Showing posts with label புன்முறுவல். Show all posts
Showing posts with label புன்முறுவல். Show all posts

Saturday, September 27, 2008

புன்முறுவல்

உன் புன்முறுவல் ஒன்று போதுமே
என் மனதினை குளிரச் செய்ய
அரசாங்க உத்தியோகம் செய்பவன் நான்
அணுஅணுவாய் கொல்கிறார்கள் அனுதினமும்

திட்டுகிறார்கள் கண்மூடித்தனமாய்
நான் அரசாங்க ஊழியராம் கண்மணி
இவர்கள் ஆடம் ஐந்து வருடம் தான்
மகிழ்ச்சியை இருந்துவிட்டு போகட்டும்

முட்டாள் ஜனங்களின் வோட்டுக்கள்
அவர்கள் காசு குடுத்து வாங்கினார்கள்
திருப்பி கொடுத்ததெல்லாம் நாமங்கள்
கண்ணுக்கு தெரியாத பாலங்கள்

விளக்கு பிடிக்க வேண்டுமாம்
இவர்கள் வீட்டில் 'அதை' செய்ய
நல்ல லாந்தர் வைக்க கூட
வசதியில்லாத அற்றினை கபோதிகள்!

வந்து விட்டார்கள் வாக்கு கொடுத்து
பிடித்து விட்டார்கள் ஆட்சியை
குறைவதில்லை திமிர்த்தனங்கள்
ஆண்டவன் அடக்குவான் இந்த தலைமுறையில்!