தலைப்பே விவகாரமா இருக்குது என்கிறார் மனைவி...
முதல் முந்தா நாள் சாயந்திரமா சென்ற புத்தக திருவிழா பற்றி... மாமனார் வாழ்க. நாங்கள் இருவரும் எங்களது சொட்டை மண்டைகளை தடவிக்கொண்டு, கூடத்தின் நடுவில் பறந்து சென்றோம். இல்லை இல்லை கூட்டம் எங்களை தூக்கிக்கொண்டு சென்றது.
மாமனார் விரும்பி வாங்கியது க்ரியா புத்தக கடையில், பல வித ஐடம்கள்.
நான் ஒரு இணையத்தின் கோணல் எழுத்தாளரின் 900 ரூபாய்கள் பத்து புத்தகங்கள் வாங்கினேன். உயிர்மை கடையில் ஒருவர் (முதலாளி?) உட்கார்ந்துக்கொண்டு வியாபாரம் கர்ம சிரத்தையாக பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த வருடம் நல்ல பிசினஸ் போல!
முத்து காமிக்ஸ் கடைக்கு சென்றேன். ஆங்கில புத்தகங்கள், அனேகமாக ரோட்டில் கிடைக்கும் திருட்டு ப்ரின்டாக இருக்கும் என தோன்றும் ராபின் ஷர்மா புக்ஸ் இரண்டு மற்றும் கலரிங் புக்ஸ் இரண்டு.
மறக்காமல், பா.ராகவன் எழுதிய மாய வலை.... மற்றும் சில புத்தகங்கள் அங்கு.... ஒபாமா .... என்ன கடை கவனிக்க சில ஆட்கள் அதிகம் தேவை. வியாபார நோக்கில் புத்தகங்கள் வெளியிடும் போது, இதெல்லாம் பிசினஸ் உலகில் சகஜமுங்க.
யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை!
கார்டூனிஸ்ட் மதன் வந்திருந்தார் போல. அவர் சைஸில் நிறைய ஆட்கள் சென்னையில் (என்னை உட்பட) இருக்கிறார்கள்.
பெங்காலி புத்தகங்கள் ஒன்றும் கண்ணில் படவில்லை. ஹிந்தி புத்தகங்கள் நிறைய இருந்தன...
எல்லா புத்தகங்களுக்கும் பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட் கொடுத்தார்கள்.
ஒரு கடையில் திருட்டு டிவிடி விற்றுக்கொண்டு இருந்தார்கள்.
மொத சிலவு நான்காயிரம் ரூபாய்கள். மாமனார் அவர் கணக்கை தனியாக பார்த்துக்கொண்டார்.
சிதம்பரம் என்ற பதிப்பாளரை பார்த்து பேசினேன். கேரளா அளவு தமிழ்நாட்டில் அரசாங்கம் புத்தகம் வாங்க வேணும் என்றார். இங்கு தமிழ்நாட்டில் ஒரு ஆளுக்கு (மொத பட்ஜெட் முப்பது கோடிகள்) ஐந்து ருபாய் அளவு தானாம்... அங்கு கேரளாவில் ஒரு ஆளுக்கு ஐம்பது ருபாய் அளவு. வெஸ்ட் பெங்கால் ஸ்டேட்டும் ஒரு ஆளுக்கு ஐம்பது ருபாய் அளவு செலவு செய்கிறது. கர்நாடகா, பட்ஜெட் 100 கோடிகள். புத்தக விலைகள் அதிகம் போல! (ஆளுக்கு இருபத்தி ஐந்து ருபாய்)
சண் டிவியும் கலைஞ்சர் டிவியும் லாபத்தில் பத்து பர்சன்ட் நூலகங்களுக்கு கொடுக்கலாம்.....
************************
நேற்று பாண்டிச்சேரி ட்ரிபாக காலையில் கிளம்பினோம். (ஏழு மணி என்பது அதிகாலை எனக்கு)
போகும் வழியில், மாமா அவர்கள் பிஷேர்மேன் கோவ் என்ற ஹோட்டலில் நண்பர் குடும்பம் ஒன்றை சந்திக்க ப்ளான். பப்பே ப்ரேக்பாஸ்ட் என்று போனது...
பத்தரை மணிக்கு, மஹாபலிபுரம். குளிர் காற்று... சிறிது நேரம் கல் கோவிலை பார்த்தோம். பீச் சென்றோம்.
நாங்கள் பாண்டிச்சேரி அடையும் போது ஒரு மணி. நண்பர் குடும்பத்தின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. ஒரு ப்ரென்ச் ரெஸ்டாரன்டில் உணவு. நல்ல வெஜிடேரியன்... எனக்கும், குழந்தைகளுக்கு வஞ்சிரம் மீன் மற்றும் இடாலியன் ரோஸ்மேரி சிக்கன்.
மூன்று மணி அளவில், கடற்கரை காற்று வாங்கிவிட்டு, ஐந்து மணிக்கு கெஸ்ட் ஹவுஸ் சென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி எட்டு மணிக்கு மாமனார் (பெசன்ட் நகர் - கலாஷேத்ரா காலனி) வீட்டிற்க்கு வந்து சேர்த்தோம். இந்திரா நகர் வீடு இப்போது வாடகைக்கு விட்டு விட்டார்கள். அவர் பக்கத்து வீடு, இப்போது பதினோரு கோடிகளுக்கு விற்று விட்டு மகனோடு போய் செட்டில் ஆகிவ்ட்டார் நண்பர். வாங்கியவர், இன்போசிஸ் சி.ஈ.ஒ. கோபாலக்ரிஸ்ணன். சில வீடுகள் தள்ளி கிரிக்கட் ஸ்ரீகாந்த் வீடு. அவர் மகன்கள் அடிக்கும் பந்துகள் (டென்னிஸ் பால்!) சில சமயம் மொட்டை மாடி மற்றும் ஜன்னல்களை சந்தித்து உறவாடுமாம்.
டின்னரில் குலாப் ஜாமுன் சாப்பிட்டு விட்டு, ப்லட் சுகர் டெஸ்ட் செய்தேன். லிமிட்டில் தான் இருந்தது.
********************
இன்று (சனி) காலை ஒரு அப்பாயின்ட்மன்ட் இருந்தது, உடல் இளைக்கும் விஷயம். மூன்று இன்ஜக்சன்ஸ் வயிற்று பகுதியில் போட்டுள்ளார்கள். ஐந்து கிலோ நாளைக்குள் குறையுமாம்.... பார்க்கலாம்.. என்ன மசாஜ் செய்துக்கொண்டு இருக்க வேண்டும்.
நாளை மதியம் ட்ரெயின். பதினோரு மணிக்கு பெங்களூர் போய் சேர்வோம். குழந்தைகள், அபெகஸ் டெஸ்ட், மற்றும் மேத்ஸ் டெஸ்ட் படிக்க வைக்க வேண்டும்.
இன்று மத்தியானம், படிக்காதவன் படம் பார்க்க ப்ளான். செகண்ட் ஷோ வில்லு. குழந்தைகளை அழைத்து செல்ல வில்லை!
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
22 hours ago
4 comments:
//உடல் இளைக்கும் விஷயம். மூன்று இன்ஜக்சன்ஸ் வயிற்று பகுதியில் போட்டுள்ளார்கள். ஐந்து கிலோ நாளைக்குள் குறையுமாம்.... பார்க்கலாம்.. என்ன மசாஜ் செய்துக்கொண்டு இருக்க வேண்டும்.///
:)
வில்லு பார்த்தால் ஒரு வாரம் பதிவிட முடியாது என நினைக்கிறேன்.
பதிவெல்லாம் படிக்கவில்லையா..??
விதி வலியது..
வாழ்த்துக்கள்
பதிவை ரசித்துப்படித்தேன்! ஆமா உடல் இளைத்ததா என்ன
ஆறு கிலோ, டயட்டின் உதவியும். இருக்கு. பெல்ட் பக்கில், இரண்டு இன்ச் உள்ளே போய் விட்டது. தொந்தி தள்ளவில்லை. இன்னும் தலைவலியும், உடல் உஷ்ணமும் குறைந்த மாதிரி தெரியவில்லை! இங்கு டாக்டரிடம் சென்று பி.பி. செக் செய்ய வேண்டும்!
Post a Comment