Showing posts with label எந்த நாடு பெரியது. Show all posts
Showing posts with label எந்த நாடு பெரியது. Show all posts

Monday, December 15, 2008

எந்த நாடு பெரியது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

****************

இது ஒரு சிவாஜி பட பாடல். என்னுடைய நானூறாவது பதிவின் - உண்மை.

நான்கு மாதங்களில் நானூறு பதிவுகள். கிட்டத்தட்ட 24000 வாசகர் பார்வைகள். நன்றிகள்.

கடந்த ஆறு நாட்களாக பிசி. வேலை... சரி மீண்டும் எழுதுகிறேன். நிறைய பேர் கமண்ட்ஸ் போட்டுள்ளார்கள்.

என்னுடைய
Astrology and Ayurveda ப்லோகும் 8000 பார்வைகள் பெற்றது. நன்றி.