Showing posts with label கக்கூஸ். Show all posts
Showing posts with label கக்கூஸ். Show all posts

Saturday, October 4, 2008

கக்கூஸ்

இரண்டு நாட்களாக கக்கூஸ் போக பிரசனை. மனைவியின் உறவினர்கள் லீவுக்காக வந்துள்ளார்கள். இப்போது வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்.

ஐந்து பேர் உட்கார்ந்து போகும் காரில்... மூன்று பேர் சீட்டு பின்னாடி, இப்போ நாலு பேருங்க, ஒரு குழந்தை மடியிலே...முன் சீட்டுலே.. மனைவி, அப்புறம் பையன்.

எங்கள் ரூமில் ஒரு அடச்சிட் டாய்லட், அப்புறம் ஒன்னு காமன். ரெண்டு பெட்ரூம் வீடுங்க.

காலயிலே வாகிங் போயிடு வந்து ஒரு காப்பி குடிச்சிட்டு.. கக்கூஸ் போலம்னா... யாராவது ஒருத்தர் உள்ளே. அடக்கிகிட்டு எவ்வளவு நேரம்தானுங்க இருக்கிறது... ஒன்னுக்குனா பரவாயில்லை... ரோட்டிலே ஓரமா நின்னு அடிச்சிடலாம்.. வெஜிடரியன் சீக்கிரம் வேற ஜீரணம் ஆயிடுது.

அப்புறம் இந்த வாசம் பாருங்க... ஸ்ப்ரே அடிச்சால் தான் உள்ளே போக முடியும்.

எங்க வீட்டு ஆள் வாசம் ஓகே. ஆனால் இந்த நெய்யா சாப்பிடிருவங்க வந்தால்... கருமம் கருமம்.. வரவேண்டியதும் வராது. இதுக்கு தாங்க ஜாதி பார்த்து கட்டுவான்களோ'னு ஒரு யோசனை வருதுங்க!

அப்புறம் இந்த சம்போகம்... கலவி.. செக்ஸ்.. அது சொல்ல முடியாத ப்ரோப்ளம். அதுவும் ஒரே கதைய எழுதறேனா தினம் ரெண்டு மணி நேரம்...

குழந்தைகள்.. இப்போ எங்க ரூமில்.. எப்படிங்க? என் பையன் ஒரு தடவை சொன்னான்.. எங்க கூட அப்போ படுத்திருப்பான்.... "டாடி நைட் அம்மாவை நீ பைட் பண்ணினே.
நான் பார்த்தேன். எனக்கு பயமா இருந்துச்சு. அப்புறம் கண்ணை மூடிட்டேன். இனிமே அப்படி பண்ணாதே? ஓகே?" அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு மாமி இருந்தாள். எனக்கு, மனைவிக்கு மூஞ்சியெல்லாம் செவந்திடிச்சு.

ஒரு மூடு வந்து எல்லாம் செட் பண்ணி... அலாரம்அடிக்குது.. அஞ்சு மணி ஆச்சு...

வாழ்க்கை ஓடுதுங்க. சொந்தம் ஒரு சுகம்.

எப்படீங்க அந்த காலத்திலே வீட்டில் கக்கூஸ் இல்லாம சமாளிச்சாங்க? அதுவும் வத வதனு வீட்டிலே டிக்கெட்ஸ் வேற!