சர்வேசன் என்பவர் ஒரு கமண்டில் எனக்கு எழுதிய அருமையான வரிகள். "எதுவும் கடந்து போகும்!" நன்றிகள்.
சில சமயம் வாழ்க்கையும் அப்படி தான். தமிழ் தெரியாத நான் , தமிழ் இலக்கியம் எழுதுவதை போல. கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவன கால வரையினானே!".
சாயாஜி ஷிண்டே, என் நண்பர், பாரதியாக நடித்தவர், இன்றும் கவலை படுகிறார், ஏன் தமிழர் ஒருவர் பாரதியாக நடிக்கவில்லை என்று.
இதுவும் கடந்து போகும்.
நான் ஒருவர் எழுதிய கதைக்கு என் கதை மாதிரி இருக்கு என்று சொல்ல போக, அதை மறந்து விட்டு, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, அதை பற்றி நான் என் நண்பியோடு (நண்பர் என்று தான் சொல்ல வேண்டும்) பேசியதை, குறிப்பிட்டு மானத்தை வாங்கினார் ஒரு பெண். நன்றிகள் அவருக்கு.
இதுவும் கடந்து போகும்.
மானுடத்தின் வெற்றி
8 hours ago
2 comments:
//கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவன கால வரையினானே!".//
ஐயா! அதை கணியன் பூங்குன்றனார் சொல்லவில்லை. நன்னூலில் பவணந்தி முனிவர் சொன்னதாக ஞாபகம்.
//நன்றிகள் அவருக்கு.//
அவர் மேல துளியும் வருத்தம் இல்லியா? ரொம்.....ப நல்லவர்ரு நீங்க
Post a Comment