Saturday, January 17, 2009

புத்தக திருவிழாவும் பாண்டிச்சேரியும்

தலைப்பே விவகாரமா இருக்குது என்கிறார் மனைவி...

முதல் முந்தா நாள் சாயந்திரமா சென்ற புத்தக திருவிழா பற்றி... மாமனார் வாழ்க. நாங்கள் இருவரும் எங்களது சொட்டை மண்டைகளை தடவிக்கொண்டு, கூடத்தின் நடுவில் பறந்து சென்றோம். இல்லை இல்லை கூட்டம் எங்களை தூக்கிக்கொண்டு சென்றது.

மாமனார் விரும்பி வாங்கியது க்ரியா புத்தக கடையில், பல வித ஐடம்கள்.

நான் ஒரு இணையத்தின் கோணல் எழுத்தாளரின் 900 ரூபாய்கள் பத்து புத்தகங்கள் வாங்கினேன். உயிர்மை கடையில் ஒருவர் (முதலாளி?) உட்கார்ந்துக்கொண்டு வியாபாரம் கர்ம சிரத்தையாக பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த வருடம் நல்ல பிசினஸ் போல!

முத்து காமிக்ஸ் கடைக்கு சென்றேன். ஆங்கில புத்தகங்கள், அனேகமாக ரோட்டில் கிடைக்கும் திருட்டு ப்ரின்டாக இருக்கும் என தோன்றும் ராபின் ஷர்மா புக்ஸ் இரண்டு மற்றும் கலரிங் புக்ஸ் இரண்டு.

மறக்காமல், பா.ராகவன் எழுதிய மாய வலை.... மற்றும் சில புத்தகங்கள் அங்கு.... ஒபாமா .... என்ன கடை கவனிக்க சில ஆட்கள் அதிகம் தேவை. வியாபார நோக்கில் புத்தகங்கள் வெளியிடும் போது, இதெல்லாம் பிசினஸ் உலகில் சகஜமுங்க.

யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை!

கார்டூனிஸ்ட் மதன் வந்திருந்தார் போல. அவர் சைஸில் நிறைய ஆட்கள் சென்னையில் (என்னை உட்பட) இருக்கிறார்கள்.

பெங்காலி புத்தகங்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை. ஹிந்தி புத்தகங்கள் நிறைய இருந்தன...

எல்லா புத்தகங்களுக்கும் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் கொடுத்தார்கள்.

ஒரு கடையில் திருட்டு டிவிடி விற்றுக்கொண்டு இருந்தார்கள்.

மொத சிலவு நான்காயிரம் ரூபாய்கள். மாமனார் அவர் கணக்கை தனியாக பார்த்துக்கொண்டார்.

சிதம்பரம் என்ற பதிப்பாளரை பார்த்து பேசினேன். கேரளா அளவு தமிழ்நாட்டில் அரசாங்கம் புத்தகம் வாங்க வேணும் என்றார். இங்கு தமிழ்நாட்டில் ஒரு ஆளுக்கு (மொத பட்ஜெட் முப்பது கோடிகள்) ஐந்து ருபாய் அளவு தானாம்... அங்கு கேரளாவில் ஒரு ஆளுக்கு ஐம்பது ருபாய் அளவு. வெஸ்ட் பெங்கால் ஸ்டேட்டும் ஒரு ஆளுக்கு ஐம்பது ருபாய் அளவு செலவு செய்கிறது. கர்நாடகா, பட்ஜெட் 100 கோடிகள். புத்தக விலைகள் அதிகம் போல! (ஆளுக்கு இருபத்தி ஐந்து ருபாய்)

சண் டிவியும் கலைஞ்சர் டிவியும் லாபத்தில் பத்து பர்சன்ட் நூலகங்களுக்கு கொடுக்கலாம்.....

************************

நேற்று பாண்டிச்சேரி ட்ரிபாக காலையில் கிளம்பினோம். (ஏழு மணி என்பது அதிகாலை எனக்கு)

போகும் வழியில், மாமா அவர்கள் பிஷேர்மேன் கோவ் என்ற ஹோட்டலில் நண்பர் குடும்பம் ஒன்றை சந்திக்க ப்ளான். பப்பே ப்ரேக்பாஸ்ட் என்று போனது...

பத்தரை மணிக்கு, மஹாபலிபுரம். குளிர் காற்று... சிறிது நேரம் கல் கோவிலை பார்த்தோம். பீச் சென்றோம்.

நாங்கள் பாண்டிச்சேரி அடையும் போது ஒரு மணி. நண்பர் குடும்பத்தின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. ஒரு ப்ரென்ச் ரெஸ்டாரன்டில் உணவு. நல்ல வெஜிடேரியன்... எனக்கும், குழந்தைகளுக்கு வஞ்சிரம் மீன் மற்றும் இடாலியன் ரோஸ்மேரி சிக்கன்.

மூன்று மணி அளவில், கடற்கரை காற்று வாங்கிவிட்டு, ஐந்து மணிக்கு கெஸ்ட் ஹவுஸ் சென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி எட்டு மணிக்கு மாமனார் (பெசன்ட் நகர் - கலாஷேத்ரா காலனி) வீட்டிற்க்கு வந்து சேர்த்தோம். இந்திரா நகர் வீடு இப்போது வாடகைக்கு விட்டு விட்டார்கள். அவர் பக்கத்து வீடு, இப்போது பதினோரு கோடிகளுக்கு விற்று விட்டு மகனோடு போய் செட்டில் ஆகிவ்ட்டார் நண்பர். வாங்கியவர், இன்போசிஸ் சி.ஈ.ஒ. கோபாலக்ரிஸ்ணன். சில வீடுகள் தள்ளி கிரிக்கட் ஸ்ரீகாந்த் வீடு. அவர் மகன்கள் அடிக்கும் பந்துகள் (டென்னிஸ் பால்!) சில சமயம் மொட்டை மாடி மற்றும் ஜன்னல்களை சந்தித்து உறவாடுமாம்.

டின்னரில் குலாப் ஜாமுன் சாப்பிட்டு விட்டு, ப்லட் சுகர் டெஸ்ட் செய்தேன். லிமிட்டில் தான் இருந்தது.

********************

இன்று (சனி) காலை ஒரு அப்பாயின்ட்மன்ட் இருந்தது, உடல் இளைக்கும் விஷயம். மூன்று இன்ஜக்சன்ஸ் வயிற்று பகுதியில் போட்டுள்ளார்கள். ஐந்து கிலோ நாளைக்குள் குறையுமாம்.... பார்க்கலாம்.. என்ன மசாஜ் செய்துக்கொண்டு இருக்க வேண்டும்.

நாளை மதியம் ட்ரெயின். பதினோரு மணிக்கு பெங்களூர் போய் சேர்வோம். குழந்தைகள், அபெகஸ் டெஸ்ட், மற்றும் மேத்ஸ் டெஸ்ட் படிக்க வைக்க வேண்டும்.

இன்று மத்தியானம், படிக்காதவன் படம் பார்க்க ப்ளான். செகண்ட் ஷோ வில்லு. குழந்தைகளை அழைத்து செல்ல வில்லை!

திருமாவளவனின் உண்ணா நோன்பு

உயரிய நோக்கம். திருமாவளவனின் உண்ணா நோன்பு! வாழ்க அவர் பண்பு.

இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பாசம் (தமிழர்கள் இங்கே) மானம், வெளிநாட்டில் இருந்தாலும் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. சொந்த ரத்தம். அது தான். நான் இதை எழுதுவதில் தவறில்லையே?

அவர் மலேசியாவில் தமிழர்கள் அடிபட்டது கேட்டு எப்படி துடிதுடித்து இருப்பார் என தெரியும்!

நிச்சயம் ஒரு வீர சாகசம் மனம் கொண்டவர் அவர்! (நானும் ஒரு தலித் என்பதால் இது சொல்லவில்லை!)

என் பதிவுகள், என் வாழ்க்கையை அப்பட்டமாக, உண்மையை சொன்னாலும், சில சமயம் (என் ஆங்கில பதிவுகள் தவிர்த்து) நல்ல விஷயங்கள் எழுத பயன் படுத்துவேன். பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். ஒரு ஜான் வயிறும், ஆறடி மண்ணும் தான் நமக்கு சொந்தம்!

திருமாவின் நெஞ்சத்தின் கால்களில் விழுந்து தொழுகிறேன்.

அவரின் எண்ணம் (இந்த விரதம் - எடுத்த நிலை ) ஈடேற வாழ்த்துக்கள்.

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் திருமா! ப்ளீஸ்!

Thursday, January 15, 2009

நேற்று சென்னையில் துக்ளக் சோவின் ஆண்டுவிழா

ஐந்து நாட்கள் ட்ரிப்பாக சென்னை பொங்கல் கொண்டாட வந்திருக்கும் நான்... குடும்பம்... எனக்கு தனியாக சில அரசாங்க நண்பர்களை சந்திக்கும் வேலை இருந்தது.

நேற்று சாயந்திரம் சென்னையில் துக்ளக் சோவின் 39வது ஆண்டுவிழா நடந்தது.

மாமனாருக்கு சோ நன்றாக தெரியும், மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் க்ரூப்பின் நண்பர்களின் மூலம் அழைப்பு. வி.ஐ.பி. வரிசையில் உட்காரும் வாய்ப்பு. பெரிய சினிமா நடிகர்கள் எல்லாம் வந்திருந்தனர். யாரும் அருகில் நெருங்கவில்லை!

எனது ஐ.ஏ.எஸ். நண்பர்களும் வந்திருந்தார்கள்... ஒரு சிறிய சந்திப்பு அங்கு....

அரசியல் கூட்டம் மாதிரி இல்லாமல், சரியான நேரத்தில் தொடங்கியது. என்ன கூட்டம் ஆரம்பித்த பின்னும் மக்கள் அலை வந்தது. ஜெமினி பளை ஓவர் முதல் கூட்டம் அலை மோதுகின்றது... என்றார்கள்.

பொங்கல் வயிற்றில் செய்த கடா முடாவுடன் அமர்திருந்தேன்....

நக்கலான ஒரு கூட்டம்.

சத்யம் நிறுவனத்தில் இருந்து அரசியல் ஆதிக்கம் எப்படி பைசா அமுக்கியது போன்ற நகைச்சுவை ... உலக நடப்புகள் போன்றவை... வித்தியாசமான நிகழ்ச்சி.

என்னால், கல்கத்தாவில் நடக்கும் கூட்டங்களை (ஒழுங்கு, அமைதி) நினைவு படுத்து பர்ர்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அங்கிருந்து சிறிது இண்டேர்ணளைஸ் செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.!

**************

இன்று காலை நண்பர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் கல்கி ஆசிரியர் குழுவை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நேற்று சோ பேசிய ஆண்கள் பெண்கள் பெயரில் வளைய வருவது, அல்லது எழுதுவது குறித்து விரிவாக பேசினோம். அது ஒரு மாயக்கவர்ச்சி என்றார்...

இப்போது புத்தக சந்தை திருவிழாவிற்கு பயணம். மாமனாருடன் தானா... இரண்டாயிரம் ரூபாய் புத்தகங்கள் வாங்க பட்டியல் ரெடி. குழந்தைகளுக்கு ஆங்கில காமிக்ஸ் வாங்க வேண்டும்.

நாளை பாண்டிச்சேரி சென்று வருகிறோம்.

Wednesday, January 14, 2009

இன்றைக்கு முதல் தமிழ் புத்தாண்டு

கேள்விப்பட்டேன், இன்றைக்கு முதல் தமிழ் புத்தாண்டு !

எது என்னங்க கூத்து?

சங்க இலக்கியத்தில் இப்படி, சொல்லியிருக்கலாம் அல்லவா என்று கேட்பார்கள்.

சரி விவரம் தெரிந்தால், சரி செய்வது இயல்பு தான்!

அப்புறம் சித்திரை திருநாள் என்று சொல்லி டிவியில் கும்மி அடிப்பார்கள், சினிமா ப்ரோக்ரேம்கள் நடக்கும். ஒரு பொக்கிஷமான வித்தியாசமான நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.

அப்புறம் ஜூன் மூன்றாம் தேதி இன்னும் பெரிய தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழனை ஆண்டவன் (இறைவர்) தான் காப்பாற்ற வேண்டும்!

சங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள்

என் வாசகர்க்கு சங்கராந்தி பொங்கல் வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இறைவன், நல்ல அருளும், உலகின் இந்த சூழலில் எகனாமிக்ஸ் சரி செய்ய எதிர்த்து போராடும் குணமும், சந்தோஷமும் அருளட்டும்!

Monday, January 12, 2009

Dont do what you dont want to do

I keep telling my kids, "Don't do what you don't want to do". Very important in the life!

As you grow older, just because someone is trying to cajole you into doing something, you need not do. Gage your strengths and work accordingly.

Invariably age will catchup and you are better off in doing things that suits your age.

Since my kids are young, I tell them for e.g., driving is one dangerous activity.

Still yesterday, since my six year old son, sits in front of me in the car, and holds the steering for few kilometers, near my home. How does he do this? He experience with the steering wheel game, that is at home for car racing. Sounds cool! But I advice others not to try this!

My daughter is eight years old, and she cooks dosas, omlettes and serves!

கதை திருடர்கள்

கதை திருடர்கள் சினிமாவில் நிறைய இருக்கிறார்கள் போல.

என் நண்பர் (பெங்காலி பட இயக்குனர்) சொல்கிறார்....

ஆங்கில - வெளிநாட்டு படங்களில் இருந்து இண்டேர்ணளைஸ் செய்வது நிறைய நடக்கிறது..

உதாரணம்...

இப்போது பாருங்கள் கஜினி... மெமெண்டோ என்ற படத்தை தழுவியது... ஆனாலும் முருகதாஸ் சொல்லுகிறார், கதாநாயகன் பாத்திரம் மட்டும் அது மாதிரி இருக்கலாம் (?) என்று.

இது தான் இண்டேர்ணளைஸ். Pseudo-plagiarism (Internalize)! புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.

அப்புறம் கெளதம் வாசுதேவ் மேனன் - The Derailed- என்ற நாவலை தழுவி தான் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தை எடுத்தார். ஹிந்தியிலும் தி ட்ரெயின் என்ற படம் வந்தது. அதே கதை.

மேலும், இங்கு குறிப்பிட்ட நபர்களை எனக்கு தெரியும். என் கதைகளை அவர்களிடம் சொல்லியுள்ளேன். ;-)

எதுவும் கடந்து போகும்

சர்வேசன் என்பவர் ஒரு கமண்டில் எனக்கு எழுதிய அருமையான வரிகள். "எதுவும் கடந்து போகும்!" நன்றிகள்.

சில சமயம் வாழ்க்கையும் அப்படி தான். தமிழ் தெரியாத நான் , தமிழ் இலக்கியம் எழுதுவதை போல. கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவன கால வரையினானே!".

சாயாஜி ஷிண்டே, என் நண்பர், பாரதியாக நடித்தவர், இன்றும் கவலை படுகிறார், ஏன் தமிழர் ஒருவர் பாரதியாக நடிக்கவில்லை என்று.

இதுவும் கடந்து போகும்.

நான் ஒருவர் எழுதிய கதைக்கு என் கதை மாதிரி இருக்கு என்று சொல்ல போக, அதை மறந்து விட்டு, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, அதை பற்றி நான் என் நண்பியோடு (நண்பர் என்று தான் சொல்ல வேண்டும்) பேசியதை, குறிப்பிட்டு மானத்தை வாங்கினார் ஒரு பெண். நன்றிகள் அவருக்கு.

இதுவும் கடந்து போகும்.

Sunday, January 11, 2009

மன்னிப்பு கோருகிறேன்

இந்த பதிவு யாருக்கும் நான் மன்னிப்பு கேட்பதற்கு அல்ல. விவரம் கொடுக்க. ஹி ஹி. இதெல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க. என் பக்கம் தான் நியாயம் இருக்குங்க.

அந்த எழுத்தாளர் எனக்கு ஒரு கமன்ட் போட்டிருந்தார், அதை நான் வெளியிடவில்லை. காரணம் உண்டு.... அவரே தேடி அந்த கதை கண்டுபிடித்தார்! இன்டக்ஸ் மூலம். வெரி சிம்பிள்.

//நீங்கள் குறிப்பிடுவது இந்த கதையா? நான் காப்பியடித்ததாய் சொல்லப்படுவது எது என்று சொல்லுங்கள். //

ஒரு ருபாய் கதை

என் கதையை, படியுங்கள்.... ரசியுங்கள்...

மூன்று மாதங்கள் கழித்து தன்னை வலையுலகில் மார்கெட்டிங் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பு போல? நான் காபியடிததாக சொல்லவில்லையே!

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அவருடைய கதை இது...

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//

நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம். காப்பி அடித்ததாக அவராக கற்பனை செய்துக்கொண்டு எழுதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இண்டேர்ணலைஸ் பற்றி அவர் தெரிந்துகொண்டு எழுதியிருந்தால் நலம்.

அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது. அது திவ்யா அவருடைய பதிவில் வெளியிட்டு விட்டார். அதை இந்தியன் என்பவர் சிண்டு முடித்து விட்டார்.

இருவருக்கும் ஒரே கரு - கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம். அகில உலக காபிரைட் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். என் கதை மாதிரி என்றும் சொல்லெலாம்.

அப்புறம் அவர் எழுதுறார்,

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)//

அது தான் நான் போட்ட கமன்ட் வடிவில் அவர் கதையிலே முதலா உட்கார்ந்திருக்கே. எங்கே பொய் மூஞ்சி வச்சுக்குவீங்க இப்போ? நான் ரொம்ப சீரியஸ் ஆக கேட்குறேன். சிரிப்பு வரலே.

இண்டேர்ணலைஸ் செய்து எழுதி காவ்யா விஸ்வநாதன் (ஹார்வர்ட்) நன்றாக பட்டுள்ளார்.

நானும் அவருடைய ப்லோக் போஸ்டில் கமண்ட்ஸ் போட்டுள்ளேன்.

***

ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர். என் மெய் சிலிர்க்கிறது. நன்றிகள். வாழ்த்துக்கள்.

//வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். //

மராட்டி தாய்மொழி ஆளான நான், தமிழில் எழுதி ஒருவரிடம் பாராட்டு பெறுவது, கோடி புண்ணியம். மராட்டியர்களை அவமதித்ததாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் சம்பாரித்த பல கோடிகளை விட, இந்த வாழ்த்து அருமை. ஸுபர்!

இதற்க்கு நான் என்றேன்டும் கடமை பட்டுள்ளேன்.

மேலும், எனது அருமை நண்பி திவ்யாவுடன் ப்ரைவேட்டாக உரையாடியது, அவருடைய...Anecdote on Perceptions பதிவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

//My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

அந்த உரையாடலுக்காக திவ்யாவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். பொது வாழ்க்கைக்கு அது தேவை இல்லை. அறிஞ்சர்கள் தான் தனி மனித உரையாடலை எழுதலாம். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நன்றிகள் திவ்யா.

சரி இப்போது என்னை குறிப்பிட்டு அந்த எழுத்தாளர் எழுதிய பதிவு நீக்கப்பட்டால், நான் இந்த பதிவை நீக்குவேன். சரியா?

*******

ராமசந்திரன் உஷா அவர்கள், இண்டேர்ணலைஸ் பற்றி நக்கலாக அவரே தாக்கம் பற்றி எழுதியுள்ளார். அருமையான வரிகள். அசோகமித்திரன் கூட இப்படி எழுதியிருக்க முடியாது.

//படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.//

*******

திவ்யாவும் தன்னுடைய புதிய பதிவில், இண்டேர்ணலைஸ் பற்றி எழுதியுள்ளார்.

இங்கே பாருங்கள்... ஒரு கதை

//அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!//

*************

மேலும் , என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்

என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள... "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

அப்புறம் இன்னொரு விஷயம், பதிவுக்கு சம்பந்தப்பட்ட கமண்ட்ஸ் போடவும்.

எனக்கு தனியாக மெயில் போடனும்னா, ப்ரோபயில்லே இமெயில் ஐடி இருக்கு.