பேசாமல் இருந்து விடு என்பது என் நண்பர் ஒருவருக்கு தாரக மந்திரம்.
எப்போது....
கோபம் தலைக்கு மேல் செல்லும் போது. சிறு வயது முதல் அப்படி தானாம். சில வேலைகளை தூக்கியடித்து விட்டு வந்துள்ளார்.
மவுனம் ஒரு வகையில் பெரிய ஆயுதம் தான்.
எதாவது ஒரு நண்பர் தேவை இல்லாமல் வெட்டி பேசினால், மவுனம் தான்அந்த பேச்சை குறைக்கும்.
என் கவிதை ஒன்று கிழே...
மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்
திருக்குறளும் இப்படி சொல்கிறது...
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
நல்லவை என்று தோன்றுபவை அப்படி ஒருகால் இருக்காது, அதே மாதிரிதீயவை என்று தோன்றுவதும், தீயவை ஆக இருக்காது. அமைதியாகஆராய்ந்து உன் மனதிற்கு பட்டதை, முடிவை எடுத்துகொள்.
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago