந்து முகங்கள் – கடிதம்
15 hours ago
No comments:
Post a Comment