Friday, August 22, 2008

மெய்ப்பொருள்

திருக்குறள் மிகவும் ஆழமானது. படிப்பது மிக கஷ்டம். சில குறள்கள் புரிந்த மாதிரி இருக்கும், பிறகு இல்லாமல் போகும். மனதில் நிற்காது. (நான் வேறு தாய் மொழி என்பதால் இன்னும் சிரமம்).

இந்த குறள் மிகவும் ரசித்த ஒன்று. என் நிலைமை தினமும் இது தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ன சொல்கிறார் என்றால் - யார் என்ன வேண்டுமானாலும் சொல்லாம் ஆனால், தானே சரியாக புரிந்து கொண்டால் தான் சரி உன் அறிவுக்கு நல்லது .

ஒவொருவரும் புரிந்து நடக்க வேண்டிய குறள் இது.

Thursday, August 21, 2008

இவர் கலக்குகிறார்

இவர் கலக்குகிறார் ...

எனக்கு பிடித்தது ...

மொழி விளையாட்டு ஜ்யோவ்ராம் சுந்தர் - உல்டா

//ஐராவதம் குந்தர் : அதீதன்.. அதான் ரப்பர் ஸ்டார்.. மாலினியை காதலிக்கிறார். மாலினி சுந்தரிடம் காமுறுகிறார். சுந்தரோ நந்தினியிடம் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார். நந்தினிக்கும் செந்திலுக்கும் தொடர்பு. செந்திலோட காதலி சுந்தரி. சுந்தரி அதீதனை காதலிக்கிறார். இந்த அவுட்லைன்லே கதையை ரெடி பண்ணுங்க.//

மராட்டி என்றால் தமிழ் எழுதக்கூடாதா?

திரட்டி தமிழ்மணம் மற்றும் பல வலைத்தளங்களில் என் பிலாக் வருது.

நான் மராட்டி என்பதால், என்னை கேனத்தனமாக திட்டி எழுதுகிறார்கள்.

மராட்டி என்றால் தமிழ் இலக்கியம் பிலாக் எழுதக்கூடாதா?

எத்தனை முறை தான் சொல்வது, ஒரு தமிழ் நங்கையை கட்டி உள்ளேன். என் குழந்தைகள் தமிழாக வாழ்கிறார்கள். அவர்கள் ஸ்கூல் ரெகார்ட்ஸ் படி நான் 'தமிழ் ஐயர்' அம்மா ஜாதி, மொழி என்று எழுதியுள்ளேன். பிறப்பால் தலித் என்பதால் இந்த கஷ்டமா? என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்.

நான் இந்தியன் என்பது அனைவருக்கும் நினைவு இருக்கட்டும்.

இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் நிச்சயம்

இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் நிச்சயம், விஜேந்திர குமார் மூலமாக. குத்து சண்டை. எழுபத்தி ஹயிந்து கிலோ எடை பிரிவு.

வரும் வெள்ளி மதியம் என்ன மெடல் (பிரோன்சு கண்டிப்பாக) என்பது தெரியும்.

ஆகா மொத்தம் மூன்று பதக்கங்கள். முதல் முறையாக இந்தியாவிற்கு. இன்னும் யாரவது ஸுர்ப்ரிஸெ கொடுப்பார்களா?

வாழ்த்துக்கள்!

Wednesday, August 20, 2008

மல்யுத்தம் இந்தியா வெற்றி - சுஷில் குமார்

படியாலவை சேர்ந்த இந்தியா ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெற்றி பெற்றார் அறுபத்தி ஆறு கிலோ எடை போட்டியில்.

பிரான்சு மெடல் வெற்றி பெற்றார். சேமி பினல்ஸ் தோல்வி. மனம் தளராமல், பிரான்சு மெடல் போட்டியில், போவுள் கொடுத்த பின்னும் வெற்றி பெற்றார்.

லாலு பிரசாத் யாதவ் சொன்ன மாதிரி ஒரு கோடி ருபாய் பரிசு நிச்சயம்! (தங்கதிற்கா?)

அவர் ஒரு சிறப்பான முயற்சி செய்தார். வாழ்த்துக்கள்.

56 வருடம் கழித்து இப்போது இரண்டு மெடல்கள் இந்தியாவிற்கு.

(இத நேரத்தில் கே. டே. ஜாதவ் அவர்கள் நிலைமை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். அவர் தான் 1952 இல் ஹெல்சிங்கியில் முதன் முதலில் தனி ஒரு ஆளாக மெடல் வாங்கினார் (பிரன்சு). பரிதாபமாக செத்தார். அரசாங்கம் எதாவது செய்ய வேண்டும். பிறகு லீயண்டேர் பயெஸ் அட்லண்டவில் பிரன்சு மெடல் வாங்கினார் 1996 இல் )

ஒலிம்பிக் சாப்பாடு

இதை படித்தேன்.

ஒலிம்பிக் சாப்பாடு

மத்தியானம் பிரியாணி சாப்பிடலாம் என்று இருந்தேன். கோரமங்கலா லஜீசுக்கு இன்று பிசினஸ் கம்மி.
வெஜிடரியன் ஆன நான், அவ்வபோது சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது வழக்கம், அமெரிக்காவில் பழகியது.
உங்கள் பதிவிற்கு பிறகு, உவ்வே தான்.
ஆமாம் நாய் லிவர் தான் போட்டோவில் உள்ளதே. எப்படி மறந்தீர்கள்?
தவளை கால்கள் சிக்கன் மாதிரி இருக்கும் என்று நண்பர்கள் சொல்லியுள்ளனர்.
லண்டனிலும் அது ஒரு சூப்பர் பதார்த்தம்.
இன்னும் ஒரு மாசத்திற்கு தயிர் சாதம் மாவடு தான். நன்றி. மிக்க நன்றி.

Tuesday, August 19, 2008

தசாவதாரம் - பொய்

'உலகில் எந்த சினிமாவிலும் யாரும் பத்து வேடமெல்லாம் போட்டு நடித்ததில்லை' என்பது தவறு. தமிழில் 1941ம் ஆண்டு வெளியான 'ஆர்ய மாலா' படத்தில் பி.யு.சின்னப்பா பத்து வேடங்களில் நடித்துள்ளார். 1950ம் ஆண்டு வெளியான 'திகம்பர சாமியார்' படத்தின் கதாநாயகன் எம்.என். நம்பியார் 12 வேடங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் 1913ல் வெளியான 'குயின் விக்டோரியா' படத்தில் 'ரோல்ஃப் லெஸ்லீ' என்பவர் 27 வேடங்களில் நடித்துள்ளார். 1915ல் வெளியான 'பர்த் ஆஃப் எ நேஷன்' படத்தில் 'ஜோஸப் ஹான பெர்ரி' 14 வேடங்களில் நடித்துள்ளார். 1929-ல் 'ஒன்லி மீ' படத்தில் 'லூபினோ லேன்' 24 வேடங்களில் நடித்துள்ளார். 1964ல் 'நோ கொஸ்டியன்ஸ் ஆன்சாட்டர்டே' படத்தில் ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்களில் நடித்துள்ளார்.

தலைப்பு தசாவதாரம் என்பது அந்தே படத்தை மார்க்கெட் செய்த நிறுவனம் பொய் சொன்னதிற்காக!

திருக்குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். ( குறள் எண் : 293 )

மு.வ : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

கருணாநிதி :மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

சாலமன் பாப்பையா :பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

தலித் கொடுமை பிக் பாஸ்

தலித் கொடுமை பிக் பாஸ்

இந்தியாவில் பிக் பாஸ் என்ற ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்ளது.

அதற்கு ஒரு தலித் தலைவர் அழைக்கப்பட்டார். பெயர் ராமதாஸ் அத்வாலே.

பிற்பாடு, எதோ ஒரு காரணத்திற்காக ஒதுக்கப்பட்டார்.

அரசியல் சாயம்?

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=1639297