சுந்தர் எழுதுகிறார்... சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்
என்னுடைய கமன்ட்...
நடு நிலையான பதிவு!
நான் அடிதடி ஏற்பட்டதன் காரணத்தை, அடுத்த நாளே விரிவாக என் போலிஸ் நண்பர்கள் மூலம் கண்டறிந்து, பதிவுபோதையில் எழுதிய போது, கொக்கரித்து போடா தலித் நாய் (நேற்று தான் தெரிந்தது தமிழ்நாட்டில் எங்கள் சமூகம் எம்.பி.சி தான்!) என்று கூகிள் அக்கவுண்டோடு எழுதினார்கள். இன்னும் அந்த பதிவில் கிண்டல் செய்த இருவர் கமண்ட்ஸ் விட்டு வைத்துள்ளேன்.
இந்த அடிதடி சம்பவங்கள், நான் கல்கத்தாவில் காலேஜில் கண்ட சி.பி.எம் / டி.ஓய.எப்.ஐ. v/s காங்கிரஸ் அடிதடி போல இல்லை! அங்கு வெட்டியே சாக்கடையில் போட்டு போவார்கள் தோழர்கள்... போலிஸ் ஒன்றும் செய்யாது. நந்திக்ராம் இன்னும் ஒரு படி மேல்.
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!
இதில் சம்பந்தப்பட்ட நான் எழுதிய பதிவு... சென்னையில் இருந்து
அவர் இரண்டு கேள்வி முன் வைக்கிறார்...
1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?
தூண்டினார்கள்... கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!
2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?
அடித்து முடிக்கட்டும் என்று இருப்பார்கள் எப்போதும் ...எங்கேயும்... இல்லாவிட்டால் அரசியல் பலம், தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுவார்கள். காதை அறுத்த சம்பவத்தை காதும் காது வைத்த மாதிரி முதுகெலும்பில்லாத பத்திரிக்கை ஆட்கள் எழுதாதது போல, அவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே நான் எழுதிய மாதிரி நொந்து போன கமிஷனர், சந்தோசமாய், வேலை மாற்றல் ஆர்டர் வாங்கி போய்விட்டார்.
மேலும் என் நண்பர்கள் மூலம் ஒரு தகவல், ஆளும்கட்சி அரசாங்க உளவுபிரிவு மூலம், இந்த சாதி சண்டை பற்றி எங்கு, யார், எப்படி எழுதினாலும் அவர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்களாம்.
அப்படியே விஜயகாந்த் சொல்கிற மாதிரி கொஞ்ச அரசாங்க ரேசன் அரிசியில் சமைத்து சாப்பிடுங்கள், அனைத்து மந்திரிமார்களும். ப்ளீஸ்.
அப்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய, எதற்கு கப்பம் கட்டாயம் வாங்குகிறீர்கள்? எவனோ நிலம் விக்குறான், எவனோ வாங்குறான்! உங்களுக்கு கொடுக்கும் ஆயிரம் ருபாய் நோட்டுக்கட்டுகள் நாசிக்கில் அடிக்கவில்லை தெரியுமா?
*****
இது எனது நூறாவது நாள் பதிவு: சாதீயம் என்று அப்பட்டமாக என் உணர்வை பிரதிபலித்தது...
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago